(Reading time: 26 - 51 minutes)

 இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 07 - புவனேஸ்வரி கலைச்செல்வி

" ங்க அட்ரஸ் உங்களுக்கு எப்படி தெரியும் ? " என்று கேட்டு வைத்தார் மனோ .. நிலாவிற்கும் அதே கேள்வி மனதில் எழுந்தாலும், அவனின் சேஷ்டைகளை அறிந்தவளுக்கு பதிலும் கிடைத்தது .. ஹாஸ்பிட்டல் கண்டுபிடிக்கத் தெரிந்தவனுக்கு வீட்டை கண்டுபிடிப்பது எம்மாத்திரம் .. ஏனோ அந்த நினைவில் அவளுக்குமே முகத்தில் புன்னகை மலர்ந்தது .. அதை கவனித்தவன் சட்டென

" உங்க பொண்ணுதான் சார் .. ஹான் ... ஆங் .. என்ன பேரு சொன்னிங்க ........ " என்று யோசனை செய்பவன் போல நடித்து " யா யா இந்த தேன்நிலா  மேடம்தான் சொன்னாங்க " என்றான் .. அவனின் நடிப்பை கண்டு கோபத்திற்கு பதிலாய் சிரிப்புதான் வந்தது .,.. " திருடா ... என் பேரு கூட உனக்கு தெரியாதோ ?? ஆனா இப்போ எதுக்குடா என்னை மாட்டி விடுற நீ? " என்று பார்வையாலே வினவினாள் ....

" நிலாவா? "

Ithanai naalai engirunthai

"ஆமா சார் .. நீங்க உங்க கார்ல பர்ஸ் எல்லாம் எடுத்துட்டு லாக் பண்ணிட்டு வந்திங்களே, அப்போ நிலா மேடம் என் கூட தானே நின்னுகிட்டு இருந்தாங்க , அப்போ கேட்டேன் .. "

" ஜகஜால கில்லாடிடா நீ ... ஆனா நான் உனக்கு மேடமா ? ".... " ஏன் நீ மட்டும் அவனை சார் நு கூப்பிடலையா ? ஆமா அவன் உன்னை வேற எப்படி கூப்பிடனும்னு எதிர்ப்பார்க்குற ? ஹனின்னா ? " என்று கேள்வி எழுப்பியது அவளின் இன்னோர் மனம் ..

தேன்நிலா  தன் மனதிற்குள்ளேயே குட்டி நீயா நானா நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த இடைவெளியில் நம்ம மதி சார் காரை பார்க் பண்ணிட்டு மனோ சாருடன்  அவர்களின் வீட்டை நோக்கி வந்தார்..

" நிலா ... பேபி .. "

" ஆங் ...ஆங் .... என்னப்பா ? "

" என்னம்மா எந்த உலகத்தில் இருக்க நீ ? " அவரின் கேள்வி அம்பு பாய்ந்த உடனே மின்னல் வேகத்தில் அவளின் பார்வை அவன் பார்வையுடன் சங்கமித்தது ..

" ஆங்... ஒன்னுலையே .. ஏன் பா .. "

" பாக்கியம் கதவை திறக்கல மா.. உன்கிட்ட சாவி இருக்கா ...."

" ம்ம்ம்ம் இதோ " என்று தேடி எடுத்தவள், மனோ மதியழகன் இருவரையும் கேள்வியாய்  பார்த்தாள் ..

" என்னம்மா ??"

" இல்லபா ..இவரு ???"

" நானும் உங்க பாக்கியம் அம்மாவின் காபியின்  ருசியை ரசிக்க வரேன் ராஜகுமாரி .. உத்தரவு கிடைக்குமா ?? "

" உத்தரவா ? "

" ஆமா .. இவ்வளவு பெரிய அரண்மனையில, ராஜா உத்தரவு தந்தும் ராஜகுமாரி வழிவிடமால் இருக்கிங்களே .... கதவை திறக்க மனமில்லையா ? "

அவன் இதழ்கள்  கேட்டது வீட்டின் கதவைத்தான் .. ஆனால் மனமோ  உள்ள கதவை கேட்டது .. ஒரு புன்னகையை உதிர்த்தவள் கதவை திறந்து வழிவிட்டாள் ... எதற்குமே வாய்க்கு வாய்  பதில் பேசி திருப்தி அடையும் மகள் மதியின் பேச்சுக்கு அதிகம் பதில் சொல்லாமல் புன்னகைப்பது மனோவின் கருத்தில் படாமல் இல்லை .. இருப்பினும் எதையும் முழுதாய் அறிந்து கொள்ளாமல் பேசக்கூடாது என்று எண்ணியவர், கூடுதல் கண்காணிப்போடு அவர்களை தொடர்ந்தார் ..

" அம்மா .... அம்மா "

"....."

