(Reading time: 36 - 71 minutes)

காதல் நதியில் – 30 - மீரா ராம்

வெள்ளி நிலா மெல்ல நகர்ந்து நகர்ந்து வானத்தில் தவழ்ந்தது… தனது காதலனைத் தேடி பார்வையை செலுத்தியபடி…

நட்சத்திரங்கள் அதற்கு ஒளி கொடுத்து வழி விட்டபடி தத்தமது கடமையை சரியாக நிறைவேற்றிய வண்ணம் மின்னிக்கொண்டிருந்தது….

அந்த வெண்மகள் மேல் கண்களைப் பதித்தபடி, தன்னவன் அணிவித்த மோதிரத்தை அவள் விரல்கள் தடவிப் பார்த்து சிலிர்த்துக்கொண்டிருந்தது…

kathal nathiyil

மெல்ல அவளுக்குள் உதித்த புன்னகை அவள் உதடுகளில் தோன்றிய தருணம், அவள் தோள் மேல் கை வைத்தாள் ஷன்வி…

சட்டென்று திரும்பிய சாகரியின் முகத்தில் வெட்கம் கொண்ட முறுவல் அழகாக தோன்ற, அதை ரசித்தவள் சாகரியை அணைத்துக்கொண்டாள் மென்மையாக….

இத்தனை நாள் அவள் தோள் மேல் கை வைத்த பொழுதெல்லாம் பதறி அவள் எழுந்தது நினைவுக்கு வர, மெல்ல அவள் தலையை வருடி கொடுத்தாள் ஷன்வி…

அந்நேரம், கதவருகே சத்தம் கேட்க, இருவரும் அமைதியாக அங்கே சென்று பார்த்த போது, மயூரி அவளது கண்ணனின் குறும்பு பேச்சுக்களை ரசித்தவண்ணம் சிணுங்கி பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்…  

அவளின் பின்னே சென்று இருவரும் நின்று கொண்டனர்… ஷன்வி சாகரியின் காதில் ஏதோ சொல்ல, அதற்கு சாகரி சிரித்துவிட்டு ஷன்வியை அடிக்க… அவள் ஷ்…. என்று வாயின் மேல் விரல் வைத்து சாகரியை முறைக்க… அவள் சிரித்தவண்ணம் அமைதியானாள்…

ப்ளீஸ்.... முகில்…. என் செல்லம்ல… நேரமாச்சு… தூங்குங்க… உங்க தங்கச்சிங்க யாரும் இன்னும் தூங்கலை… என்னை இங்கே இப்போ பார்த்தாங்களோ, நான் தொலைஞ்சேன்… என்றவள் கையை ஆட்டிய வண்ணம் திரும்ப…

ஷன்வி தனது முழங்கையை சாகரியின் தோளில் வைத்தபடி, ஒரு புருவம் உயர்த்தியபடி, மயூரியைப் பார்த்துவிட்டு, ஏன் சாகரி… நீ மயூரியைப் பார்த்த???... பாவம் அவ தொலைஞ்சு போயிட்டாளாம்… என்று சொல்ல…

சாகரியோ, இல்லையே ஷன்வி நான் அவளைப் பார்க்கலையே…… ஹ்ம்ம்.. அவ தொலைஞ்சு போயிட்டான்னா பாவம் நம்ம முகில் அண்ணனுக்கு தான் கஷ்டம்… இல்லையா ஷன்வி என்று கேட்க…

மயூரியின் முகத்தில் வெட்கத்துடன் சேர்ந்து சற்று அசடும் வழிந்தது…

ஹேய்… இங்கே பாருடி… வெட்கத்தை… அய்யோ… இதைப் பார்க்க முகில் அண்ணா இங்கே இல்லையே இப்போ…..?...  என்று ஷன்வி சொல்ல…

நீ ஏண்டி கவலைப் படுற?.. இப்போவே அண்ணா கிட்ட பேசி வரசொல்லிடவேண்டியது தானே… என்ற சாகரி…

