(Reading time: 19 - 38 minutes)

என்ன தவம் செய்து விட்டேன் – 02 - புவனேஸ்வரி கலைச்செல்வி

 பிசாசு பிசாசு , ஏன்டீ இப்படி தண்ணில  தள்ளி விட்ட ? என் புது பேர்த்டே  டிரஸ் மொத்தமா நனைஞ்சிருச்சு .. " என்று சொல்லிக் கொண்டி நீரை அள்ளி சாஹித்யாவின் முகத்தில் தெளித்தான் அருள் ..

" அதை நான் சொல்லனும்டா .. நீதான் தண்ணில  விழற ...எதுக்கு என் கைய புடிச்சு இழுத்த நீ குரங்கே! "

" ஹே நீதானேடி தள்ளி விட்ட ?"

Enna thavam seithu vitten

" அதுக்கு என்னையும் நனைய வைப்பியா நீ ... இன்னைக்கு எனக்கு பிறந்தநாள் ... "

" அப்போ எனக்கு மட்டும் நேத்தா பிறந்தநாளு ?"

"டேய் உன்னைய " என்று பற்களை நறநறவென கடித்துக் கொண்டே அவனை நெருங்கினாள்  சத்யா. அவள் கை அவனது கேசத்தை பிடித்து இழுக்க, அவன் அவளது கூந்தலை பிடித்து இழுத்தான் .. இருவருமே வலியில் " அப்பா " என்று கத்த

" போச்சுடா " என்று பதறியடித்துக் கொண்டு வந்தனர் அர்ஜுனும் ரவியும் ..

" டேய் நண்பன் எதாச்சும் பண்ணுடா " - ரவி

" அட போடா இவங்க சண்டைக்குள்ள நாம இடைபுகுந்தா  அவ்ளோதான் .. கொஞ்ச நேரம் வேடிக்கை பாரு அவங்களே சமாதானம் ஆகிடுவாங்க "

தந்தையர் இருவரும் ஒரு கையில் குளிர்பானம், ஒரு கையில் பாப் காரன் இல்லாத குறையாய் இருவரின் சண்டையையும் பார்த்துக் கொண்டு இருந்தனர் .. இருவரின் சத்தமும் அதிகமாக, தாயார் சுமி, சுஜி  இருவருமே அங்கு பதறியடித்துக் கொண்டு வந்தனர் ..

" ஹே சத்யா விடுடீ அருளை ... பாவம் வலிக்கும் அவனுக்கு.. பொண்ணு மாதிரியாடி நடந்துக்குற நீ ? முதலில் ரெண்டு பேரும்  மேல வாங்க " என்று அவனுக்கு பரிந்து பேச வந்தார் சுமித்திரா..

சுஜாதாவோ " டேய் அருள், இதென்ன பழக்கம் எப்போ பார்த்தாலும் முடியை புடிச்சி இழுத்து சண்டை போடுறது? இன்னும் சின்ன பசங்கன்னு நெனப்பா உனக்கு ? பாவம் பாரு அவ கண்ணு சிவந்துடுச்சு .. வலிக்கும் விடுடா " என்று கொஞ்சம் கோபமாகவே சொன்னார் ..

" யாரு ? இவ கண்ணு சிவந்திருக்கா ? அம்மா தண்ணி கண்ணுல பட்டா விஜய்காந்த்  சார் கு கூடத்தான் கண்ணு சிவக்கும் .. அவ நடிக்கிறா நீங்க நம்பிடாதிங்க " என்றான் அருள் ..

" அம்மா , எப்படி வாய் பேசுறான் .. இவனை நான் சும்மா விடணுமா ? " என்று மீண்டும் அவன் மீது தாக்குதலை தொடங்கினாள்  சாஹித்யா .. இது போன்ற பனிப்போர் பல நூறை பார்த்த அனுபவத்தில் பெற்றோர் இருவருமே வீட்டினுள் சென்று விட்டனர் ... சிறிது நேரத்தில்

" போதும் அருள் ... மூச்சு வாங்குது .. நாம அப்பறமா சண்டை போடலாம் " என்ற சத்யா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு

" என்னடா வரவர வீட்டுல நமக்கு மரியாதையே இல்லை .. இப்படி உயிரை கொடுத்து சண்டை போடுறோம், எல்லாரும்  எனக்கென்னனு  உள்ள போயிட்டாங்க " என்றாள் ...

" நானும் அதேதான் யோசிக்கிறேன் டீ ... இது சரி இல்லையே .. இப்படி இவங்க உஷார் ஆகிட்டா நமக்கு எப்படி  பொழுது போகும் ? "

" அதானே .. ? அதுவும் நாம பேர்த்டே  பேபிஸ் ...இந்நேரம் கைல ரெண்டு சாக்லேட் தந்து சண்டையை நிறுத்தி இருக்க வேணாமோ ? "

" அவங்களுக்கு பயம் இல்லை .... அவங்களுக்கு பயம்னா என்னனு காட்டனும் சத்யா " என்று சினிமா வில்லன் போல வலது கரத்தை மடக்கி சவால் விட்டான் அருள் ... தனது ஆருயிர் நண்பனின் முகத்தை ஆர்வமாய் பார்த்தாள்  சாஹித்யா ..

