(Reading time: 8 - 16 minutes)

 21.கௌரி கல்யாண வைபோகமே - ஜெய்

றுநாள் அலுவலகத்தில் இருந்த ராமனிற்கு மதியம் மூன்று மணிக்கு  கமிஷ்னர் அலுவலகத்தில் இருந்து பாலு அழைக்க, நல்ல பதிலாக அவர் சொல்ல வேண்டுமே என்ற வேண்டுதலுடன் போனை எடுத்தார் ராமன்.

“ஹலோ பாலு சார், சொல்லுங்கோ, உங்க போன்க்காகத்தான் கார்த்தாலேர்ந்து வெயிட் பண்ணிண்டு இருக்கேன்.  உங்க மேலதிகாரிகள் கிட்ட இருந்து ஏதானும் சாதகமான பதில் கிடைச்சுதா?”

“ராமன், கண்டிப்பா சந்தோஷப் படக் கூடிய சாதகமான பதில்தான் கிடைச்சிருக்கு.  நாம போன்ல பேச வேண்டாம். நான் இப்போ  உங்க ஆபீஸ் பக்கத்துல இருக்கற பார்க்கலதான் இருக்கேன்.  நீங்க இங்க இப்போ வர முடியுமா?”, என்று பாலு கேட்க, ராமனும் உடனே கிளம்பி வருவதாகக் கூறினார்.

Gowri kalyana vaibogame

“வாங்க ராமன்.  அவனைப் பிடிக்க எந்த வழியையும் கடைபிடிக்க எங்களுக்கு அதிகாரம் கொடுத்துட்டார்.  இனிமே நம்ம நாடகத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான் பாக்கி.  இன்னைக்கு திங்கள்கிழமை, நம்ம நாடகத்தை நாளைக்கு சாயங்காலம் ஆரம்பிக்கலாம்.  உங்க friends ரெண்டு பேரையும் நாளைக்கு சாயங்காலமாப் போய் நான் சொல்ற ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் ஆக சொல்லுங்க.  அதுக்கு மேல நான் பார்த்துக்கறேன்.  ஆனால் இந்த முறை அவங்க அக்கம் பக்கத்து வீடுகளுக்கு எல்லாம் தெரியறா மாதிரி இருக்கணும் அவங்க போடற நாடகம்.   இவங்களை ஒரு ஆறு மணிக்கு ஹாஸ்ப்பிட்டல் போய்ட சொல்லுங்க.  நான் மீடியாக்காரங்களை ஒரு எட்டு மணிக்கு வர சொல்லிடறேன்”

“சரி சார்.  என் பையன் friendகிட்ட சொல்லவா.  அவரும் அதே சேனல்லதான் வேலை செய்யறார்.  எந்த ஹெல்ப் வேணாலும் பண்றதா அவர் சொல்லி இருக்கார்.  அவர் நியூஸ் டிவிஷன்லதான் வேலை செய்யறார்”

“இன்னிக்கு வேணாம் ராமன்.  நாம எத்தனைதான் கவனமா இருந்தாலும், விஷயம் எப்படியாவது லீக் ஆகிடும்.   நாளைக்கு மதியத்துக்கு மேல போன் பண்ணி சொல்லிடுங்க.  முடிஞ்சா அந்தப் பையனையே போக சொல்லுங்க.  நம்ம ஆள் இருந்தா, நமக்கு ஏத்தா மாதிரி நியூஸ் வெளி வர செய்யலாம்”

“சரி சார்.  அப்பறம் அந்த இறந்து போனாரே, அவங்களோட மனைவிகிட்ட பேசிட்டீங்களா?  அவங்க என்ன சொன்னாங்க.  ஏன் கேக்கறேன்னா, திடீர்ன்னு மீடியாக்காரங்களோட  நாம போய் அவங்க வீட்டுல நிக்க முடியாதே”

“அந்தம்மா கிட்ட பேசிட்டேன். பாவம், இனிப் பணம் வந்து என்ன பண்ண, போன உயிர் திரும்ப வருமான்னு ஒரே அழுகை.  அப்பறம் அவங்களை சமாதானப்படுத்தி புரிய வைக்கறத்துக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுச்சு”

