(Reading time: 7 - 14 minutes)

06. நீ எனக்காக பிறந்தவள் - Parimala Kathir

கே ஆரு நான் போய்ட்டு வாறன். நீ போய் தூங்கு யாராச்சும் எழுந்து வெளிய வந்திட்டாங்கன்னா பிரச்சனையாகிடும். நான் உனக்கு கலையில கால் பண்றான் சரியா." என்று கேட்டு அவள் பூக்கரங்களை தன் வலிய கரங்களால் சிறை பிடித்து அதில் மென்மையாக இதழ் பதித்தான்.

அவள் கரங்களில் அவன் உதடு பட்டதும் ஒரு மின்சாரம் உடல் முழுதும் பரவுவது போல் உணர்ந்தாள்.

"ஹேய் என்ன அப்பிடியே நிக்கிறாய் பை சொல்ல மாட்டியா?" என்றான் உதட்டில் புன்னகையை மறைத்துக் கொண்டு.

Nee enakaga piranthaval

அதே நேரம் ஆரபியை தேடிக் கொண்டு வெளியே வந்த அவளது தாய் வெளி கேட் திறந்திருப்பதை கண்டார்.

நான் தான் கதவை பூட்டிட்டு படுத்தனான் பிறகெப்படி. " என்று எண்ணியபடியே அவ்விடம் வந்து சேர்ந்தார்.

"ம்.... பை நீங்க பத்திரமாப்போய்ட்டு வாங்க! என்று அவனுக்கு விடையளித்து விட்டு சிடித்தபடியே கேட்டை மூடி பூட்டிவிட்டு திரும்பினாள்.

அவளெதிரில் அன்னை தேவிகா கடும் கோபத்தோடு நின்றிருந்தார்.

அவளுக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்று விட்டது. "கடவுளே அம்மா பார்த்திருப்பார்களோ..... நீ தான் என்னை காப்பாத்த வேண்டும் பிள்ளையாரப்பா..... " என்று ஒரு அரை வினாடியில் நூறு முறையாவது அந்த விநாயகரை அவள் தன்னை காக்குமாறு துணைக்கு அழைத்திருந்தாள்

ஆரபிக்கு சப்த நாடியும் ஒடிங்கி விட்டது . அம்மாவை அவள் இந்த நேரத்தில் இங்கு எதிர் பார்க்க வில்லை. ஆனால் சிரித்தே சமாளித்தாள்.

"என்னம்மா இது திடீரென்று வந்து இப்பிடி பயப்பிடுத்தீட்டீங்க!" என்றாள் மனதிலிருந்த பயத்தை மறைத்துக் கொண்டு.

"ஏண்டி உனக்கு போன் கால் வந்தாள் உள்ளே இருந்து பேச வேண்டியது தானே அத விட்டிட்டு   இப்பிடி அர்த்தராத்திரியில

கேட்டுக்கு வெளிய நின்னு பேசிட்டு வாற? சிக்னல் இல்லன்னா விடிந்ததும் பேச வேண்டியது தானே காலம் கெட்ட காலத்தில! இனி ஒரு தடவை இப்பிடி நின்னு பேசுறதைக் கண்டேன்னு வச்சுக்கோ தோளுக்கு மேல வளந்தவன்னும் பாக்காமல் நல்ல சாத்து போடுவண்டீ உனக்கு ." என்று சொல்லி செல்லமாக மகளுக்கு முதுகில் இரண்டு தட்டு தட்டினார் அந்த பாசமான அன்னை.   ஆரபிக்கு இபோதான் மூச்சே வந்தது.

(ஆனாலும் தேவிகாம்மா நீங்க அநியாயத்துக்கு ரொம்ப நல்லவரா இருக்கீங்க உங்க மல் உங்களை சீட் பண்றாங்க பாவம் ஆரபி உங்கம்மா உங்களை ரொம்ப நம்புறாங்க பாருங்க!!!)

"அப்பாடா நல்ல வேளை! அம்மா நான் போனில பேசத்தான் வெளிய போனேன் என்று நினைத்திருக்கிறார்கள். என்னை காப்பாத்திட்டாய் பிள்ளையாரப்பா" என்று அவருக்கு மனதார நன்றி தெரிவித்தாள்.

(பாவம் ஆரபி நீங்க இப்ப உங்களை காப்பாத்தின பிள்ளையார் உங்களை கூடிய விரைவில் மாட்டி வைக்கப் போறாரே!)

"ஆனால் இந்த வாமினிப் பிசாசு நான் அவ போனை அட்டன்ட் பண்ணலைன்னா என்னை குதறி எடுத்திடுவாலேம்மா" என்று சொல்லி சலுகையாக தன் தாயின் தோள் சாய்ந்தாள் ஆரபி.

"ரி வா உள்ள போகலாம்...." என்று கூறி மகளை உள்ளே அழைத்து சென்றவர் அப்போது தான் நினைவு வந்தவராக

"மறந்தே போனேன்டி ஆரணி உனக்கு விஸ் பண்ணும் என்று லைனில வெயிட் பண்றா சீக்கிரமா போய் போனை எடுத்து பேசு "

"ஏம்மா என்னோட போனுக்கு எடுக்காமல் வீட்டுபோனுக்கு எடுத்திருக்கா " என்றால் அரபி.

அவள் வீட்டு போனுக்கு எடுத்ததால் தானே அம்மா எனைத்தேடி இங்கு வந்தார்கள் என்ற ஆதங்கம் அவளுக்கு.

"அவ உனக்கு தாண்டி கால் பணியிருக்கா ஆனால் உன்னோட போனில லைன் கிடைக்கல என்று தான் வீட்டுக்கு எடுத்தாள். சரி நீ என்னை கேள்வி கேட்கிறதை விட்டிட்டு போய் அவ கூட கதை பாவம் பிள்ளை இந்த நேரம் உனக்காக முழிச்சிருந்து எடுத்திருக்கா " என்று தன் இழைய மகளுக்காக வருந்தி பேசினார். தாயார்.

"ச்சா ... ஏன் நான் இப்பிடி யோசித்தேன். பாவம் எனக்காக இத்தனை மணி நேரம் காத்திருந்து கால் பண்ணியிருக்கா ஆனால் நான்..... இந்த காதல் வந்தாலே பெண்கள் எல்லாம் சுயநல வாதிகலாகிப் போவார்களோ?" என்று மானசீகமாக தலையில் ஒரு குட்டு வைத்து தன் தங்கையிடமும் மன்னிப்பு கோரினாள். ஆரபி.

"ஹேய் அக்கா ஹப்பி பேர்த்டே எப்பிடி இருக்கீங்க " என்றாள். ஆரணி

"ம்... தேங்க்ஸ் சிஸ் நான் சூப்பரா இருக்கேன்>" என்று பரஸ்பரம் பேச ஆரம்பித்தவர்கள் சிறிது நேரம் உரையாடிவிட்டு உறங்க சென்று விட்டனர் தமக்கையும் தங்கையும்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.