(Reading time: 28 - 55 minutes)

காதல் நதியில் – 22 - மீரா ராம்

யார் பறித்தது உங்கள் மகனை???... என்ற குரல் வந்த திசையைப் பார்த்தவர் ஆச்சரியத்தில் வாயடைத்துப்போனார்…

பின் எத்தனை ஆண்டுகள் தவம் இது…. இன்று நிறைவேறிவிட்டதல்லவா…

ஏன் இப்படி அதிசயத்தைப் பார்ப்பது போல் பார்க்கின்றீர்கள்… என்னை தெரியவில்லையா?.... மறந்துவிட்டீர்களா என்னை?.??..

kathal nathiyil

  1. அதெப்படி தெரியாமல் இருக்கும்… எப்படி மறப்பார்…. மறக்க முடியுமா என்ன அவரால்???...

அவர் கண்கள் கலங்கி அப்பவோ இப்பவோ என்று கண்ணீர் சிந்த முயல…

கண்கள் கலங்குகிறதா?... எனக்கும் கலங்குகிறது…. வருடக்கணக்கில் பெற்றவர்களை விட்டு பிரிந்திருக்கிறேனே… எனக்கும் நெஞ்சம் துடிக்கிறதுப்பா…

அப்பா!!!!! மூன்றெழுத்து வார்த்தை தான்… ஆனால் அது கொடுத்த திருப்தி ஈடு இல்லாதது… வார்த்தை வராது தவித்தவர் முகத்தை பார்த்தவன்,

இன்று வார்த்தை சொல்ல முடியாது திணரும் தாங்கள் தானே… அன்று அப்படி வார்த்தையை சிதற விட்டது… அதனால் தானே இத்தனை ஆண்டுகள் பிரிவும்… ஆனால், இன்னும் நீங்கள் மாறவேயில்லை… இன்று மீண்டும் அதே தப்பை தான் செய்கின்றீர்கள்… நன்றாக யோசித்துப் பாருங்கள்… அன்று நடந்த நிகழ்வில் யார் மேல் தவறு???...

கேள்வி கேட்டவனை ஏறிட கூட அவரால் முடியவில்லை… ஏனெனில் அன்று வார்த்தையை துச்சமென பிரயோகித்தாரே… அந்த உண்மை தன்னை சுட, மௌனமாய் தலைகுனிந்தார் ராசு…

வலிக்கிறதுப்பா… என்னைப் பெற்றவர் என் முன் தலை குனிந்து நிற்கும் அவலம் பார்க்க நேர்ந்தது என் விதியா அப்பா??... பெற்றவர்கள் தான் பிள்ளையை திருத்த வேண்டும்… ஆனால் இங்கு நான் உங்களை திருத்த முயற்சித்தேன் நடக்கவில்லை… அதனால் பிரிவை விரும்பி ஏற்றுக்கொண்டேன்… ஆனாலும், நீங்கள் மாறவே இல்லை… நடந்த நிகழ்வில் உங்கள் தவறை நீங்கள் இன்னமும் கொஞ்சம் கூட உணரவே இல்லையாப்பா என்று மகன் கேட்க…

அவர் அந்த நாளின் நினைவில் மௌனமானார்…

ஞ்சாவூர் பக்கத்தில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தனர் உடன் பிறந்தவர்களான கோதையும் ராசுவும்… ராசுவை விட கோதை 4 வயது மூத்தவர்… ஜனாவும் ராசுவும் ஒன்றாய்ப் படித்தனர் பள்ளியில்… ஓரிரு முறை ஜனா கோதையைப் பார்த்திருக்கிறார்.. அதே போல் கோதையும் பர்வத்ததை ஒரு முறை பார்த்திருக்கிறார்… அதன் பின், பள்ளிக்கல்வியை முழுவதுமாக தொடராமல் போயினர் ராசுவும் ஜனாவும்… ஏனோ படிப்பில் அவர்களுக்கு நாட்டமில்லை பத்தாம் வகுப்பிற்குப் பிறகு…

பின்னர் கல்யாணப் பருவத்தை அடைந்திருந்த கோதையை அந்த ஊருக்கு தொழில் விஷயமாக வந்த சுந்தரத்திற்கு பிடித்து போக, முறைப்படி வந்து பெண் கேட்டார் பெற்றோருடன்… அதன் பின்பு, கோதை நாச்சியார் ஊட்டிக்கு இடம் பெயர்ந்தார் கணவர் சுந்தரத்துடன்….

