(Reading time: 19 - 37 minutes)

14. உள்ளம் வருடும் தென்றல் - வத்ஸலா

னது அறையை அடைந்திருந்தாள் அபர்ணா. முகம் கழுவிக்கொண்டு கட்டிலில் வந்து அமர்ந்த போது கைப்பேசியில் வந்தது அழைப்பு.

அழைத்தது அவள் அப்பா.

என்னமா? என்ன சொல்றான் உங்க அண்ணன்? உன்னோடதான் இருக்கானா ? என்றார் அவர்.

Ullam varudum thendral

அண்ணனா? இங்கே வரவே இல்லையேபா.!! என்றாள் வியப்பு கலந்த குரலில்.

வரலியா? 'அவனுக்கு transfer ஆர்டர் வந்து இன்னைக்கு காலையிலேயே சென்னை வந்திட்டானேமா. ஸர்ப்ரைஸா உன்னை காலேஜ்லே வந்து பார்க்கறேன்னு சொன்னானே.  என்றார் அப்பா.

'ஏதாவது வேலை இருந்திருக்குமோ என்னவோ.?? நான் பேசறேன்பா அவன்கிட்டே' என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டு, அடுத்த நொடி அஷோக்கின் எண்ணை அழைத்தாள் அபர்ணா.

ஒலித்த கைப்பேசியை பார்த்தபடியே அமர்ந்திருந்தான் அஷோக். அதை எடுத்து பேசிவிட முடியாமல்  ஏதோ ஒரு தயக்கம் தடுத்தது அவனை.

யோசிக்காமல் ஏதோ ஒரு வேகத்தில் அவன் சட்டென செய்து விட்ட அந்த காரியம் அவனை உறுத்திக்கொண்டிருந்தது.

நான் அப்படி செய்திருக்ககூடாதோ? அதனால் அபர்ணாவுக்கு ஏதும் பிரச்சனை வருமோ? யோசித்தபடியே அமர்ந்திருந்தான் அவன்.

ஒரு முறை நின்று போய் மறுபடி ஒலித்தது அவன் கைப்பேசி. அதை எடுத்தான் அஷோக்.

‘ஹேய் பெரிய குரங்கு’. என்றாள் அபர்ணா. எங்கே இருக்கே நீ.?

'இங்கேதான் ஹோட்டல்லே தங்கி இருக்கேன்' அவன் குரல் கொஞ்சம் இறங்கியே ஒலித்தது..

சரி ஏன் என்னை பார்க்க வரலை.? காலேஜ் வரேன்னு அப்பாகிட்டே சொல்லி இருந்தியாமே?

இல்லைடா. உன்னை பார்க்கணும்னு தான் அந்த பக்கம் வந்தேன். அதுக்குள்ளே..... நிறுத்தினான்.

அதுக்குள்ளே....?

அதுக்குள்ளே வேறே ஒருத்தரை பார்த்தேன். அவரோட பேசிட்டு அப்படியே.... நான்......வந்து.....

'யாருப்பா அது வேறே ஒருத்தர். உன் friend ஆ.?'

'ம்???? ம். ஆ...ஆமாம். friend மாதிரி தான்னு வெச்சுக்கோயேன். மச்சான்..மாப்பிள்ளைன்னு பேசிக்குவோம்'. எதையோ சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்துகொண்டிருந்தான் அவன். அவன் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை அவளுக்கு.

சில நொடிகள் கழித்து  சரி. உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையேடா.?? என்றான் அவன்.

எனக்கு என்ன பிரச்சனை? நான் நல்லா தானே இருக்கேன். என்றவள். எனக்கு இப்போ கொஞ்சம் வேலை இருக்கு.  நாளைக்கு இங்கே வா நீ. சரியா? என்றாள்.

ம். சரி என்றவன் யோசித்தபடியே அழைப்பை துண்டித்தான்..

கைப்பேசியை கீழே வைத்தவளின் மனதிற்குள் சற்று நேரம் மறந்திருந்த பரத்தும்  விஷ்வாவும் வந்து ஆக்கிரமித்துக்கொண்டார்கள்.

பரத் வீட்டுக்கு போவதா வேண்டாமா? என்ற எண்ணத்திலேயே இருந்தவள், அஷோக் பேசியதை பற்றி யோசிக்கவில்லை.

யோசித்திருக்க வேண்டும் அவள். கொஞ்சம் யோசித்திருந்தால் அவன் சொன்னதை வைத்தே அவன் யாரிடம் பேசினான்?, என்ன பேசியிருப்பான்? என்பதை கூட யூகித்திருக்க முடியும் அவளால். யோசிக்கவில்லை அவள்.!!!!!