“பாவம் என்ன பண்றது, அவங்க இழப்பு ரொம்ப பெரிசாச்சே”

“கரெக்ட்தான் ராமன்.  சரி நீங்க உங்க friend ராமுகிட்டயும், ஆனந்தன்கிட்டயும் விஷயத்தை தெரியப்படுத்திடுங்க.    நான் இன்னைக்கு சாயங்காலம் உங்க வீட்டுக்கு வரேன்.  அவங்களையும் வர சொல்லிடுங்க.  இன்னொரு வாட்டி உக்கார்ந்து பேசி முடிவு பண்ணிடலாம்.  எந்த இடத்திலும் ஓட்டை இல்லாம நம்ம பிளான் இருக்கணும்”

“கண்டிப்பா சார்.  ராமு ஆபீஸ்லதான் இருக்கான்.  அவன்கிட்ட சொல்லிடறேன்.  ஆனந்தனை வீட்டுக்கு வர சொல்லிடறேன்.  அவர் வீட்டுக்கு வந்தப்பறம் விஷயத்தை தெளிவு படுத்திடலாம்”, என்று கூற, ராமனிடம்  மாலை சந்திப்பதாகக் கூறி விடைபெற்றார் பாலு.

ன்று மாலை ஐந்து மணி அளவில் ராமனின் இல்லத்திற்கு வந்த ராமு, ஆனந்தனிடம் ராமன் விஷயத்தை விளக்கிக் கூறினார்.  அவர் விளக்கிக் கொண்டிருக்கும்போதே பாலு உள்ளே நுழைய பின் நால்வரும் சேர்ந்து பேச ஆரம்பித்தனர். அப்பொழுது கௌஷிக் உள்ளே நுழைந்தான்.

“டேய் வாடா கௌஷிக்.  என்ன கௌரியை சைட் அடிக்க சிங்கப்பூர்லேர்ந்து சீக்கிரமே கிளம்பி வந்துட்டியாமே.  ஒரு பட்சி வந்து சொல்லிச்சு”

“அச்சோ அங்கிள் அப்படி எல்லாம் இல்லை. வேலை விஷயமா சீக்கிரமே கிளம்பி வர வேண்டியதாப் போச்சு”, இத்தனைப் பேர் முன்னால் நம் மானத்தை வாங்குகிறாரே என்று நொந்த படியே பாலுவிற்கு பதில் அளித்தான் கௌஷிக்.

“நம்பிட்டேன்டா.  நீ சிங்கப்பூர் போன இந்த பத்து வருஷத்துல முதல் முறையா உங்க ஆபீஸ்ல இருந்து இங்க வேலை செய்ய அனுப்பறாங்க பாரேன்.  என்ன  ஒரு                 கோ-இன்சிடென்ட்”, பாலு கலாய்க்க, அனைவரும் கௌஷிக்கை சிரிப்புடன் பார்த்தார்கள்.

“அங்கிள் உங்களுக்கு ஓட்ட நான்தான் கிடைச்சேனா.  நீங்க ஏதோ முக்கியமான விஷயம் பேசிண்டு இருந்தீங்களே,  அதை அப்படியே கண்டின்யு பண்ணுங்க.  என்னை ஓட்டற வேலை இன்னொரு நாள் பண்ணலாம்”, என்று கூறிக் கொண்டிருக்கும்போதே கௌரி கிளம்பி வர, கௌரியும், கௌஷிக்கும் அனைவரிடமும் கூறிக்கொண்டு கிளம்பினார்கள். 

கௌரி சொல்லு, முதமுதல்ல வெளிலப் போகப் போறோம் எங்க போகலாம்.  நீ ஏதாவது சாய்ஸ் வச்சிருக்கியா?”

