(Reading time: 10 - 19 minutes)

05. வாராயோ வெண்ணிலவே - சகி

"விஷ்வா!"

"ஆங்..."-பல்லில் கருவேலங்குச்சியை கடித்து கொண்டிருந்தான் விஷ்வா.

"என்னடா பண்ற?"

Vaarayo vennilave

"பல் வலி...இப்படி பண்ணா சரியாயிடும்னு துர்காம்மா சொன்னாங்க...!"

"பார்த்துடா! எஜமான் படத்துல,ரஜினிகாந்த் கதை ஆயிடப் போகுது!"

"கவலைப்படாதே! குச்சி தீர்ந்து போச்சுன்னா... உன்னை போய் வாங்கிட்டு வர சொல்ல மாட்டேன்!வைத்தீஸ்வரி...ச்சே...ச்சே.. துர்காம்மா!"

"டேய்! போதும் அடங்குடா!"

"சரி...சொல்லு,என்ன மேட்டர்.???"

"ஹாஸ்பிட்டல் போயிட்டு வரேன்டா!"

"என்னாச்சு உடம்புக்கு?"

"டேய்! நம்ம ஆஸ்பிட்டலுக்கு போயிட்டு வரேன்டா!"

"இதுக்கு வேற வேலையே இல்லை.ஒரு ஊர் விடாம பிரான்ச் (கிளை) திறந்து வைச்சிடுவா!"

"அப்பா,ஆசைக்காக இங்கே வந்தது.அதுக்கூட ஹாஸ்பிட்டல் மட்டும் தானே??"

"சரிம்மா...தாயே!போயிட்டு வா!"

"ம்...பல்லு பத்திரம்!"

"சரி...போயிட்டு வா!!"

"ம்..."-ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

"தே! கார்ல போகலாம்ல?"

"கார்ல போனா என் கெத்து,என்ன ஆகுறது?"

"ஐயோ! கிளம்பு போ போ!"

"இன்னிக்கு எத்தனைக்கு பேருக்கு விபத்து நடக்க போகுதோ??"-கிளம்பினாள் வெண்ணிலா.

"மிஸ்டர்.யுகேந்திரன்."

"டாக்டர்??"

"குழந்தை நல்லப்படியா வளர்கிறது.பட்,நான் உங்களுக்கு வேற டாக்டரை சஜ்ஜஸ்ட் பண்றேன்!"

"ஏன் டாக்டர்?"-தயங்கினான் யுகேந்திரன்.

"நத்திங் சீரியஸ்.இந்த டாக்டர் அமெரிக்கா ரிட்டன் கைனகாலஜிஸ்ட்.என் ஸ்டூடண்ட் தான். கவலைப்படாதீங்க நீங்க போய் அவளை பாருங்க! நான் அனுப்பினேன்னு சொல்லுங்க.ஷி வில் டேக் கேர் ஆப் யுவர் வைப் அண்ட் சைல்ட்!"

"ஓ.கே.டாக்டர்!"

"ஹாஸ்பிட்டல் நேம்! வி.எம்.மல்ட்டி யுடிலிட்டி கேர் ஆஸ்பிட்டல்!"

"டாக்டர் பெயர்??"

"வெண்ணிலா!"-அப்பெயரை கேட்டதும் திவ்யா சரலென நிமிர்ந்தாள்.

"வெண்ணிலா மகேந்திரன்!நீங்க போய் பாருங்க!"

"தேங்க்யூ டாக்டர்!"-வெளியே வந்ததும் திவ்யா யுகேந்திரனிடத்தில்,

"என்னங்க?"

"ம்..."

"ஒருவேளை அது நிலாவா இருக்குமோ?"

"ச்சே! ச்சே! இருக்காதும்மா!ஊர்ல,அவ மட்டும் தான் வெண்ணிலாவா?அவளா இருக்க மாட்டா! நீ வா!அந்த ஹாஸ்பிட்டல் போயிட்டு போகலாம்!"

"சரிங்க!"

வி.எம்.மல்ட்டி யுடிலிட்டி கேர் ஹாஸ்பிட்டல்...

பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

டீன் உள்ளே இருக்கிறாள் அல்லவா??அதான்...

"பேஷண்ட் லிஸ்ட் எல்லாம் என் கேபின்ல வைங்க! நெக்ஸ்ட் பேஷண்ட் யாருன்னு பார்த்து அனுப்புங்க!"-ஆணைகளை பிறப்பித்தாள் வெண்ணிலா.

"ஓ.கே.டாக்டர்!"-பம்பரமாய் சுழன்றனர் அனைவரும்.

வரவேற்பறையில்...

"எக்ஸ்யூஸ்மீ!"

"எஸ்!"

"கேன் ஐ மிட் மிஸ் வெண்ணிலா மகேந்திரன்??"

"டூ யூ ஹேவ்      அப்பாயிண்ட்மண்ட் சார்?"

"ஸாரி..! ஐ டஸ்ஸிண்ட் ஹேவ் அப்பாயிண்ட்மண்ட்!"

"இப்போ தான் முதல் முறை பார்க்கிறீங்களா?"

"ஆமாம்."

"ஸாரி சார்! அப்போ அப்பாயிண்ட்மண்ட் கண்டிப்பா வேணும்!"

"மகேஷ்வரி டாக்டர் அனுப்புனாங்க!"

"ப்ளீஸ் வெயிட் சார்!"-தொலைப்பேசியில் அழைத்தாள்.

