(Reading time: 8 - 16 minutes)

 

02. வாராயோ வெண்ணிலவே - சகி

யிர்வரை ஊறுகின்ற ரம்யமான தென்றல்....

இரவு நேர பௌர்ணமி பொழுதினில்...காதினில் காற்றானது கவிதை பேச,மயங்கி களிக்கும் வரம் எத்தனை பேருக்கு கிடைக்கும்???

இரவு நேரத்தில் கண்களுக்கு விருந்து படைக்கின்ற வெண்ணிலவானது, மேகங்களோடு  கொண்டிருந்த ஊடலை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா.

Vaarayo vennilave

"வெண்ணிலாம்மா!"

"சொல்லுங்க துர்காம்மா!"

"என்னம்மா?நிலாவையே இப்படி பார்த்துட்டு இருக்க?"

"தெரியலை துர்காம்மா! அப்படியே,பார்த்துட்டு இருக்கலாம் போல இருக்கு!"

"நல்ல பொண்ணும்மா நீ!அடிக்கிற குளிர்ல கோயம்புத்தூரே வெளியே வரலை.நீ நிலாவை ரசிச்சிட்டு இருக்க?"

"எனக்கும் இந்த நிலாக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு!"

"பார்த்தா அப்படி தான் சொல்லுவாங்க!"

"ப்ச்...துர்காம்மா!"

"சரிம்மா...போய் தூங்கும்மா!"

"விஷ்வா தூங்கிட்டானா?"

"தூங்க போயிட்டான். தூங்குனான்னா தெரியலை."

"சரி...அப்போ நீங்க போய் தூங்குங்க!"

"சரிம்மா....சீக்கிரம் போய் தூங்கு!"

"ம்..."-துர்காம்மா சென்றப்பின்,மீண்டும் அந்த வெண்ணிலவை தான் பார்த்து கொண்டிருந்தாள் வெண்ணிலா.

எவ்வளவு நேரம் அப்படி நின்றிருப்பாளோ?

"...பேயே!"-என்ற குரல் கேட்டு திரும்பினாள்.விஷ்வா தான் வேறு யாருமில்லை.

"இன்னும் தூங்காம என்ன பண்ற?"

"இதே கேள்வியை நான் திருப்பிக் கேட்டா?"

"தூங்கப் போறீயா??இல்லையா?"

"இதே கேள்வியை நான் திருப்பி கேட்டா?"

"அத்தைக்கிட்ட சொல்லட்டா?"

"இதே கேள்வியை நான் திருப்பிக் கேட்டா?"

"அடப்போங்கய்யா!"

"இப்போ என்னடா வேணும்?"

"ஏன் பேய் மாதிரி நிற்கிற?"

"அதுவா பிசாசே!டைம் பாஸ்!"

"தலையெழுத்து...முருகா! இந்த லூசை கொஞ்சம் கவனிப்பா!"

"என்னை கவனிக்கிறது இருக்கட்டும்...முதல்ல உன்னை கவனிக்கணும்!"

"ஏன்?"

"நீ ஏன் ராஜா இம்புட்டு நேரம் முழிச்சிருக்க?"-விஷ்வா தொண்டையை செறுமினான்.

"நேரமாயிடுச்சி பார்!போய் தூங்கு போ!"-விஷ்வா.

"ம்...இது சரியில்லை. கவனிச்சிக்கிறேன்."-என்றப்படி உள்ளே சென்றாள் வெண்ணிலா.

ப்ச்...எப்போ பார்த்தாலும் ஆபிஸ் ஆபிஸ்னு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ ரஞ்சித்!"-தாயின் வழக்கத்தை விட சற்று கூடுதலான பாசத்தில் புரிந்துவிட்டது ரஞ்சித்திற்கு!!!

மீண்டும் திருமண முயற்சி!!!

"இல்லம்மா...கொஞ்சம் வேலை அதிகம்!"

"என்னடா வேலை?வருஷம் 365 நாளுமா வேலை?அந்த கம்பெனி ஓனர் நீ! லேபர் இல்லை!"

"ஓனருக்கும்,லேபர்க்கும் ஒரே வித்தியாசம் தான்! இவன்,இப்போ உழைச்சிட்டு இருக்கான்.ஓனரா இருக்கிறவன் முதலிலே உழைச்சிட்டு வந்திருப்பான்.அவ்வளவு தான்!"

"என்னமோடா! நாளைக்கு ஊரில இருந்து உன் அத்தை பெண் கார்த்திகா வரா!"

"வரட்டும்!"

"நீ போய் கூட்டிட்டு வரீயா?"

"டிரைவர் அண்ணாவே, கூட்டிட்டு வந்திடுவார்!எனக்கு வேலை இருக்கு!"

"அப்படி,என்ன வேலை?"

"முக்கியமான மீட்டிங்!"

"ரஞ்சித்!"

"எனக்கு நேரமாயிடுச்சி நான் கிளம்புறேன்!"- தாயின் பதிலுக்காக காத்திருக்காமல் சென்றான்.அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தார் அவன் அன்னை.

';வழிநெடுக வைரங்கள்'; என்பார்கள்,அதைப் போல ';வழிநெடுக தன்னவளின் நினைவுகளாக'; பயணித்துக் கொண்டிருந்தான் ரஞ்சித்.

மனதில் ஏதோ கனமாக வைத்ததுப் போல இருந்தது.

காரை பெசன்நகர் கடற்கரையை நோக்கி திருப்பினான்.

அன்று,வேலை நாள் என்பதால்,கூட்டம் மிகவும் குறைந்தே இருந்தது.

யாருமில்லாத தனிமையான இடத்தில் வந்தமர்ந்தான்.

கடல் அலைகளையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனை கவனித்தப்படி அவ்வழியாக சென்ற பெண்கள் இருவர்,

"ஹே! ஸீ திஸ் ஹேண்ட்சம்! எவ்வளவு அழகா இருக்கான் பாரேன்!"

"ஹே...ஐ திங் இ இஸ் வெயிட்டிங் ஃபார் இஸ் கேர்ள் ஃப்ரண்ட்!"

"ரியலி??ஆமா...இவ்வளவு அழகா இருந்தா?எந்த பொண்ணு தான் விடுவா?"-என்றப்படியே சென்றனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.