(Reading time: 27 - 53 minutes)

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09 - புவனேஸ்வரி கலைச்செல்வி

ஹாய் ப்ரண்ட்ஸ் .. முதலில் " இத்தனைநாளாய்எங்கிருந்தாய் ?" நு நீங்க என்னை கேள்வி கேட்குற மாதிரி கடந்த சில ( பல )​ நாட்களாக இந்த தொடரை தொடராமல் இருந்ததுக்கு மன்னிச்சிருங்க . நீங்க எந்த அளவு நம்ம மதி, நிலா, ஷக்தி , மித்ரா எல்லாரையும் மிஸ் பண்ணிங்களோ ( பண்ணிங்க தானே ? ​) அந்த மாதிரி அவங்களும் உங்களை மிஸ் பண்ணினாங்க . சோ இதற்கு மேலயும் உங்களை காக்க வைக்காமல் கதைக்கு வந்திடுறேன் . போன எபிசொட்ல சொன்ன மாதிரி “ நியு யெர் ஸ்பெஷல்” காக நான் காலசக்கரத்தை திருட்டுத்தனமா முன்னே செலுத்தி கதைய காட்டினேன் இல்லையா, அதை நம்ம காலதேவன் கண்டு புடிச்சு எனக்கு செம்ம டோஸ் விட்டுட்டாரு .. ஆனா திட்டு வாங்குறது நமக்கு சகஜம் தானுங்களே .. அதனால அதை பொருட்படுத்தாமல் அவரின் கட்டளைக்கு ஏற்ப மீண்டும் உங்களை மதியழகனின் மலர் இல்லத்துக்கு கூட்டிடு போறேன் வாங்க ..

லர் இல்லம். 

கடற்கரை அருகில் இருப்பதினாலா ? பூக்கள் தோட்டம் நிறைந்ததினாலா ? காற்றுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா ? என்று பாண்டிய மன்னன் ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு சுகந்தமாய் வீசியது இயற்கை மணத்தோடு தென்றல் காற்று ! அந்த வாசத்தை உள்ளிழுத்து ரசித்தபடியே காரிலிருந்து இறங்கினார் அம்மு பாட்டி.

Ithanai naalai engirunthai

" எத்தனை நாளாச்சு இங்க வந்து ? " என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டார் . முதுமையையும் தாண்டி ஒரு தேஜஸ் தெரிந்தது அவரது முகத்தில் .. அது அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த மகிழ்ச்சிதான் என்று புரியாமல் இல்லை மதியழகனுக்கும் .. மதியழகனும் காரிலிருந்து இறங்க, இருவரையும் சுற்றிக் கொண்டனர் பணியாட்கள்..

" வாங்க தம்பி .. வாங்கம்மா .. நல்ல இருக்கிங்களா ?"

" நல்ல இருக்கேன் முத்தையா .. நீங்க எப்படி இருக்கீங்க ? "

" எனக்கென்னம்மா நல்ல இருக்கேன் .. இந்த பாப்பா ??" என்று காரில் சாய்ந்து உறங்கிகொண்டிருந்த தேன்நிலாவை பார்த்து .. பாட்டி மதியழகனை ஏறிட அவனே

" நான் கட்டிக்க போற பொண்ணு அய்யா " என்று சொன்னான் .. அவன் சொன்ன விதத்தில் பாட்டிக்கு சொல்ல முடியாத பெருமைதான் .. ஒரு பெண்ணுக்கு ஆண் கொடுக்க முடிந்த மிகப்பெரிய அங்கீகாரமே அவள் தன்னவள் என்பதை அவன் அனைவரின் முன்னிலையிலும் சொல்வதுதான் . அவனே தன் வாயால் தங்களது உறவை சொல்கிறானா, என்று பார்க்கத்தான் பாட்டியும் அமைதியாய் அவனை ஏறிட்டார் . அவரின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் தன் மனதை வெளிப்படையாய் சொன்ன பேரனை எண்ணி பூரிக்காமல் இருக்க முடியுமா ?