"சொல்லுங்க!"

"மேம்.மகேஷ்வரி டாக்டர் அனுப்பினதா வந்திருக்காங்க!"

"உடனே அனுப்புங்க!"

"ஓ.கே.மேம்!"-போனை வைத்துவிட்டு,

"சார்...நீங்க போகலாம்!"

"தேங்க் யூ!"

"வெல்கம் சார்!"-யுகேந்திரன்,திவ்யாவை அழைத்துக் கொண்டு சென்றான்.

"எக்ஸ்யூமி டாக்டர்!"

"கம் இன்!"-கணினியில், எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தாள் வெண்ணிலா.

அவளை கண்ட திவ்யாவிற்கு கண்கள் விரிந்தன.

யுகேந்திரன் இதற்கு முன் நிலாவை பார்த்ததில்லை... ஆதலால்,அவன் இயல்பாக இருந்தான்.

கணினியில் இருந்து கண்களை எடுத்த நிலா எந்த உணர்ச்சியும் காட்டவில்லை.

"உள்ளே வாங்க!"

"மகேஷ்வரி மேம் அனுப்புனது?"

"நாங்க தான் மேம்! ஷி இஸ் திவ்யா.மை வைப்!"

"ஓ...அவங்க ரிப்போர்ட் காட்ட முடியுமா??"

"எஸ் மேம்!"-ரிப்போர்ட்டை வாங்கி பரிசோதித்தாள்.

"ஓ.கே.மிஸ்டர்??"

"யுகேந்திரன்!"

"ஆ...யுகேந்திரன்!மந்திலி தவறாம செக் அப் கூட்டிட்டு வாங்க!!!இது...3 வது மாசமா?"

"எஸ் மேம்!"

"குழந்தையை பத்திரமா பார்த்துக்கிறா மாதிரி, அவங்க அம்மாவையும் பார்த்துக்கோங்க!"

"ஓ.கே.டாக்டர்!"

"இந்தாங்க ரிப்போர்ட்!"

"தேங்க்யூ டாக்டர்!"-கூறிவிட்டு வெளியேறினர்.

நிலா இயல்பாக தன் வேலைகளில் கவனம் செலுத்தினாள்.

"ன்னங்க!"

"ம்..."

"அது நிலா!"

"எது?"

"அந்த டாக்டர்.அது வெண்ணிலா தான்!"

"என்னம்மா சொல்ற?"

"ஆமாங்க,அது நிலாவே தான்!"

"அவ உன்னை பார்த்து எந்த அதிர்ச்சியும்      காட்டலையேம்மா?"

"அவ எப்படி காட்டுவா?"-கோபமானாள் திவ்யா.காட்ட விரும்பவில்லை அவள்.

பழம் கதைகளில் மூழ்கி மனதை காயப்படுத்தி கொள்ள விரும்பவில்லை அவள்.தன்னை யாரென்று நினைவுப்படுத்தி மீண்டும் அவமானத்தை பெற விருப்பமில்லை அவளுக்கு.

இப்போது நிலாவை பொருத்த வரை அவள் மருத்துவர்.அவள் தன்னை நாடி வந்த கர்பிணி அவ்வளவே!!!!

பார்க்கில் அமைதியாக அமர்ந்திருந்தான் ரஞ்சித்.

சில்லென மழை சாரல் அவன் மீது தெறித்தது. எழுந்து செல்ல மனமில்லை அவனுக்கு!!!

முன்பொரு காலத்தில் மழையை கண்டால் ஓடும் முதல் ஆளாக இருந்தவன் அவன்.

ஆனால்,அவனுக்கு நேர்மாறாக மழையை இரசிக்க அவன் தேவதை இருந்தாள்???இன்று..அவள் நினைவுகள் மட்டுமே!!!

அதனால்,அப்படியே இருந்தான்.

"மழை வந்தாச்சு,வெயிலை காணுமே???"

"ஏன்டி கேட்கிற?"

"மழையும்,வெயிலும் சேரும் போது வானவில் பிறக்கும்!"

"அப்போ நமக்கு??"-அவனின் பேச்சில் இருந்த சூட்சுமத்தை புரிந்தவள்...

தலை குனிந்தப்படியே,

"உனக்கு வேற வேலையே இல்லையா?"-என்றாள்.

"அடிப்போடி!!கல்யாணமாகி 6 மாசம் ஆகுது! இன்னும் ஒண்ணுமே ஆகலை.கிட்ட வரும் போதெல்லாம் தள்ளி போக சொல்ற?"

"நேரம் வரட்டும்!!நான் எங்கே போயிட போறேன்.உனக்கு மட்டும் தான் நான்!"-செல்லமாய் மூக்கை பிடித்து ஆட்டுவாள்.

னதை ஆட்கொண்ட ரணத்தை ஆற்ற எழுந்தான்.ஏதோ நினைவில் சென்று கொண்டிருந்தவனின் மேல் அறியாமல் வந்து மோதினாள் அவள்.

"ஸாரிங்க!"

"பரவாயில்லை!"-நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தவனின் கண்கள் ஸ்தம்பித்து நின்றான்.

அவனது,கண்கள் அவனையே நம்ப மறுத்தன. அவனைப் பார்த்த அவள் பேச்சிழந்து நின்றாள்.

"நிலா!"-தன்னிச்சையாக அவள் பெயரை உச்சரித்தன அவள் இதழ்கள்.

கனவில்,மட்டுமே கண்ட நிழல் நிஜமானது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.