(Reading time: 11 - 22 minutes)

04. வானவில் - அமுதவள்ளி

ஹாசினி ஹர்ஷா என்ன பேசறாங்கன்னு வாங்க கேட்போம்.

(ஒட்டுகேட்கரோம்னு எனக்கும் ஒரு மாதிரிதான் இருக்கு. ஆனால் அவங்க என்ன ரோமேன்ஸா பண்ண போறாங்க. வாங்க நாம் கேட்போம்)

"என்ன அதிசியமா தனியா இருக்கீங்க. நாலுபேரும் ஒண்ணா இருப்பீங்க" என்றான் ஹர்ஷா.

Vanavil

"அஞ்சனா வாலிபால் பிளேயர்ஸ் கூட்டதிற்கு போயிருக்கா. சாதனா,நிஷா புக் போட்டோகாப்பி எடுக்க கடைக்கு போயிருக்காங்க"

"கூட்டம்மா??? அரசியல் கூட்டம்மாதிரி சொல்றீங்க"

"எப்படி சொன்னால் என்ன. மொக்க போடபோறாங்க. அதை காலேஜ் ஹார்ஸ்ல போடகூடாது. இதுக்காக வேற வெயிட் பண்ணனும்"

"நீங்க சொல்றது சரிதான். ஆனால் கிளாஸ் டிஸ்டர்ப் ஆகுமில்லையா"

"என்னமோ எல்லோரும் கிளாஸ் கவனிக்கறாமாதிரி சொல்றீங்க"

"யாராவது ஒருதராவது கவனிப்பாங்க"

"உங்களை போலவா"                                                                                                                        

"ஹா ஹா. நான் ரொம்ப படிப்ஸ் கிடையாது"

"நான் நம்பிட்டேன்"

"உண்மையா ஹாசினி. நான் பொய் சொல்லமாட்டேன்"

"பொய் சொல்றவங்க நான் பொய் சொல்றேன்னு சொல்லிட்டா சொல்வாங்க"

"நாங்கயெல்லாம் அரிசந்தரனோட தம்பிங்க. பொய் சொல்லமாட்டோம்"

"ஹ்ம்ம். சரி தாத்தா. நான் நம்பறேன்"

"என்னது தாத்தாவா"

"நீங்கதான  அரிசந்தரனோட தம்பின்னு சொன்னீங்க. அப்ப எனக்கு தாத்தாதானே"

"என்ன ஒரு அறிவு. நம்ம காலேஜ்  கல்வட்டில் பதிக்கணும்"

"அட்லீஸ்ட் அதையாவது ஒழுங்கா செய்யுங்க"

"சரீங்க அம்மணி" என்று பவ்யமாக வாயை பொத்தி சொன்னான்.

"அது. அந்த பயம் இருக்கட்டும்" என்றாள். இருவரும் சிரித்தனர். தங்களை குறித்து அவர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. இரண்டாவது சந்திப்பில் இப்படி பேசி கொள்வோமென்று எதிர்பார்க்கவில்லை.

"ஹாய் டா. கிளம்பலாமா" என்று கேட்டான் அத்வைத்.

அவனின் குரல் கேட்டு இருவரும் திரும்பினர். ஹாசினியை மரம் மறைத்துகொண்டது. அதனால் அவளை அத்வைத் பார்க்கவில்லை.  அவளை பார்த்தவுடன்

"ஓ. நான் கவனிக்கலை."

"இது என் பிரிண்ட் அத்வைத்" என ஹாசினியிடமும்

"இவங்க ஹாசினி" என அத்வைதிடமும் அறிமுகம் செய்துவைத்தான்.

"இவங்க கிட்டதானே நீ திட்டுவாங்கினன்னு சொன்ன" என்றான் அத்வைத்.

"இதுயெல்லாம் கரெக்டா ஞாபகம் இருக்குமே" என்றான் ஹர்ஷா.   

"அது எப்படிடா மறக்கமுடியும். நீ நோஸ்கட் வாங்கனது ஆச்சே" தொடர்ந்து "அதை நாங்க மிஸ் பண்ணிட்டோம் ஹாசினி மேடம். இப்ப ரீப்லே பண்ணுங்க" என்றான் அத்வைத்.

அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. சிரித்து வைத்தாள். (நீ வேஸ்ட் ஹாசி. நம்ம சாது இருந்தா சூப்பரா பண்ணிருபாங்க)

"ஏன்டா அவங்களை பயம்புறுத்தற" என்றான் ஹர்ஷா.

"உன்னையே டிரில் வாங்கிருகாங்க. நாங்கயெல்லாம் ஜுஜுபி" என்றான் அத்வைத்.

"சே சே. அப்படியெல்லாம் இல்லை. என் பிரிண்ட்ஸை திட்டினதும் கோபத்தில் நானும் பேசிட்டேன்" என்றாள் ஹாசி

"நானும் சும்மாதான் சொன்னேன்" என்றான் அத்வைத்.

