(Reading time: 24 - 47 minutes)

08. என் உயிர்சக்தி! - நீலா

வெகு உற்சாகமாக அந்த மீட்டிங் ரூமை விட்டு வெளியே வந்தாள் பூங்குழலீ! மாலையில் என்று முடிவாகியிருந்த இவளது மீட்டிங் காலையிலேயே முடிந்துவிட்டது. மேலும் அவளது டீம் மேம்பர்களுக்கு தொடர்ந்து நடந்தது! மத்திய உணவு இடைவெளிக்கு வந்தவள்தான் உற்சாகமாக வந்துக்கொண்டிருந்தாள்!

காரணம் இதுதான்... பதவி உயர்வு உறுதி செய்யப்பட்டது. விஷயம் என்னவெனில் அவள் இருந்த சென்னை டீமின் மேனேஜராக எதிர்பார்த்தவள்.. இந்தியாவின் பெங்களூர், மும்பை என்று மற்ற இடங்களில் இருக்கும் டீமையும் சேர்த்து அந்த ஆராய்ச்சி குழுவின் இந்திய மேனேஜராக நியமனம்! அதுவும் வரும் ஜனவரி முதல் அமல்!

தம்பியிடம் சொல்ல வேண்டும் என்று மனம் பரப்பரத்தது. அவள் இருக்கைக்கு சென்றவளை வழியிலேயே பிடித்துக்கொண்டனர் அனைவரும்! கஞ்சியிட்ட அந்த பெங்காலி காட்டன் புடவையில் தலையில் மல்லிகையுடன் மையிட்ட கண்கள் மின்ன வந்தவளை காலையிலேயே பிடித்து காலாய்த்துக்கொண்டிருந்தனர். இப்போது கூடுதல் உற்சாகத்துடன் அதையே தொடர்ந்தனர்!

En Uyirsakthi

ஏய் வெயிட் வெயிட்! நம்ம மேனேஜர் ஏதோ வித்யாசமா இருக்காங்களே?! - சலீம்

ஏய் ஆமா.. என்ன விசயம் குழலீ? எனி திங்க் ஸ்பேஷல்?? - கவிதாவும் ஜானகியும்!

எதுவும் பேசவில்லை குழலீ. புன்னகையுடன் அவர்கள் டீஸ் செய்வதை வாங்கிக்கொள்ள... பரபரப்புடன் வந்தான் ராம்.

டேய் சாப்பிட போலாமா கைய்ஸ்.. என்று கேட்டபடி வந்தவன் இவள் இருப்பதை பார்த்துவிட்டு, 'ஏய் குழலீ.. கங்ராட்ஸ்!' என்றான்.

தேங்கஸ் ராம்' என்றாள்.

சாப்பிட வரலியா??

இல்ல ஃபுட் கோர்ட் போறேன். லஞ்ச் எடுத்துட்டு வரலை' என்று மொபைலை எடுத்தாள். அதற்குள் அருள்மொழியே லைனில் வந்தான். அதற்குள் செக்யூரிடியிடம் இருந்து அழைப்பு வந்தது.

வந்து பார்த்துக்குறோம்!' என்றுவிட்டு எல்லோரும் மத்திய உணவிற்கு கலைந்தனர். ராம் மட்டும் அங்கேயே சற்று தள்ளி நின்றுக்கொண்டிருந்தான்.

அருள்மொழியிடம் 'ஒரு நிமிஷம் அப்படியே லைனில் இரு' என்றுவிட்டு லேண்ட் லைனில் அழைப்பை ஏற்றாள்.

சொல்லுங்க சார்...

உங்களை பார்க்க விசிட்டர் வந்தாரு மேடம். நீங்க சொன்னது போலவே அவரை கீழே வெயிட் செய்ய சொல்லி இருக்கேன்.

தேங்கஸ் சார். என்று வைத்துவிட்டு தம்பியிடம் லைனில் தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டாள். அவனும் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டான்.

ஹேப்பியா அக்கா? சரி ஏன் இவ்வளவு நேரம் ஃபோன் எடுக்கலை? எங்க போன னு தெரியலை? நாங்க எவ்வளவு பயந்துட்டோம் தெரியுமா?

இல்ல டா மொபைலை வெளியிலேயே வைச்சுட்டு போய்டேன்...

அக்கா மணி என்ன ஆச்சுனு தெரியுமா??

ஒரு மணி டா? ஏன்?

மாமா உனக்காக வெயிட்டிங்... நிறையவாட்டி கால் செய்திருக்கிறார். நீ எடுக்கவேயிலை! அதனால எனக்கு கால் பண்ணார். அவருக்கு பேசு கா... நான் அப்புறமா கூப்பிடுறேன்' என்று வைத்துவிட்டான்.

'அச்சச்சோ இந்த அர்ஜுன் வேற வந்திருக்கான்.. இவர்.. சீ.. இவன் வேற..' என்று சலித்திட திரும்பினாள். ராம் இவளுக்காக காத்திருப்பது போல தெரிந்தது.

என்ன ஆச்சு ராம்? ஏதாவது பேசனுமா? சாப்பிட்டு வரவா?

இல்ல குழலீ... இப்போ கீழே போகாதே!

ஏன்??

அதுவந்து... அந்த பிரபு...வை பார்த்தேன். ஏற்கனவே அவர் உன்னை யூஸ் ல ஃபாலோ செய்தவர்! இப்போ இங்க வேற... ஏதும் பிரச்சினை ஆகாம இருக்கனும்னு தான் சொல்லறேன்.