" அடடே ரொம்ப சந்தோசம் தம்பி ... நான் உங்களுக்கு ஏதும் உதவி செய்யனுமா ? " என்று குறிப்பறிந்து கேட்டவரை மனதிற்குள் மெச்சினான் மதி . ஆமா கொஞ்சம் கதவை திறந்து பாட்டியை அழைச்சிட்டு போங்க .. நான் நிலாவை தூக்கிட்டு வரேன் " என்றான் .

பாட்டியுடன் முன்னே நடந்தார் முத்தையா .. பாட்டிக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசினார் அவர் ..

" ரொம்ப சந்தோஷமா இருக்குமா .. "

" எனக்கும்தான் முத்தையா "

" அப்போ இனி இங்கதான் இருப்பிங்களா மா ? சின்னய்யாவும் வந்திடுவாரா ? "

" உங்க கேள்வி சுலபம் முத்தையா ஆனா பதில் சொல்லுற நிலைமையில் நான் இல்லையே . இப்போதைக்கு நிலாவுக்காக ஒரு வாரம் இங்க இருப்போம்.. மத்தப்படி நம்ம குடும்பம் பழையபடி மாறுறது கடவுள் கைலதான் இருக்கு " தூரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த மதியழகனை பார்த்தார் முத்தையா .. நிலாவை பூமாலை போல ஏந்தியவன் , அவள் நெற்றியை மறைத்துக் கொண்டிருந்த கூந்தல் கற்றை மெல்ல ஊதிவிட்டான் .. அவன் முகத்தில் இதுவரை காணாத மென்மை படர்ந்து இருந்தது .

" காதலிச்சா மனசு குழந்தை மாதிரி ஆகிடும் .. லேசாகிடும்னு பெரியவங்க சொன்னது நிஜம்தான் அம்மா .. மதி தம்பி முகத்தை பார்த்தா எல்லாம் சரி ஆகிடும்னு எனக்கு தோணுது .. இந்த வீட்டையே நிலா அம்மா மாத்திடுவாங்க பாருங்களேன் " என்றார் ஏதோ வருங்கலாத்தை கணித்து விட்டவர் போல ..

" உங்க வாக்கு பலிக்கட்டும் " என்ற பாட்டி வீட்டினுள் சென்று முதல் வேலையாய் ஆரத்தி கரைத்து எடுத்து வந்தார் ..

" மதி கொஞ்சம் இருப்பா "

" என்ன பாட்டி இதெல்லாம் "

" முதல் தடவை ரெண்டு பேரும் வீட்டுக்கு வர்ரிங்கள்ள அதான் .. "

" நல்லவேளை உங்க பேத்தி மயக்கத்தில் இருக்குறா ... இல்லன்னா நீங்களும் நானும் பண்ணுற வேலைக்கு ரெண்டு பேரையும் சுட்டு தள்ளி இருப்பா "

" ஆமா ஆமா .. ரொம்ப பயந்தவன் தானே டா நீ .. அதுனாலத்தான் இப்படி அவளை கடத்திட்டு வர நெனச்சியாக்கும் "

" ஹா ஹா .. எல்லாம் அரோகரா தியரி மேல உள்ள நம்பிக்கைதான் "

" அதென்ன டா அரோகரா தியரி ?"

" அதுவா ... உங்க பேத்தி கோபத்தில் கொந்தளிக்கும்போது தலைக்கு மேல கை உயர்த்தி என்னை மன்னிச்சுடு தாயேன்னு காலில் விழுறதுதான் " என்று சிரிக்காமல் பயந்த முகத்துடன் சொன்னவனின் கன்னத்தை கிள்ளினார் பாட்டி ..

" ஸ்ஸ்ஸ்ஸ் ஆஅ வலிக்கிறது அம்மு "

" படவா ... முதலில் என் பேத்தியை மெத்தையில படுக்க வை .. கதை பேசுறேன் பேர்வழின்னு கையிலேயே தூக்கி வெச்சுக்கலாம்னு ஆசையா உனக்கு ?"

" சான்ஸ் ஏ இல்ல .. எப்படி அம்மு எல்லாத்தையும் சரியா கண்டுபுடிக்கிற ?"