“கோவிலுக்குப் போலாமா?  ரொம்ப தூரம்லாம் வேண்டாம்.  இங்கயே பக்கத்துத் தெருவுல ஒரு பிள்ளையார் கோவில் இருக்கு. அதுக்குப் போயிட்டு அப்படியே திநகர் ஷாப்பிங் போய்டலாம்”

“அடிப்பாவி கொஞ்சமாவது ரொமாண்டிக்கா திங்க் பண்றியா, வெளில வான்னா, கடைக்குப் போய் புடவையைப் பார்க்கலாம் அப்படிங்கற.   என்னோட வெளில வந்தா, என்னை மட்டும்தான் கவனிக்கணும், நீ ஷாப்பிங்ல உக்கார்ந்துட்டா அப்பறம் நான் அங்க இருக்கற பொம்மையைத்தான் பார்த்துண்டு தேவுடு காக்கணும்.  இந்தக் கதையே வேண்டாம்.  இன்னைக்கு நோ ஷாப்பிங்.  கோவில் மட்டும் போயிட்டு அப்படியே பீச் போலாம்.  அங்கப் போய் பேசிண்டு இருக்கலாம்.  அப்பறம் நைட் dinner வெளில சாபிட்டுட்டு வரலாம்.  ஓகேயா?  நான் நாளைக்கு வந்து உன்னை கடைக்கு கூட்டிண்டு போறேன்”

“சரி ஓகே,  ஆனா ரொம்ப லேட் பண்ண வேண்டாம் கௌஷிக் அம்மா கவலைப்பட ஆரம்பிச்சுடுவா”

“உங்க அம்மாகிட்ட ஒம்போது மணி வரைக்கும் டைம் வாங்கி இருக்கேன். கவலைப்படாதே.  அதுக்குள்ள கொண்டு வந்து விட்டுடறேன்.  நான் வண்டிலதான் வந்திருக்கேன்.  சோ எல்லா இடத்துக்கும் சீக்கிரம் போய்டலாம்”, இருவரும் பேசியபடியே பார்க்கிங்கை அடைந்து வண்டியை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள கோவிலுக்கு சென்று வணங்கி அங்கிருந்த படியில் அமர்ந்து பேச ஆரம்பித்தார்கள்.

“என்ன கௌரி, ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கறா மாதிரி கேஸ், போலீஸ் ஸ்டேஷன் அப்படின்னு பயங்கர பரபரப்பா போறது நம்ம கல்யாணம்”

“VIP கல்யாணம் அப்படின்னாலே இதெல்லாம் இருக்கும் கௌஷிக்”, கௌரி படு கெத்தாக சொல்ல, “VIPயா, அது யாரு இங்க”, அவளை விட கெத்தாக கௌஷிக் கேட்டான்.

“ஏன், நான்தான்.  கௌரி கல்யாணம் அப்படின்னா சும்மாவா, இந்தப் பரபரப்பு கூட இல்லைன்னா எப்படி?”

“நீயா, அது சரி.  உனக்கு உண்மை தெரிஞ்ச உடனே மாமாக்கிட்ட ரொம்ப கோச்சுண்டியா கௌரி?”

“கோவிச்சுக்கலாம்  இல்லை கௌஷிக்.  ஆனால் வருத்தப்பட்டேன்.   இத்தனை நாள் எல்லாமே நம்மக்கிட்ட கலந்துண்டவா இப்படி சொல்லாம மறச்சுட்டாளேன்னு.  கல்யாணத்துக்கு அப்பறம் இதே மாதிரிதானே மறைப்பா.  அவாக்கிட்டக்க காமிச்சுக்காட்டாலும் எனக்கு உள்ளூர அந்த வருத்தம் இருக்கத்தான் செய்யறது”

அவளை ஆருதல் படுத்தும் விதமாக அவள் கையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்ட கௌஷிக், “எல்லா விஷயத்தையும் எப்பவுமே  சொல்ல முடியாது கௌரி.  அது பசங்களா இருந்தாலுமே கூட.  நாளைக்கே நமக்கு கல்யாணம் ஆனப்பறம், நாமதான் நம்ம விஷயங்கள்ல டெசிஷன் மேக்கரா இருப்போம்.  எல்லாத்தையும் அம்மா, அப்பாக்கிட்ட கேட்டு, கேட்டு செய்ய மாட்டோம்.  உன் கிட்டயும், ஹரி கிட்டயும் சொல்லாம எத்தனையோ விஷயங்கள் இத்தனை நாள் உங்க அப்பா, அம்மா பண்ணி இருக்கலாம்,  இதே மாதிரி பண விஷயங்கள்ல.   நம்ம கஷ்டம் நம்மோட போகட்டும்ன்னுதான் நினைப்பா........”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.