(Reading time: 8 - 16 minutes)

 

ன்பென்பது செயலென்றால்

அது நித்தியம்

செய்திடுவேன் ஜீவனுள்ள நாளெல்லாம் (7)

பொறுமை செய்வேன் அஃது செயல் அன்பு

பொறாமை கொள்ளேன் அஃது செயல் அன்பு

என் நலம் நாடேன் அஃது செயல் அன்பு

எனக்காய் நீ என நினையேன் அஃது செயல் அன்பு

தற்புகழேன்; உனை சினவேன்’ தீங்கு நினையேன்

உன் நன்மை மாத்திரம் நினைத்திடுவேன்

என் சுயம், சொர்க்கம் செலவு பொருள்

உன் இன்பம், நன்மை தினம் கொள்முதல். (8)

காதலென்பது களபலி

எனைத்தருவேன் ஜீவபலி

திறக்கின்றேன் புதுவழி

இறவா இன்பம் அதன் {tooltip}நுனி{end-link}முடிவு{end-tooltip} 

களித்திருப்போம் கலந்திருப்போம் காலெமெல்லாம் இனி

{tooltip}கலி{end-link}கடல்{end-tooltip}   {tooltip}கலிப்போம்{end-link}செய்வோம்{end-tooltip}   காதல் கலி (9)

 

நறுமீன் திருமணம் என புரியாமல் ஆயத்தமாதல்

சிவந்தது கிழக்கு

சென்றதவள் சிந்தை மேற்கு

சொர்ணம், சுங்கம், கண நேரம் செலவின்றி

ஆத்துமம் பயணம் யூதேயம்.

உள்ளுணர்வில் அக்களிப்பு

உயிரெல்லாம் ஜெய செழிப்பு

ஏனிந்த பரபரப்பு

நன்மை வரும் அறிவிப்பு

ஓ! இந்நாள் நன்நாள்

பாவை வாழ்வின் பெருநாள்

என்றதொரு ஓசையற்ற ஓதல்

விசும்பு சுரம் புள் புனல்

{tooltip}கடி நகர்{end-link}காவல் செய்யபட்ட நகர்{end-tooltip} மதில் சுவர், களம் காற்று

எங்கெங்கும் சுழல கேட்டு

உயிரில் இன்ப நீரூற்று. (10)

வந்தனர் சிந்துநதி மங்கையர்

நங்கையர் {tooltip}நடுபாலர்{end-link}eunuchs{end-tooltip} பாங்கியர் படைசூழ

{tooltip}வானி{end-link}சங்ககாலமலர், பிங்க் நிறம்{end-tooltip} வண்ண மேலாடை

{tooltip}கருவிளை{end-link}சங்குப்பூ{end-tooltip} நீலம் இடை {tooltip}கலை{end-link} உடை{end-tooltip} 

{tooltip}ஆத்தி{end-link}சங்ககால மலர்{end-tooltip} உரு பொன் கலசிட்டு

சேயிழை சில வகை

{tooltip}செம்மல்{end-link}செம்முல்லை/ஜாதி மல்லி{end-tooltip} ஒரு மாலை

{tooltip}அடும்பு{end-link}சங்ககால மலர்{end-tooltip} வடிவ அபரஞ்சித {tooltip}வட்டிலிட்டு{end-link}தட்டு{end-tooltip}

{tooltip}பொதும்பர்{end-link} பலபூக்கள்பூத்திருக்கும்சோலை{end-tooltip} அன்ன பாவைக்கு

பொலிவு செய்ய புறப்பட்டோம் என்றனர் (11)

வழி அனுப்பு நாள் வகைப்பாடு

இதில் ஏதுமில்லை குறைபாடு

இஃதே சிந்தித்தாள்

நெஞ்சில் தித்தித்தாள்

சிந்து பாயும் நன்னில காதை

ஆற்று மணல் அலசி பொன் {tooltip}கலி{end-link}செய்{end-tooltip} முறைமை

திராவிட மொழி அதன் மேன்மை தொன்மை

ஷெஷாங்கன் உடன் உறையும் தம் கணவர் வீர்ர் உரிமை

அவர்தம் வீரம் நேசம் சகோதரம் துரோகமின்மை

சிரம் ஈண்போம் புறம் காணோம் என்பதான வாய்மை

அவர்மிசை ஷெஷாங்கன் கொள் நம்பிக்கை

சூழ்ந்தவர் கதைபல பேசி நறுமீன் ஆயத்தம்; அது பெண்மை. (12)

 

மணவிழா துவக்கம்

வந்து நின்றனன் ஷெஷாங்கன் வாயிலில்

சிந்து பெண்கள், திரள் பெண்கள் சிந்தை குளிரில்

பெர்ஷிய மணமுறை தொடக்கம் அந்நொடியில்

என்றறியா நறுமீன் இதழிலும் உதயம் முறுவல்

“வருவாய் என்னோடு அரசவைக்கு”

மன்னன் மொழிக்கு பின்னால் சென்றாள் {tooltip}கன்னல்{end-link} கரும்பு{end-tooltip}

பெருந்திரள் மனு மக்கள் ஆடல் பாடல்

ஒரு {tooltip}தரள்{end-link}முத்து/இங்கு வியர்வை {end-tooltip} அவள் {tooltip}நுதல்{end-link}நெற்றி{end-tooltip}  பிறத்தல்; மருண்டாள்

அவை அச்சம் ஏற்றியது; தளர்ந்தாள்.

ஷெஷாங்கன் செய்செயல் படோபடம் அறிந்தவள்

மன்னன் கைசெய் வெகுமதி இது என்றெண்ணினள் (13)

மனம் திரட்டி மதி முகத்தில் குளிர் கூட்டி

மடந்தை அவள் நடந்திட்டாள் மடங்கல் அவன் பின்னே

என் செய்வான்? எது தருவான்?

எஃதொன்றும் வேண்டிலேன்

விடுதலை அது போதும்

போதும் போதும்

ஆணிவன் ஆணையிடுவான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.