(Reading time: 10 - 20 minutes)

18. ஷைரந்தரி - சகி

ரம்பத்துவிட்டது...

நவ கிரகங்களும் ஒன்றாய் சங்கமிக்க போகும் பஞ்சாக்ஷர திதி!!!!!

பார்வதி தேவி ஈசனையே எண்ணி,மனமுறுக பிராத்தனை செய்ய போகிறாள்.

shairanthari

இன்னும் ஒரு நாழிகை அதாவது பன்னிரண்டு நிமிடங்கள் மட்டுமே மீதம் உள்ளது.

ஷைரந்தரி ஆழ்ந்த தியானத்தில்       அமர்ந்திருந்தாள்.

முகத்தில் எதையோ சாதித்த தேஜஸ்.

சிவாவின் மனம் திக் திக் என்று அடித்துக் கொண்டது.

அவன் கண்கள் ஷைரந்தரியை அடிக்கடி மொய்த்தன.

சிவாவின் பதற்றம் புரிந்தவனாய்,இருந்த யுதீஷ்ட்ரனின் கண்களிலும் பீதி தான்!!!!

இம்முறை மீண்டும் அம்மனை இறக்க போகிறார்களாம்!!!

ஷைரந்தரியின் உடம்பில்!!!

ஊரே தவித்துக் கொண்டிருந்தது.

இது என்னடா???நம்ம பஞ்சாக்ஷரி முகத்தில் துளியும் சலனம் இல்லை.???

ஊர் தலைவர் வந்தார்...

அனைவரையும் பீதியான முகத்தோடு கோவிலுக்கு வரும் படி அழைத்தார்.

அனைவருக்கும் கல்பனாவின் முகம் கண்ணில் வந்தது.

அசோக் ஷைரந்தரியை அழைத்து செல்ல வேண்டாம் என்று பதறினான்.

வேறு வழியில்லை...

போய் தான் ஆக வேண்டும்!!!

"அம்மூ!!!"-தமையனது குரலில் கண்விழித்தாள் ஷைரந்தரி.

"போகலாம் சிவா!"-என்றாள்.

அவன் எதைப் பற்றியும் வாய் திறக்கவில்லை. எனினும்,அவளிடமிருந்து பதில்....

"வாடா!"-அமைதியாக எழுந்து வந்தாள்.

பார்வதியை தனியே அழைத்துச் சென்று...

"அண்ணி!நான் சொல்றதை கேளுங்க...இங்கே என்ன நடந்தாலும் நீங்க வீட்டை விட்டு வெளியே வர கூடாது!!!"-பார்வதி புரியாமல் விழித்தாள்.

"ஆமா அண்ணி!!! நீங்க எங்க கூட வர வேண்டாம்...!!!!

இன்னியோட எல்லா பிரச்சனையும் தீர போகுது!!!பயப்படாதீங்க!!!

என்ன நடந்தாலும் வீட்டை விட்டு வர வேண்டாம்!!!"

"ம்..."-பார்வதி வீட்டில் இருந்தாள்.

ஷைரந்தரி சிவாவிடம்,

"இன்னும் இங்கே என்ன பண்ற??கோவிலுக்கு கிளம்பலையா?"-அவள் எங்கு போக சொல்கிறாள் என்று அவனுக்கு மட்டுமே வெளிச்சம்...!!!!!

ஷைரந்தரி கிளம்பியாகி விட்டது!!!

யுதீஷ்ட்ரனும்,சிவாவின் பயணம் ஒரு திசையில்!!!

தனிமையில் வீட்டில் யாருக்கும் தொல்லை வர கூடாது என்று பார்வதி தேவியை வேண்டிக் கொண்டு இருக்கிறாள் இன்னொருத்தி!!!!

மஞ்சள் ஆடை உடுத்தி இருந்தாள் ஷைரந்தரி.

அம்மனுக்கு         அபிஷேகிக்கப்படும் அனைத்து பொருட்களை கொண்டும் அவளுக்கும் அபிஷேகம் நடந்தது.

இங்கே பார்த்தோமானால்...

சிவாவின் கார் அதிவேகமாக இலக்கை நோக்கி பயணித்தது.

இன்னும் மூன்று நிமிடங்கள் தான்.....

"இந்த பஞ்சாக்ஷர திதியில கல்யாணம் நடந்தா எல்லாம் பூர்த்தியாகிவிடும்னு சொன்ன!!!

ஷைரந்தரி,அவ எந்த சிக்கல் கொடுத்தாலும் தீர்வை கொடுத்துடுறா!"

"ஈசனின் வாரிசு அல்லவா???

கவலைப்படாதே....

பஞ்சாக்ஷர திதி ஆரம்பித்து முழுசா நீடிக்கிற அந்த 48 நிமிடங்கள் ஷைரந்தரி தன்னுடைய சக்தியை இழந்திருப்பா!!!!

அந்த நேரத்துல அந்த மகேஷ்வரனை தவிர எந்த சக்தியாலும் அவளை காப்பாற்ற முடியாது!!!"

"காப்பாற்ற அவர் வந்துட்டார்னா??"

"நிச்சயம் முடியாது...

ஷைரந்தரி ஜாதகப்படி ராகு நீச்சம் அடைந்திருக்கு!!!"

"இப்போ என்ன செய்யறது?"

"நான் சொல்றதைக் கேளு...!!!!"-ஏதேதோ பேச்சுகள் ஓடின.

இதோ பஞ்சாக்ஷர திதி தொடங்கிவிட்டது.

பம்பை சத்தமும்,உடுக்கை சப்தமும் ஊர் அதிர்ந்தது.

அங்கே என்ன.???

