(Reading time: 16 - 31 minutes)

என்ன தவம் செய்து விட்டேன் – 04 - புவனேஸ்வரி கலைச்செல்வி

" அ " என்று சைந்தவி அலறிய அடுத்த நொடியில் பாஸ்கர் சுபாஷின் இரும்பு பிடியில் சிக்கி இருந்தான் .. சாஹித்யாவின் வலது கையில் ரத்தம் கொட்டியது .. அவள்  கைகளில் கண்ட இரத்தகாயாமா ? காலையில் இருந்து எதுவும் சாப்பிடாததின் விளைவா  ? அல்லது முதல் முறையாக அவள் பார்க்கும் சுபாஷின் கோபமான முகமா ? காரணம் என்னவென்று சிந்திக்க கூட இடம் தராமல் மயங்கி சரிந்தாள்  சைந்தவி ..

அவளுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று சாஹித்யா வலது கரத்தை நீட்டி குனிய இப்போது " ஆ " என்று அலறுவது இவளது முறையானது ..

" நீங்க இருங்க .. " என்று என்று சொல்லிக் கொண்டே சைந்தவியை தாங்கி பிடித்தான் சந்தோஷ் .. அதற்குள் தனது துப்பட்டாவால் ரத்த காயத்திற்கு கட்டு போட்டு கொண்டாள்  சாஹித்யா ..

Enna thavam seithu vitten

" சந்தோஷ், சைந்தவி இன்னும் எதுவும் சாப்பிடல .. அதான் மயங்கிட்டா போல .. இந்தா சாவியை பிடி .. அந்த பொண்ணையும்  சைந்துவையும்  ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போ " என்று கிட்ட தட்ட கர்ஜித்தான் சுபாஷ் ..

" அண்ணா நீங்க?"

" நான்  வெற்றிகிட்ட இவனை ஒப்படைச்சிட்டு உடனே வரேன் " என்றவன் சிறிதும் காத்திருக்காமல் வெற்றி என்கிற தனது போலிஸ் நண்பன் வெற்றிமாறனை அழைத்தான் ..

காரில்,

" ரொம்ப தேங்க்ஸ்ங்க  "

"....."

" உங்க பேரு ?"

" ...."

" உங்களை நான் பார்த்ததே இல்லையே .. அண்ணிக்கு  நீங்க ஏதும் சொந்தமா ?, இல்ல ப்ரண்டா  "

இப்படி ஒவ்வொரு கேள்விகனைகளாய் தொடுத்து கொண்டிருந்த சந்தோஷுக்கு சாஹித்யாவிடம் இருந்து கிடைத்தது மௌனம் மட்டுமே ..

" ஒருவேளை ஊமையா இருப்பாளோ  ?" என்று எண்ணி கொண்டே முதல் முறை அவளை பொறுமையாய் திரும்பி பார்த்தான்  சந்தோஷ் ... கண்களில் நீர் கோர்க்க அமர்ந்து இருந்தாள்  சாஹித்யா . எப்போதுமே குழந்தைதனமாய் இருக்கும் அவளது முகம் பார்த்த உடனே கவரும் விதத்தில்  இருக்கும் .. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் எனும் பழமொழி அனைவருக்கும் பொருந்தும் என்றாலும் கூட இன்று நம்மில் பலர் அகத்தில் தோன்றும் உணர்வை முகத்தில் காட்டாதவாறு நடப்பதில் சாமர்த்தியசாலி .. அதனாலோ என்னவோ, மனதை படித்து காட்டும் பளிங்கு முகம் கொண்ட சிலர் மீது இயல்பாகவே ஒரு ஈர்ப்பு எழுகிறது .. சாஹித்யாவும் அப்படித்தான் ..

சற்றுமுன்பு கூட, தன் அண்ணியுடன் அவள்  பேச ஆரம்பித்தபோதே அவளது முகம் பார்த்தான் சந்தோஷ் .. எந்த ஒரு கபடமும் இல்லாமல்  நிறைந்த புன்னகையுடன் பேசிக்கொண்டு இருந்தாள் .. ஆனால் இப்போதோ , துயரத்தில் ஆழ்ந்து இருக்கிறாளோ என்று தோன்றியது அவனுக்கு .. சரிதான் போ என்று அவனால் விடவும் முடியவில்லை.. நான் ஏன் இவளுக்காக இத்தனை உருகுகிறேன்  ? என்று எண்ணி கொண்டான் சந்தோஷ் ..

