(Reading time: 21 - 42 minutes)

03. பிரியாத வரம் வேண்டும் - மீரா ராம்

பாடல் சத்தம் கேட்டதும், கோபம் பொங்க அவனை திரும்பி பார்த்தாள் மஞ்சரி… (அட அதுதாங்க நம்ம பாலாகிட்ட அடி வாங்கிட்டு ஓடி வந்து ஒருத்தன் மேலே இடிச்சிட்டு கண்டுக்காம போனாளே… அவ தான் இந்த மஞ்சரி…)

அவள் முறைத்ததும், அவன் செல்போனில் பாடலின் சத்தத்தை அதிகரித்தான்… அது மஞ்சரியின் கோபத்தை மேலும் கிளற,

ஹலோ… மிஸ்டர்… என்ன நக்கலா?... நானும் போனா போகுதுன்னு பார்த்தா ரொம்ப ஓவரா தான் போறீங்க?... என்று அவள் அவனைப் பார்த்து பொரிய,

Piriyatha varam vendum

ஹலோ… மிஸ்… என்ன சொன்னீங்க?... நக்கலா?... ஹாஹாஹா… நோ நோ… நான் நிஜமா தான் சொன்னேன்… அழகான மஞ்சள் கலர் டிரெஸ், அதுக்கு மேட்சா, அதே கலரில் வளையல், வாட்ச், ஹ்ம்ம்.. அப்புறம் இந்த பியூட்டிஃபுல் எல்லோ ரோஸ்…. இப்படி மங்களகரமா நான் போற பாதையில வந்து குறுக்கே இடிச்சிட்டு, என்னோட பார்வையையும் அலட்சியப்படுத்திட்டு போனது நீங்க… இதுல நான் ஓவரா போறனா?... ஹ்ம்ம்… என் நேரம்… என்று அவன் இலகுவாக சொல்ல…

அவள் கோபத்தின் உச்சிக்கே சென்றாள்… அவன் அவளை ரசித்து சொல்கிறானா? இல்லை கிண்டலடித்து சொல்கிறானா?.. என்று புரியாமல் குழம்பி போனாள் அவள்… அந்த குழப்பமே அவளுக்கு சினமூட்ட, அவனிடம் சண்டையிட ஆரம்பித்தாள் அவள்…

நீங்க போற பாதையா?... நினைப்புதான்… இங்க என்ன உங்க பேர்ல போர்டா எழுதி வச்சிருக்கீங்க?... ஆளைப் பாரு ஆளை… வந்துட்டார் காலையிலேயே இடிக்கிறதுக்குன்னே…

ஆமா நான் போற பாதையிலே தான நீங்க வந்தீங்க… ஹ்ம்ம்… போர்டு தான வச்சிட்டா போச்சு… எங்க வைக்கணும்?... இங்க வைக்கணுமா?... இல்ல அங்க வைக்கணுமா?...

ஹ்ம்ம்.. அத உங்க தலையில வைங்க… என்று பட்டென்று சொன்னவள், கண்ணு தெரியாம வந்து இடிச்சது மட்டும் இல்லாம எதையோ புதுசா பார்த்த மாதிரி லுக் வேற விட்டுட்டு பேசுற பேச்சைப் பாரு…...

லுக் விட்டேனா?... யாரு நானா?.. உங்களையா?... எப்போ?... என்று அவன் பவ்யமாக கேட்க,

அடடா… சாருக்கு ஒன்னுமே தெரியாது… பார்க்க டீசன்ட்டா இருந்துட்டு பண்ணுற வேலையெல்லாம் பக்கா கேடித்தனம்…. என்றாள் அவளும் விடாமல்…

கேடித்தனமா?... நானா?...