" பாக்கியம் .. எங்கம்மா இருக்க ?? "

" ம்ம் ....ம்ம்ம்ம் " என்று அவரின் முனகல் சத்தம் கேட்டது ... சத்தம் கேட்ட அறைக்குள் சென்றாள்  நிலா...

" அம்மா "

" ம்ம் ..என்ன ? "

" சாரி .....தூங்கிட்டிங்களா ??? என்னம்மா சீக்கிரம் படுத்துட்டிங்க ? உடம்புக்கு என்ன ?"

" ஒன்னுல டீ .. கொஞ்சம் தலைவலி தான் .. சமைச்சு வெச்சாச்சு .. இன்னைக்கு கொஞ்சம் நீங்களே போட்டு சாப்பிட்டுகொங்க நிலாம்மா .. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன் .. "

" இதைநீங்க   சொல்லனுமா மம்மி ?? நான் பார்த்துக்குறேன் .. நான் சாப்பிட்டு வந்து தலை பிடிச்சு விடுறேன் .. சரியா ? ... குட் நைட் " என்ற  மகள் தாயாரின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு வெளியில் வந்தாள் ...

" என்னம்மா ? " - மனோ

" அப்பா, அம்மாவுக்கு தலை வலியாம் ...."

" ஐயோ என்னாச்சு ??"

" மிஸ்டர் மனோ !!! சாதாரண வலிதான் .. நீங்க சீன் போட்டு பெருசாக்காமல் இருங்க .. நான் காபி போட போறேன் .. உங்களுக்கு வேணுமா ? "

" நீயா ??? நான் போடுறேனே டா ... " என்றார் மனோ கலவரத்துடன் ..

" அப்பா நீங்க ஓவரா பேசுறிங்க .. காபி உங்களுக்கு கட்டு .. போயி ப்ரெஷ் ஆகிட்டு வாங்க ... மதி சார் ...."

" நான் நீங்க ரெண்டு பேரு வர்ற வரை சமத்தா  போகோ சன்னல் பார்க்குறேன் சரியா ? " என்றான் பவ்யமாய் .. அவனின் முகபாவத்தை இருவருமே வாய்விட்டு சிரித்தனர் ..

சிறிது நேரத்திற்கு பிறகு ....

" அப்பா .. வாங்க சாப்பிடலாம் .. " என்று குரல் கொடுத்தாள்  நிலா .. அவளின் குரல் கேட்டு மதியழகனிடம் பேசிக்கொண்டிருந்தவர் அவனுடன் அங்கு வந்தார் ..

" நீங்களும் சாப்பிடுங்களேன் " என்ற நிலாவின் குரலும் அதில் எதிரொலித்த பவ்யமும் அவனுக்கு சிரிப்பை மூட்டியது .. அவனும் அதே குரலில்

" இல்லங்க .. பசி இல்ல .. நான் நைட் பால் தான் மட்டும் குடிப்பேன் .. "

" முன்னாடியே சொல்லிருந்த காபி போட்டுருக்க மாட்டேனே "

" அட என்னங்க நீங்க இதுக்கெலாம் பீல் பண்ணிகிட்டு .. சும்மா கொடுங்க .. உங்க அப்பா  வேற உங்க காபியை பத்தி பெரிய பில்ட் அப் கொடுத்தாரு .. அதை ருசிக்காமல் போன என் ஜென்ம சாபம் எப்படி விலகும் ? " என்றபடி மனோவிற்கு தெரியாமல் அவளை பார்த்து கண்ணடித்தான் ..

" கள்ளன் " என்று மனதிற்குள் திட்டுகொண்டே காபியை அவன் கையில் திணித்தாள் ... அந்த அரைநொடி ஸ்பரிசமே இருவரையும் திக்குமுக்காட வைத்தது ..

" என்ன இது புது உணர்வு ?? இதுவரை நான் யார் கையையும் பிடித்ததே இல்லை என்று சொல்ல முடியாது .,... அதுவும் இன்றைய  நவீன காலத்தில்  பரஸ்பர அறிமுகத்தில் கூட கை குலுக்குவது  இயல்பான ஒன்றாயிட்ரே .. எனினும் ஏன் இந்த பதட்டம் ??" இருவரின் மனமும் இருக்கும் இடம் தெரியாமல் கேள்வி கணைகளை தொடுத்து கொண்டே இருந்தது .. அதை அறியாத மனோதான் இருவரிடமும் பேச்சு கொடுத்து கொண்டிருந்தார் .. மதியின்  படிப்பு வேலை, நிலாவின் விலையில் தொடங்கி அண்டை நாட்டின் செய்திகள் வரை அனைத்தையும் சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டு இருந்தனர் ..

" நைஸ் காபி நிலா " என்றான் மதி பேச்சின் ஊடே ..

அவள் " தேங்க்ஸ் மதி " எனவும் மனோ சார்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.