" கை ரொம்ப வலிக்குதாம்மா ?" என்றுகேட்டான் சந்தோஷ் கனிவான குரலில் .. அவன் யாரோ ஒருவன் தான் .. முகவரி அறியாதவன்தான் .. எனினும் அவன் குரலில் தொனித்த கனிவு அவளது உயிர் வரை பாய்வது போல ஓர் உணர்வு ..

" இனம் விளங்க வில்லை-எவனோ

என்னகந் தொட்டு விட்டான் "

என்ற பாரதியின் வரிகள் சட்டென ஞாபகம் வந்தது .. கண்கள் கலங்கிட, அவனை நோக்கியவளின் கைகள் லேசாய் நடுங்கியது .. பிறகு சட்டென என்ன நினைத்தாளோ , ஜன்னல் புறம் திரும்பி கொண்டாள்  சத்யா .. அவளது செயல் அவனுக்கு விந்தையாய் இருந்தது .. அவள் மனம் ஏதோ சொல்ல விழைவதை உணர்ந்தவனாய் தொடர்ந்து பேசினான்  சந்தோஷ் ..

" என்னாச்சுன்னு சொல்லலாமே , உதவ முடியலைன்னாலும் கூட கொஞ்சம் பாரம் குறைஞ்ச  மாதிரி நீங்க பீல் பண்ணுவிங்களே " என்றான் ..

" முதலில் உங்களை சார்ந்து இருக்குறவங்களை கவனிக்க பாருங்க .. பிறகு மத்தவங்க பிரச்சனையை தெரிஞ்சுக்கலாம் " என்று காட்டமாய் சொல்லி தனது மௌன விரதத்திற்கு முற்றுபுள்ளி வைத்தாள்  சாஹித்யா ..

" என்ன சொல்ல வர்ரிங்க ?"

" சைந்தவி அக்கா உங்களுக்கு அண்ணி தானே ?"

" ஆமா "

" வீட்டுல இருந்து ஒருத்தருக்கு ரெண்டு பேரா அவங்க கூட வந்திங்களே, அவங்களை பத்திரமாய் பார்த்துக்கணும்னு அக்கறை இருக்கா உங்களுக்கு ? ஏதாச்சும் ஆகி இருந்தா ?" என்றவளின் குரல் மீண்டும்  தழு தழுத்தது  ... " என்ன மாதிரி பெண் இவள் ? இவள் தனக்காக பதருகிறாள் என்றல்லவா நினைத்தேன் நான் " என்று எண்ணிக் கொண்ட சந்தோஷின் இதழோரம் இரகசிய புன்னகை பூத்தது .. அவளது கோபத்தை ரசித்தான் அவன் .. மேலும் பதில் பேசாமல் அவளை பேச விட்டான் ..

" அவங்க ப்ரெக்னண்ட்  ஆ இருக்காங்க, குழந்தைக்கு ஏதாச்சும் ஆனா என்ன ஆகுறது ?"

" .... "

" எக்ச்வல்லி யாரு நீங்க ?? ஒருத்தன் ஒரு பெண்ணை கொலை பண்ணுற அளவுக்கு வந்திருக்கான் .. அந்த அளவுக்கு பகையை வளர்த்து வெச்சிருக்கிங்க  ? யாரு அவன் ? நம்பி வந்த பெண்ணை இப்படி ஆபத்தில் சிக்க வைக்க வெட்கமாய் இல்லையா ?" என்று அவள் கேட்ட கேள்வியில் ஏதோ பொறிதட்ட சட்டென காரை நிறுத்தினான் சந்தோஷ் ..

" வாட் ?? அப்போ அவங்க உங்களை தாக்க வரலையா ?"

" என்னய்யா ? என்னை எதற்கு அவன் தக்க வரணும் ?"

கொஞ்சம் அதிர்ந்துதான் போனான் அவன் அவளது பதிலில் ..

