(Reading time: 51 - 101 minutes)

முகிலன்-மயூரி

ஹேய்நினைச்ச கனவு ஒன்னு

நிஜமா நடந்திருச்சு

உன்னோட நான் சேருறது பலிச்சாச்சு…” – மயூரி

ஹேய்கிடைச்ச விதையும் இங்கு செடியாய் முளைச்சிருச்சு

பூவும் இல்ல காயும் இல்லகனியாச்சு…” – முகிலன்

 

அவ்னீஷ்-ஷன்வி

கல்யாணத் தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு

என் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு…” – ஷன்வி

ஹேய்கண்டாங்கி சேலைக்கட்டி

என் கையை நீ புடிச்சு

நாம் சேரும் நாளும் இங்கே வந்தாச்சு…” – அவ்னீஷ்

 

ஹரீஷ்-மைத்ரி

ஹேய்தாங்கும் மரக்கிளையா

போறவழி நீ துணையா கூட வர

என்ன குறை அது போதும்….” – மைத்ரி

ஹேய்ஆல மரத்து மேல

கூவுற ஒரு குயிலா

வீட்டுக்குள்ள கூடு கட்டு அது போதும்…” – ஹரீஷ்

என அனைவரும் தங்களது காதலை அழகாக சொல்லி ஆடி பாட,

யாரும் எதிர்பார்த்திடா வண்ணம்…

என்னோட நீ சிரிச்சா

கண்ணீரை நீ துடைச்சா

வேறேதும் வேணாமே அது போதும்

என்று சாகரி ஆதர்ஷைப் பார்த்தபடி பாட

ஆடிக்கொண்டிருந்த அனைவரும் ஒரு நிமிடம் நின்று விட்டு சாகரியை வியப்போடு பார்க்க…

ஹேய்வீடு திரும்பையிலே

வாசல் திறக்கையிலே

மஞ்சள் முகம் சிரிச்சா அது போதும்…”

என ஆதர்ஷும் சாகரியின் அருகில் வந்து அவள் முகத்தைக் காட்டி பாட…

சுற்றியிருந்த பெரியவர்கள் அனைவரும் சந்தோஷத்துடன் ஆச்சரியமும் கலந்தவர்களாய் பார்க்க, அனு,காவ்யா,ஷ்யாம்,தினேஷ் ஆகியோரும் வியப்போடு நின்று கொண்டிருந்தவர்களின் அருகே வந்துவிட, அனைவரும் ஆதர்ஷையும், சாகரியையும், சுற்றி வட்டமிட்டு நின்று கொண்டு…

தந்தன தந்தன…. தந்தனதந்தன

தந்தானன்ன தந்தானே

தந்தன தந்தன…. தந்தனதந்தன

தந்தானன்ன தந்தானே…”

என ஆடி பாட, ஆதர்ஷும் அவர்களுடன் சேர்ந்து ஒரு சில வினாடிகள் ஆட, சாகரி கைத்தட்டி அவனை உற்சாகப்படுத்தினாள்…

ஆடிப்பாடி அனைவரும் களைத்து முடித்து அமர்ந்த போது, எல்லாரும் ஆடினோம்… மச்சான் கூட ஆடினான்… ஆனால் நீ தான் ஆடவில்லை… என்று சாகரியை சுட்டிக்காட்டிய முகிலன், அதனால்… என்று இழுக்க…

அதனால் என்னடா… என்று ஆதி பட்டென்று கேட்க…

தங்கச்சி ஆடணும்… நீ பாடணும்… அவ்வளவு தான்… என்று ஹரீஷும் சொல்லிவிட்டான் பட்டென்று…

ஹ்ம்ம்…ஹூம்… நான் மாட்டேன்… என்று தலையசைத்த சாகரியிடம், ப்ளீஸ்டா… அண்ணன் கேட்குறேன்ல ஆடு… என்று சொல்ல,

அவள் வீட்டுப் பெரியவர்களைப் பார்த்தாள்… அவர்கள் சம்மதம் சொல்லவே அடுத்ததாக ஆதர்ஷைப் பார்த்தாள்… அவன் சரி என்று தலை அசைக்க… அவளும் சரி என்று தலைஅசைத்துவிட்டு, ஆடத்தயாராகி நின்றாள்…

பரதம் தானே நமக்கு வரும்… இப்போ என்ன பாட்டு அவரைப் பாட சொல்லி நம்மளை ஆட வைக்கப் போறாங்களோ… தெரியலையே… ஸ்ரீராமா காப்பாற்றுப்பா… என்று அவள் கண் மூடி வேண்டிக்கொண்டிருந்த போது, இங்கே அவள் எதிரே நின்றிருந்த அவளின் ஆதர்ஷ் ராம், அவள் வேண்டுதலை பார்த்து சிரித்துக்கொண்டே… அய்யோ… என் அழகு சகியே… என்னைக்கொல்லுறியேடி இப்படி…. உன் செய்கையினால்… உன்னை… என்று மனதினுள் அவளை செல்லம் கொஞ்சியவன், வெளியே அதைக் காட்டிக்கொள்ளாமல் அவளை நேற்றிரவு சந்தித்த நொடிகளை மனதினுள் கொண்டு வந்து பாட ஆரம்பித்தான்…

இசை வாத்தியங்கள் வாசிக்க வாசிக்க… அவளது கொலுசொலி அதற்கேற்ப ஒலி எழுப்பி நின்றது…

அவனது புல்லாங்குழல் இசை வந்த போது, அவள் கண் மூடி மயங்கி அவனே அருகே வருவது போல் பின்னே செல்ல ஆரம்பித்த போது,

நறுமுகையேநறுமுகையே

நீ ஒரு நாழிகை நில்லாய்….”  

என அவன் பாட…. அவள் தன்னவன் தன் நடனத்துக்கு ஏற்ப பரதம் ஆடுகின்ற பாடலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்ற உவகையும், தனது பின்னோக்கிய பயணத்துக்கு தகுந்தாற்போல் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பாடுவதையும் கண்டவள் அவனை காதல் நிரம்ப பார்த்தாள் இமை அகற்றாது…

அவனும் அவளையே தான் இமை மூடாமல் பார்த்திருந்தான்… பின் சூழ்நிலை உணர்ந்து பாட ஆரம்பித்தான்…

நறுமுகையே…. நறுமுகையே

நீ ஒரு நாழிகை நில்லாய்

செங்கனி ஊறிய வாய்திறந்து

நீ ஒரு திருமொழி சொல்லாய்

அற்றைத் திங்கள் அந்நிலவில்

நெற்றித் தரள நீர் வடிய

கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா???...

அவள் ஆடிக்கொண்டே வியந்து பார்க்கையில் அவன் புன்னகைத்துக்கொண்டே மேலும் தொடர்ந்தான்…

அற்றைத் திங்கள் அந்நிலவில்

நெற்றித் தரள நீர் வடிய

கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா???...”

என அவன் நேற்றிரவு நடந்ததை அழகாக பாடி நிறுத்தியவன் முகிலன் பார்வையை சற்றே சந்தேகமாய் உயர்த்த ஆதர்ஷ், அவனிடம் ஒன்றுமில்லை என சொல்லிக்கொண்டிருந்த போது…

திருமகனே…. திருமகனே

நீ ஒரு பார்வை பாராய்…”

என்ற அவள் குரல் கேட்டதும், வேகமாக திரும்பிய ஆதர்ஷ் அவள் பார்வையை எதிர் கொள்ள…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.