(Reading time: 22 - 44 minutes)

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 11 - புவனேஸ்வரி கலைச்செல்வி

மூச்சிரைக்க தனதறைக்கு  ஓடினாள்  சங்கமித்ரா .. அவள் அங்கு நுழைவதற்கும் அன்பெழிலன் அவளை அழைப்பதற்கும் சரியாய் இருந்தது ..

" ஹெலோ "

" ஹேய் ஹேப்பி யெர்  டீ எரும "

Ithanai naalai engirunthai

" ம்ம்ம் தேங்க்ஸ் .. "

" ஹே அழுமூஞ்சி ...நியு யெர்  அன்னைக்கு ஏன் அழற ?"

" நான் அழறேன்னு உனக்கு எப்படி தெரியும் ?"

" அடியே உன்னை பத்தி எல்லாமே எனக்கு  மட்டும்தான் தெரியும் " என்றான் அன்பெழிலன் பெருமையாய்.. அந்த சோகத்திலும் கூட நண்பனின் பேச்சை கேட்டு சண்டைக்கோழியாய் நின்றாள் சங்கமித்ரா.  

"டேய் அதெல்லாம்  ஒன்னும் கிடையாது ... ஷக்திக்கு  மட்டும்தான் என்னை ரொம்ப நல்லா தெரியும் " என்றாள்  தெளிவான குரலில்.. அவளது பதிலில் அவனது இதழோர  புன்னகை இன்னும் பெரிதானது ...

காதல்

எதிரியை நண்பனாக்கும்

நண்பனை எதிரியாக்கும்

  என்றோ எதிலோ படித்தது  அவனுக்கு ஞாபகம் வந்தது.

அதுவும் பெண்களுக்கு காதல் வந்தால் சொல்லவா வேணும் ? ஒரு ஆண் தான் காதல் கொண்டுவிட்டாலும் நண்பர்களை அவ்வளவு எளிதாக துறக்க மாட்டான் .. இது இயல்பாகவே அவர்களுக்கு காதல் தோல்வி மீது உள்ள எச்சரிக்கை குணம் என்றே சொல்லலாம் ..ஆனால் பெண் காதலில் விழுந்துவிட்டால் அவள் வாழ்வில் நேற்று, நாளை என்றே நாளே கிடையாது .. அவளது சர்வ சிந்தனையும் காதல்  மனமும் அன்றைய தினத்தில் அவளது நாயகனை சுற்றியே வரும் .. அவனையே உலகம் என்றும் பாவிப்பாள் ..அவனுக்காக உலகத்தையே புரட்டி போடவும் நினைப்பாள் ..ஆனால்  அவள் காதலுக்கொரு ஆபத்து என்றால் உலகத்தை எதிர்த்தும் நிற்பாள் ..

" என்னடா சைலெண்டா சிரிக்கிற ?"

" ஹா ஹா .... நான் சிரிக்கிறேன்னு உனக்கு எப்படி தெரியும் ?"

" ஏன் என்னை மட்டும்தான்  உனக்கு தெரியுமா ? உன்னை எனக்கு தெரியாதா ? நான் அழறதை நிறுத்தணும்னு  தானே நீ  இப்படி வம்பு வளர்த்து வைக்கிற .. "

" ஆஹா உனக்கு மேல் மாடி காலின்னு நெனச்சேன் .. பரவாயில்லையே நல்லாவே வேலை செய்யுது " என்றான் எழில் கிண்டலாய் ..

" டேய் முன்ன மாதிரி இல்ல .. இப்போ என் மாமா வந்துட்டான் .. ஒரு வார்த்தை சொல்லிட்ட போதும் .. நீ காலி " என்றாள்  பெருமையாய் ..

" ஹே மண்டு .. என்னடி சொல்லுற ? ஷக்தி வந்தாச்சா ?"

Related Read: வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 22

" ஆமா " என்று சொல்லும்போதே மித்ராவின் முகம் விகாசித்தது ..

" அடிப்பாவி ... இந்நேரம் நீ டி இமான் சாங்குக்கு ஒரு குத்தாட்டம் போட்டு இருக்கணுமே ..அதை விட்டுட்டு ஏண்டி அழுமூஞ்சியா இருந்த ?"

முதலில் ஒன்றுமில்லை என்று மலுப்பியவள், மெல்ல நடந்ததை சொன்னாள் ..

" லூசாடி நீ?"

" இதெல்லாம் என்கூட பழகுற முன்னாடியே தெரியாதா மச்சி உனக்கு ?" என்றாள்  சங்கமித்ரா நண்பனிடம் அனைத்தையும் கொட்டிவிட்ட ஆனந்தத்தில்

" ம்ம்ம்ம்கும்ம்ம் இதை மட்டும் நல்லா வாய் கிழிய பேசு .. கொஞ்சமாச்சும் அறிவிருக்குற மாதிரியா நடந்துக்குற நீ "

" நான் என்ன பண்ணிட்டேன் ?"

" என்ன பண்ணிட்டியா ? ஹே ஷக்தி வந்தாச்சு டி .....ஐ மீன் ஷக்தீஈ டீ .... இத்தனை மாசமா மிஸ் பண்றேன் மிஸ் பண்றேன்  ஒரு தடவை அவனை பார்க்க மாட்டோமான்னு இருக்குன்னு புலம்பி தள்ளிட்டு இன்னைக்கு அவன் வந்து நிற்கிறான் அதை கொண்டாடாமல் அழுதுகிட்டு நிற்குற ?"