ஆமா… நீங்க தான்… இப்போ அதுக்கு என்ன?... பாட்டு போட்டு சீன் போட்டது யாரு?.... நீங்க தான?... அப்புறம்… என்னோட பார்வையையும் அலட்சியப்படுத்திட்டுன்னு சொன்னது யாரு?... நீங்க தான?... நானா சொன்னேன்…?... பார்வையாம் பார்வை… பெரிய மன்மதன்… இவர் பார்வையைப் பார்த்ததும் நாங்க மயங்குறதுக்கு… அதுக்கு வேற ஆளைப் பாருங்க… சொல்லிட்டேன்…

ஹ்ம்ம்… சரண்டர் என்று அவன் இருகைகளையும் உயர்த்திவிட்டு, தெரியாம இடிச்சிட்டேன்…. சாரிங்க… நீங்க போங்க… என்று சொன்னதும்,

அவள்… ஹ்ம்ம்… அது… அந்த பயம் இருக்கணும்… என்ற பாவனையில் அவனிடம் தலையசைத்துவிட்டு ஓரடி நகரப் போகையில், அவன் குரல் அவளை தடுத்தது போக விடாமல்…

நான் மன்மதன் எல்லாம் இல்லங்க… ஆனா, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சொல்வாங்க… என் கண் அழகா இருக்கும்னு… ஆனா, நான் அதை கண்டுக்கவே இல்லை… இப்போ வரை… ஏன் என் பார்வையில் மயங்கி எனக்கு புரோபோஸ் செய்தவங்க கூட உண்டு…. அப்போ கூட என் கண் அழகுன்னு நான் நம்பலை… இன்ஃபாக்ட்… என்னோட இந்த கண்களுக்காகத்தான் என் அம்மா எனக்கு மைவிழியன்னு பேரே வைச்சேன்னு சொல்லுவாங்க… ஏம்மா இந்த பேரு வச்சீங்கன்னு என் அம்மாகிட்ட சண்டை போட்டது கூட உண்டு… பட் இந்த செகண்ட் என் அம்மாக்கு மனசுக்குள்ளே தேங்க்ஸ் சொல்லிட்டே இருக்கேன்…

அப்போ எல்லாம் கூட நான் அதை நம்பலை… ஆனா இன்னைக்கு நான் நம்புறேன்…… அவங்க சொன்னது உண்மைன்னு… என்று அவன் நிறுத்தி நிதானமாக சொல்லவும்,

அவளுக்கு வார்த்தைகள் மறந்து போனது…

எ…ன்….ன…. உ….ண்…..மை… என்று அவள் இழுத்துக் கேட்கையிலே… அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது…

ஹ்ம்ம்… இந்த உண்மை தான்… நீ என் பார்வையை தவிர்ப்பதற்காகத்தான் எங்கிட்ட வம்பு வளர்த்து இவ்வளவு நேரம் சண்டை போட்டேன்ற உண்மைதான்… என்று அவன் சொல்லவும் அவளுக்கு தூக்கி வாரி போட்டது…

அவள் அவன் மேல் மோதியதும், அவள் முதலில் சந்தித்தது அவனின் அழகிய கண்களைத்தான்… முதல் பார்வையிலேயே வசீகரிக்கப்பட்டாள் அவள்… ஆனாலும் பார்த்த உடன் காதல், இடித்த உடன் காதல் இதிலெல்லாம் அவளுக்கு உடன்பாடு இல்லை… அதெல்லாம் சுத்த பொய் என்று தான் இத்தனை நாள் கேலி செய்து கொண்டிருந்தாள்…

இன்று அது தனக்கே நிகழவும் அவள் உணர்ந்தாள் அதெல்லாம் பொய்யில்லை என…

இருந்தாலும் இது காதல் என்று அவளால் கூறவும் முடியவில்லை… அவன் பார்வையில் அவள் சிக்கிக்கொண்டது உண்மைதான்… அதனாலே தன் மனம் சுதாரிப்பதை அவள் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி முகத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் காட்டாமல் அவனை கண்டுகொள்ளாமல் சென்றாள்…

ஆனால், அவள் சென்றதும், அவனின் செல்போன் பாடல், அவளுக்கு புன்னகையை வரவழைக்க, பார்வைதான் தூண்டில் போடுதுன்னா, செய்கையுமா என்றெண்ணியவளுக்கு சிரிப்பு வந்தது… இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு அவனிடம் கோபமாக பேசினாள்…

அவள் கேள்விக்கு அவன் பதில் அளித்த விதம் அவளை மேலும் தூண்ட, அவனிடம் சண்டை என்ற பெயரில் பேச்சு வளர்க்க ஆரம்பித்தாள்…