மாலை ஆறரை மணி.

தனது வீட்டில் தனது சட்டையை இஸ்திரி செய்துக்கொண்டிருந்தான் பரத். அவனது சட்டையை விட மனம் அதிகமாக கசங்கிப்போயிருந்தது. குழப்பத்தில் அழுந்திப்போயிருந்தது.

மெல்ல நிமர்ந்த அவன் கண்கள் பதிந்தது அதே மேஜையின் மீதிருந்த அவன் வரைந்து வைத்த அவளது ஓவியத்தின் மீது. அவன் மனதிற்குள் எண்ணிலடங்கா சிந்தனைகள் .

நான் இந்த கண்ணனோட கண்ணம்மா, நல்லாருக்கா? அழகாய் தலையசைத்து புன்னகையுடன்  அவள் கேட்டது அவன் நினைவிலாடியது.

சரியாய் அந்த நொடியில் திரை 'கண்ணம்மா' என்று ஒளிர, ஒலித்தது அவன் கைப்பேசி.

தனது மன உளைச்சல்கள் எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல் 'சொல்லுடா....' என்றான் நிதானமாக.

என்ன பண்றீங்க?

அயர்ன் பண்றேன்.

உங்க சட்டையவா?

இல்லை. இந்த தெருவிலே இருக்கறவங்க எல்லார் சட்டையையும் வாங்கிட்டு வந்து அயர்ன் பண்ணிட்டு இருக்கேன்.

ஒ! சரி! சரி! என்றாள் அவள். அவன் என்ன சொன்னான் என்றே அவள் புத்திக்கு எட்டவில்லை. அவள் மனம் வேறொரு திசையில் இருந்தது.

'நான் ஒ.. ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் போன் பண்ணேன். அது... வந்து இங்கே...... ஹாஸ்டலிலே ஒரு பொண்ணுக்கு உடம்பு சரியில்லை....... திடீர்ன்னு மயக்கம் போட்டுட்டா..... நான்..... ஹாஸ்பிடல் போகணும். அதனாலே...' தயங்கி தயங்கி ஒலித்தது அவள் குரல்.

அதனாலே....?

'இல்லைப்பா... நான் அதனாலே ..... பார்டிக்கு...... வர முடியாது அதான்..... சொல்ல.. லாம்னு' இவ்வளவு நேர யோசனைக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாக. சின்னதான இந்த பொய்யை அவனிடம் மெல்ல மெல்ல ஒரு வழியாக சொல்லி முடித்தாள் அபர்ணா.

சுருக்கென்றது பரத்துக்கு. 'சரிடா... டேக் கேர்.....  ' என்றான் அவன் சட்டென. அவளே இதை எதிர்ப்பார்க்கவில்லை. அதற்கு மேல் எதையுமே பேசமால் அழைப்பை துண்டித்தான் அவன்.

அவள் குரலிலும், சொன்ன விதத்திலுமே அவள் போய் சொல்கிறாள் என்றே தோன்றியது அவனுக்கு. ஆனால் ஏனோ தன்னவள் தன்னிடம் பொய் சொல்வாள் என ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை அவனால்.

இருக்காது. இது பொய்யாக இருக்காது.' என்று ஒரு புறம். இல்லை பொய்தான் சொல்கிறாள் என்னவள். யாருக்காகவாம்? எதற்காகவாம்? இந்த பொய், என்று ஒரு புறம் என  அலைப்பாய்ந்து பொங்கியது அவன் மனம்.

அரை மணி நேரத்துக்கு மேல் கடந்திருந்ததும் மனம் நிலைக்கொள்ள மறுத்தது அவனுக்கு

வீட்டில் விருந்துக்கான ஏற்பாடுகள் துவங்கி விட்டிருந்தன.

'இதோ  கொஞ்ச நேரத்திலே வந்திடறேன் அத்தை' அத்தையிடம் சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டிருந்தான் பரத்.

அவளது ஹாஸ்டல் வாசலை அடைந்து, காரை நிறுத்தி விட்டு இறங்கினான் அவன். அவனது கண்கள் கொஞ்சம் அலைபாய, கண்ணில் பட்டது அவளது அங்கே நின்றிருந்த அவள் ஸ்கூட்டி.

கைப்பேசியை எடுத்து அவள் எண்ணை அழுத்தினான்.

சில நொடிகளில் அழைப்பு ஏற்கப்பட எங்கேடா இருக்கே? என்றான் அவன்.

அ... அது .... ஹாஸ்பிடல்லேதான் என்றாள் அபர்ணா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.