" மறுபடியும் பேச்சை வளர்க்க பார்க்குறியா ? இந்த வேலையே வேணாம் .. எனக்கு சமையல் வேலை இருக்கு ... நீ போயி நிலாம்மாவுக்கு ரூம்ல எல்லாம் சரியாய் இருக்கான்னு பாரு போ " பாட்டிக்கு காற்றிலே ஒரு முத்தத்தை பறக்க விட்டுவிட்டு சென்றான் மதியழகன் ..

வனது அறையில் அவளை கிடத்திவிட்டு, அவளுக்கு வேண்டிய பொருட்களை அருகிலேயே அடுக்கி வைத்தான் .. காய்ச்சல் கொஞ்சம் குறைந்திருந்தாலும் இன்னும் அவள் மயக்கத்தில் தான் இருந்தாள்..

" பஞ்சு மாதிரி இருக்கு ஹனி உன் வைட் . கல்யாணத்துக்கு பிறகு உன்னை நடக்கவே விட மாட்டேன் பாரு .. எப்பவும் நானே தூக்கி வெச்சுப்பேன் .. இந்த பிவர்லயும் எப்படி செல்லம் தாறு மாறா அழகா இருக்க ?? நிலவு கூட தோற்று போயிடும் உன் அழகில் . அதைவிட உன் கோபம் இருக்கே .. அந்த முட்டை கண்ணு விரியுறதும், வெளியில் சொல்லாமல் உன் செப்பிதழ் வாய் முணுமுணுக்குறதும் , நான் ஏதாவது சொன்னா நீ கோபத்தில் புஸ்ஸு புஸ்ஸுன்னு பெருமூச்சு விடுறதும் ,   ச்ச்ச சான்ஸ் ஏ இல்ல .. எப்போடா உன்கிட்ட அடிவாங்குவோம்னு வைட் பண்றேன் .. சீக்கிரம் எழுந்திடுடா " என்றான் மதி ..

" டேய் " என்று பின்னாடியே குரல் கொடுத்தார் பாட்டி ..

" இதுதான் நீ என் பேத்தியை பார்த்துக்குற லட்சணமா ? "

" ஐயோ அம்மு "

" உடம்பு சரி இல்லாத பெண்ணை சைட்டா அடிக்கிற நீ .. ஏற்கனவே அவளுக்கு உடம்பு சரி இல்லை .. இதுல உன் கண்ணு வேற படனுமா ? என்னை மீறி இனி நீ நிலா குட்டியை சைட் லாம் அடிக்க முடியாது .. அதான் நான் வந்தாச்சுல .. நான் நிலாவை பார்த்துக்குறேன் .. நீ போ " என்று மிரட்டினார் பாட்டி ..

" ஹ்ம்ம் உன் மகனோட வீட்டுக்கு வந்ததும் ரொம்பதான் கொழுப்பு ஏறிடுச்சு பார்த்தியா .. என் நேரம் .. வேறென்ன சொல்ல ? " என்று பெருமூச்சு விட்டவன்

" நிலாவை உங்களுக்கு புடிச்சிருக்கா பாட்டி " என்று கேட்டான் ஆவலுடன் . அவனது கண்களை பார்த்தார் பாட்டி ..

" எங்கடா வெச்சிருந்த இவ்வளவு காதலை நீ ? " என்று எண்ணியவர் ..

" அதெல்லாம் இப்போவே சொல்ல முடியாது .. ஒரு வாரம் கழிச்சு சொல்லுறேன் " என்றார் ..

" ஹ்ம்ம்ம்ம் நீ மோசம் அம்மு " என்று சலித்துக் கொண்டவன் பாட்டியிடம் அவளுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளை கொடுத்து விட்டு, ஒரு வாரத்தில் முடிக்க வேண்டிய சில முக்கியமான வேலைகளை முடித்துவிட்டு வருவதாக அலுவலகத்திற்கு சென்றான் .. செல்வதற்கு முன்பே,

" நான் வர ரொம்ப லேட் ஆகிடும் அம்மு .. அதுக்குள்ள நிலா எழுந்தா நீதான் பேசி சமாதனம் படுத்தனும்" என்று அந்த மிகப் பெரிய சவாலை பாட்டியின் கைகளில் ஒப்படைத்து விட்டு சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.