(Reading time: 49 - 98 minutes)

26. காதல் பயணம்... - Preethi

திருமணம் முடிந்து 1 வாரம் கடந்திருந்தது, கடந்து வந்த மணித்துளிகள் எல்லாம் தேன் கலந்த நீராய் இனிக்க, சின்ன சின்ன முறைப்புடனும், சண்டையுடனும் நேரத்தை கடந்தினர் புதுமண மக்கள். “அனு சட்டினியை மேஜையில போய் வைம்மா...”

“சரித்தை...”

“என்னங்க சாப்பிட வாங்க...”

Kaathal payanam

“இதோ வரேன்...”

“அனு நீ போய் அஸ்வத்தை சாப்பிட கூட்டிட்டு வாடா...” ஏன் இவங்களே கூப்பிடலாமே என்று மனதில் எண்ணிக்கொண்டு அவர்களது அறைக்கு சென்றாள், அங்கு கால் மீது கால் போட்டு ஆட்டியபடி அஸ்வத் ஒரு குறும்பு சிரிப்போடு அமர்ந்திருந்தான். சரி காலையிலேயே எந்த சண்டையும் போட கூடாது என்று மனதில் நினைத்துக்கொண்டு, “சாப்பிட கூப்பிடுறாங்க வா...”

“வானா வரதுக்கு போன்னா போறதுக்கு நான் என்ன நீ வழக்குர நாய் குட்டியா? மரியாதையா கூப்பிடுடி...” என்று அவன் வேண்டும் என்றே ‘டி’யில் அழுத்தம் தந்து பேச இன்னும் ஏற்றிவிட்டது போல, “முடியாது... போடா...” என்று கொஞ்சம் தூரம் போனவள் கதவோரம் நின்றுக்கொண்டு “அத்தை அவருக்கு பசிக்கலையாம் அப்பறம் சாப்பிடுறாராம்” என்று ஒரு இலுவையோடு அவனை பார்த்துக்கொண்டே கூறிவிட்டு கள்ள சிரிப்போடு சென்றாள். அவளது குறும்பில் ரசித்து சிரித்தவன் அவளுடனே சாப்பாட்டு அறைக்கு சென்றான்.

“அம்மா... உங்க மருமகள் பொய் சொல்லுறாள், நான் அப்படி சொல்லவே இல்லை. என்னை சாப்பாடு போடாமல் கொல்ல பார்க்குறாள்” என்று பரிதாபமாக குறை கூறினான்.

“எனக்கு அனுவை பத்தியும் தெரியும், உன்னை பத்தியும் தெரியும்.. அதெல்லாம் அனு அப்படி சொல்லவே மாட்டாள்” என்றார் அன்புள்ள மாமியார். அவ்வளவு தான் அனுவின் வாலுத்தனம் இன்னும் நீண்டுவிட, நாக்கை வெளியே நீட்டி மூக்கை சுருக்கி பலித்து காட்டினாள். அதில் அஸ்வத் கொஞ்சம் மயங்கிபோனாலும் விடுவதாக இல்லை. “எல்லாம் என் நேரம் பெற்ற பிள்ளையை நம்ப மாட்டிங்குரிங்க” என்று பொய்யாக நடித்துவிட்டு, எங்கு சென்றாள் அவளை அடக்க முடியும் என்று அறிந்தமையால் அதற்கான விதையை போட்டான்.

“அம்மா சொல்லவே மறந்திட்டேனே... மாமா போன் பண்ணாங்க. மறுவீடு அலச்சிட்டு போக வராங்களாம், இன்னைக்கு ஈவனிங் வரதா சொன்னாங்க. நான் தான் வேணான்னு சொல்லிட்டேன்ம்மா பக்கத்தில தானே இருக்கு நாங்களே வந்திடுறோம்னு சொல்லிட்டேன்.”

“அது முறைடா...”

“இங்க இருந்து 20 நிமிஷம் தானேம்மா அதுக்கெதுக்கு அலையணும்னு சொல்லிட்டேன்.”

“அதுவும் சரிதான்….”

ருவருக்குமே அது மறுவீடு என்ற உணர்வை தரவில்லை. அடிகடி சென்றுவந்ததாலோ இல்லை மிக அருகேயே இருப்பதாலோ என்னவோ அந்த புது உணர்வு வரவில்லை. இருப்பினும் திருமணம் முடிந்து புகுந்த வீடு வந்து ஒரு வாரம் ஆனதால் தங்கள் வீட்டிற்கு செல்ல உற்சாகமாக இருந்தாள் அனு.

“பத்திரமா போயிட்டு வாங்கப்பா” என்று கையசைத்து வழியனுப்பினர் பெற்றோர்.

போகும் வழியெல்லாம் ஒரே காதல் பாடல்களாக ஓட, ஓரகண்ணால் முறைத்துக்கொண்டே வந்தாள் அனு.

“ஹே ஓவரா பண்ணாத என்னவோ நானே தயார் பண்ணி போட்ட மாதிரி இல்லை சீன் போடுற, அதுவா பாட்டு வருது... சூழலுக்கு ஏற்ற மாதிரி” என்று சமாளித்தான் அஸ்வத்.

“வரும் வரும் ஏன் வராது நியாபகம் இருக்குல என் மனசு மாறுற வரைக்கும் எல்லை மீற மாட்டேன்னு சொல்லிருக்க!!!”

