(Reading time: 19 - 37 minutes)

06. என் உயிர்சக்தி! - நீலா

வம்பர் 14, வெள்ளிக்கிழமை.

கடந்த இரண்டு நாட்களாக பூங்குழலீக்கு ஏதோ ஒன்று நெருடலாய் தேவையில்லாத படபடப்பாய் இருந்தது. காரணம் தான் புரியவில்லை!

இரண்டு நாட்களுக்கு முன்... 

En Uyirsakthi

நாகராஜன் அங்கிள் வீட்டில் இருந்து அன்று நேராக கோவிலுக்கு சென்றாள். இங்கிருந்த வரை தினமும் சென்று வந்த அம்மன் கோவில் தான். ஆனால் எப்போதும் போல சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை. அவள் மனது அலைபாய்ந்துகொண்டே இருந்தது. காரணம் வரும் வழியில் நடந்த சம்பவம்.

பிரபுவை பற்றிய சிந்தனையில் தனது ஆக்டிவாவை செலுத்தியவள் எதிரில் வந்த புல்லட் மீது மோதி தடுமாறி சரிந்துவிட்டாள். வண்டி அவள் மீது! தடுமாறி எழுந்து நிற்கையில்தான் கவனித்தாள் மோதிய வண்டி அங்கேயே அப்படியே நின்றிருந்தது அதில் வந்த ஆளுடன்!

தவறு இவள் மீதுதான்! ஆனாலும் முறைத்துப்பார்த்தாள். ஹேல்மட் அணிந்திருந்தான்! இவள் கண்களை நேராக பார்த்திருந்தான். கண்டுபிடித்துவிட்டாள்! இவள் கண்களை தாழ்த்திவிட்டாள்!

'அச்சோ! திங்க் அப் தி டேவில் அண்ட் டேவில் கம்ஸ் தேர்! ச்ச் டேவில் இவனா?! இல்ல இல்ல! மனதை அடக்கு குழலீ! இவன் டேவில் இல்லனு உனக்கு தெரியுமே! ச்ச்...நோ டோண்ட் ஸ்பீக் நௌ!' மனது இரு வேடமிட்டு பேசிக்கொண்டிருந்தது!

கைக்கால் முட்டியில் சிராய்ப்பு! வண்டியில் இருந்து இறங்கி வந்து ஹேல்மடை கழற்றி வைத்துவிட்டு அருகில் இருந்த கடையில் தண்ணீர் வாங்கி வந்தான். அவள் கையை பிடித்து திருப்பி சிராய்ப்பில் தண்ணீர்விட்டு கழுவினான். கால் முட்டியிலும் இதையே செய்யவும் சொன்னான்.

'கண் பூமியில் இருக்கனும்! வானத்தில பறக்கிற நினைப்பாவே இருந்தா? யாரை பத்தி கனவுகன்டாலும் அதை வண்டி ஓட்டும் போது செய்யக்கூடாது! எக்ஸாம் வைத்துக்கிட்டு இப்படி நினைப்பேல்லாம் எங்கேயோ? டூய்ட் எல்லாம் அப்புறமா பாடலாம் என்ன புரியுதா?'

நிமிர்ந்து அவனை பார்த்தள்! அவள் கண்களில் நீர் கோர்த்திருந்தது! 

'சீன் க்ரியேட் பண்ணாத. போய் டிடி போடு! சரியா?' என்று புறப்பட்டான். குழலீயும் அப்படியே புறப்பட்டு கோவிலுக்கு சென்றாள். ஆனால் மனது நிலைக்கொள்ள மறுத்தது!

