(Reading time: 31 - 61 minutes)

என்ன தவம் செய்து விட்டேன் – 08 - புவனேஸ்வரி கலைச்செல்வி

ங்கீதாவுடன் பேசிக்கொண்டே அன்பினொளி இல்லத்தினுள் நுழைந்தான் சந்தோஷ். அவனது  வரவிற்காகவே காத்திருந்தது போல " அப்பா " என்றபடி சிறுவர் சிறுமியர் அவனை தேடி ஓடிவர, அனைவரும் அனைத்து கொஞ்சி கதை பேசிக்கொண்டிருந்தான் சந்தோஷ்.. இதழில் புன்னகை அரும்ப அவனை ரசித்துக் கொண்டு நின்ற சாஹித்யா சிவாவின் குரல்கேட்டு தூக்கிவாரி போட திரும்பி நின்றாள்..

" ஹே சத்யா, என்னாச்சு பயந்துட்டியா ?"

" பின்ன இப்படி திடீர்னு கத்தினா, பயப்படாம என்ன பண்ணுவேன் அண்ணா ?" என்றவள் " அண்ணா " என்ற வார்த்தைக்கு மட்டும் அதிகமாய் அழுத்தம் தந்தாள். சிவா சந்தோஷின் நண்பன் மட்டுமல்ல..சாஹித்யாவின் உறவினனும் ஆவான்.   அண்மையில் சாஹித்யாவிற்கு சிவாவை மணம்  பேசவே அர்ஜுனனும் சுமித்திராவும் விரும்பினர். ஆனால் வழக்கம் போல சத்யா போர்க்கொடி ஏந்தி நிற்க, தற்பொழுது  திருமணப் பேச்சை நிறுத்தி வைத்திருந்தனர். எனினும் சிவாவின் பெற்றோர் நித்யா, கார்த்திகேயன்  இருவரின் மீது அன்பு பாராட்டும்  சத்யாவால் சிவாவை ஒரேடியாய் தள்ளி வைப்பதும் இயலாமல் போனது. அதனாலேயே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவனை " அண்ணா " என்று அழைத்து அவளது மனதை கோடிட்டு காட்டிவிடுவாள்.

Enna thavam seithu vitten

சிவாவிற்கும் அவள் மீது காதல் என்ற உணர்வில்லைதான்.. எனினும் அவளை தனக்கு திருமணம் செய்து வைக்கவிருக்கிரார்கள் என்ற எண்ணத்தில் எழுந்த ஈர்ப்பு  அதிகமாகவே இருந்தது..எப்போதும்போல அன்றும் சிவா  வற்புறுத்த, வேறு வழியில்லாமல் அவனுடன்  அன்பினொளி இல்லத்திற்கு வந்தாள் .. அவன் பேச்சிற்காக கடமையை   செய்பவள்  போல வெறுமையாய் வந்தவள், சிறிது நேரத்திலேயே  அன்பினொளி இல்லத்துடன் ஒன்றிவிட்டாள்.. பழமையான ரசனைகளை ரசிப்பவளுக்கு முதியவர்களிடம் பேச பிடித்திருந்தது.. இன்றைய வாழ்வில், அன்றைய பாரம்பரியம், நாட்டு மருத்துவம், கிராமிய பாடல்கள்  இப்படி பலவற்றையும் வாய் வலிக்க பேசி  அங்கிருந்தவர்களின் மனம் கவர்ந்துவிட்டாள்  சாஹித்யா.. சிவாவிற்கும் அவளை தான்தான் அழைத்து வந்தோம் என்று சொல்லி கொள்வதில் ஒரு பெருமை.. அவனிடம் பேச்சு கொடுப்பதை தவிர்த்தபடி அந்த கண்ணாடி கதவின்வழி வாசலை பார்த்து கொண்டே நடந்தவள் சந்தோஷை பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டாள் .. சைந்தவியை அன்று மருத்துவமனையில் கடைசியாய் பார்த்தவள் அடிக்கடி அன்று நடந்ததை நினைத்து பார்ப்பாள் .. அப்படி நினைக்கும்போதெல்லாம் அனுமதி இல்லமாலே அவளது அகக்கண்ணில் ஆஜரானான்  சந்தோஷ்.. அன்று அவள் அழும்போது " என்னம்மா " என்று அவன் கனிவாய் கேட்டது  இன்னும் அவளது செவிகளுக்குள் ரீங்காரமிட்டது.. அதன்பிறகு இன்றுதான் அவனை பார்க்கிறாள்..அவனை பார்த்ததுமே சென்று  பேசிவிட வேண்டும் என்று ஒரு பக்கம் ஆவல் எழுந்தாலும், இன்னொருபுறம்   இது அவசியம் தானா ? என்ற கேள்வி அவளை தடுத்து நிறுத்தியது..

" எதையும் முளையிலேயே கில்லி எறிவது தான்  நல்லது சாஹித்யா.. அவன்மீது ஏற்கனவே உனக்கொரு ஈர்ப்பு இருக்கிறது!  இதில் நீயாய் அவனை நெருங்கி காதல் வலையில் விழ போகிறாயா ? " என்று எச்சரித்தது பெண்மனம்.. ஒரு பக்கம் சிவா , இன்னொரு புறம் சந்தோஷ், அவலக்கு மட்டும் மந்திர ஷக்தி இருந்திருந்தால் இந்நேரம் அவ்விடத்தில் இருந்து அப்போதே மறைந்திருப்பாள்.. அந்த நேரம்

" கொஞ்ச நேரம் இங்கயே இரு சத்யா.. சந்தோஷ் வந்துட்டான்.. நான் பேசிட்டு வரேன் " என்று விரைந்தான் சிவா.. அவன் சென்றவுடன்  ஏதோ விடுதலை பெற்றது போல சீராகமூச்செடுத்தாள்  சாஹித்யா.. செல்போனை அந்த அறையிலேயே விட்டுவிட்டு சென்றிருந்தான் சிவா.. சரியாய் அந்த நேரத்தில் அது சிணுங்கவும் சென்றவன் திரும்பி வந்துவிடுவானோ என்ற பயத்தில் தானே போனை எடுத்தாள் ..