" டேய் அது எனக்கு தெரியாதா ? அவனை பார்த்ததும் சந்தோஷத்தில் ஹக் பண்ணி அழுதேன் ?தெரியுமா "

" சரி சரி .. நான் உன் நண்பனாக இருக்கலாம் .. இருந்தாலும் நான் சின்ன பையன் .. என்கிட்ட சென்சார்ட் கதையை சொல்லலாமா ?" என்று வம்பிழுத்தான் அன்பெழிலன்

" ச்சி  து .. போடா .. நீ நினைக்கிற சீன்  எல்லாம் ஒன்னும் இல்ல ... அவனை பார்த்ததும் மனசு நிறைஞ்சு சந்தோஷத்தில் அழுதேன் .. உனக்கொரு பழைய சாங் லிரிக்ஸ் தெரியுமா ?

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி

பேச மறந்து சிலையாய் இருந்தால், அதுதான் தெய்வத்தின் சந்நிதி "

" அதுதான் காதல் சந்நிதி ... நல்லாவே தெரியுமே .. காதல் சிறகை சாங் .. அதைதான் நானே சொல்றேன் .. நீ பீல் பண்ண லவ் அவன் பீல் பண்ணலைன்னு நீ நினைக்கிறியா ? நீ வேணாம்னு நினைச்சிருந்தா நீயே போறேன்னு சொன்னப்போ அவன் ஏன் தடுக்கணும் ?"

" ஆனா .. ஆனா .. வைஷு  "

" ஹே மண்டு .. லவ்ன்னா  கொஞ்சம் கஷ்டபடனும்மா ... அவன் அவன் காதலியை கண்டுபிடிக்க நாடு நாடா சுத்துறான் .. உனக்கு கடவுள் ரொம்ப ஈசியா பக்கத்து வீட்டுலேயே அதுவும் அத்தை பையன் முறையிலேயே தந்து வெச்சுருகாரு ... நீ அவருக்கு என்ன லஞ்சம் தந்தியோன்னு நானே யோசிக்கிறேன் .. நீ என்னடானா சோகமா வயலின் வாசிக்கிற  ? நியாயப்படி நீ எல்லாம் கவலை படுறதே  ஓவரான சீன் .. சரி விஷயத்துக்கு வரேன் .. அல்ரெடீ  ஹீரோ ரெடி .. உங்க காதல் ஜெயிக்க ஹீரோயின் கொஞ்சம் கஷ்டபட்டாதான் என்ன ? எல்லாமே கைல கிடைச்சிருமா உடனே ?"

" இப்போ என்னடா பண்றது ? "

" குட் .. இப்போதான் நீ  யோசிக்கிற! அடுத்து என்ன நடக்க போகுதுன்னு தேவை இல்லாமல் யோசிக்காம இன்னைக்கு உன் ஷக்தி உன் வீட்டில் இருக்கான்னு பீல் பண்ணி நிம்மதியா தூங்கு .. நானும் நாளைக்கு சென்னை போகணும் .. அதுக்கு முன்னாடி ப்ரேக்பாஸ்ட் அங்கதான் .. சித்ரா அம்மா கிட்ட சொல்லி ஏதும் ஸ்பெஷல் ஆ சமைச்சு வைங்க " என்றான் அன்பெழிலன் .. அதன்பிறகு அவன் சென்னை போகும் தகவலை பற்றி பேசி போனை வைத்தாள்  சங்கமித்ரா ..

" ஷக்தி வந்தாச்சு .. இனி இவ லைப் அதிக சந்தோஷமா இருக்கும, இல்ல கொஞ்சம் தலைகீழா இருக்கும் .. இவ ராட்சசி எதையும் சொல்லிட்டு செய்ய மாட்டா .. அதனால இவ விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கரதையா இருக்கணும்  " என்று எண்ணிக் கொண்டான் அன்பெழிலன் .. ஆனால் அவனுக்கே டிமிக்கி கொடுத்திட்டு மித்ரா செய்யபோகிற லீலைகள் என்னென்ன ? பொறுத்திருந்து பார்ப்போம் ..

அன்பெழிலன் சொன்னதிலும் எதார்த்தம் இருப்பதை உணர்ந்தாள் சங்கமித்ரா .. நாளை என்ன நடக்கும் என்றே தெரியாதபோது அதை எண்ணி வருத்தப்படுவானேன் ? அதற்கு பதிலாய் இன்று நடந்ததை எண்ணி இறைவனுக்கு நன்றி சொல்வதே நல்லது என்று எண்ணினாள் ..சற்று முன்பு அவன் கையணைப்பில் இருந்ததை எண்ணி பார்த்தவளுக்கு தன் ஸ்வாசமே  தன்னிடம் இல்லாதது போல இருந்தது .. விளையாட்டுத்தனமாய் ஷக்தியை  பலமுறை அடித்து கூட பேசி இருக்கிறாள் மித்ரா.. அப்போதெல்லாம் இப்படி நாணம் எழுந்ததில்லை ...மனதினில் காதலை சுமக்கும் அவளுக்கு இந்த முதல் அணைப்பு ஆயிரம் கதைகளை சொல்லாமல் சொல்லியது .. சற்றுமுன்பு அடங்கி இருந்த வெட்கமும் நாணமும் அவள் எதிரில் நின்று எள்ளி நகையாடியது ... "காதல் உன்னையும் வெட்கப்பட வைத்து வீழ்த்திவிட்டதடி " என்றது .. புன்னகையுடன் திரும்பி படுத்தவள் தலையணையை  வாகாய்  அணைத்து  கொண்டு ஷக்தியை  பற்றிய நினைவுகளை மீண்டும் அசைப்போட்டாள் ..

அவளை ஆதரவாய் அணைத்து  கொண்டதும், விழி நீரை துடைத்து விட்டதும் , அவன் கண்களும் .... அவன் கண்கள் எதையோ சொல்ல விழைகிறதோ ?? சட்டென எழுந்தவள் தனது டைரியை  எடுத்து எழுத ஆரம்பித்தாள் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.