(Reading time: 9 - 17 minutes)

02. யாதுமாகி நின்றாய் காளி - சத்யா

மீரவால் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. சக மனிதன் ஒருவனுக்கு அடி பட்டதும் அதற்கான உதவி செய்யாமல் ஆளாளுக்கு அவர்களுக்கு தோன்றும் விதத்தில் பேசியது ஒரு புறம் என்றால் அவன் அந்த சமயத்தில் கூட பதட்டம் எழாமல் குழந்தை முகவரி , அவன் ப்ளூட் குரூப் அனைத்தும் கூறியது மற்றுமொரு அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம் ஆயிற்று. அவன் சொன்னது போல் ஸ்ரீராம் என்ற பெயருடன் இருந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு நடந்ததை சுருக்கமாக சொல்லி ஹாஸ்பிடல் பெயரையும் சொல்லி தான் அங்கு ரஞ்சனியுடன் இருப்பதாக கூறினால். தன்னுடைய வீட்டிற்கு தொடர்பு கொண்டு அம்மாவை பதட்டப்பட வேண்டாம் என்றும் தான் முடிந்த வரையில் சீக்ரமே வருவதாகவும் கூறி ரஞ்சனியுடன் ஹாஸ்பிடல் சென்றாள்.

ஹாஸ்பிடல் சென்று கண்ணன் பேர் சொல்லி அவன் அனுமதிக்க பட்டிருக்கும் அவசர சிகிச்சை பிரிவை அடைந்தாள். இவன்தான் தன்னுடன் பேசினவனா அல்லது இவனாக இருக்க வேண்டும் என்று நான் நினைகறேன்னோ  என்று தனக்குள் யோசனையில் இருந்தாள்.திடீரென்ன காற்றை கிழிக்கும் ஒரு குரல் ( numma sundari ammaldhaan)" இவளுக எல்லாம் வீட்ல இருந்து சமையல் செய்யாம வண்டிய எடுத்துண்டு கிளம்பிட்ராலுக காத்துல ஒரு பக்கம் இவளுக மேல் தாவணி ( துப்பட்டaa) பறக்க , ஒரு பக்கம் இவளுக முடி பறக்க , அப்பன் ஆத்தா மானத்த ஒரு பக்கம் பறக்க விட்டு ஆட்டம் போட்ராலுகா,அயோ ஏன் கண்ணா என்னடா ஆச்சு உனக்கு அயோ நான் என்ன பண்ணுவேன் , ஏன் கண்ணுக்கு இப்டி ஆய்டுச்சே,.,.அயோ அயோ. ரஞ்சி இங்கதான் இருக்கியா ..ஹ்ம்ம்ம்ம் உனக்கு அடிபடல ஏன் கண்ணனுக்கு அடிபட்டுச்சா ஐயோ ஐயோ என்ன தெய்வம் இது!! பகவானே என்று அலறி ஒரு Chairil அமர..மீராவிற்கு அது கண்ணன் அம்மா என்று புரிந்தது ...ஆனால் குழந்தைக்கு அடி படதாதை அவள் அங்காய்த்த விதம் வெறுப்பாக இருந்தது ..உடனே அவர் அருகில் சென்று கண்ணனுக்கு எதுவும் இல்லை ஆன்ட்டி டாக்டர்ஸ் பார்த்துட்டு இருக்காங்க.எதிர் சாரில வந்த கார் பிரேக் ப்ர்ச்னை ஆகி அவங்களால கண்ட்ரோல் செய்ய முடியாம போய்டுச்சு.,அதான் கவலைபடாதீங்க என்று சொன்னாள்.

