(Reading time: 10 - 19 minutes)

11. ஷைரந்தரி - சகி

வினை...இரண்டு எழுத்து சொல்...வெறும் இரண்டு எழுத்துச் சொல்...

விதி...அதுவும் இரண்டு எழுத்து சொல்...சொல்லப் போனால்,இரண்டு உண்மை என்று எவரும் இதுவரை முழுவதுமாக நம்புவதில்லை..

இரண்டும் பயணிப்பதோ வெவ்வேறு பாதையில், ஆனால்,முடிவதோ ஒரே இடத்தில்...புரிகிறதல்லவா?

shairanthari

"பாட்டி!"

"சொல்லு வினய்!"

"அன்னிக்கு...அந்தப் பொண்ணு...அவ பேரு என்ன?"

"யாரு?"

"அன்னிக்கு கோவில்ல..."

"ஏன்??"

"அன்னிக்கு அவளை பார்த்தவுடனே....என்ன பார்வை அது??சாகடிக்குது பாட்டி!"

"வினய்...நீ பேசறதை பார்த்தா?"

"அவ வேணும்...எனக்கு அவ வேணும்...அந்த திமிர்....எனக்கு சொந்தமாகி அடங்கணும்.இத்தனை நாளா சேர்த்து வச்சிருந்த தாகத்தை தணிக்க அவ வேணும்!"

"ஏதோ முடிவு பண்ணிட்ட, எடுத்துக்கோ!அவ,அன்னிக்கு என்னை              அவமானப்படுத்துனதுக்கு அவ அழணும்!"-இருவரும் பலமாக சிரித்தனர்.அந்த சிரிப்பில் அழிவு ஆரவாரமாய் தெரிந்தது.

"நாள் போயிட்டே இருக்கு! சீக்கிரமே பாருங்க..."

"சரிங்கம்மா..."-சிவகாமி பாட்டி,யாருடனோ உரையாடி கொண்டிருந்தார்.

"பாட்டி!"-என்றப்படி அவர் அருகில் வந்தமர்ந்தான் அர்ஜீன்.

"வாப்பா!"

"என்ன பாட்டி பார்க்க சொல்றீங்க?"

"ம்...உனக்கு பொண்ணு பார்க்க சொல்றேன்!"-அர்ஜீன் அதை கேட்டவுடன்,ஒருவாறு வழிந்தான்.

"போப்பாட்டி!"

"அடடா...நீ ஏன்டா வெட்க படுற?"

"சொல்லு பாட்டி,என்ன பார்க்க போறேன்."

"நம்ம பார்வதிக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னேன்டா!"

"எது?அவளுக்கா?"

"ஏன்?"

"அது...வந்து...இப்போ அவளுக்கு என்ன வயசாயிடுச்சி?இதுக்குள்ள கல்யாணம்லாம்?"

"அவளுக்கு பண்ணாதான், அவ அண்ணங்காரன் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்றான்!என்ன இந்த வீட்டில ஒரு நல்லது நடக்க கூடாதா?"

"அப்படியில்லை...திருவிழா முடிந்த அப்பறம் பார்த்துக்கலாமே??"

"திருவிழாவும் நடக்கட்டும், இதுவும் நடக்கட்டும்."-சிரித்துக் கொண்டே அவர் எழுந்து சென்றுவிட்டார்.

அர்ஜீன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு,

"ஊர்ல,உலகத்தில இருக்கிற அம்புட்டு கெட்ட விஷயமும் நம்ம சிவாக்கு தான் நடக்கும்!"-என்று புலம்பினான்.

சிவாவிற்கு போனில் அழைப்பு விடுத்தான்.

"ஹலோ!"

"எங்கேண்ணா இருக்க?"

"வயல் வெளியில!"

"அங்கே என்ன பண்ற?"

"விதை போடுறாங்க...அதான்,கூட வந்து..."

"ம்ஹீம்...நீ விதை போட்டு,தண்ணி ஊத்தி,உரம் போட்டு,எல்லாம் பண்ணு...நாளைக்கு எவனாது வந்து பழம் பழுக்கும் போது கொத்திட்டு போகட்டும்!"

"என்னடா உளர்கிற?"

"நீ அங்கேயே இரு! நான் வந்து சொல்றேன்."

"சரி!"-இணைப்பை துண்டித்து விட்டு கிளம்பினான் அர்ஜீன்.

ரியாக 15 நிமிடத்தில் வயலில் இருந்தான்.

"அண்ணா!"

"என்னடா?அந்த கோவிலைப் பற்றி விவரம் கிடைச்சிதா?"

"அண்ணா! உன் வாழ்க்கையே வீணாகிறா மாதிரி இருக்கு! கோவில் முக்கியமா இப்போ?"

"என்ன?"

"அண்ணிக்கு வீட்டில மாப்பிள்ளை பார்க்கிறாங்க.."-சிவாவிற்கு,இது சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது.

"என்னடா சொல்ற?"

"ஆமாண்ணா!"-ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அனைத்தையும் கூறினான் அர்ஜீன்.

"உனக்கு மட்டும் ஊர்ல இருக்கிற எல்லா பிரச்சனையும் வருதேண்ணா?"

"அதெல்லாம் விடு!நீ அந்த கோவிலை பற்றி சொல்லு!"

"அண்ணா?இது உன் வாழ்க்கை பிரச்சனைடா!"

"என் வாழ்க்கை ஷைரந்தரி தான்!"

"அண்ணா?"

"பார்வதி எனக்கு முக்கியம் தான்.இன்னும்,எதுவும் நடக்கலை....எனக்கு இப்போ அம்மூ முக்கியம்."

"மனுஷனாடா நீயெல்லாம்?உன்னை நம்பி வந்திருக்காடா அந்த பொண்ணு!அவளை, விட்டுட்டு தங்கச்சி தங்கச்சின்னு...உனக்கு எதுக்கு காதல்,கத்திரிக்காய் எல்லாம்??"

"நீ தான் இந்த கேள்வியை கேட்கலை.நீயும் கேட்டுட்டியா?ஆமா...நான் மனுஷன் இல்லை மிருகம் தான்  போதுமா?"

"அண்ணா!"

"கோவில்ல பற்றி சொல்லு!"-அதிர்ந்தே விட்டான் அர்ஜீன்.இப்படியும் ஒரு அண்ணனா?தன்னை பற்றி சிந்திக்க கூட இல்லாமல் தங்கைக்காக வாழும் ஒருத்தனா?

"நான் இன்னும் அதைப் பற்றி கேட்கலைண்ணா!"

"அர்ஜீன் நீ சீக்கிரமா விஷயத்தை சொன்னாதான்,எதாவது பண்ண முடியும்!"

"நாளைக்குள்ள சொல்றேன்ணா!"

"ம்..."-ஆனால்,அர்ஜீனுக்கோ அதை விட தன் தமையனின் வாழ்வு பிரகாசிக்க வேண்டும் என்பதே எண்ணமாய் இருந்தது.

இதற்கு ஒரே வழி தான் !!!

ஷைரந்தரி!!!

ஷைரந்தரியை தவிர இதற்கு வேறு வடிகால் இல்லை என்பது புரிந்தது.

"ஷைரு!"

"என்ன அண்ணி?"

"அது...வந்து...!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.