(Reading time: 10 - 20 minutes)

"சாப்பிட வா!"

"உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா??நான் தான் வேணாம்னு சொன்னேன்ல!"-தன்னிச்சையாக அவள் கண்ணில் கண்ணீர் சேர்ந்தது.

"வெளியே போ!"-அமைதியாக நின்றாள்.

"போ!"-கண்ணீரோடு அவ்விடம் நீங்கினாள்.

மனதில் ஆழமாக எதோ தைத்தது போல இருந்தது.

அவளுக்கு துன்பம் வர விட மாட்டேன் என்றல்லவா வாக்களித்தேன்??இன்று அந்த வாக்கினை நானே அழித்துவிட்டேனே...

மனம் நொந்து போனது.

மறுநாள் காலை....

"ரஞ்சு...இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வரீயா?"-நேற்று நடந்த எதையும் அவள் காட்டவில்லை.

"ஏன்?"

"கோவிலுக்கு போயிட்டு வரலாம்!"

"என்னால முடியாது!"

"சரி முடிந்த அளவுக்கு சீக்கிரம் வா!"

"இதோ பார் நான் எப்போ வரணும்னு நீ சொல்ல வேணாம் அது எனக்கு தெரியும்!"

"உன் நல்லதுக்கு தானே சொன்னேன்?"

"நான்  கேட்டேனா?என் மேலே அக்கறை பட சொல்லி நான் கேட்டேனா?எங்கே இருக்கணுமோ அங்கேயே இரு!"-வெறுப்பை கொட்டி விட்டு போனான்.

ஆடிப் போனாள் நிலா.ஏன் இப்படி செய்கிறான்.

என்ன தவறிழைத்தேன்?? 

தன்னால் அதிக பட்சமாக எவ்வளவு வெறுப்பை வழங்க முடியுமோ அவ்வளவையும் வழங்கினான் ரஞ்சித்.

ஒரு பெண்ணால் எத்தனை துன்பத்தை தான் தாங்க முடியும்??

அன்று....

"ஏன் இப்படி பண்ற?அப்படி என்ன தப்பு பண்ணேன்??"-அந்த நொடியே உயிர் பிரிய கூடாதா என்றிருந்தது ரஞ்சித்திற்கு!!!

மனம் எவ்வளவு காயம் அடைந்திருந்தால் இப்படி கேட்பாள்??

"சொல்லட்டா??"

".................."

"உன்னை பார்த்த உடனே உன்னை அவாயிட் பண்ணாம உன் கூட பழகினேன்ல அது நான் பண்ண முதல் தப்பு!"

"உன் கூட கடைசி வரைக்கும் இருக்க நினைத்தது இரண்டாவது தப்பு!

எல்லாத்துக்கும் மேலே இதை உன் கழுத்துல கட்டினேன் பாரு அதான் நான் பண்ண ரொம்ப பெரிய தப்பு!"-என்று அவளின் மாங்கல்யத்தை தூக்கி காண்பித்தான்.

"ரஞ்சு?"

"போதும் இனி இப்படி கூப்பிட்ட மனுஷனா இருக்க மாட்டேன்.

தயவு செய்து என் வாழ்க்கையை விட்டு போ!ந இல்லாம இருந்தா தான் எனக்கு சந்தோஷமே!"-

இதயம் நொறுங்கி போனது.அடுக்கடுக்கான வலிகள்.

அப்படியே மயங்கி சரிந்தாள் நிலா.

"அம்மூ!"-ஓடி  போய் தாங்கினான்.

காதல் வலி உணர்ந்த மனம் தன்னிலை மறந்தது.

"ஏ...அம்மூ பாருடி!"

கண் திறக்கவில்லை.

மருத்துவரை அழைத்தான்.

நெடு நேரம் கழித்து கண் விழித்தாள்.

அவள் கண் விழித்ததும் அவ்விடம் நீங்கினான் ரஞ்சித்.நீண்ட நேரம் தனிமையில்  அமர்ந்திருந்தாள்.