இவளை நிமிர்ந்து பார்த்த அந்த பார்வையில் துளி கூட சிநேகம் இல்லை, மாறாக இவள் பேசியதே காதில் விழதாதது போல அந்த அம்மாள் மறுபடியும் தன்னுடைய பொலம்பலை தொடர ஆரம்பித்தால். அபொழுது வெளிய வந்த டாக்டர் ,nothin to worry , காலுல கைல முதுகுல scratches ஆகி இருக்கு and கொஞ்சம் hip sprain ஆகிருக்கு but its curable.he has to be in our observation and treatment for another 3 days, thats it he should be ok. nothing major to worry என்று சொல்ல மீரா பெரிய புன்னகயுடன் அவருக்கு நன்றி தெரிவித்தாள்.  duty nurse  அவளிடம் prescriptionai  கொடுத்து சில மருந்துகளை உடனே வாங்கி வர சொன்னால் அதோடு பெட் ரெண்ட், ரூம் ரெண்ட் அனைத்திற்கான சீட்டையும் கொடுத்து pay செய்ய சொன்னால்.

Yathumagi nindraai kaali

ஹ்ம்ம்ம்ம் என்ன பெரிய ஹாஸ்பிடல் எவ்ளோ பேர் வந்து போறாங்க எங்கிட்டையே எல்லா பணத்தையும் வாங்கிகனுமா என்று அந்த அம்மாள் ஆரம்பிக்க அப்போது ஆன்ட்டி ஹாஸ்பிடல் இது கொஞ்சம் உங்க volume  குறைச்சுக்கோங்க.ரஞ்சி செல்லம் வாங்க இங்க என்று குழந்தையை வாரி அணைத்து ,கண்களும் சிரிக்க ஒரு நெடிய உருவம் அவள் அருகில் வந்தது, ஹலோ நான் ஸ்ரீராம் எனக்குதான் நீங்க கால் செஞ்சீங்க ,ரொம்ப தேங்க்ஸ் timelya  ஹெல்ப் பண்ணத்துக்கு. என்கிட்ட கொடுங்க அந்த prescription bills எல்லாம் நான் பார்த்துகறேன். நோ வொர்ரீஸ் சில். நீங்க கெளம்புங்க உங்க வீட்ல கவலை பட போறாங்க நான் பார்த்துகறேன்.ரொம்ப டைம் ஆகிடுச்சு. எப்படி போவீங்க எங்க வீடு உங்களுக்கு  , இருங்க ஏன் டிரைவர் எங்க பக்கத்துல இருப்பான் அவனுக்கு போன் செஞ்சு உங்கள drop  பண்ண சொல்லவா?? என்று இயல்பாக பேச.,அந்த நேரத்தில் அந்த தோழமை மீராவிற்கு பிடித்தது. இல்லீங்க வேண்டாம் நான் பார்த்துக்கறேன்.குழந்தை கொஞ்சம் பயந்துட்டா பார்த்துக்கோங்க. நான் வீட்ல இன்பார்ம் செஞ்சுருக்கேன் அதுனால நீங்க என்ன பத்தி யோசிக்கமா அவர கவனியுங்க. தேங்க்ஸ் என்று மீரா கிளம்பினாள்.

மனம் முழுவதும் நெறைய கேள்விகள் அவளுக்கு, அந்த போனில் கேட்ட குரல் இவன்தானா? குழந்தை ரஞ்சனியின் அம்மா எங்கே? இந்நேரம் அடித்து பிடித்து வந்திருக்க வேண்டாமா ? இந்த அம்மாள் ஏன் எல்லாவற்றையும் குதர்க்காகமவே பேசுகிறார்கள்? நான் ஏன் இப்டியே இவர்களை பற்றியே யோசிக்கறேன் ?????

வீடு வந்து சேர்ந்தவள் சோர்ந்து போய் ஹாலில் இருக்கும் ஊஞ்சலில் அப்டியே சிறிது நேரம் தலையை பிடித்து உட்கார்ந்தாள். என்ன மீ குட்டி இன்னிக்கு என்ன அமைதியான என்ட்ரி நீங்க என்று அவள் அருகில் வந்து உட்கார்ந்தார் மகாலட்சுமி. நாந்தான் போன்ல சொன்னேனே மா ஒரு accident  நல்ல வேலை ஒன்னும் பயப்படும்படியா இல்லை, ஆனாலும் மனசே சரி இல்லமா அந்த அவரோட ( பேரை சொல்ல தான் ஏன் இப்டி தயங்கிக்றோம் என்று மீராவிற்கு புரியவில்லை) அம்மா ரொம்ப ஓவரா அலட்டறாங்க மா எனக்கு ஒரே கஷ்டமா போச்சு .ஹுஹ்ஹ்