யாரை பத்திடா நான் கனவு காணப்போறேன்? உன்னைபத்தி தானேடா நினைச்சுக்கிட்டு வந்தேன். உனக்கு உன் காதல் கைக்கூடனும் இல்லை ஒரு நல்ல அழகான பெண் வாழ்க்கைத்துணையாய் வரனும்னு மனசில வேண்டிக்கிட்டேன்! என்னை போய்...? இன்னும் என்னை எவ்வளவு தான் காயப்படுத்தப்போற? இதையே வேற யாராவது செய்தா எப்படி ரியாக்ட் செய்திருப்பேன்! ஆனால் நீ எவ்வளவு அவமானப்படுத்தினாலும் தாங்குறேன். கடவுளே நான் விருப்பட்டது எதுவும் கிடைக்கலை! இனிமே கிடைக்கலனாகூட பரவாயில்லை. அவன் விருப்பப்பட்டதேல்லாம் கிடைக்கனும்! அவன் முயற்சிகளில் வாழ்க்கை முழுவதிலும் துணையாயிரு!

அவள் மனம் அலைப்பாய்ந்தால், விடை தேடினால், முடிவு எடுக்க தடுமாறினால் என்று எல்லா இக்கட்டான சமயத்திலும் தஞ்சமடைவது இந்த கோவிலும் மருந்தீஸ்வரர் கோவிலும் தான்! அரை மணி நேர தியானம் மனது ஒரு நிலைக்கொள்ளும்! இன்று ஏனோ மனம் சலனதிலேயே இருந்தது. அதனால் புறப்பட்டு ஒருவாராக வீடுபோய் சேர்ந்தாள்.

காயங்களை கண்ட அம்மா, 'ஏன்டீ இரண்டு நாளில் பொண்ணு பார்க்க வராங்க... இப்ப போய் இரத்தகளறியா வந்து நிக்கற பாரு! டேய் அருள் இவளை டாக்டர்கிட்ட அழைத்துகிட்டு போ!' என்று விரட்டினார்.

நவம்பர் 14 அன்று காலையில் இருந்தே அம்மா குழலீயை திட்டித்தீர்த்துக்கொண்டிருந்தார்! அம்மா பார்த்திருந்த அந்த இரண்டு வரன்களில் ஒரு வரனின் பெண் பார்க்கும் படலம் நேற்று! கோவிலில் சந்திப்பு! படிப்பதிலிருந்து ஒரு மணி நேர ஓய்வு எடுத்துக்கொண்டு அங்கே சென்றாள். அம்மாவும் அந்த குடும்பத்தினரும் பேசிக்கொண்டிருந்தனர்.

'பொண்ணு ஏன் தாங்கி நடக்குது? கையில் என்ன ப்ளாஸ்டர்? கல்யாணத்திற்கு அப்புறம் வேலைக்கு போகனும்னு அவசியம் இல்லை..சேலை கட்ட தெரியுமா??? சமைப்பாளா??  எங்க பையன் கொஞ்சம் கலர் அதிகம்! சொந்த வீடா? வேற சொத்து எதுவும் இல்லையா? கல்யாணத்தை கொஞ்சம் கிராண்டா செய்யனும்.. மாப்பிள்ளை யுஸ் ல இருக்கான்... அவன் ஸ்டேடஸ் தகுந்தாப்பல இருக்கனும்...' இன்னும் பல கேள்விகள்!!

பெண்ணிடம் தனியாக பேச வேண்டும் என்று அந்த பையன் கேட்டதால் அவனிடம் தனியே ஓரமாக நின்று பேசினாள். 

அவன் கேட்ட முதல் கேள்வி... 'எப்படிதான் இந்த நாட்டில் இருக்கீங்களோ?'

'நீங்க எப்படி இருந்தீங்களோ.. இப்ப எப்படி இருக்கீங்களோ அப்படித்தான் நாங்க இருக்கோம்!'

Patriotism! ம்ம்...பரவாயில்லை. நம்ம கல்யாணத்திற்கு அப்புறம் யுஸ் ல தான் செட்டில் ஆகறோம். இந்தியா வருவதைப்பற்றி யோசிக்க கூடாது! Quite disgusting to be here! நீயும் அங்க தானே இருந்த சோ யு வில் நாட் திங்க் இட் டிவ்வரன்ட்! 