புன்னகையுடன் சரி சரி ஓகே நான் பார்த்துக்குறேன். ஒரு பிரச்சனையும் ஆகாது நீ கவலைப்படாதே!' என்று நடந்தாள். உடன் நடந்தான் ராம்.

நானும் கீழே தான் சாப்பிடப்போறேன்..

சரி வா. ம்ம்.. நீ எங்க பார்த்த பிரபுவை?

இங்க ஆப்பிஸ் லாபியில்! உனக்காக வெயிட் செய்துகிட்டு இருக்கிறதா சொன்னார். செக்யூரிட்டி நீ கீழே வெயிட் செய்ய சொன்னதாக கூறினார்!

.... மனதில்..'அப்போ அர்ஜுன் வரலியா? இவன் தான் வந்தானா? அர்ஜுன் எங்கடா போன?'...

குழலீ... உனக்கு பிரபுவை ஏற்கனவே தெரியுமா? அதாவது வெற்றி அறிமுகப்படுத்தும் முன்னமே தெரியுமா?

அதற்குள் கீழே வந்து சேர்ந்தனர்.

அவள் அமைதியாக இருப்பதை பார்த்து, 'குழலீ??! சரி விடு உனக்கு விருப்பம் இல்ல னா விடு. வா சாக்லேட் வாங்கலாம்' என்று அழைத்து சென்று ஆளுக்கு ஒரு டைரிமில்க் சில்க் வாங்கினான். 

ம்ம்...தெரியும் ராம். சொன்னா கின்டல் செய்யக்கூடாது... என்னோட ஃபர்ஸ்ட் க்ரஷ்! கிட்டத்தட்ட எட்டாம் வகுப்பில் இருந்து தெரியும்!

ஓ!!

என்ன டா ஓ??

க்ரஷ்!??

ஆமா! அவ்வளவு தான். அது மட்டும் தான் -குழலீ

நான் கேட்கவேயில்லையே குழலீ! என்று சிரித்தான்.

நீ சரி வரமாட்ட.. நீ கிளம்பு!

ஏய் உனக்கு அவன் மேல இன்ட்ரேஸ்ட் இருக்கு போல??! அதோ அங்க இருக்காரு பாரு உன் ஆளு!

டேய் அடி வாங்க போற! ஓடிப்போய்டு!

சரி சரி நான் போறேன்... நீங்க என்ஜாய் செய்யுங்க.. என்று ஓடிவிட்டான். 

பிரபு யாருடனோ அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். அருகே செல்லும் போது அந்த நபரை அடையாளம் கண்டுகொண்டாள். உற்சாகமாய் சென்றாள் அவனிடம் பேச..

ஏய் வாசு! வாசுதேவா...எப்படி இருக்க?? எப்போடா வந்தே? வித்யா எங்க டா? ஆத்துல எல்லோரும் சௌக்கியமா? சென்னை வந்துட்டு நம்ம ஆத்துக்கு வரலியே டா?

ஏய் வாண்டு.. பொறுமையா தான் பேசேன் டீ! நான் நன்னாயிருக்கேன்! ஆத்துல எல்லோரும் சௌக்கியம். ஆப்பிஸ்ல ஒரு எமர்ஜன்சி மீட்டிங் அதனால தான் வந்தேன் டீ. வித்யா ஆத்துல இருக்கா! பொங்கல் வரை இங்க தான்டீ இருப்போம்! அப்புறம் மறுபடியும் ஜெர்மனி. நீ எப்படி இருக்கே? ஆத்துல மாமி அருள் எல்லாம் சௌக்கியமா??

எல்லாரும் பேஷா இருக்காடா! அப்புறம் ஆர்த்தி அத்திம்பேர் கிட்ட பேசினியா?? ஆர்த்தி டெலிவரி டைம் ல?? பெங்களூர் போகனும் டா!

இருவரும் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தனர். அமைதியாக இதை பார்த்திருந்தான் பிரபு.

யார் இந்த வாசுதேவன்??...

('பூங்குழலீயும் வாசுதேவனும் சிறு வயது முதலே நண்பர்கள். கிட்டத்தட்ட எட்டு மாதம் மட்டுமே குழலீயை விட பெரியவன் வாசு. குழலீயின் தந்தையும் வாசுவின் தாய்மாமாவும் ஏழாம் வகுப்பு முதல் நண்பர்கள். ஒன்றாகவே படித்து வளர்ந்தவர்கள். அவர்கள் தலைமுறையில் நட்பை தாண்டி எல்லோரும் உறவினர்கள் போலவே இருந்தனர்...இருக்கின்றனர். அந்த தொடர்பு அப்படியே அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்பட உறவுமுறை வைத்தே அழைத்து வந்தனர். வருடத்தின் பிற்பகுதியில் பிறந்திருந்தாலும் இவன் இருந்த ஒரே காரணத்தினாலேயே குழலீயை அதே வகுப்பில் சேர்த்தனர். நியமாக பார்த்தாள் வாசுவிற்கு அடுத்த பேட்ச் ல் இருக்க வேண்டியவள்! ஆர்யன் மனைவியான ஆர்த்தி... வாசுவின் அக்கா...அதாவது பெரியம்மா மகள். அதனால் குழலீக்கும் அக்காவாகினாள் ஆர்த்தி! வித்யா வாசுவின் மனைவி.. இவர்கள் வசிப்பது ஜெர்மனியில்... தாய் தந்தை இருப்பது குழலீயின் வீட்டிலிருந்து ஒரு பத்து தெரு தொலைவில்! சொந்த பெரியப்பா, அத்தையின் பிள்ளைகளை விட நெருக்கமான உறவுகளாய் இருந்தனர்.')

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.