(Reading time: 12 - 24 minutes)

13. ஷைரந்தரி - சகி

ல்பனாவின் கதைக்களம்.....

கல்பனா குறித்த கதையை சிவாவிடம் கூற தொடங்கினான் அசோக்.

"கல்பனா...என் கூட பிறக்காத தங்கை சிவா!!!!

shairanthari

எனக்கு ஒரு 5 வயசு இருக்கும்,அப்போ நம்ம ஊர்ல ரொம்ப நாளா ஒரு அம்மன் கோவில் மூடி இருக்குதுல்ல,அங்கே தான் நான்,அம்மா,அப்பா மூணு பேரும் போகும் போது,கல்பனா எங்களுக்கு கிடைச்சா!!!

அப்போ,அவ கைக்குழந்தை எப்படியும் பிறந்து 10 நாள் கூட இருக்காது,எந்த பாசக்கார அம்மா, அப்பாவோ அவளை அந்த கோவில்ல விட்டுட்டு போயிட்டாங்க!"-கூறும் பொழுதினில்,பழம் கதையில் மூழ்கி இருந்தான் அசோக்.அதிலிருந்தே,அவன் கூறுவது நூறு சதவீதம் மெய் என்பதை அறிந்தான் சிவா.

"இந்த ஊருக்கே செல்ல பொண்ணுன்னா அது கல்பனா தான்!அவளுக்கு, யாரையும் எதிர்த்து பேச தைரியம் இருந்தில்லை. ரொம்ப பயந்த சுபாவம்...

அவளுக்கு 18 வயசு ஆன போது நடந்த திருப்பம் தான் எல்லார் வாழ்க்கையையும் புரட்டி போட்டது."

"என்னது அது?"

"ஷைரந்தரி!"

"என்னது?"-அவன்,கூறும் வாக்கினில் அதிர்ந்தே போனான் சிவா.

"உன் தங்கச்சி தான் காரணம்!"

"என்ன உளர்ற?ஷைரந்தரி,20 வருஷம் கழித்து,இப்போ தான் இந்த ஊர்ல காலடி எடுத்து வைக்கிறா!"

"அது தான்,அந்த பிரச்சனைக்கு விதையே போட்டது!"

"அசோக்!"

பாஞ்சாலபுரம்......

5 வருடங்களுக்கு முன்பு....

"ஏ...கல்பாக்கம்! இங்கே வா! வா!"-ஆசை தங்கையை அன்போடு அழைத்தான் அசோக்.

"அண்ணா! எத்தனை முறை சொல்லி இருக்கேன்.அப்படி,கூப்பிடாதீங்கன்னு!"-செல்லமாய் கோபித்துக் கொண்டாள் கல்பனா.

"சரிடி! வாயாடி! வா...கேரம் விளையாடலாம்!"

"எனக்கு,விளையாட தெரியாதுண்ணா!"

"நான் எதுக்கு இருக்கேன்.என் தங்கச்சிக்கு நான் சொல்லி தரேன்!"-தங்கைக்காக ஆட்டத்தில் சேர்ந்தான் யுதீஷ்ட்ரன்.

"என்னடா?தங்கச்சிக்கு அண்ணன் சப்போர்ட்டா?"

"அப்படியும் வச்சிக்கோயேன்!"

"அப்போ! நமக்கு,ஒரு சப்போர்ட் வேணுமே?பாரு...!"-தனக்கு துணையாக பார்வதியை அழைத்துக் கொள்வான் அசோக்.

இப்படி,வசந்த காலங்கள் மட்டுமே வீசிக் கொண்டிருந்த அவர்களின் வாழ்வினில் புயலும் வீச ஆயத்தமானதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

ன்று...

"அடடே!!! வாங்க...ஈஸ்வரி அம்மா! வாங்க!"-வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்றார் யுதீஷ்ட்ரனின் தாத்தா.

விதி,அவரோடு வினய் என்னும் வினையையும் வரவழைத்திருந்தது.

அவர்களுக்கு உபசரிக்க ஏற்பாடு செய்துவிட்டு,

"என்ன...வராதவங்க வந்திருக்கீங்க??"-என்று,அவர்களிடம் பேச தொடங்கினார்.

"ஊர் திருவிழா வருதுல்லங்க! அதான்!"

"ஆமாம்மா!என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?"

"இந்த வருஷம்,மனசுல கள்ளம் கபடமில்லாத,அந்த அம்மன் சாயலிலே இருக்கிற ஒரு பொண்ணு மேல அந்த அம்மனை இறக்கி,ஊர் குறை,நிறைகளை எல்லாம் நிவர்த்தி பண்ணலாம்னு பெரியவங்க முடிவு பண்ணிருக்காங்க!"

"ஆனா,அப்படிப்பட்ட பெண் கிடைப்பாளா?நம்ம ஊர்ல இருக்கிற அம்மன் பார்வதி தேவி ஆச்சே! எந்த ஒரு குற்றமும் செய்யாதவங்க மேல மட்டும் தானே அவ இறங்குவா?"

