(Reading time: 21 - 41 minutes)

14. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

ஹாஸ்பிட்டல் வாசலில் காரில் அமர்ந்து நிலாவிற்காக காத்திருந்தான் மதியழகன். இப்போதெல்லாம் அவளுக்கு டிரைவர் வேலை பார்ப்பதும் மதியழகனின் கடமைகளில் ஒன்றானது... ( அப்படின்னு சொன்னா  நம்பவா போறீங்க ? எல்லாம் காதல் பண்ணுற மாயம் பாஸ் )... அந்த அதிகாலை வேளையில் அத்தனை அயர்விலும் கூட புதிதாய் பூத்த மலர் போல புன்னகையுடன் அவனை நோக்கி நடந்து வந்தாள்  தேன்நிலா .. மதியே அடிகடி அவளிடம் கேட்டிருக்கிறான் " அதெப்படி பேபி, எவ்வளோ டயர்ட்டா இருந்தாலும்  இவ்ளோ ப்ரெஷ் ஆ அழகா இருக்கியே " என்று .. அதற்கு அவளது பதில் ஒன்றே ஒன்று தான் .. " கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் மாதிரி .. கண்ணில் காதல் இருக்குறதால் நான் எப்பவும் உன் கண்ணுக்கு அழகா தெரியுறேன் மது " என்பாள்  அவள்.. அதை நினைத்து பார்த்தவனின் இதழ்கள் புன்னகையால் விரிய

" குட் மோர்னிங் மிஸ்டர் தேன்நிலா  " என்றாள்  நிலா .. அவனும் அதே உற்சாகத்தோடு

" குட் மோர்னிங் மிஸ் மது " என்றான் குறும்புடன் .. ( அதாவது இவரு அவங்க பேரையும் , அவர் இவங்க பேரையும்  கடன் வாங்கி வெச்சுகிட்டு காதல் பண்ணுறாங்களாம்  ...ஹீ ஹீ )

Ithanai naalai engirunthai

" ரொம்ப நேரமா வெயிட் பண்ணியா மது ?"

" ம்ம்ம் ஆமா குட்டிமா ..ஒரு வருஷமா நம்ம கல்யாணத்துக்காக வைட் பண்றேன் .. எங்க, நீதான் மனசே வைக்க மாட்டுறியே " என்றான் எப்போதும் போல .. அவன் விளையாட்டாய் தான் கேட்டான் .. ஆனால் நிலாவிற்குதான் அவனை அதிகம் காத்திருக்க வைக்கிறோமோ என்று தோன்றியது .. அதை அவளே வாய்விட்டு கேட்டாள் ..

" நான் ரொம்ப பேட்  கேர்ல் தானே மது ? என் இடத்துல வேற பொண்ணு இருந்திருந்தா இந்நேரம் உனக்கு  கல்யாணமே ஆகி இருக்கும் .. பட் நான்தான் .. கொஞ்ச நாள் போகட்டும் அது இதுன்னு சொல்லி நாள் கடத்துறேன் " என்றாள் .. மதியழகனோ அவளுக்கு பதில் சொல்லாமல் இங்கும் அங்கும் எதையோ மும்முரமாய் தேடினான் ..

" என்ன தேடுற மது ?"

" இல்ல ஒரு தேவதை இப்போதான் என் பக்கத்துல உட்கார்ந்து ஜாலியா ஒரு குட் மோர்னிங் சொன்னா .. இப்போ அந்த சார்மிங் வாய்ஸ்  காணாம போயி தேவர் மகன் ரேவதி மாதிரி வெறும் காத்து தான் வருது .. அதான் .. அவ அவளுடைய உற்சாகத்தை எங்க தொலைச்சான்னு தேடுறேன் " என்றான்.. முதலில் அவன் சொல்வது புரியவில்லை என்றாலும்  நம்ம நிலா அவ்ளோ டியுப் லைட் இல்லையே .. அவன் சொல்வதின் அர்த்தம் புரிந்து கொண்டவள்  கையில் கிடைத்த புத்தகத்திலேயே அவனை அடித்தாள் ..