இரண்டு வருடங்கள் மின்னலென மறைய, ராசுவிற்கும் செல்விக்கும் திருமணம் நடந்தது… அடுத்த வருடமே செல்வி ஷ்யாமைப் பெற்றெடுக்க, அவன் வளர்ந்ததென்னவோ கோதையிடம் தான்… ஆம்… அவன் பிறந்ததுமே கோதை தன் தம்பியை ஊட்டிக்கு வர சொல்ல, அவரும் அங்கே அக்காவின் வீட்டுப் பக்கத்திலேயே வீடு பார்த்து குடியேறினார் தற்காலிகமாக…

ஷ்யாமிற்கு ஐந்து வயதான போது கோதை தாய்மை அடைந்தார்… ஆறு வயதான ஷ்யாமின் கையில் இவள் தான் உன் மனைவி, என்று அனுவை தூக்கி கொடுத்தார் ராசு அவள் பிறந்ததும்… அனு 4 வயதை எட்டிய போது ஆதர்ஷ் பிறந்தான்…

இரண்டு மாத்ததிற்கு பிறகு, சுந்தரத்தின் நெருங்கிய நண்பர் ஒருவருக்கும் மகன் பிறந்தான்… அவரும் சுந்தரத்தின் பக்கத்து வீடு… ஆதலால் அந்த சிறுவர்களும், ஷ்யாமும், அனுவும், ஒன்றாக தான் விளையாடுவார்கள்… ஆதர்ஷிற்கு இரண்டரை வயதான போது, சுந்தரத்தின் நெருங்கிய நண்பர் விபத்தில் சிக்கினார்… அவர் வடநாட்டை சேர்ந்த பெண்ணை மணமுடித்ததால், அவரை ஒதுக்கி வைத்த சொந்தங்கள், அவரின் மகனை சொத்துக்காக வளர்க்க நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு வந்தனர்… அவரின் மனைவி விபத்தில் மாண்டு போக, அவர் மட்டும் உயிர் பிழைத்திருந்தார் ஒரு மாதம் வரை… அந்த 30 நாட்களில் தன் மகனின் எதிர்காலத்திற்கு வேண்டியவற்றை செய்து முடித்திருந்தார் அவர்…

அதன் பின் அவரும் இறந்துவிட, அந்த இரண்டரை வயது பிஞ்சு குழந்தை கண்ணனை நான் வளர்க்கிறேன் என்று வந்து நின்ற சொந்தங்களிடம், அவன் இனி என் இரண்டாவது பையன், நான் முறைப்படி அவனை தத்து எடுத்துக்கொண்டேன் என் நண்பனின் சம்மதத்துடன் என்று கூறி சில பத்திரங்களை நீட்ட, அதை வாங்கி படித்தவர்கள் வந்த வழியே ஏமாற்றத்துடன் திரும்பி போயினர்…

அதன் பின்பு, ராசு தான் கண்ணனிடம் அதிக அன்பு காட்டினார்… ஆனால் அனைத்தும் மயூரி பிறந்து அவளுக்கு நான்கு வயது எட்டும் வரை தான்… மயூரி பிறந்து சில நாட்களுக்குப் பிறகே அவ்னீஷ் பிறந்தான்…

அவ்னீஷ் அவளுக்குப் பின்னே பிறந்தமையால், ராசு, ஆதர்ஷிற்கு தன் மகளை மணமுடித்துக்கொடுக்க வேண்டும் என்று அப்போதே எண்ணிக்கொண்டார்…

ஆனால் நினைத்ததற்கு நேர்மாறாக, ஆதர்ஷும் மயூரியும் அண்ணன் தங்கை போல் பழக, ராசுவிற்கு அந்த உறவு முறை பிடித்தமாயில்லை…

மேலும் கோதையும் சுந்தரமும், தன் இரண்டாவது மகனான கண்ணனிடம், இவள் தான் உன் வருங்கால மனைவி… உன் முறைப்பொண்ணுடா…  என்று சொல்வதும் அவருக்கு உவகையாயில்லை…