"நம்ம எந்த நேரத்துலயும் மற்றவங்களுக்கு பாரமா இருக்க கூடாது.ஒரு வேளை நாம அவங்களை விலகுற நிலை வந்தால் அதுக்கு நீ சந்தோஷப்படணும்.

ஏனென்றால்...நம்ம மனசுக்கு பிடிச்சவங்களுக்காக நாம அவங்களை விலகுறோம் இரண்டாவது அந்த கடவுள் நமக்கு எதையோ சொல்லாம சொல்லுவார்.அதனால பயப்படாம அடுத்த முடிவை எடு!"-என்றோ தன் தந்தை கூறிய சொற்கள் நினவைு வந்தன.

சற்றும் தாமதிக்காமல் பெட்டியில் தன் துணிகளை அடுக்கினாள்.

ரஞ்சித்திடம்.,

"நான் போறேன்!"என்றாள். அவன் அதிர்ச்சியாக திரும்பினான்.

"முதல்லையே பிடிக்கலைன்னு சொல்லி இருக்கலாம்!

இவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சிருக்க வேணாம்."-இப்போதும் பழியை தன் மீது சுமத்தி கொள்கிறாள்!

"நான் போறேன் இனி உன் வாழ்க்கையில வர மாட்டேன்."-கசப்பான புன்னகையை விடுத்து அவனை நீங்கினாள்.

தடுப்பதற்கு மனமோ துடித்தது.அதை அவன் செய்யவில்லை.

ஏனெனில் அவன் அவளை காதலித்தான்.

ரஞ்சித்தை நீங்கியவள் பல மனம் சார்ந்த பிரச்சனகைளை சந்திக்க வேண்டியதாயிற்று. 

மூன்று மாதங்கள் கடும் போராட்டத்திற்கு பின் அமெரிக்கா சென்றாள் நிலா.

அதன் பின் தன் உடலில் எந்த மாறுதலும் ஏற்படாததால் மீண்டும் உடலை பரிசோதிக்க அவன் உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிந்தது.

இதை அறிந்த நிவாஸ் சம்பந்தப்பட்ட அந்த பரிசோதனை மையத்தை தடை செய்ய கோரி வழக்கு தொடுத்தார்.

பின் எஸ் ரஞ்சித் என்ற பெயரில் இருவரின் ரிப்போர்ட் கவன குறைவால் மாறியதாகவும் இனி இந்த தவறுகள் ஏற்பாடாது  எனவும் உறுதியளிக்க வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

நடந்தவற்றை கேட்ட கார்த்திக்கின் கண்கள் கண்ணீரை சிந்த தான் செய்தன.

"ஹாட்ஸ் அப்! சத்தியமா எதிர்ப்பார்க்கலை இது தான் காதல்னு சொல்லாம சொல்லிட்டீங்க!

உனக்கு மனைவியா ஒரு பொண்ணு நம்ம வீட்டுக்கு வருவாள் என்றால் அது நிலா தான் இல்லை நீ கல்யாணமே பண்ணிக்காதே!அம்மாகிட்ட நான் பேசிக்கிறேன்.

ஆல் தி பெஸ்ட்!"-கார்த்திக்கின் வார்த்தைகள் ஏதோ நம்பிக்கையை ரஞ்சித்தின் மனதில் விதைத்தது.

தோட்டத்தில் அமர்ந்திருந்தாள் நிலா.

அனைத்தும் சூன்யமாய் தெரிந்தது.

இன்னும் ஒரு வாரத்தில் அவளை பெண் பார்க்க வருகின்றனர். 

என்ன செய்வது?

இப்படி ஒரு நிலையில் காலம் என்னை தள்ளியதே - பேதை மனம் கரைந்தது.

அவள் சிந்தனையை  கலைக்கும் வண்ணம் தோட்டத்தில் பந்து ஒன்று விழுந்தது.

குழம்பியவள் அதனை சென்று எடுத்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்தாள்.ஒரு சிறுவனின் தலை தெரிந்தது.

சற்று உற்று பார்த்தால் அது ராஜா.ஆம் அவனே தான்.

நிலா அவனை அழைத்தாள்.

அவன் பயத்தோடு வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.