(Reading time: 13 - 25 minutes)

10. காற்றாக நான் வருவேன் - Anna Sweety

ன்னைக்கு நீங்க எதுவோ சொன்னீங்க....எதுவோ புரிஞ்ச மாதிரி இருந்தது....ஆனா முழுசா புரியல...இப்ப சரியா ஞாபகமும் இல்ல...?”  மெத்தை மேல் அமர்ந்து எதோ யோசனையில் இருந்த சுகந்தினி சொல்ல

“என்னைக்கு சுகா?” சற்று தள்ளியிருந்த மேஜையில்  தன் லாப் டாப்பை வைத்து அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து எதையோ டைப் செய்து கொண்டிருந்த மஹிபன் அவள் புறமாக தலையை மட்டும் திருப்பிக் கேட்டான்.

“அதான் மேரேஜ் அன்னைக்கு நைட்...ஹாஃஸ்பிட்டல்ல இருந்து வந்த பிறகு..” அவள் தன் யோசனையைத் தொடர, தன் லாப் டாப்பை மூடி விட்டு எழுந்து வந்தான் மஹிபன். முகமெங்கும் குறும்பு.

Katraga naan varuven

“அது அப்படித்தான் இருக்கும் செல்லம்....முதல்லயே எல்லாம் புரிஞ்சிருமா...” பின்னிருந்து அணைத்தான் அவளை.

அவள் சொன்னதின் அர்த்தம் அவனுக்கு என்னதாக புரிந்திருக்கிறது என அப்பொழுதுதான் உணர்ந்தாள் அவள்.

“போங்கப்பா நீங்க....கடவுளைப் பத்தி பேசிக்கிட்டு இருக்கப்ப இப்படி பண்றீங்களே...” அவனை விலக்க முயன்றாள்.

அவனோ அவளை தன்னோடு சேர்த்தவாறு மெத்தையில் சரிந்தான் முழுவதுமாக. “திருமண படுக்கை அசுசை படாதிருப்பதாக....அப்படின்னுதான் அவர் எழுதி வச்சிருக்கார்...அவர் சட்டத்தை அவரே மீற மாட்டார்...”

அவனின் இழுப்பில் அவனோடு சேர்ந்து சரிந்திருந்தவள் துள்ளி எழுந்தாள். “இப்படித்தான்...இப்படித்தான் மஹி அன்னைக்கும் எதோ சட்டத்தைபத்தி சொன்னீங்க...” அவள் எழுந்த வேகத்தில் அவன் தாடையில் அவள் தோள் இடித்தது.

அதை சற்றும் உணராமல் அவள் பேசிக் கொண்டு போக, அவள் தோளை மெல்லத் இதமாக தேய்த்த படி சொன்னான் மஹிபன் “ லாயர்டி நான், சட்டத்தை பத்தி ரொம்ப பேசதாண்டி செய்வேன்...இருந்தாலும் அன்னைக்கு நைட்டும் அதபத்தியா பேசினேன்...இது சரியில்லையே...”

“உங்களுக்கும் மறந்துட்டா..” ஏமாற்றத்தின் தொனி மனைவியிடம்.

“என்ன செல்லம் நீ.. அப்ப நடந்த மத்ததயெல்லாம் விட்டுட்டு அன்னைக்கு பேசுன ஒரு டயலாக்கை போய் கேட்டுகிட்டு இருக்க...கோர்ட்ல எதிரிட்ட சண்ட போடதான் லா பாயிண்ட் மறக்காம இருக்கனும்னா......வீட்ல வைய்ஃப கொஞ்சவுமா..” குறும்பாக அவன் சொல்லிக் கொண்டு போக

“ஹேய்...எனக்கு புரிஞ்சுட்டு...புரிஞ்சிட்டு....  என் பைபிள் எங்க?...” சுகந்தினி குதித்து எழுந்து போய் அவசர அவசரமாக  பைபிளை தேடினாள் அருகிலிருந்த மேஜையில்.

ரு நொடி அவளை வித்யாசமாக பார்த்த மஹிபன்  “உள்ள ஃபர்ஸ்ட் டிராவில் இப்பதான் எடுத்து வச்சேன்..” என்றபடி எழுந்து அவளருகில் வந்தான்.

“என்னாச்சு சுகி...தயனி விஷயமா...?...பைபிள் பக்கத்தில இருந்தா கூட பேய் வருதுன்னு...சொல்லிகிட்டு இருந்த...”

“உங்க லா புக்கை கோர்ட்ல கொண்டு போய் வச்சுட்டா... கேஃஸ்ல நியாயம் கிடைச்சுடுமா..? அந்த புக்ல இருந்து பேச வேண்டியதை பேசனும்...அந்த புக்ல உள்ளபடி நாம நடந்துகிடனும்....இப்படி நாம செய்ய வேண்டியது நிறைய இருக்குதே....பைபிளும் கடவுள் குடுத்த சட்ட புத்தகம் தானே...அதை இம்ப்லிமென்ட் செய்தாதான்....ஜெயிக்க முடியும்...”

அந்த ஏஞ்சல் அன்னைக்கு ஒரு சட்டத்தை தூக்கி அந்த ஈவில் ஃஸ்பிரிட்டை கட்டி தூர போட்டதே...அந்த இரும்பு சட்டம் ஒரு சிம்பல்... சிம்பல் ஃபார் சட்டம்...தட் ஸ் லா

சட்டம்...லா..

அதை தான் மீன் பண்ணி இருக்கார் ....

அன்னைக்கும் நம்ம ஃபர்ஸ்ட் நைட்ல இதுதான் அரைகுறையா புரிஞ்சிது...கடவுளோட சட்டம்னா அதை கண்டிப்பா கடை பிடிக்கனும்...அப்படிங்கிற மாதிரி நீங்க எதோ சொன்னீங்க...அப்ப ஸ்ட்ரைக் ஆன மாதிரி இருந்தது..