கார் சேற்றில் சிக்கிக் கொண்டது.

சக்கரங்களில் எங்கிருந்தோ கொடிகள் படர்ந்தன.

ஒரு அணுவும்  அசையவில்லை.

அங்கே ஷைரந்தரி மயக்க நிலைக்கு             தள்ளப்பட்டிருந்தாள்.

தேவியின் சிலை முன் பிராத்தனை செய்து கொண்டிருந்தாள் பார்வதி.

"என்ன நடந்தாலும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க!"-ஷைரந்தரியின் எச்சரிக்கையால் பூஜை அறையில் அமர்ந்திருந்தாள்.

"பார்வதி!"-சிவாவின் குரல் போல ஒலித்தது.

கண் விழித்தாள்.

"பார்வதி!"-மீண்டும் ஒலித்தது.

வெளியே வந்து கதவை திறக்க பயம்!!!!

இருந்தாலும் அப்படியே விட மனமும் இல்லை.

"பார்வதி,சீக்கிரம் கதவைத் திற!!!"-தயக்கத்தோடு எழுந்து கதவை திறந்தாள்.

யாரும் இல்லை.

வெளியே வந்து எட்டிப் பார்த்தாள்.

கைகளை கட்டியப்படி,

வினய் நின்றிருந்தான்.

"இவளை இழுத்துட்டு போங்கடா!"-     ஆணையிட்டான்.

இருவர் வந்து அவளை இழுத்துக் கொண்டு காரில் ஏற்றினர்.

கதறினாள்.

கண் இமைக்கும் பொழுது நடந்தது இவையனைத்தும்!!!!

வினய் அவள் தலைமுடியை பிடித்து,

"இன்னிக்கு உன் அண்ணனுக்கும்,

உன் சிவாவுக்கும் முடிவு கட்டுறேன்டி!!!"-என்றான்.

இன்னும் கார் நகரவில்லை.

என்ன செய்வது???

இன்னும் 30 நிமிடங்கள் உள்ளது.

தியானத்தில் அமர்ந்திருந்த தாண்டவப்ரியன் கையில் இருந்த கயிற்றில் ஒரு முடிச்சை அவிழ்த்தார்.

இங்கே கொடிகள் தானாய் அறுந்தன.

சேற்று மேடு மண் மேடாய் ஆனது.

கார் புறப்பட்டது.

யுதீஷ்ட்ரன் புரியாமல் விழித்தான்.

சிவா எந்த சலனமும் இன்றி ஓட்டினான்.

செல்லும் வழியில் கார் நின்றுவிட்டது.

"என்னாச்சு?"

"ஆஃப் ஆயிடுச்சி யுதீஷ்!!!"-அடுத்த தடங்கல்.

இன்னும் 20 நிமிடங்கள் மட்டுமே உள்ளன.

ஷைரந்தரி முன் விரித்திருந்த தீக்குழியில் பெண்கள் தீ மிதித்தனர்.

ஏதேதோ பிராத்தனை செய்தனர்.

நம்மவள் கண்களை மூடியப்படி இருந்தாள்.

அனைவரும் முகத்திலும் அச்சம் படர்ந்தது.

வானின் நவ கிரகங்களும் ஒன்றாய் சங்கமித்தது கண்களில் தெரிந்தது.

நேரம் மிக குறைவாக இருந்தது.

தாண்டவப்ரியன் அடுத்த முடிச்சை அவிழ்த்தார்.

"ஏங்க?இந்த நேரத்துல இங்கே என்ன பண்றீங்க?"-யாரோ ஒருவரின் குரல் சிவாவை நிமிர வைத்தது.

கேட்டவர் வாலிபராக தெரிந்தார்.

"கோவிலுக்கு போகணும் வண்டி நின்னுடுச்சு!!!"

"அட!!! இப்படி வலது பக்கமா போனீங்கன்னா 5 நிமிஷத்துல கோவில் வந்துடும் தம்பி!!!"-நம்பிக்கை பிறந்தது இருவருக்கும்.ஆனாலும், மனதில் ஒரு சந்தேகம்...இவர் யார்???

"அட!!! நல்லதுக்கே காலம் இல்லை.என் பேர் ரிஷபன்.இங்கே தான் மாடு மேய்கிறேன்.கோவில்ல போய் அந்த அம்மன்கிட்டயே கேளுங்க.அவளே நான் யாருன்னு சொல்லுவா!!!"-கேள்வியை படித்தவர் போல பதில் சொன்னார்.

அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு,இருவரும் விரைந்தனர்.

இன்னும் 15 நிமிடங்களே உள்ளன.

அவர் கூறியதைப் போல 5 நிமிடத்தில் கோவிலை அடைந்தனர்.

"வா சிவா!!!உனக்காக தான காத்துக்கிட்டு இருக்கேன்!!!"-கால் மேல் கால் போட்டுக் கொண்டு கார் மேல் அமர்ந்திருந்தான் வினய்.

"அவங்க பிணத்தைக் கூட நான் பார்க்க கூடாது!!!

பிடிங்கடா அவங்களை!"-ஆணையிட்டான்.

"சிவா..நீ போ!!!இவங்களை நான் பார்த்துக்கிறேன்!!!"-யுதீஷ் தைரியம் தர,மேலே நடந்தான்.

"நில்லு!!!"-வினய்யின் குரல் தடுத்தது.

"இவளை ஞாபகமிருக்கா?"-பார்வதி இழுத்து வரப்பட்டாள்.

"பாரு!"

"ஆமா...உன் பார்வதி தான்!!!

சிவாவிற்கேற்ற பார்வதி தான்!!!"

"மரியாதையா அவளை விட்டுவிடு!!!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.