இதோ இவ கையிலேயே போன் இருக்கே… என்றபடி அவள் கையிலிருக்கும் போனை கைகாட்ட…

அடடா… ஆமால்ல… போனை கொடுடி… என்ற ஷன்வி, மயூரி போனைப் பறிக்க முயல… அவள் மறுக்க…. சாகரி சிரிக்க…

நீயுமாடி…. என்றபடி மயூரி சாகரியைப் பார்க்க… அவள் அரசியலில் இதெல்லாம் சாதரணமப்பா…. என்று சொல்ல…

ஒய்… என்னடி அங்க லுக்?... இங்க இங்க இங்க இங்க பாருடி என்ற ஷன்வி… சட்டென்று அவள் எதிர்பாராத வண்ணம் பார்த்து போனை பிடுங்கிவிட,

ஹேய்…. ஷன்வி… ப்ளீஸ்… கொடுடி… என்று கேட்டபடி மயூரி ஷன்வியிடமிருந்து போனை பறிக்க முயல, சாகரி மயூரியின் கைப்பிடித்து தடுத்தாள்….

அங்கே எதிர்முனையில் முகிலனுக்கு இவர்களின் உரையாடல் முழுவதுமாய் கேட்க… அவன் சிரிப்புடன் என்னதான் நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அமைதியாக இருந்தான்…

ஹலோ… முகிலன் அண்ணா… நாங்க மட்டும் எங்களவர் கூட பேசாம இருக்கணும்… பெரியவங்க சொன்னபடி… உங்க ஆள் மட்டும் உங்ககூட பேசுவாளா?... இதெல்லாம் அநியாயம் இல்லையா?... இதற்கு நாங்க உங்க ஆளுக்கு தண்டனை கொடுக்காம விடமாட்டோம்… என்று சொல்ல…

அய்யோ… ஷன்வி… அவளா பேசலைம்மா… நான் தான் பேசினேன் வலுக்கட்டாயமா… அதனால அவளை எதும் செய்ய வேண்டாம்… என்ன தண்டனை வேணும்னாலும் எனக்கு கொடும்மா… நான் வாங்கிக்கிறேன்… அவ பாவம்… என்று முகிலன் சோகமாக சொல்ல…

இதோடா… ஹ்ம்ம்… இப்போவே இவ்வளவு சப்போர்ட்டா?... ஹ்ம்ம்… இதெல்லாம் நீங்க போன் பண்ணுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்… இப்போ டூ லேட்… நாங்க தண்டனை கொடுக்குறதா முடிவே பண்ணிட்டோம்…. அப்படித்தானே சாகரி என்று ஷன்வி கேட்க… சாகரியோ அவளின் கேள்விக்கு இல்லை என்று தலைஅசைக்க…

சாகரியும் பக்கத்தில் இருக்கிறாளா?... ஹ்ம்ம்…. அவ அப்படி எல்லாம் தண்டனை கொடுக்குற பொண்ணு இல்லையே… என்று முகிலன் தெரியாமல் வாய் விட்டு விட…

ஓஹோ… அப்போ நான் தான் ராட்சஸியா?... என்று ஷன்வி கேட்க…

முகிலன் தன்னையே நொந்து கொண்டான்…

அச்சச்சோ… தங்கச்சி… நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லம்மா… நீயா முடிவு பண்ணிக்காதம்மா… என்று முகிலன் கெஞ்ச…

ஷன்வியோ… இதற்கு மேல் பேச எதுவும் இல்லண்ணா… என்ன தண்டனை கொடுத்தோம்னு நாளைக்கு காலையில் உங்க காதலிகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க…. என்றபடி போனை அணைத்துவிட்டாள்…

எருமை மாடே… ஏண்டி… அவர்கிட்ட இப்படி சொன்ன?... பாவம் அவர்… என்று முகத்தில் சற்றே வருத்தம் காட்டினாள் மயூரி…

