(Reading time: 11 - 21 minutes)

09. வாராயோ வெண்ணிலவே - சகி

ண்ணிய பழைய எண்ணங்களால் உண்டான கண்ணீரைத் துடைத்தாள் வெண்ணிலா.

எவ்வளவு இனிமையான நாட்கள்???

ஏன் அப்படி செய்தான்??

Vaarayo vennilave

எப்படி அவனால் என்னை வெறுக்க முடிந்தது.

அப்படி என்ன  தவறிழைத்தேன் நான்??

ஏன் அப்படி பேசினான்???

கண்களை மூடினாள்.

"தயவுசெய்து என்னை விட்டுட்டு போயிடு!!!

நீ என் வாழ்க்கையில இல்லாம இருந்தா தான் எனக்கு சந்தோஷமே!"-மனம் நொறுங்கி போனது.

மீண்டும் விழியை கிழித்துக் கொண்டு கண்ணீர்!!!!

ஒளித்து வைத்திருந்த அந்த புத்தகத்தை பிரித்தாள்.

குழந்தைத்தனமான சிரிப்போடு ரஞ்சித்தின் புகைப் படம் எட்டி பார்த்தது.

கண்களிலிருந்து சிந்திய கண்ணீர்த்துளி ஒன்று அவனது புகைப்படத்தை ஈரமாக்கியது.

மெல்ல எழுந்து ஜன்னல் வழியே வானின் வெண்ணிலவை எட்டிப் பார்த்தாள் வெண்ணிலா.

ஆகாய வெண்ணிலவாய் பிறந்திருக்கலாம்...

மனிதப்பிறவியில் என்ன சுகம் கண்டேன்??

வாழ்வை வெறுத்தது இழப்பை சந்தித்த மனம்.

இந்த நிலவின் சாட்சியாய் அல்லவா இந்த மாங்கல்யத்தை என் கழுத்தில் கட்டினான்??

கழுத்தில் கை வைத்துப் பார்த்துக் கொண்டாள்.

பொய்த்துப் போனதே அந்தச் சாட்சி!!!

எங்கள் இருவரின் இதயம் இணைய சாட்சியாய் இருந்த நிலவே!!!

எங்கே தொலைத்தாய் அந்த அத்தாட்சியை????

ஒன்றும் அறியா நிலவை பழித்தது பெண் மனம்.

இதைக் கேட்ட அந்த வான்நிலவின் பேச்சை கேட்போமா??

தொலைத்தேனா???

நான் தொலைத்தேனா???

உங்கள் இருவரின் காதல் தான் உத்தமமான காதல் என்பதற்கு சாட்சி அல்லவா நான்???

இதயத்தை திறந்துப் பார்...

அதில்,உன்னவனது முகம் பதிந்திருக்கும்.

அவனிடம் திறந்துக் காட்ட சொல்...அவன் கிழித்தே காட்டுவான்.

கண்களை திறந்துப் பார் அபலை பெண்ணே...!!!!

இங்கு நீ வடித்த கண்ணீருக்காக அவன் மனம் ஒடிந்துப் போயிருக்கான்.

கடிந்தது வானிலா.

ஒடிந்துப் போனானா???

எங்கே பார்ப்போம்.

ஆமாம்???

அவனும் வானிலவை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

காற்றில் எங்கிருந்தோ இணைப் பிரியாத நிலை பெறவே நெஞ்சில் யாகமே...!!!

என்ற பாடல் வரி மனதை அழுத்தியது.

தவம் பூர்த்தியாகுமா???

வரம் கிடைக்குமா???

அவள் திரும்பி வருவாளா???

அவளிடம் அனைத்தையும் சொல்ல வேண்டும்...

செய்த தவறுகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்!!!!

கனத்த மனதோடு இரவை கழித்தான்...

கதிரவன் விழித்தான்...

வெண்ணிலாவின் காலைப் பொழுது அவள் தாய் மீனாட்சியின் குரலில் உதித்தது.