விவரம் கூட முழுதாக அறிந்திடாத வயது ஆதர்ஷிற்கும், கண்ணனுக்கும்… லக்ஷ்மி பாப்பா என்று அவளின் கைப்பிடித்து விளையாடும் ஆதர்ஷிடம் அவள் உனக்கு பாப்பா இல்லடா என்று எத்தனை முறை சொன்ன போதிலும் ஆதர்ஷ் ராசுவின் பேச்சை கேட்கவே இல்லை…

லக்ஷ்மி பாப்பா என்று ஆதர்ஷ் அவளை கூப்பிடும் வேளையில், கண்ணன் அவளை கோதையும் சுந்தரமும் சொன்னபடி முறைப்பொண்ணு என்று அழைத்தான்… அதுவும் ராசுவின் மனமாற்றத்திற்கு காரணாமாயிருந்தது…

ஆதர்ஷிற்கும் கண்ணனிற்கும் சரியாக 6 வயது அப்போது… மயூரிக்கும் அவ்னீஷிற்கும் வயது 4 தான்…

மயூரி, ஆதர்ஷ், கண்ணன், அவ்னீஷ், அனு, என அனைவரும் ஒன்றாக விளையாடிக்கொண்டிருந்தனர்… வேகமாக ஓடிய மயூரி கீழே விழுந்துவிட, அவளைத்தூக்கிவிட்ட கண்ணன், அடிபட்டுடுச்சா முறைப்பொண்ணு, அழாதே சரி ஆயிடும் என்று அவள் கண்களை துடைத்துவிட, வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ராசு எழுந்து சென்று அவனின் கைகளிலிருந்து மகளின் கையைப் பிரித்த்டுத்தார்… அவன் கூட விளையாட கூடாதுன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லுறது?.. சொன்ன கேட்கமாட்ட என்றபடி அவர் மகளை அடிக்க…

மாமா அவளை அடிக்காதீங்க…. என்று கண்ணன் சொல்ல, அவர் கோபத்தின் உச்சிக்கே சென்று அவனைப் பளார் என்று அறைந்துவிட்டார்… அவர் அறைந்ததில், அவன் கீழே, இருந்த கல்லில் மோதி, மயங்கி சுருண்டு விழ, அப்போது அங்கே வந்த 15 வயது ஷ்யாம், கண்ணனைத்தூக்கிக்கொண்டு மருத்துவனைக்கு ஓடினான்…

காயம் ஆற கொஞ்ச நாள் ஆகும், என்று மருத்துவர் சொல்லி சென்றுவிட, அவனை வீட்டிற்கு அழைத்து வந்தனர் ஷ்யாம், கோதை மற்றும் சுந்தரம்…

தலையில் கட்டுடன் அவனை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு ராசுவிடம் சென்றார் சுந்தரம்…

சின்னப்பிள்ளைக்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு கூடவா உனக்கு தெரியாது ராசு???... என்று சுந்தரம் கேட்க…

என் பொண்ணுகிட்ட அவன் எப்படி நடந்துக்கணும்னு முதலில் சொல்லிக்கொடுங்க அவனுக்கு…. அப்புறம் வந்து எனக்கு அறிவுரை சொல்லுங்க… என்றதும்,

யாருகிட்ட என்னப்பேச்சுடா பேசுற?.. அவர் உன் மாமா… உனக்கு அது நினைப்பு இருக்கா முதலில்???...  என்றார் கோதை சட்டென மூண்ட கோபத்துடன்…

எல்லாம் தெரிந்து தான் அக்கா பேசுறேன்… அவருக்கு அந்த நினைப்பு இருந்தா யாரோ நண்பரோட மகனை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து இப்படி வளர்ப்பாரா தன் மகனா?... அது கூட பரவாயில்லை… ஆனா அவங்கிட்ட, என் பொண்ணைக்காட்டி அவ தான் உன் வருங்கால பொண்டாட்டின்னு அவரும் நீயும் சொல்லுறதெல்லாம் எந்த விதத்தில் நியாயம்க்கா?...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.