" என்னடி லுக்கு ?"

" ஹா .. ஹா நீ எப்போடா வளர போற ? "

" நீ பிறந்த அதே நாள் தானே நானும் பிறந்தேன் ? "

" டேய் ஆனா நீ நாலு வருஷம் முன்னாடியே பிறந்த அவசர குடுக்கை "

" சரி சரி .. என்னை பேச விடு "

" த்து .. பேசி தொலை !"

“ நீ நடக்க ஆரம்பிச்சப்போ தான் நானும் ஓட  ஆரம்பிச்சேன் , நீ பேச ஆரம்பிச்சப்போதான் நானும் பாட ஆரம்பிச்சேன் .. "

" ஷாபா ,, நான் மொக்க போட ஆரம்பிச்சப்போதான் நீயும் மொக்க போட ஆரம்பிச்ச, அப்பறம் ? "

" ஹீ ஹீ ... கொஞ்சம் கடியா இருக்கோ ?"

" கொஞ்சமா, இந்நேரம் நம்ம கதையை கேட்டு எத்தனை  பேரு காதுல கண்ணுல ரத்தம் வருதோ தெரில .. அதனால உன் மொக்கைக்கு ஒரு முற்றுபுள்ளி வைடா  தங்கமே .. "

" சரி சரி .. நீ எப்போ விளையாட்டுத்தனமா இருக்குறது போதும்னு சொல்லி வளருறியோ அன்னைக்கு நானும் வளர்ந்திடுறேன் .. "

" கழுதை கெட்டா  குட்டிச்சுவறு .. அப்போ கடைசிவரை நீயும் என்னை மாதிரிதானா ? " என்று பெருமூச்சுவிட்டு சிரித்தாள் சத்யா ....

அவள் சிரிப்போசையுடன் தனது சிரிப்போசையையும் இணைத்து அவளுக்கு ஹை5 தந்தான் அருள்... ( இவங்க இப்படி கே கே பி கே ன்னு சிரிக்கிற கேப்ல, இவங்க யாருன்னு நான் சொல்றேன் வாங்க)

அர்ஜுன் மற்றும் ரவிராஜ்  இருவரும்  சிறு பிராயத்தில் இருந்தே நண்பர்கள்.. ஆம், பெற்றோரால் நிராகரிக்கப்பட்ட இருவருமே ஒரே ஆஸ்ரமத்தில் நட்பெனும் உறவின்மூலம் அத்தனை உறவுகளையும் ஒரே உருவில்  பெற்றவர்கள். வாலிப வயதை எய்திய இருவரும், அந்த ஆஸ்ரமத்தில் விதிமுறைக்கேற்ப தத்தம் சொந்த வாழ்க்கையை தேடி கூட்டை விட்டு பறவையாய் பறக்க வேண்டிய சூழ்நிலை . கையில் கிடைத்த வேலையை வரமென கருதி  இருவரும் கடின உழைப்புடன் வேலையை  செய்து, ஒரே வீட்டில் தங்கி இருந்தனர் . இருப்பினும் இன்னொருவருக்கு கீழே எத்தனை நாட்கள்தான் வேலை பார்ப்பது ? அந்த எண்ணம்  அர்ஜுனின் மனதை ஆக்கிரமித்தது. இதை தனது நண்பன் ரவிராஜுடன் பகிர்ந்து கொள்ள, அவனது எண்ணமும் அதேதான் அதேதான் என்று தெரிய வர இருவருமே, தெளிவான திட்டத்திற்குபின், ஒரு துணிக்கடையை திறந்தனர் .. கடின உழைப்பும் தெளிவான வியாபார யுக்தியும் அவர்களின் உயர்வுக்கு வழிக்காட்டியது. இன்று மக்களால் விரும்பப்படும் பிரபல ஜவுளிகடைகளுக்கு இவர்களே முதலாளிகள் ! காலச் சக்கரத்திற்கு இணையாக ஓடிய இருவரின் மனதிலும் காதல் புயல் வீசி அவர்களின் துணையாய் வந்தனர் சுமித்திராவும், சுஜாதாவும்... ஆக , நம்மில் பலர் சரியாக யூகித்த மாதிரி அருளும், சத்யாவும் சிறுவயதில் இருந்தே ஒன்றாய் வளர்ந்த நண்பர்கள்!!!! ( வரலாற்றில் முதல் முறையாக நான் இவ்வளவு குட்டியா ப்ளாஷ்  பேக் சொல்லி இருக்கேன்...ஹீ ஹீ )

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.