அவன் ஒரு கட்டத்தில் சரண்டர் ஆகிவிட, அவள் இதுதான் சமயம் என்று விலக எண்ணிய போது, அவன் தன்னைப் பற்றிக் கூறவும், அவள் கால்கள் நகர மறுத்தன…

மைவிழியன்… என்ற பெயரைக் கேட்டதுமே, மனதினுள் சாரல் அடிப்பதை உணர்ந்தாள் அவள்…

மேலும் அவனுக்கு தான் அவனிடத்தில் சற்று சரிந்தது தெரிந்து விட்டதோ என்று அவள் பயந்துவிட, வார்த்தைகள் அதற்கு அச்சாரம் இட்டது… அவள் நிலையை…

இருந்தும், தன்னை தேற்றிக்கொண்டு என்ன உண்மை என்று அவள் அவனிடம் கேட்க,

அவளின் நாடகத்தை அவன் பிட்டு பிட்டு வைத்ததும், அதுவரை ஓயாது வாயாடிக்கொண்டிருந்தவள் ஊமையாகி போனாள் முற்றிலுமாய்…

என்ன பேச்சையேக் காணோம்?... இவ்வளவு நேரம் வார்த்தையால ஒரு யுத்தமே நடத்தின… இப்போ வார்த்தை இல்லையா பேச?... என்று அவளின் முன் அவன் கை ஆட்டி பேச…

அவள் தன்னுணர்வு பெற்றாள்…

அவனின் அழகிய விழிகள், தூபம் போட்டு அவளை மீண்டும் இழுப்பதை உணர்ந்து,

வேலை இரு……..க்கு… நா……ன்…. போ…க…….ணும்… என்றவள் வேகமாக அவனை விட்டு விலகி செல்ல,

அவன் அவளை அழைத்தான், ஓய்… மஞ்ச காட்டு மைனா… நில்லு… என்றபடி அவன் சொல்ல, அவள் கால்கள் நகர முற்பட்டாலும் மனம் அதனை கட்டிப்போட்டது அவன் வார்த்தைகளை ரசித்த வண்ணம்…

அவளருகில் வந்தவன், … ஹ்ம்ம்… என் பார்வை உன்னை என்னமோ பண்ணுதுன்னு தெரியுது… பட் உனக்கு என்னைப் பிடிச்சிருக்கான்னு தெரியலை…. என்றவன்,

எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு… என பட்டென்று சொல்லிவிடவும், அவள் சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்…

விழிகள் நான்கும் பட்டும் படாமலும் உரசிக்கொள்ள, அவள் திண்டாடினாள்… அவளின் மயக்கம் அவள் விழிகளில் தெரிய, அதில் கரைந்து போனவன்,

இப்படியெல்லாம் பார்க்காத மைனா… ப்ளீஸ்… நான் தாங்க மாட்டேன் என்றவன், அவள் விழிகளில் இன்னும் மயக்கம் இருப்பதை உணர்ந்து,

மை டியர் மஞ்சக்காட்டு மைனா… என மெதுவாக சொல்ல… அவள் கரைந்தே போனாள்…

அதை அவள் முகம் சொல்லிவிட, ஹேய்… போதும்டி…. இப்படிஎல்லாம் லுக் விடாதே… நான் பாவம்… என அவன் அவள் முன் சொடக்கு போட, அவள் அவன் அருகிலிருந்து விலகினாள் சிரிப்புடன்…

ஹ்ம்ம்… நான் இங்க ஒருத்தன் பைத்தியம் பிடிக்காத குறையா இருக்கேன்… நீ சிரிக்கிறியா என அவன் கேட்க, அவள் சிரிப்பை நிறுத்தவே இல்லை…

அவளின் சிரிப்பைக்கண்டவன், உங்கிட்ட ஒன்னு சொல்லவா என்று கேட்க, அவள் ஹ்ம்ம்… என்று தலை அசைத்தாள்…

நான்… ஒபனா… சொல்லுறேன்… விழுந்துட்டேன்… ஹாங்… என்று நடிகர் சிவகார்த்திகேயன் பாணியில் அவன் சொல்ல, அவள் சிரித்துக்கொண்டே ஓடினாள்…

ஹேய்… பதில் சொல்லிட்டு போ மை டியர் மஞ்சக்காட்டு மைனா…. என்ற அவன் குரல் காற்றில் கரைந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.