“அட யாருடா இவள் என்னவோ இவள் கையை பிடித்து இழுத்த மாதிரி குதிக்குற??? சொல்ல போனால் எனக்கு அந்த உரிமை இருக்கு தெரியும் இல்லை...” என்று வேண்டும் என்றே மிரட்ட, “ஆஹா நீ என் கையை பிடிச்சால் அப்போ என் கை என்ன புளியங்காய் பறிக்குமா? நல்லா நாலு தருவேன்” என்று அவள் பதிலுக்கு மிரட்ட, “வெரி குட் வெரி குட் நானும் அதைதான் எதிர்பார்க்கிறேன்” என்று குறும்புத்தனம் மாறாமலே கூறினான்.

“சொன்னதை மட்டும் பண்ணி பாரு அப்பறம் இருக்கு...” என்று அவன் செய்த குறும்புக்கு பதில் தருவதாக நினைத்து கூற, வண்டியை ஓரமாக நிறுத்தியவன் அவளை அளவிடுவது போல் பார்த்தான். அவன் பார்வையே சரியில்லையே என்று தோன்றிவிட திக்கி திணறி வார்த்தைகள் வந்தது.

“ஒய் எ... என்ன...என்ன பார்க்குற? வண்டியை எடு...”

“முடியாது...” என்று தன் வசீகர புன்னகையோடு சொல்லிக்கொண்டே கைகளை கட்டியவாறு அவளை நோக்கி அமர்ந்தான்.

அவனது சிரிப்பே ஆளை இழுக்க, இவன் வேற இந்த மாதிரி சிருச்சே மயக்குவான் என்று திட்டிக்கொண்டு, தன் மானம் போக கூடாதே என்று பார்வையை திருப்பிக்கொண்டாள்.

“வண்டியை எடு அஸ்வத்...”

“ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம்...”

“ப்ளீஸ்...”

அவளது கெஞ்சல் அவனை இன்னும் அவள்புரம் இழுக்க, அவள் கைகளை மெல்ல வருடி, மெதுவாய் அவன் கைகளுக்குள் புதைக்க, அந்த ஒரு நொடியில் இதய துடிப்பு குதிரையை விட வேகமாக ஓடியது அவளுக்கு. கட்டுபடுத்த முடியாமல் இறுக கண்களை மூடிக்கொண்டு, தன் கைகளை அவனிடம் இருந்து விளக்கவும் மறந்துப் போனாள். இருவர் மனதுமே தங்களை கட்டுபடுத்த போராடிக்கொண்டு தான் இருந்தது. அஸ்வத் அவளின் கன்னத்து சிவப்பில் மயங்கி முன்னேற போகும் நேரத்தில் அனு முளித்துகொள்ள, சட்டென கைகளை விளக்கிக்கொண்டு “ஹே நீ சீட்டிங் பண்ற, தொட கூடாதுன்னு சொல்லிருக்கேன்” என்று சிரமப்பட்டு கோவமாக பேச முயற்சித்தாள்.

கைக்கு கிடைத்த கனி வாய்க்கு கிடைக்காமல் போவதுப் போல நொந்துப் போன அஸ்வத்... “அட போடி...” என்று நொந்து கொண்டு அலட்சியமாக வண்டியை கிளப்பினான்.

அதன்பின் சில நொடிகள் தேவைப்பட்டது இருவருக்கும் தங்களை ஆசுவாச படுத்திக்கொள்ள, அவளது தடுமாற்றம் அவனுக்கு நினைவு வர, கூடலை காட்டிலும் இந்த சின்ன சின்ன சிணுங்கல்களும், வெட்கமும் அவனை இன்னமும் ஈர்த்தது. அவனுக்கு அது ரொம்பவும் பிடித்துபோக அதையே பின்தொடர்ந்தான்.  

“ஏன் அனு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன் வாயில எதாவது வச்சிருந்தியா?”

அவன் எதை சுட்டிக்காட்டுகிறான் என்று புரிந்துவிட, “நேரா பார்த்து வண்டியை ஓட்டுடா...” என்று நக்கலாக கிண்டல் செய்யவும், “உன்னெல்லாம் எப்படி சரி கட்டணுமோ அப்படி பண்ணுறேன் வாடி...”

“வவ்வவ்வவ்வவ்வ....” என்று விளையாட்டுக்காட்டி சிரித்தாள்.

வீட்டின் அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டு முகத்தில் ஒரு மின்னல்வெட்ட, அதை வெளியே காட்டிகொள்ளாமல் சோர்வாக முகத்தை வைத்துக்கொண்டு சென்று கதவை திறந்தான் நிரஞ்ஜன்

கதவை திறக்கும் கணவனுக்காக ஆயாசமாக இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு முகத்தில் புன்னகையை பரவவிட்டாள் தேஜு...

“ஹாய்.... நிரு...” என்று அவள் ஆசையாக கூப்பிட, சோர்ந்து போய் இருப்பது போல் காட்டிக்கொண்டு “ஹாய்...” என்றான்.

“என்னபா ஏன் சோகமா இருக்க?”

“ம்ம்ம்ம்... பசி வயித்தை கிள்ளுது... நான் வரதே லேட் இதுல நீயும் லேட்டா வந்தால் எப்போ சமைச்சு எப்போ சாப்பிடுறது” என்று குறையாக கூறினான்.

தனக்கும் தானே சோர்வாக இருக்கிறது என்று மனதில் தோன்றினாலும் பாவம் இன்னைக்கு அவனுக்கு எவ்வளவு வேலையோ என்று மனம் உருகிவிட, “அச்சச்சோ ஒரு 10 நிமிஷம் பொறுத்துக்கோ நிரு இப்போ சமச்சிடுறேன்” என்று சமையல் அரைப்பக்கம் ஓடும் மனைவியை ஆசையாக பார்த்தவாறு நின்றான் நிரஞ்ஜன் உதட்டில் ஒரு கள்ள சிரிப்போடு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.