(Reading time: 13 - 25 minutes)

20. ஷைரந்தரி - சகி

சித்ரா பௌர்ணமி தேவதைகளுக்கும், தேவர்களுக்கும் உகந்த நாள்.

மனிதர்கள் தங்களின் மலையளவு பாவங்களை கடுகளவாக்கவும்,

கடுகளவு புண்ணியங்களை மலையளவு ஆக்கவும் இந்த நாளில் இறைவனை குறிப்பாக

shairanthari

இந்து மத சாஸ்திரப்படி சித்ரகுப்தரையும்-

சித்ராதேவியையும் வணங்குவது சிறப்பாம்!!!

ஆனால்,சிலநேரத்தில் அது துர்சக்திகளுக்கு கொண்டாட்டமான நாளாகி போய்விடுகிறது.

சிவா-பார்வதி,

யுதீஷ்ட்ரன்-ஷைரந்தரி இரு இணைக்கும் நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெண்கள் இருவரின் முகத்திலும் நாணம் அமிர்தமாய் வழிந்துக்

கொண்டிருந்தது.

சில நேரத்தில் ஆண்களின் முகத்திலும் தான்!!!

ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

உற்றார் உறவினர் சகிதம் அனைத்தும் ஏற்பாடாகி இருந்தது. 

கதாநாயகர்கள் இருவரும் சுயம்வரத்திற்கு செல்லும் ராஜகுமாரர்களை போல

முகத்தில் தேஜஸ் கொண்டிருந்தனர். 

இளவரசிகள் இருவரையும் அவர்களின் தோழிகள் கேலி செய்து கொண்டிருந்தனர்.

"அண்ணி!போதும் கண்ணாடியை பார்த்தது.இதுக்கே என் அண்ணன் க்ளோஸ்!"

"நீங்க சொன்னா சரியா தான் அண்ணி இருக்கும்!"

"அண்ணியா?"

"ஆமா...என் அண்ணனை தானே நீங்க கல்யாணம் பண்ண போறீங்க?"-ஆக,அங்கே ஒருவரை ஒருவர் கேலி செய்ய பயன்படும் அஸ்திரம் கதாநாயக அஸ்திரம்!!!

நடக்கட்டும்...நடக்கட்டும்...

"என்ன என் பெயர் வருது?"-குழப்பமாய் கேட்டான் யுதீஷ்ட்ரன்.

"எதுவும் இல்லையே!"

"சரி உன்னை அம்மா கூப்பிடுறாங்க பார்!"

"அப்படி எதுவும் கேட்கலையே!"

"கூப்பிடுறாங்க பாரு!"-அவள் ஏற,இறங்க அவனை பார்த்தாள்.

"சரி...சரி...புரியுது!ஆனா,இதெல்லாம் நல்லா இல்லை பார்த்துக்கோ!"

"போடி!வெளியே உனக்கு வெயிட்டிங்!"

"என்னது?"

"நீயே போய் பார்!"-பார்வதி எழுந்து சென்றாள்.

அப்படி என்ன இருக்கிறது வெளியே...

அவள் வெளியே செல்லவும் ஒரு இரும்பு கரம் அவளை ஒரு அறைக்குள் இழுத்தது.

அதை பிறகு கவனிக்கலாம்...

முதலில் பஞ்சாக்ஷரியின் நிலையை கவனிப்போம்.

யுதீஷ்ட்ரன் அறையில் பிரவேசித்ததும் நிலை தடுமாறி போனது ஷைரந்தரிக்கு!!

அவன் இதழில் மந்தகாச புன்னகையோடு அவளருகே வந்தான்.

ஷைரந்தரி எழுந்து நின்றாள்.

"அப்பறம்!மேடம் என்ன பண்றீங்க?"

"ஒண்ணுமில்லை..."-தலைக்குனிநதப்படி கூறினாள்.

"ஒண்ணுமில்லையா?"

"இல்லை..."

"ஒண்ணுமே இல்லையா?"-என்ன ஆனது இவனுக்கு கேள்வியாய் பார்த்தாள்.

யுதீஷ் அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தினான்.

சிலிர்த்துப் போனாள்.

இருவருக்கும் இடையே இடைவேளை குறைய அவன் எண்ணத்தை ஊகித்தவளாய் அவனை விலகினாள்.

பேச்சில்லை.

மனதில் சிறு தடுமாற்றம் இருவரும் நிலை தடுமாறினர்.

யுதீஷ்ட்ரன் அவள் விலகலை ஏற்காது அவள் செவ்விதழை தனதாக்கினான்.

மனதை வியாபித்தது தடுமாற்றம்!!!

நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அவனிடமிருந்து விடுதலை கிடைத்தது.

"ஸாரி!"

"எதுக்கு?"

"இப்போ பண்ணதுக்கு!"

