(Reading time: 4 - 8 minutes)

06. நறுமீன் காதல் - அனு.ஆர்

Narumeen

பழகுதமிழில் புழங்காத சில வார்த்தைகளுக்கு tool tip (கோடிட்ட வார்த்தைகள்) ஆக அருஞ்சொற்பொருள் கொடுத்துள்ளேன். நன்றி 

நறுமீன் நிலை

தாய் தந்தை தமையன் தமக்கை

ஊர் உறவு உற்றம் சுற்றம்

தன் துணை, தலைமுறை

ஊணுடலின் ஒரு பாகம் இழப்பினும்

தாங்கி தாண்டி மீண்டுமாய் புனரும்

மனு மனம்.

நம்பிக்கை இழந்தார்க்கு உண்டோ மறு வாழ்வு?

நம்பிக்கை இழந்து நின்றாள் ஆங்கு நறுமீன். (1)

 

நளை வரும் சுக வாழ்வு

நம்பி நாழிகை கடத்தியவள்

நானிலத்தின் தலைவியென

நாடோர் போற்றிடினும்

தன் உலகம் அத்துணையும் அழிந்துவிட

தான் மட்டும் தனியாளாய்

தரணியின் மேல் தனித்திருந்தாள்

உளநினைவில். (2)

 

மனம் அற்புதம்

பிணம் பிழைக்கும்

என்றும் நம்பும் சில நேரம்.

ஒன்றுமில்லை

இனி வாழ காரணம்

என்றும் முடிக்கும்

முடியும் கோலும்

முக்கோடி மாந்தரும்

நீ வாழி என் தோழி

எம் தலைவி

எனும் காதும். (3)

 

செவ்வுதிரம் சிந்தாமல்

சிறு துடிப்பும் செய்யாமல்

செத்திருந்தாள் சின்னவள்

உயிரற்ற யாக்கை

உலகாளும் அரியணையில்

என்பதனாய் வீற்றிருந்தாள் (4)

 

ஷெஷாங்கன் மனம்

பதவியாய் எனை காணும் உலகம்

பதியாய் காணும் பெண் உளம்

முன்னம் கண்ட துன்பம் அவன்

பின்னம் தள்ளும் வண்ணம்

கள்ளம் இல்லா இப்பிள்ளை மனம்

வீசும் சாமரம்.

அன்ன சிறகாய் அன்னை மடியாய் அள்ளும்

இவள் நான் விழும் நிலம். (5)

 

நினைவே சுகம்

நித்திரை கூடா வரம்

நெஞ்சம் நிறையும் விதம்

நிகழ்வில் இவன் கண்ட யாவும்

நங்கையிடம் நவில்வான் இத்தினம்

மங்கையின் மனம் கொள்வான் அவ்விதம். (6)

 

தரவேண்டும் நன் நம்பிக்கை

பெற வேண்டும் பெண் உள்ளத்தை

நண்பனாய் நட்புக்குரியவனாய்

நங்கை அகம்

இவன் புறம்

சரண் புகும்

தினம் வரும். (7)

 

காதல் ஊற்றாகி பின்

ஊழி காற்றாகி பெண்

{tooltip}வாளி{end-link} அம்பு {end-tooltip} இவன் தோள் சேரும்

ஆழி அவள், அதன் நீலம் இவன்

என்றாகும் காலம் வரும்

கணவன் முறைமை காணும் உரிமை

அன்று அவள் தரும். (8)

 

தூது போ தென்றலே

துங்கவன் மனம் சொல்லாயோ

துயிலா கண் கொண்டு

துணை போ நிலவொளியே

துடியிடை மங்கையவள்

காணவரும் கணவனிடம்

கடுகளவும் பதறவேண்டாம்

காதில் ஓதி விடு

காதலிரவிது

காமமே ஒழிந்து போ! (9)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.