" ஸ்ஸ்ஸ்ஸ்  ஆஅ .. ஏ  பொண்டாட்டி வலிக்கிறது டீ .. இந்த அடிதடி எல்லாம் கல்யாணத்துக்கு அப்பறமா வெச்சுக்க கூடாதா ? " என்று கேட்டபடி அவளது கூந்தலை கலைத்து விட்டான்..

" சி போடா " என்று அவன் கையை உதறிவிட்டு  இடைவரை வளர்ந்திருந்த அவளது கூந்தலை சரி செய்தாள்  தேன்நிலா ...

" கொடுத்து வைத்த பூவே பூவே அவள் கூந்தல் மனம் சொல்வாயா ?

கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குளித்த சுகம் சொல்வாயா ?

கொடுத்து வைத்த கொலுசே காலழகை சொல்வாயா ?

கொடுத்து வைத்த மணியே மார்பழகை சொல்வாயா ?" என்று பாடிகொண்டே அவளை ரசித்தான் மதியழகன்...

" போதும் மது .... அபிஷேக் பச்சன் கூட இந்த பாட்டை அவர் மனைவிக்கு பாடி இருக்க மாட்டரு ... "

"ஆமா ..ஏன்னா அவருக்குதான் தமிழ் தெரியாதே "என்று பெரிய ஜோக் சொன்னது போல சிரித்து அவளது கோபப்பார்வையை பெற்றுக் கொண்டான் மதி...

" சரி விடு பேபி .. இப்போ உனக்கு என்ன பீலிங் ? நம்ம கல்யாணத்தை நீ தள்ளி போட்டுட்ட அவ்ளோதானே ? நீ ஓகே சொல்லு இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாம் .. தாலி கூட என்கிட்ட இருக்கே " என்று அசால்ட்டாய்  சொன்னான் அவன்.

"அடடே இன்னைக்கு நீ ஒரு முடிவோடுதான் இருக்க போல ..வேணாம் பா .. என்னை பத்திரமா வீட்டில் விட்டுட்டு நீ வேலைக்கு போ " என்றவள் சிறிது இடைவெளி விட்டு

" ஏன் மது, உன்னை ரொம்ப காக்க வைக்கிறேனா ? " என்றாள்  மீண்டும்.. அவளை ஆழ்ந்து பார்த்தான் மதியழகன் .. குழந்தைக்கு மருத்துவம் பார்க்கும் இவளும் ஒரு குழந்தை தான் என்று எண்ணிக் கொண்டான் .. அதே ஆழ்ந்த குரலில் தன் பதிலையும் தந்தான் ..

" குட்டிமா ... நம்ம வீட்டில் கல்யாண பேச்சை எடுத்தப்போ நீ என்ன சொன்ன ? கொஞ்ச நாள் ஆகட்டும்.. நாங்க இன்னும் கொஞ்சம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிறோம் .. கல்யாணத்திற்கு பிறகு என்னத்தான் என்ஜாய் பண்ணனும்னு நினைச்சாலும் ரெண்டு பேருக்குமே கடமைகள் அதிகரிக்கும் .. அதனால் இன்னும் கொஞ்சநாள் காதல் பறவைகளாய் சுதந்திரமாய் சுற்றி பறப்போம்னு  சொன்ன .. அண்ட் ஒரு வருஷம் கடந்துருசு .. நாமலே சிங்கப்பூர் , மலேசியா, தாய்லாந்த் ன்னு ஒரு குட்டி டூரும்  போயாச்சு ... இனிக்க இனிக்க சண்டை போட்டு அதை மறக்க மறக்க காதலிச்சுகிட்டு தானே  இருக்கோம் ..எல்லாம் சரியான ட்ரேக் ல போகும்போது நீ ஏன் இபோ சோகமா வயலின் வாசிக்கிற ? " என்று பொறுமையாய் கேட்டவன் , அவளை சீண்ட எண்ணி

" ஒருவேளை சாராடோ ஹீரோயிசம் உன்னை ரொம்ப சோதிக்கிதோ  ":என்றான் .. சற்று முன் அவன் இங்கும் அங்கும் தேடியது போல இப்போ தேன்நிலாவும்  எதையோ தேடுவதை போல பாவனை செய்து கொண்டே

" யாரு மது ஹீரோ இங்க ?? என் கண்ணுக்கு யாரையும் தெரிலையே " என்றாள் ..

