(Reading time: 11 - 22 minutes)

06. வானவில் - அமுதவள்ளி

தோழிகள் நால்வரும் சந்தோஷை பார்க்க கிளம்பிக்கொண்டிருந்தனர்.

"அஞ் எழு."

"சன்டே அதுவும் நடுராத்திரி 7 மணிக்கெல்லாம் எழுபிட்டீங்களே. இது நியாயமா,தர்மமா?"என்றாள் அஞ்.

Vanavil

"விசிட்டிங் ஹோர்ஸ் 9மணி. இங்கிருந்து 8.15க்கு சாப்பிட்டு கிளம்பினால்தான் சரியாகஇருக்கும்." என்றாள் நிஷ்.

"7மணி உனக்கு நடுராத்திரியா?" என்றாள் சாது.

"சொன்னது நீ தானா

சொல் சொல் சொல் என் உயிரே "

என்று சாதுவை பார்த்து பாடினாள் நிஷ்.

"என்னடி கொழுப்பா" என்றாள் சாது.

"வீக்டேஸ்ல 7மணிக்கு எழுப்பினாலே எழமாட்ட. நடுராத்திரின்னு சொல்லுவ. இன்னிக்கு நீயே ஆபோசிட்டா சொல்றியே." என்றாள் அஞ்.

"விடுடி. சந்தோஷை பார்க்கபோகிற ஆர்வம். அப்படிதானே சாது" என்றாள் நிஷ் கிண்டலாக.

"ஆமாம். ஹாசி எங்க?" என்று பேச்சை மாற்றினாள் சாது.

"குளிச்சிட்டு இருக்கா" என்றாள் நிஷ்.

"நான் வந்துட்டேன். நீ போ அஞ்" என்றாள் ஹாசி.

அனைவரும் கிளம்பி டைனிங் ஹால் வர 8மணி ஆனது.

"சந்தோஷை பார்த்துட்டு ஹாஸ்பிடல்ல சாப்பிடலாம். லேட் ஆகது" என்றாள் ஹாசி.

"நீயா பேசியது ?

என் அன்பே நீயா பேசியது ?"

பாடினாள் அஞ்.

(நம்ம சாது மாதிரி சாப்பாட்டு ராமி இல்லைனாலும்  டைம்க்கு சரியாக  சாப்பிடும் ஹாசி இப்படி சொன்னாள் அஞ் பாடாமல் என்ன செய்வாள்)

"எதுக்கு இப்ப இந்த பாட்டை பாடினே?" என்றாள் ஹாசி.

"நிஷ் மோர்னிங் "சொன்னது நீ தானா" பாட்டை பாடிட்டா. அதான் வேற பாட்டை பாடினேன்" என்றாள் அஞ்.

"நான் எதை கேட்டால் நீ என்ன சொல்றே" என்றாள் ஹாசி.

"உனக்கு  புரியலையா. நம்ப முடியலையே" என்றாள் அஞ்.

ஹாசி முறைக்கவும்

"பச். சந்தோஷ் கவலையில் அவள் சாப்பிடலை அஞ்." என்றாள் நிஷ் நமட்டு சிரிப்புடன்.

இதற்குமேல் பேசினால் அதோகதிதான் என்று தெரிந்து அமைதியானாள் ஹாசி. காலையில்  இவர்களின் கிண்டலுக்கு உள்ளான சாது வாயை திறக்கவில்லை.

உணவை முடித்துக்கொண்டு மருத்துவமனை சென்றனர்.

மருத்துவமனை செல்லும் வழியில்  நேற்று மாலை சர்வேஷுடன் பேசியதை வைத்து சாதுவை கிண்டல் செய்தனர்.

"வாயை திறந்தால் வெறும் காற்றுதான் வருது. ஏன் அப்படி" என்றாள் அஞ்.

"டாக்டர்கிட்ட டெஸ்ட் பண்ணலாம் அஞ்" என்றாள் ஹாசி.

"இது அந்த டாக்டர்கிட்ட காமிக்கமுடியாது ஹாசி. இது சரிசெய்ய வேற டாக்டரை பார்க்கணும்" என்றாள் நிஷ்.

"நீ சொல்ற டாக்டர் இப்போ போகிற ஹாஸ்பிடல்ல இருப்பாங்க நிஷ். அவர்கிட்ட கேட்கலாம்" என்றாள் ஹாசி.

"சும்மா இருங்கடி" என்றாள் சாது.

"என்ன சாது?  அஞ் பிரச்சனையை நாமதானே சரி செய்யணும். நீயே இப்படி சொல்லலாமா" என்றாள் நிஷ்.