சற்று நேரதிற்கு முன்பு, காரை அவன் பார்க் பண்ணிவிட்டு இறங்கும்போது பாஸ்கர் கொண்டு வந்த கத்தி சாஹித்யாவின் உள்ளங்கையை பதம் பார்த்து இருந்தது .. யாரோ ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட விபத்தை பார்த்துதான் தன் அண்ணன் கோபம் கொண்டான், சைந்தவியும் மயக்கமுற்றாள் என்று நினைத்திருந்தான் சந்தோஷ் .. அவனது  சிந்தனையை கலைத்தது சாஹித்யாவின் குரல் ..

" நான் என்ன மைசூர் மகாராணியா ? என்னை எதுக்கு அவன் கொள்ள வரணும் "

" சாரி .. எனக்கு .... நான் நிஜம்மாவே இதை எதிர்பார்க்கல .. கொஞ்சம் என்ன நடந்துச்சு தெளிவா சொல்லுங்க ப்ளீஸ் " என்றான் சந்தோஷ் இறைஞ்சும் குரலில் .. முதலில் அவளுக்கு கோபமாய் இருந்தாலும், அவன் கண்களில் நிஜம்மான கலக்கம் இருப்பதை கண்டவள், அவனுக்கு பதில் அளிக்க முடிவெடுத்தாள் ..

" நான் சொல்லுறேன் .. பட் முதலில் காரை எடுங்க .. ஹாஸ்பிட்டலில் டாக்டரை பார்த்த பிறகு சொல்லுறேன் " என்றாள் .. அவனுக்கு அதுவே சரியென பட காரை சீரான வேகத்தில் ஓட்டி  விரைவில் மருத்துவமனையை அடைந்தான் அவன் .. அவர்கள் அங்கு வரவும் சுபாஷ் வந்து சேரவும் சரியாய் இருந்தது ..

" சார் என் செல்போன் கொவில்கிட்ட மிஸ் பண்ணிட்டேன் " என்றாள்  சாஹித்யா சுபாஷிடம் ..

" ஆமா .. இதோ நான் எடுத்துடு வந்துட்டேன் " என்று பாக்கெட்டில் இருந்த செல்போனை கொடுத்தான் சுபாஷ் ..

" ஏதும் கால் வந்திச்சா "

" எஸ் .. யாரோ AVM Studio ன்னு அவர் உங்களை தேடினார் .. இப்போ இங்கதான் வந்துகிட்டு இருக்காராம் " என்றவன் அவளது பேச்சுக்கு காத்திராமல் சைந்தவியை தூக்கி கொண்டு உள்ளே சென்றான் .. அவர்களின் பேச்சை கவனித்த சந்தோஷ்

" அது யார் AVM Studio  " என்று ஆர்வமாய் கேட்டான் ..

" ப்ச்ச்ச் .. அது ஒண்ணுதான் முக்கியம் பாருங்க  .. நீங்க சீக்கிரம் என்கூட வாங்க "

" எங்க ?"

" ப்ச்ச்ச் .. அவன் வர்றதுக்குள்ள கட்டு போடணும் .. நீங்க வர்ரிங்களா  இல்லை நானே போகவா " என்று கேட்டுகொண்டே வேகமாய் உள்ளே நடந்தாள்  சத்யா ..

மனதிற்குள்

" இன்னைக்கு நல்லா மாட்டினோம் " என்று எண்ணிக் கொண்டாள் ...

அருள்மொழிவர்மனின் பெயரில் ஆங்கில எழுத்துகளை எடுத்து தான் A V M studio  என்று பதிவு செய்து வைத்திருந்தாள்  சாஹித்யா.. அவளுக்கு போட்டியாய்  அவனும் SATHYAM THEATRE என்றுதான் அவளது பெயரை பதிவு செய்து வைத்திருந்தான் ..

 அவன் இங்கு வந்தா என்னென்ன ஆகுமோ ? என்று மனதளவில் கொஞ்சம் பதறினாள் .. பிறகு நம்ம அருள்தானே சமாளிப்போம் என்று தனக்குத் தானே தைரியம் சொல்லி கொண்டாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.