" ஹெலோ "

" சஹி குட்டி "

" நித்து  அத்தை .. எங்க இருக்கீங்க ?"

"நான் இப்போதான் நம்ம பழனியாண்டவரை  தரிசுச்சிட்டு  வரேன் "

" ஓஹோ என்ன சொல்லுறார் உங்க காதல் மன்னன் முருகர் ?"

" அடிக் கழுதை ! கடவுளை அப்படி எல்லாம் பேச கூடாது "

"  ஹெலோ நானும் முருகாவும் பெஸ்ட் ப்ரண்ட்ஸ்  " என்றபடி சிரித்தாள் சாஹித்யா..

" ஆமா சிவா போன் உன்கிட்ட இருக்கு .. எங்க இருக்கீங்க ?"

" உங்க பையன் காலையிலே அப்பாவியா தூங்கிட்டு இருந்த என்னை அன்பினோளிக்கு  அழைச்சிட்டு வந்திட்டான் "

" அய்யயோ  டிஸ்டர்ப் பண்ணிட்டானா ?"

" நீங்க வேற நித்து  அத்தை.. இவ்வளவு நாளில் இன்னைக்குதான் உங்க பையன் ஒரு உருப்படியான இடத்திற்கு என்னை கூட்டிட்டு வந்திருக்கான் "

என்றாள்  சாஹித்யா எதார்த்தமாய்.. நித்யாவோ

" சிவா எப்பவும் உன் மனசுக்கு பிடிச்ச மாதிரிதான் நடந்துப்பான் சத்யாம்மா " என்றார் அவளது மனதை கரைக்க. அவரது குரலின் தோணி மாறியதிலேயே அவரது நோக்கத்தை உணர்ந்து கொண்டாள்  சாஹித்யா. ஏனோ அவளால் கார்த்திக் நித்யா இருவரிடமும் முகத்திற்கு நேராய் எதிர்த்து பேச முடியவில்லை. ஆனால் அந்த குணமே தனக்கு தடையாக இருக்கிறதோ என்று வருந்தினாள்  அவள்..

" சரி அத்தை .. நீங்க கால் பண்ணிங்கன்னு நான் சிவா கிட்ட சொல்றேன் .. இங்க சிக்னல் சரியா இல்லை .. அப்பறமா பேசறேன் " என்று போனை வைத்தாள் .. வைத்தவள் உடனே தனது போனில் அருளை அழைத்தாள் ..

" அருள் "

" சொல்லுடி "

" எங்கடா இருக்க?  மீட்டிங் இருக்குன்னு சொல்லிட்டுதானே போனேன் "

" ஓஹோ இன்னும் மீட்டிங் முடியலையா ? "

" இப்போதான் முடிஞ்சது என்னாச்சு டா ?"

" ப்ளீஸ் அருள் நீ நான் சொல்ற இடத்துக்கு இப்போவே வாயேன் ..எனக்கு மூச்சு முட்டுற பீல் ஆ இருக்கு டா " என்றாள்  கண்கலங்கிட...

" ஹே லூசு ... இரு நான் இப்பவே வரேன் " என்றபடி போனை வைத்தான் அருள்மொழிவர்மன். அவன் எதிரில்  அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்  வானதி. சில நிமிடங்களுக்கு  முன்பு தான் பட்டாசாய் வெடித்திருந்தாள்  வானதி. அப்படி என்னதான் நடந்துச்சு .. வாங்க நாமளும் ரிவர்ஸ்ல போயி பார்ப்போம் ..

அன்றைய முக்கியமான மீட்டிங்காக தயார் செய்து கொண்டிருந்த அருள்மொழிவர்மன் வளர்மதியை இண்டர்காமில் அழைத்து தனதறைக்கு  வர சொன்னான்.. மிகவும் அயர்வாக காணப்பட்டாள்  அவள்.. அதை முதலில் கவனிக்காத அருள் கணினியில் பார்வையை பதித்தபடியே

"  நம்ம புது ப்ரோக்ராம் ரெடி பண்ணிட்டிங்களா  வளர்மதி ? ப்ரெசென்ட் பண்ணுறதுக்கு முன்னாடி ஒரு டெமோ பார்க்கலாமா ?"என்றான்..

" நான் ஏற்கனவே உங்களுக்கு ஈமெயில் அனுப்பிட்டேன் சார் "

" ஓகே லெட்  மீ செக் நவ்  " என்றவன் முழுகவனத்தையும் அவள் அனுப்பிய ப்ரோக்ராம்மில் பதித்தான்.

" வெல்  டன்  வளர்மதி .. திஸ் இஸ்  யுவர் பெஸ்ட் ப்ரசன்டேஷன் எவர் " என்றபடி உற்சாகமாய் நிமிர்ந்தவன் அப்போதுதான் அவளது முகத்தை பார்த்தான் ..

" என்னாச்சு வளர்மதி ? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க ?"

" ஸ்லைட் பீவர் பாஸ் "

" ஸ்லைட் பீவரா பார்த்தா அப்படி தெரியலையே.. நீங்க உடனே டாக்டர் பாருங்க "

" இந்த மீட்டிங் முடிஞ்சதும் போறேன் பாஸ் "

" நோ நோ .. வானதிக்கு இந்த ப்ரோக்ராம் பத்தி தெரியும் தானே ?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.