"நீங்க அவ பிரச்சனையை பற்றி பேசறீங்களா. உங்களை.."  என்ன திட்டு அனைவருக்கும் கிடைத்திருக்குமோ அதற்குள் ஹாஸ்பிடலில் இவர்களுக்காக காத்திருந்த தோழர்கள் நால்வரையும் பார்த்துவிட்டனர்.

சந்தோஷை சர்வேஷ் ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தாலும் மற்ற மூவரும் அவனை பார்க்க தினமும் வருவர். இன்றும் அதுவே தொடர்ந்தது. சர்வேஷும் ஹர்ஷவும் அவர்களின் மனதை தடுமாறசெய்த சாதுவையும் ஹாசினியையும் பார்க்க காத்திருக்க நவீனும் அத்வைதும் அவர்களை கிண்டல் செய்ய அங்கிருந்தனர்.

தங்களது மனது  தெரிந்தபின் முதல் முறை  இணையை பார்ப்பதால்  அங்கே நான்கு ஜோடி கண்களும்  அதன்  வேளையில் செவ்வனே செய்தது.

"என்ன கொடுமை இது. இந்த நரசிம்மனை வீக்எண்டும் பார்க்கணுமா?" என்றாள் அஞ்.

"இந்த  தொல்லையை இங்கேயும் சமாளிக்கனுமா?" என்றான் அத்வைத்.

இருவரும் ஒரே நேரத்தில் சொல்ல இருவரும் முறைத்தனர். 

"நான் தொல்லைகிடையாது. நீங்க தான் பெரிய தொல்லை" என்றாள் அஞ்.

"நானும் நரசிம்மன் இல்லை" என்றான் அத்வைத்.

"தேவையில்லாமல் எதுக்கு இப்ப வம்புக்கு வரீங்க" என்றாள் அஞ்.

"நான் வம்புக்கு வரலை. நீதான் ஆரம்பித்தாய்” என்றான் அத்வைத்.

"பச் அஞ். சும்மா இரு. அங்க பாரு"  என்றாள் நிஷ்.

"இந்த கலவரத்திலும் குதுகலம் கேக்குது" என்றாள் அஞ்.

"நிஷ் இதுங்க ரெண்டும் தான் பைத்தியம் ஆகிடுச்சுன்னு நினைத்தால் அங்கேயும் அப்படித்தான் போல"

"ஆமாம் அஞ். முத்தி போச்சு"

"பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க

காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க

ஊன் உருக, உயிர் உருக, தேன் தரும் தடாகமே

மதி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே"

என்று நவீன் பாட  அது நால்வர் காதிலும் விழவில்லை. ஆனால் கேட்க வேண்டிய அவன் ஹீரோயின் காதில் தெளிவாக விழுந்தது.

"என்னடா  இது பேசவே காசுகேக்கும் ஆள் இப்போ பாடுது. ஆச்சரியம் தான்" என்று நினைத்தாள் நிஷ்.

(இவள் கான்டீன் செல்லும் போது நவீனை பார்த்திருக்கிறாள். அவனிடம் பேச பெண்கள் நினைத்தாலும் அதை தவிர்த்துவிடுவான். யாரிடமும் பேசமாட்டான்.)

"நவீன் மச்சி. இவனுங்க இப்போதைக்கு தரை இறங்க மாட்டங்கடா "

"இப்படியே விட்டா விசிடிங் ஹோர்ஸ் முடிச்சிடும்டா அத்வைத்"

"டேய்.  இது ஹாஸ்பிடல்"  என்றான் அத்வைத்.

"நீங்க செய்த வேலை போதும்டா. வந்த வேலையை கொஞ்சம் செய்யலாம்" என்றான் நவீன்.

"ஹாசிமா.. யாரை பார்க்க டைம்ஆகிடுச்சுன்னு சொல்லி டிபன் வேண்டாம்ன்னு சொன்னியோ அவனை பார்க்க போகலாமா" என்றாள் நிஷ் நக்கல் பார்வையுடன்.

"ஆமாம் சாது. நடுராத்திரி 7 மணிக்கெல்லாம் எழுந்து சாதனையெல்லாம் செய்து பார்க்க வந்த சந்தோஷை பார்க்கலாமா" என்றாள் அஞ் கிண்டல் தொய்ந்த குரலில்.

நால்வரும் அவர்களின் நண்பர்களை முறைக்க

"அந்த பாப்பா சூப்பரா இருக்கு அஞ்" என்றாள் நிஷ் சத்தமாக.

"ஆமாம் நிஷ். சோ ஸ்வீட்" என்றாள் அஞ்.

இவர்கள் கிண்டல் செய்வது தெரிந்து சாதுவும் ஹாசியும் பேசாமல் இருக்க இவர்களை பற்றி தெரியாத சர்வேஷ்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.