(Reading time: 7 - 14 minutes)

13. நெஞ்சமெல்லாம் காதல் - ப்ரியா

டுத்து வந்த இரு நாட்களும் அனைவர்க்கும் இயல்பாய் செல்ல, அறுவர் மட்டும் உணர்ச்சி பிழம்பில்..

ஆதியும், வருணும் கோபத்தின் உச்சியில்...

மதுவும் ஸ்வேதாவும் குழப்பங்களின் மத்தியில்...

Nenjamellam kathal

ஆராவும் தன்யாவும் உணர்சிகள் இன்னதென பிரிக்க முடியாத நிலையில்!!

தி வீட்டில் இருந்து எல்லாரிடமும் பட்டும் படாமலும் சொல்லிகொண்ட கிளம்பிய வருண் நேரே வீட்டிற்கு சென்று விட்டான்! தன் தங்கையிடம் சொல்லி தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தான்.

ஆனாலும் அவனால் எதையும் மறக்கவும் அவளின் செயலை மன்னிக்கவும் முடியவில்லை.

ஒரு முறை கை நீட்டி அறைந்தாள்,  அவனும் பொறுத்து போனான். ஆனால் இம்முறை,'அவளை கை சிறையில் வைத்த போது அதை தடுக்கவோ தவிர்கவோ முன் வரவில்லை, ஏன் அவன் அவள் இதழ்களை சிறை செய்த சிறிது நேரம் கூட எந்த தடுமாற்றமும் இல்லாமல் காதல் மனதை காண்பித்தாள் தானே?! பின்னே என்ன.. அதுவும் அவளை நான் எந்த அளவிற்கு நேசிக்கிறேன் என்னை போய். ச்சே'

அவள் மீது வெறுப்பு உண்டாகி விடுமோ என பயந்து அன்றாட பணியை கவனிகலானான்..  

தியின் நிலையில் கொஞ்சம் மாற்றம்!! புது அலுவலகம் புது மனிதர்கள் என மனம் கொஞ்சம் மற்றம் கண்ட போதும், அந்த அடி அவன் மனதை வழியில் துடிக்க செய்தது..

அதையும் மீறி அவள் சம்மதம் இன்றி செய்த செயல் அவள் வெறுப்பை நீளும் தூண்டி விட்டதோ என்று ஒரு எண்ணமும், என்ன தான் அவள் வாய் திறந் சம்மதம் என்று சொல்லவில்லை என்றாலும் அவள் கண்களில் தெரிந்த வியப்பும் குழப்புமும் அதை கூறவில்லையா என்ன? இப்படியா அதற்கு அடிப்பாள்? என்ற மறு எண்ணமும் மாறி மாறி அவனை குழப்பியது.

சற்று நேரம் அவளின் மேல் அடக்க முடிய கோபம் கொள்ளும் மனது, சற்று நேரம் அவனின் மீதே அவன் செய்த செய்கைக்காக ஆத்திரம் கொண்டது.

ராவும் தன்யாவும் யாரிடமும் சொல்லாமல் இருவரும் தனக்குள்ளேயே வைத்து கொண்டு தவித்து போயினர். நிச்சயம் முடிந்து விட்ட சமயத்தில் இப்போது இதை கணவரிடம் சொல்வது கூட சரியாக படவில்லை இருவருக்கும்.

யாரிடம் கலந்து கொள்ளலாம் என இரண்டு நாட்கள் நகர்த்தியவர்களுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை.

மதிய உணவுக்கு பின் ஓய்வாக அமர்ந்து யோசித்த போது உதித்த யோசனை தான் இருவருக்கும். உடனே செல்லை எடுத்து போன் செய்தாள் ஆரா, முதல் ரிங்கிலேயே எடுக்க பட்டது,

"ஹலோ ஆரா"

"ஹலோ தன்யா"

"என்ன பண்ற? சாப்பிட்டாச்ச? குட்டி என்ன பண்றான்?"

"ம்ம்ம் ஆச்சுபா, நீ? அவன் தூங்குறான்"

"நானும் சாப்டாச்சு, பாப்பாவும் தூங்குற"

"உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணுமே"

என இருவரும் ஒரே சேர கூறி சிறிது கொண்டனர்.