ஆண்டவர் சட்டம்னா அது பைபிள்தான... அதான்...

இந்த பேய்களை கட்டி தூர போடுற விதம் பைபிள்ல இருக்குதுன்னு சொல்லி இருப்பார்....”

ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.

அப்படின்னு ஒரு வசனம் இருக்குதுதான....மாம்சமும் ரத்தமும் உள்ள யாரோடையும்...அதாவது மனிதர்கள் யாரோடையும் நமக்கு போராட்டம் கிடையாது...ஆனால் வித விதமான ஆவிகளோட போராட்டம் உண்டுன்னு அதுக்கு அர்த்தம்...

போராட்டம் உண்டுன்னு சொன்னவர் அதற்கான வழியை எப்படி சொல்லாம விட்டுருப்பார்...அதனால அந்த வழியை அதில் தேடனும்...” தீவிர முகபாவத்துடன் பேசிக் கொண்டுபோனாள் சுகந்தினி.

“அதில் ஒரு விஷயம் கவனிச்சியா சுகி...இதில் குறிப்பிட்டுருக்கிற எந்த ஈவில் ஃஸ்பிரிட்ஃஸ் கேட்டகிரியிலும் வராது தயனி பார்கிற ஃஸ்பிரிட்ஃஸ்.

அதுதான் மெயின் கன்ஃபியூஷனே...” முக்கிய விஷயத்தை சுட்டி காண்பித்தான் மஹிபன்.

“அதுதான்...அதுக்கும் பதில் பைபிள்ள இருக்கும்னு இப்ப தோணுது... தேடனும்....இறந்தவங்களைப் பத்தி பைபிள் என்ன சொல்லுதுன்னு மேலோட்டமா பாக்காம கவனமா தேடுனா தெரியும்னு நினைக்கேன்...” யோசனை முகபாவத்தில் அவள் சொல்ல....

“இறந்து போனவங்கள்ல ஒரு க்ரூப்,  ஜீசஸ் வரப்போற அந்த நொடி நேர ரகசிய வருகையிலும், மத்தவங்க நியாய தீர்ப்பு நாளிலும் எழுப்ப படுவாங்கன்னுதான இருக்குது....

இறந்தவங்க எல்லாரும் இறந்த உடனே கடவுளால் மட்டுமே எழுப்ப படுற ஒரு நிலைக்கு போயிடுறாங்க... அப்படிங்கிறப்ப தயனி விஷயத்தில் இவங்க மட்டும் எப்படி....இப்படி ஆட்டம் போடுறாங்க?...” தன் பக்க சிந்தனையை வார்த்தையால் வெளியிட்டான் மஹிபன்.

“இதுதான் மஹி...இதுதான் விஷயமே....” கூவினாள் சுகந்தினி “அவங்க செத்தவங்களே கிடையாது....இது வேறு எதோ...”

ங்க அம்மாவா வந்ததும் உங்க அம்மாவாத்தான் இருக்கும்... அவங்களுக்குத் தான் வக்ர மனசு....” எரிச்சலும் கோபமுமாய் அபிஷேக்கிடம் தன் கண்டுபிடிப்பை வெளியிட்டாள் கணவனின் மார்பில் சாய்ந்த வண்ணம் படுக்கையில் அமர்ந்திருந்த தயனி.

“இருக்கலாம்..” அமைதியாய் வந்தது பதில் அவனிடம் இருந்து. அவள் முன் நெற்றி கேசத்தை மெல்ல வருடினான்.

“அப்ப அது உங்க அம்மாவா இல்லாமலும் இருக்கலாம்னு சொல்றீங்களோ..?” கடுகடுத்தபடி கணவனைப் பார்த்தாள். வருடிய அவன் கையைத் தட்டி விட்டாள்.

“தயூ எனக்கு அசுத்த ஆவிளைப் பத்தி ரொம்ப தெரியாது. ஆனா ஒரு விஷயம் நல்லா தெரியும்...நீ என் உயிரை விட எனக்கு முக்கியம்கிறதுதான் அது...உன்னை யாருக்காகவும் விட்டு குடுக்க மாட்டேன்... கடவுள் என்னை நம்பி எனக்கு குடுத்த பொக்கிஷம் நீ....

மகன் தான் செத்தாவது தன் அம்மாவ காப்பாத்துன்னு பைபிள்ள எங்கயும் இல்ல....ஆனா....ஹஸ்பண்ட் வைய்ஃப அப்படித் தான் லவ் பண்ணனும் அதில சொல்லி இருக்குது....நான் உனக்காக சாக கூட தாயாரா இருக்கேன்.....இப்போ சொல்லு நான் என்ன செய்யனும்னு எதிர்பார்க்கிற....” ஆர்பாட்டம் இல்லாமல் இயல்பாய் சொன்ன அபிஷேக் மீண்டுமாக அவள் முன் நெற்றி கேசத்தை வருட ஆரம்பித்தான்.

அவனது வார்த்தையில் செய்கையில் தயனி அதிர்ந்து போனது நிஜம்.

 திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள். உணர்ச்சி பிழம்பாக அவன் இல்லை. ஆனாலும் அவன் கண்ணில் தெரிந்தது அவன் வார்த்தைக்கு வார்த்தை உணர்ந்து பேசி இருக்கிறான் என.

“சாரி...அபி...”

“இட்ஸ் ஓ.கே..நடு நிலமையில இருந்து யோசிப்பன்னா....நான் உன்ட்ட ஒன்னு சொல்லுவேன்...இந்த ஆவிகள பத்தி...”

“சொல்லுங்க அபிப்பா....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.