"அதுக்கு தான்,உங்களை தேடி வந்தேன்.உங்க பேத்தி ஷைரந்தரி,பஞ்சாக்ஷர திதியில பிறந்தவ இல்லையா?தாய் இறந்தும்,ரொம்ப நேரம் கருவுல உயிர் வாழ்ந்தவ இல்லையா?அவளை...வர வைத்தால்?"

"ஷைரந்தரி, சின்ன பொண்ணுங்க...அவளால, அந்த உக்கிரத்தை நிச்சயமா தாங்க முடியாது!"

"இது,என்னோட தனிப்பட்ட முடிவு இல்லைங்க...ஊரார் சேர்ந்து எடுத்த முடிவு! உங்க பேத்தியை வர வைக்க முயற்சி பண்ணுங்க!"-அப்போது,

"ஜுஸ்...எடுத்துக்கோங்க!"-என்று அவர்கள் முன்னே இரு கோப்பைகளை நீட்டினாள் கல்பனா.

நஞ்சினை கக்கும் நாகத்தின் பார்வையில் பவித்ரமான பசும்பாலினை காண்பித்தால்,அதன் மனநிலை எப்படி மாறும்???

விதி...

கல்பனாவின்  வாழ்வினில், இப்படி நடந்தே தீர வேண்டும் என விழைந்தது போலும்!!!

தன் முன்னே,செதுக்கிய சிலையாய் நின்றிருந்த கல்பனாவை      கண்ணெடுக்காமல் கண்டு கொண்டிருந்தான் வினய்.

அந்நேரம் பார்த்து,அங்கே வந்திருந்த அசோக்கின் பார்வையில் இக்காட்சி பட,அவன் மனம் சலனப்பட்டது.

"கல்பனா!"-அவனது,குரலில் இருந்த உறுதி,வினய்யை கலைத்தது.

"என்னண்ணா?"

"யுதீஷ் கூப்பிடுறான்.போய், என்னன்னு கேளு போ!"

"சரிங்கண்ணா!"-அழகிய,புள்ளிமானை போல நடந்து சென்ற கல்பனாவை கண்ணெடுக்காமல் மீண்டும் பார்த்தான் வினய்.

அசோக்கின் பார்வை வினய் மேல் நிலைத்தது.

"சரிங்க...நான்,பேசி பார்த்துட்டு சொல்றேன்!"

"அப்போ! நான் கிளம்புறேன்!"-வினய்யோடு,கிளம்ப தயாரானார் ஈஸ்வரி.

அசோக் அங்கே இருந்ததால்,

"நாங்க வரோம் தம்பி!"-என்று அவனிடமும் கூறினர்.

"வராம இருக்கறதே நல்லது!"

"என்ன தம்பி?"

"இல்லை...உங்களுக்கு,ஏன் அலைச்சல்?எதாவது, விஷயம்னா சொல்லுங்க! நாங்களே வரோம்!"

"பண்புள்ள மனசுப்பா உனக்கு!"-அசோக்கும், வினய்யும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டனர்.

"வினய்! கல்பனாவை பார்த்தது தான்,அவ வாழ்க்கையோட மரண வாயிலை,அவளுக்கு காட்டமல் காட்டியது."

"வினய்! கல்பனா,மேல ஆசைப்பட்டனா?"

"கிட்டத்தட்ட!!ஆனா, வாழ்க்கை முழுசும்,அவ கூட வாழ விரும்பலை.உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்!"

"................."

"கல்பனாவை     அடையணும்னு நினைத்தவன்,அவ பின்னாடியே சுற்றி, அவளுக்கு தொல்லை தர ஆரம்பிச்சான்!அவளால,பொறுக்க முடியாம,அவ என்கிட்ட வந்து அழுதா! ஒரு வேளை யுதீஷ்க்கு விஷயம் போச்சுன்னா,அவன் வினய்யை கொன்னுட்டு இருந்திருப்பான்!!பிரச்சனை முடிந்திருக்கும்.ஆனா, கல்பனா அதை விரும்பலை.

அன்னிக்கு!"

வயலில்.....

மாங்காய் பறிப்பதற்காக மரத்தோடு போராடி கொண்டிருந்தாள் கல்பனா.

மாங்கனி பறிக்க மரத்தினை பற்றிய போது கால் இடற,கீழே விழாமல் தாங்கினான் வினய்.

திடீரென தீண்டிய வேற்று ஆடவனின் ஸ்பரிசத்தின் உஷ்ணத்தை,     உணர்ந்தவளாய்,அனல் மேல் பட்டதாய் விலகினாள்.

"என்னாச்சு கல்பனா?நான் எதுவும் தப்பா  பண்ணிட்டேனா?"

"இல்லைங்க...நான் கிளம்புறேன்!"-தன்னை கடந்து செல்ல முயன்றவளின் கரத்தை பற்றினான் வினய்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.