பின்னே என்னடி?... நீ மட்டும் உன்னவர் கூட ரொமான்ஸ் பண்ணிட்டிருக்கிற?... நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் பெரியவங்க என்ன சொன்னாங்க?... நேரம் கழித்து போனில் பேச வேண்டாம் திருமணம் முடியும் வரைன்னு சொன்னாங்களா இல்லையா?... அதை நாங்க எல்லாரும் ஃபாலோ பண்ணிட்டு வருகிறோம்… இந்த 15 நாட்களாய்…

ஆனால், நீ இப்படி திருட்டுத்தனமாய்… பேசிட்டிருக்குற?... எத்தனை நாளாடி நடக்குது இந்த திருட்டுத்தனம்?... சொல்லு… என்று ஷன்வி கோபமாய் கேட்க…

மயூரியோ, அவளை செல்லமாக அடித்துவிட்டு சிரித்தாள்…

இப்போ எதுக்குடி நீ சிரிக்குற?... கடுப்பேத்தாம சொல்லுடி… எதுக்குடி அடிச்ச… நீ என்ன?... என்று ஷன்வி பொரிய…

அட லூசு… உனக்கு நான் பேசுறேன்னு கோபமா?... இல்ல… உன்னால பேச முடியலைன்னு கோபமா என்று கேட்க…

ஷன்விக்கு எதுவோ புரிவது போல் இருந்தது…

சாகரி… ஷன்வியின் கைப்பிடித்து, இன்னும் கொஞ்சம் நாள் தான் ஷன்வி… இவ இப்படி லூசுத்தனமா பேசினா பேசிட்டு போகட்டும்… பெரியவங்க நம்மளை பேசவே வேண்டாம்ன்னு ஒன்னும் சொல்லலையே… பேசுங்க… ஆனா, அது நேரத்தோட இருக்கட்டும்னு தானே சொன்னாங்க… இந்த மயூரி லூசு அதை கேட்கலைன்னு நான் சொல்லமாட்டேன்…

ஏன்னா எனக்கு மயூரி பற்றி மட்டுமல்ல… முகிலன் அண்ணா பற்றியும் தெரியும் நன்றாகவே… அதனால் தான் சொல்லுறேன்… நீ கோபப்படாம இரு… கொஞ்ச நாள் தாண்டா… அப்பறம் நாம எல்லாரும் காலம் முழுவதும் விரும்பினவங்க கூட தான் வாழப்போறோம்… அதை நினைச்சு சந்தோஷப்படுடி…

அவங்க இல்லாத இந்த நாட்கள் நமக்கு வலியைத் தருவது போல் தானே அவங்களுக்கும் தரும்… இந்த நாட்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும், ஆணுக்கும் ரொம்பவே ஸ்பெஷல்… அதை பொக்கிஷமா சேர்த்து வைச்சு கல்யாணத்துக்குப் பின்னாடி நீங்க இல்லாம இப்படி இருந்துச்சுன்னு பொண்ணும், நீ இல்லாம எனக்கு இப்படி இருந்துச்சுன்னு ஆணும் பகிர்ந்துக்கிறதுல இருக்குற சுகம் வேற எதிலேயும் கிடைக்காதுடி… அதனால இருக்குற நாட்களை அழகாய் ரசிச்சு, அது கொடுக்கிற வலியை ஏற்று, மனசுக்குள்ளே அதை சேர்த்து வைச்சு பாதுகாத்து….. என்று சொல்லிக்கொண்டிருந்தவள் அவர்களின் மௌனத்தைப் பார்த்துவிட்டு, என்னவென்று கண்களால் கேட்க…

மயூரியும், ஷன்வியும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, சாகரியை அணைத்துக்கொண்டனர் இறுக்கமாக…

காதல் என்பது ஒன்று தான்… அதை ஒவ்வொருவரும் உணரும் விதம், நுகரும் விதம், அனுபவிக்கும் விதம், ரசிக்கும் விதம் தான் வேறு என்பதை புரிந்து கொண்டனர் மயூரியும், ஷன்வியும் சாகரியின் வார்த்தைகளின் மூலம்… அவளின் காதலும் அவர்களுக்குப் புரிந்தது… அவர்களின் காதலும் அவர்களுக்குப் புரிந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.