எக்ஸ்கியூஸ் மீ! முதலில் நான் உன்னை மணம் புரிவதைப்பற்றி யோசிக்கவே இல்லை. அப்புறம் தானே மற்றது எல்லாம்?! உன்னை பற்றி சொல்லு!

ஹலோ.. என்ன மரியாதையே இல்லையா?

வாட் யு கேவ் வில் பீ கிவன் பேக்! So give respect n take respect!

ம்ம்... எனக்கு உன்னோட ஆட்டிட்யூட் ரொம்ப பிடிச்சு இருக்கு!

பட் ஐ டோன்ட்! நான் இந்தியாவில் தான் இருப்பேன். இஃப் யூ ஆர் கோயீங் டூ பீ தேர் இட்ஸ் ஓகே ஃபார் மீ அஃப்டர் மேரேஜ்!

அப்புறம் நான் ஏன் உன்னை கல்யாணம் செய்துக்கனும்?!

மெல்லிய புன்னகையுடன், இட்ஸ் ஓகே! என்றாள். 

பேச்சும் நின்றுப்போனது! இதுதான் காரணம் அம்மாவின் அர்ச்சனைக்கு! திட்டுவது என்று ஆரம்பித்துவிட்டால் என்ன பேசுவார் என்று அவருக்கே தெரியாது. ஆனால் எதிராலி ரணப்பட்டுப் போவார்கள். இது குழலீயின் அனுபவப்பாடம்! அவர் பேசும் போதே பதிலுக்கு பதில் கொடுத்துவிட்டாள். 

'அம்மா இனி தயவுசெய்து என்னை இந்த மாதிரி கூட்டிப்போகாதே மா! இங்கிருக்கிற வரைக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க! இன்னொரு முறை பொண்ணு பார்க்கிறேன் யாராவது வந்த நிக்கட்டும்... அப்ப இருக்கு உங்களுக்கு!'

வீட்டில் இருந்நால் இது மேலும் சண்டையாகும் என்று எண்ணி காலையிலேயே குரூப் ஸ்டடி என்று அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு கிளம்பி சென்றுவிட்டாள்! இங்கே வந்தும் என்னவோ ஏதோ சூன்யமாய் இருந்தது! எடுத்த வேலையை முடிக்காமல் இருந்தால் இப்படித்தான் என்று தன்னையே நொந்துக்கொண்டாள்.

ஆனந்த் யாழினி, அர்ஜுன், ப்ரியா பிரபு என அனைவரின் பிரச்சனைகளும் அப்படியே இருக்கிறது! இதில் ஏதோ ஒரு வகையில் தானும் சம்பந்தப்பட்டிருப்பதால் அதை சரி செய்தே ஆக வேண்டிய கட்டாயம்! அலுவலகத்தில் பாலீடிக்ஸ்! ஏதோ ஒரு வகையான பிரஷர்- சமூகம், குடும்பம், அலுவலகம் என்று அணைத்திலும்!

யாருக்காக யோசிப்பது என்று தவித்துக்கொண்டிருந்தாள்! வருவது வரட்டும் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தாலும் இப்படி பற்பல சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் போது தான் தனிமையின் கொடூர முகம் தெரிகிறது. இவ்வளவு வலியிலும் வேதனையிலும் வெடித்த அழத்துடிக்கும் போதும் தாங்கி ஆறுதல் ஒரு தோள் கிடையாது!

ஆயிரம் நண்பர்கள் இருந்தாலும் இந்த நொடியில் யோசிக்கும் போது யாரும் இல்லாத தனிமை! ஒரு வெறுமை! இவ்வளவு தான் நமக்கு விதிக்கப்பட்டது என்று எடுத்துக்கொண்டாலும் மனதில் ஒரு ஓரத்தில் வலி இருக்கத்தான் செய்கிறது! கிருஷ்ணாவை தத்து எடுக்க வேண்டும். தம்பியை படிக்க வைக்க வேண்டும். அம்மாவின் உடன் பிறந்த தங்கையின் பொறுப்பும் இவளுடையது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.