அவங்க கவலை அவங்களுக்கு மா , சில பேர் இப்டிதான் வாய் விட்டு பொலம்பி தங்களோட பயத்த மறைச்சுப்பாங்க .பெத்தவங்க இல்லையா, கஷ்டமா இருக்கும் இல்லையா, போ நீ போய் ரெப்ரெஷ் செஞ்சு வா அம்மா சூடா டீ தரேன் , குடிச்சுட்டு கோயில் போகலாம் வா என்று சொல்லி சமையல்அறை பக்கம் சென்றார். அம்மா எப்போதுமே இப்டிதான் யாரையும் எப்போதுமே குறைத்து பேச மாட்டார்.

இது  வரை அவர் அதிர்ந்து பேசி மீரா கேட்டதில்லை , எப்பொழுதும் சின்ன சிரிப்பு உதட்டில் ஒட்டியது போல்தான் இருக்கும் அவர் பேசும் போது, மீராவின் அப்பா சொல்வார் அந்த நாளில் அப்பா வீடு சொந்தங்கள் யாவும் அம்மாவை K R விஜயா என்றுதான் நினைத்தார்களாம் சினிமாகாரிய கல்யாணம் பண்ணிகிட்டியா என்று கேட்டவர்களும் உண்டாம்.அதை சொல்லும்போது அப்பா காதலுடன் அம்மாவை பார்க்க அம்மா முகம் எல்லாம் சிவந்து வேற ஏதும் பேச்சிற்கு உடனே மாற்றுவாள். அந்த அன்யோன்யம் அவர்களின் என்றுமே மாறாத அன்பு அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

அம்மாவிடம் சென்று நான் மாடியில் கொஞ்ச நேரம் நடந்துட்டு வரேன் மா , கோயில் நாளை காலை asusual நான் ஆபீஸ் போறச்சே போய்ட்டு போறேன் மா என்று சொல்லி விட்டு மொட்டை மாடி சென்றாள். மீராவிற்கு மொட்டை மாடியில் மெதுவான காற்றில் நடப்பது மிகவும் பிடித்த விஷயம்.மீராவின் அணைத்து தருணங்களிலும் இந்த மொட்டை மாடி மௌனமாக பார்த்து இருக்கிறது. அவள் தன் paattiyay இழந்து ஒன்றும் புரியாமல் நெறைய நாள் லக்ஷ்மி அம்மாள் சமாதான படுத்தி கூட துக்கம் தாங்காமல் அழுது கொண்டே மாடியில் தூங்கினதை, நிலவு பார்த்தால் பாட்டி தெரிவார்கள் என்று யாரோ சொன்னதை கேட்டு மாடியில் வந்து அமர்ந்து நிலவை பார்த்து பாட்டி இன்று சரளி வரிசை பாடி முடித்தேன் பாட்டு கிளாசில் ,நீ எப்போ பாட்டி வந்து நான் பாடறத கேட்ப என்று விசும்பியதை..அவள் periyaval ஆனதும் அந்த 3 நாட்களின் வலி தாங்காமல் மாடியில் வந்துகயிற்று கட்டிலில் சுருண்டு படுத்து நிலவை பார்த்து மெதுவாக முனகியதை,..college சேர்ந்த புதிதில் இவள் கூட படிக்கும் ரிஷி என்பவன் இவளுக்கு கொடுத்த காதல் கடிதத்தை அம்மாவிடம் கொடுத்து அவர் மடியில் படுத்து அம்மா எனக்கு இது புடிக்க்லமா ஆனா அவன்கிட்ட மூஞ்சில அடிச்சா மாதிரி சொல்ல தெரில என்ன பண்ணட்டும் மா என்று கேட்டு லக்ஷ்மி அம்மாள் அவளிடம் மிருதுவாக எப்படி மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்று எடுத்து சொல்லியதை ....இன்னும் இது போல நெறைய சொல்லி கொண்டேபோகலாம்.,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.