"..................."

"இதைப் பற்றி உன் அப்பாக்கிட்ட சொல்ல மாட்டியே!அப்பறம் அவர் கோபம் வந்து மறுபடியும் பிரித்த விட போறார்!"-அவன் யாரை குறிப்பிடுகிறான்???

புரிந்தது....

"அவர் அதை செய்ய மாட்டார்!"-நாணத்தோடு கூறினாள்.

இவள் நிலையே இப்படி எனில்,பார்வதியின் நிலை????

"என்னங்க நீங்க??இப்படி பயமுறுத்திட்டு???'

"நான் என்ன பயமுறுத்தினேன்?"

"................."-மௌனம் சாதித்தாள்.

"சரி ஸாரி!"-முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டான்.

அதை பார்த்தவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

மெல்ல தன் கரத்தை அவனருகே நீட்டினாள்.

அதைக் கண்டவன் அவளை உற்று பார்த்தான்.

மெல்ல அவள் கரத்தைப் பற்றினான்.

காதலானது,அழகிய காவியத்தை தன் எழுதுகோல் கொண்டு எழுத தொடங்கியது.

மனதை உருக்கும் செயல்களில் காதலானது முக்கிய ராஜ்ஜியத்தை வென்றுள்ளது என்பது சத்தியமே!!!!

பகையானது மனதை வியாபிக்கும் போது அறிவானது தனது ஆற்றலை இழந்துவிடுகிறது.

முடிவெடுக்க வேண்டிய தருணம் யுத்தமாகிறது!

மனித மனமானது யுத்த பூமியாய் மாறுகிறது!

இக்கட்டான சூழலை போக்கும் உபாயத்தை மானிடர் தேடுவதில்லை.

மனதை சாந்தப்படுத்துவதற்கே அவர்கள் முயல்கின்றனர்.

இதனால்,மனிதனின் பாவமானது புண்ணியங்களை அழிக்கின்றது.

தாங்கிக்க இயலாத மனவேதனையை பிரப்தமாக பெற வழி வகுக்கிறது.

இறுதியில் ஒரு ஆத்மாவின் பவித்ரத்தை சிதைத்து அதை முக்தி அடைய விடாமல் தடுக்கிறது.

அன்றூ ஷைரந்தரி அளித்த முத்துமாலையில் இன்னும் ஒரே ஒரு மணி மட்டுமே எஞ்சியுள்ளது.

மற்றவை அறுந்தாகிவிட்டது.

உயிர் பயம் ஈஸ்வரியின் நேத்திரங்களை மூடியிருந்த வஸ்திரத்தை நீக்கி உண்மையை உரைத்தது.

இறைவனானவன் அவருக்கு தன்னை காக்க ஒரு வாய்ப்பை தந்தான்.

மனம் செய்த தவறை அவருக்க உணர வைத்தது.

"வினய்!"

"ம்..."

"எல்லாத்தையும் விட்டுவிடலாம் வினய்!"

"எதை விட சொல்ற?"

"என்ன இருந்தாலும் நாம பண்ணது தப்பு வினய்!"

"என்ன பாட்டி?உயிர் பயத்தை காட்டிவிட்டாளா அந்த பஞ்சாக்ஷரி?"

"இல்லைடா..."

"நான் அவளை பழி தீர்க்கணும்!அவளை என் காலடியில விழ வைக்கணும்!அதுவரைக்கும் ஓயமாட்டேன்!"

"நான் இதுக்கு உதவ மாட்டேன்!"-அவரை உற்று பார்த்தான் வினய்.

"உதவாம இருக்க நீ ஏன் உயிரோட இருக்கணும்?"

"வினய்???"-அவன் கண் காட்ட,பின்னால் இருந்து ஒருவன் கயிறை கொண்டு ஈஸ்வரியின் கழுத்தை நெரித்தான்.

அவர் துடித்தப்படி மண்ணில் விழுந்தார்.

கை,கால்கள் துடித்தன,

இறுதியில் உயிர் துறந்தார்.

"இந்த கிழவியை ஊருக்கு ஒதுக்குப்புறமா தூக்கிட்டு போய் எரிச்சிடுங்க!"

"சரிங்க!"-அடுத்தடுத்து வேலை நடந்தது.

"ஈஸ்வரியை கொன்னாச்சா?"

"கோரா?"

"சரி...சித்ரா பௌர்ணமிக்கு உண்டான ஏற்பாடுகளை பார்க்கிறேன்.

இன்றோட அந்த சிவ பஞ்சாக்ஷரி ஆட்டம் அடங்க போகுது!இனி,அவளை காப்பாற்ற யாராலும் முடியாது!"-தாண்டவப்ரியனின் முகத்தில் தன்னிச்சையாக புன்னகை பூத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.