" வாயாடி ...." என்று அவள் பாவனையை ரசித்தவன் வலிக்காமல் அவளது கன்னத்தை கிள்ளி  காற்றில் தன் முத்தத்தை பறக்கவிட்டான் .. அவன் மனதினால் ஏற்கனவே மணந்துவிட்ட மனையாளோ

" நான் எல்லாம் உன்னை மாதிரி கஞ்சம் இல்லப்பா" என்று சொல்லி அவனது இரு கன்னங்களிலும் முத்தத்தை பதித்தான்...

" செல்ல இம்சை டீ நீ " என்று ரசித்து சிரித்தான் மதியழகன் ..

" குட்டிமா "

" சொல்லு டா அழகா " என்று அவனை சீண்டும் பார்வையை பார்த்தாள் ..

" ஹே ராட்சசி ...காலையிலேயே படுத்தாதே டீ ..எனக்கு சொல்ல வந்ததே மறக்குது .. "

" ஹா ஹா.. சரி சரி சொல்லு "

" நான் இன்னைக்கு சிவகங்கை போயிட்டு வருவேன் டா.. நியாபகம் இருக்கு தானே... மித்ரா அம்மா அப்பா, ஷக்தி அம்மா அப்பா எல்லாரையும் அழைச்சிட்டு வரணும்டா "

" யா யா இருக்கு மது .. எக்சுவலி நான் அப்பாவையும் உங்க கூட வர சொன்னேனே ..அவர் கால் பண்ணலையா ?"

" பண்ணாரு டா .. மாமாவுக்கு எதுக்கு வீணா அலைச்சல் .. அதான் நானே வேணாம்னு சொன்னேன் .. அதுவும் இல்லாமல் அன்பெழிலன் அங்க தானே இருக்கான் ? அவன் ஹெல்ப் பண்ணுவான் " என்று தீர்வையும் சொன்னான் மதி .. என்னத்தான் இது முதல் பிரசவம் என்றாலும் சென்னையில் இருக்கும் கணவனை விட்டுவிட்டு வீட்டிற்கு வரமாட்டேன் என்று அடம்பிடித்துவிட்டாள்  சங்கமித்ரா .. ஷக்தியும்  அவளை பிரிவதாய்  இல்லை .. அதனாலேயே பெரியவர்கள் அடிக்கடி அவர்களை வந்து பார்த்துவிட்டு சென்றனர் ,மதியழகனின் உதவியோடு!

" சரி பத்திரமா போயிட்டு வா .. எனக்கு அப்பபோ கால் பண்ணி எங்க இருக்கன்னு அப்டேட் கொடுக்கணும் .. சரியா ?"

" சரி ராஜகுமாரி .. "

" இன்னைக்கு உன் தங்கச்சி என்ன  பண்ணினா தெரியுமா ?"

" புவியா ?"

" ஓஹோ அவ மட்டும்தான் உன் தங்கச்சியா ? இரு சங்கு கிட்ட சொல்றேன் "

" அய்யய்யோ ஏதோ குழப்பத்தில் கேட்டேன் .. மாட்டி விட்டுடாதே தாயே "

" ம்ம்ம்கும்ம்ம் அப்படியே உன் தங்கச்சி உன்னை திட்டிட்டாலும் " என்று நொடித்து கொண்டவள், நேற்றிரவு மித்ரா ஹாஸ்பிட்டல் வந்ததையும், ஷக்தி அவளை தேடியதையும் பற்றி அவனிடம் கூறினாள் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.