"என்ன விஷயம் தனு"

"இல்ல இது நேர்ல பேச வேண்டிய விஷயம்"

"ஒ."

"நீ என்ன பேசணும்?"

"அதை நானும் நேர்லயே சொல்றேன்"

"சரி. நான் ஒரு நாலு மணிக்கு ஷாப்பிங் போறேன், முடிச்சுட்டு அப்படியே பெசன்ட் நகர் பீச்சுக்கு வந்துடவா? நீயும் வந்துடறியா?"

"ம்ம்ம் சரி அப்போ நான் ஒரு நாலரை மணிக்கு அங்க வரேன்"

"சரி டா"

"வெச்சுடவா பை"

"ம்ம்ம் பை"

இருவருக்கும் ஏதோ ஒரு வகையில் நிம்மதியும், ஏதோ ஒரு வகையில் குறுகுறுப்பும் தோன்றியது.

"ஹாய் தன்யா"

"ஹாய் டா, பாப்பா எங்க?"

"அவ வந்த அவள கவனிக்கவே நேரம் சரியாய் இருக்கும் நம்ம பேச முடியாது அதான் அவள அம்மா கிட்ட விட்டுட்டு வந்தேன்"

"நீயும் அதே தான் நினைச்சியா? நானும் அவன மது கிட்ட விட்டுட்டு வந்தேன்"

"ம்ம்ம்"

"என்ன யோசனை ஆரா?"

"இல்ல.. ஒண்ணுமில்ல.. நீ ஏதோ சொல்லனும்னு"

'ம்ம்ம் ஆமா ஆன எப்படி சொல்றதுன்னு தான் தெரியல"

"எனக்கும் தான்"

"சரி சொல்றேன்" என்று தொடங்கிய தன்யா, அன்று மாடியில் தான் பார்த்த அனைத்தையும் ஒப்பிக்க, ஆராவின் அதிர்ச்சிக்கு எல்லையே இல்லாது போனது.அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் செவியுள் நுழைந்து மூளையையும் மனதையும் தொட்டு அதான் பொருள் விளங்க சற்று நேரம் தேவை பட்டது.

"தப்பா நினைக்காத ஆரா, ஆனாலும் உன் தம்பி பண்ணது தப்பு தானப்பா"

"ம்ம்ம்ம் ம்ம்ம்ம் "

"ஹேய் என்ன இப்படி சைலண்ட் ஆகிட்ட? ஐயம் சாரி. என் மனசுல பட்டத சொன்னேன்"

"ப்ச் அதுக்கு இல்ல" என்று கூறியவள் சில நொடிகளுக்கு பின் தான் தோட்டத்தில் பார்த்ததை கூற இப்போது ஆராவின் உணர்சிகள் அனைத்தும் தன்யாவிடம் குடி பெயர்ந்தது போல இருந்தது.

பல நிமிட மௌனம்!!!  

" இந்த பசங்கள என்ன பண்றது, அன்னைக்கு ஆதி நிச்சயம் முடிஞ்சு வந்தப்போ உங்கள பார்த்த போதே எனக்கு லேசா சந்தேகம் தான், ஏன்னா ஆதி மதுவும் ப்ரெண்ட்ச்ன்னு எனக்கு தெரியும், அவன் அமெரிக்கா போனப்போ அவங்களுக்குள்ள பெரிய சண்டைன்னு கூட தெரியும் ஆனா லவ் வரைக்கும், அதான் என்னால ஜீரணிக்க முடில"

"ம்ம்ம் நீயும் கவனிச்சியா? நானும் பார்த்தேன் அவங்க ரெண்டு பேரும் அப்படி பார்த்துகிட்டத நானும் பார்த்தேன். எனக்கும் அப்பவே டவுட் தான் ஆரா.. ம்ம்ம் இப்போ அதெல்லாம் விடு இந்த பிரிச்சனைய இப்படி சால்வ் பண்ண போறோம்"

"அதையே தான் நானும் யோசிக்கிறேன்"

"ஒரு ஐடியா, ரகுவ கூபிடலமா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.