எழுந்தவளுக்கு ஆச்சரியம் தான்!!!

"அம்மா!"-அவரை கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

"எப்படி இருக்க தேவாங்கு?"

"அம்மா நான் ஒண்ணும் தேவாங்கு இல்லை!"

"எனக்கு தெரியாது உன் அப்பா தான்,நீ குண்டாகுற வரைக்கும் தேவாங்குன்னு கூப்பிட சொன்னார்!"-அவள் சிறு குழந்தைப் போல முகத்தை வைத்துக் கொண்டாள்.

அதை பார்த்தவர் உச்சி முகர்ந்து அவள் நெற்றியில் முத்தமிட்டார்.

"என்ன எப்பவும் சீக்கிரமா எழுந்துவிடுவ??இன்னிக்கு இவ்வளவு நேரம் தூங்குற?"

"அது..வந்து...!"

"கண்ணுலாம் வேற சிவந்திருக்கு?"

"அம்மா...அது...வந்து!ஹாஸ்...ஹாஸ்பிட்டல் ஒர்க்ம்மா அதான்!"

"உன்னை நான் எதுக்கு கோயம்புத்தூர் வர வைத்தேன்???

கொஞ்ச நாளாவது இந்த இம்சை இல்லாமல் இருன்னு தானே???வந்த உடனே பறக்கறது...அப்படியே,உன் அப்பா புத்தி!"

"அவரோட வளர்ப்பு தானேம்மா!"

"பெத்து இருந்தாலும், உன்னை மாதிரி மகள் கிடைச்சிருக்க மாட்டா நிலா!"-அவர் கண்ணில் இருந்து,கண்ணீர் வர பார்த்தது.

"நீங்க அழுதீங்கன்னா நான் இன்னிக்கு உண்ணாவிரதம்.அப்பறம்,இன்னும் ஒல்லி ஆகிடுவேன்.நீங்க தேவாங்குன்னு கூப்பிடுவீங்க..அதுக்கும் உண்ணாவிரதம் இருப்பேன்.அப்பறம்..."

"போதும்...போய் குளி!"

"அம்மா...எனக்கு ஒரு பெட் காப்பி தாங்களேன்!"

"அடி கழுதை! இதோ உன் அப்பாவை கூப்பிடுறேன் இரு!"

"நான் என்னம்மா உங்ககிட்ட கேட்டேன்! நீங்க தானே பெட் காப்பி வேணுமான்னு கேட்டீங்க."

"அடிப்பாவி?"

"விடுங்கம்மா அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்!"

"சரி சீக்கிரமா ரெடியாகிட்டு வா!"

"சரிம்மா!"-என்றப்படி தயாராக சென்றாள்.

விதி இந்த நொடியில் இருந்து அவள் வாழ்வில் பலவகையான கணக்குகளைப் போட

காத்துக் கொண்டிருந்தது.

சதி செய்ய போகும் விதி தன்னை இவள் மதி கொண்டு வெல்வாளா???

வெண்ணிலா அன்று மருத்துவமனைக்கு செல்லவில்லை....

கோவிலுக்கு சென்று வர மனம் ஏங்கியது.

தன் தாயுடன் கோவிலுக்கு சென்றாள்.

தரிசனம் முடித்துவிட்டு சிறிது நேரம்      அமர்ந்திருக்கையில்...

மீனாட்சி அவரை அறியாமல்,

"நீ எங்களுக்கு கிடைத்தது, அந்த மகேஷ்வரனோட அருள் தான் நிலா!"-என்றார்.

"இல்லன்னா மட்டும் வேற எங்கேயாவது போயிட போறேனா?"-சட்டென ஏதோ உணர்ந்தவர்,

நிலைமையை சமாளிக்க அவள் கன்னத்தை வருடினார்.

அப்போது அவள் கைப்பேசி சிணுங்க,

"ஹாஸ்பிட்டல்ல இருந்து போன்!"

"அப்படி போய் பேசிவிட்டு வா!"-நிலா,கைப்பேசியோடு சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.