"அதை விடு. ஏன்டா லேட். முதல் நாளே கோச்சிங் ஆரம்பிச்சுட்டியா"

"அதெல்லாம் இல்லை. இன்னிக்கு ஒரு ஹாவ் பாயிலை பார்த்தேன். அதான் லேட்"

"என்ன சண்டையா. யார்கூடவாது சண்டை போடலானால் தூக்கம் வராதே"

"ஆசைப்பட்டு போடறாமாதிரி சொல்லாதே. சரியான ரௌடி"

"யாரு ரௌடி" என்றாள் அஞ்.

ஹாசியை தேடி அஞ் அங்கு வந்தாள். மூவரும் அவளை கவனிக்கவில்லை. அத்வைத் ரௌடி என்று சொல்லவும் அவன் தன்னைதான் சொல்கிறான் என்று தெரிந்து கொண்டாள். அவள் கூரியதை கேட்டு மூவரும் திரும்பினர்.

"நீ இப்படி கேட்கரதளியே தெரியலையா?"

"என்ன தெரியுது...முதல்ல நீங்க எப்படின்னு பாருங்க.  அப்பறம் மத்தவங்க எப்படின்னு கமெண்ட் பண்ணலாம்"

"நான் உன்னைமாதிரி கிடையாது"

"ஆமாம். ஆமாம். என்னை மாதிரி நீங்க கிடையாது" என்று நக்கலாக சொன்னாள்.

"ஹலோ என்ன நக்கலா"

"பின்ன எப்படி தெரியுது"

"கொஞ்சமாவது கோச்ன்னு பயம் இருக்கா"

"சொல்லிடீங்கள்ள இனிமேல் பயபடறேன்"

"சரியான ராங்கி"

"சரியான நரசிம்மர்"

"சூப்பர்" ஹாசியும் ஹர்ஷவும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்.

"என்ன சூப்பர்" சண்டை கோழிகள் இருவரும் கேட்டனர்.

"உங்க சண்டைதான்" என்றாள் ஹாசி.

"இங்க என்ன ஷோவா காமிக்கறோம்" என்றாள் அஞ்.

"ஹா ஹா. சரி என்ன சண்டை ரெண்டுபேருக்கும்" என்றான் ஹர்ஷா.

இருவரும் காரணத்தை சொன்னார்கள். ஆனால் அவர் அவருக்கு சாதகமாக.

"சரி விடு அஞ். எப்போ கோச்சிங் ஆரம்பம்" என்றாள் ஹாசி

"நெக்ஸ்ட் வீக் டி. போலாமா"

"என்ன அஞ்சனா உங்க சண்டையில் என்னை மறந்துடீங்க" என்றான் ஹர்ஷா.

"சாரி ஹர்ஷா. எப்படி இருக்கீங்க. உங்க ஆள கண்டு பிடிசிடீங்களா"

"நல்லா இருக்கேன். ஏன் அஞ்சனா இப்படி. ஆளுன்னு சொல்லாதீங்க"

"ஓகே. பொழைச்சிபோங்க"

"இவன்  என் பிரிண்ட் அஞ்சனா.  இவங்க ஹாசினி பிரிண்ட்"

இருவருக்கும் பொதுவாக சொன்னான்.

"ஓகே பை பை" என்றாள் ஹாசி.

"பை" என்றான் ஹர்ஷா.

"பை ஹர்ஷா. பை நரசிம்மா" என்றாள் அஞ்.

"பை  ரௌடி" என்றான் அத்வைத்.

காலேஜில் ஆரம்பித்த அர்ச்சனை நிஷா,சாதனா வரும் வரையிலும் அஞ் நிறுத்தவில்லை.

இருவர் முகத்தையும் பார்த்துவிட்டு அஞ் விசாரித்தாள். நிஷ் நடந்த விபத்தை பற்றி சொன்னாள்.

"ஓ. நம்பர் இருக்குல்ல நாம கால் பண்ணலாம்" என்றாள் ஹாசி.

"கொஞ்சம் நேரம் கழித்து பண்ணலாம்" என்றாள் நிஷ்.

"அதிகமான அடியா நிஷ்" என்றாள் அஞ்.

"இல்லை. கொஞ்சம்தான். இருந்தாலும் சின்ன பையன். வலி தாங்கனுமே" என்றாள் நிஷ்.

"கஷ்டம்தான். பிரே பண்ணலாம்  நிஷ்" என்றாள் ஹாசி.

சாதனா எதுவும் பேசவில்லை. அவளை அதிலிருந்து வெளியே கொண்டுவர அன்று நடந்ததை அஞ் மற்றும் ஹாசி சொல்ல ஆரம்பித்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.