(Reading time: 7 - 14 minutes)

08. காற்றே என் வாசல் வந்தாய்!!! - கீர்த்தனா.ஆர்

தியை பார்த்து அதிர்ந்த ரிது சில நொடிகளில்தன்முகமாற்றத்தை முயன்று கட்டுபடுத்தி கொண்டாள். அதனை கவனித்த ஆதியின் இதழ்கள் அவளை கண்டு  கொண்டதன் அடையாளாமாய் விரிந்தன.அதன் பின் நடந்த அனைத்து நிகழ்விலும் ஆதி மகிழ்ச்சியுடனும், ரிது தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்ற பாவனையுடன் இருந்தனர்.

ரஞ்சனின் மனநிலையோ சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருந்தது. தன் தோழியின் வாழ்வில் நடக்க இருக்கும் முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் ஆனந்தம் அடைந்தான். அவன் மகிழ்ச்சியை அதிகரிக்கும் விதமாக மதுவும் அங்கு இருந்தாள். மற்றவர்கள் அறியாமல் அவளை பார்ப்பதும், சைகை மொழியில் பேசுவதுமாக அவளை சீண்டி கொண்டு இருந்தான். அவன் செய்கையை பார்த்த மது அவன் மீது கோவத்தில் இருந்தாள்.வெற்றிகரமாக நடந்தேறிய பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் அனைவரும் ஒரு வித சந்தோசத்தில் இருந்தனர்.

"அப்போ ஒரு நல்ல நாளா பார்த்து நிச்சயம் பண்ணிக்கலாம். உங்களுக்கு எப்போ வசதி படும்ன்னு சொல்லுங்க"-பூமிநாதன்.

Katre en vasal vanthai

"நான் சொல்றேன்னு  தப்பா எடுத்துகாதிங்க. ஆதிக்கு இப்போவே வயசு  ஆய்டுச்சு. அதனால முடிஞ்ச வரைக்கும் சீக்கரமா பண்ணிரலாம். நிச்சயம் கூட கல்யாணத்துக்கு முதல் நாள் வச்சுக்கலாம்."-மீனாஷி.

"டேய் ஆதி உன்னை டேமேஜ் பண்ண உங்க அம்மாவே போதும் போல. ஊரெல்லாம் உனக்கு வயசு ஆய்டுச்சுன்னு சொல்லிடு இருக்காங்க. ஹா ஹா" -ரமேஷ்.

"டேய் ஒழுங்கு மரியதைய அடங்குடா. இல்லேன்னா சிஸ்டர் கிட்ட போட்டு குடுக்க வேண்டி வரும். எப்படி வசதி" அவனின் காதோரமாக முணுமுணுத்தான் ஆதி.

"நீ செஞ்சாலும் செய்வடா. நீங்க என்ன வேணாலும் பண்ணிகோங்க. உங்க அம்மா மன்டே போட்டு சொன்னாலும் நான் அதை ஏன்ன்னு கேட்க மாட்டேன். ஆளை விடுங்க சாமி."

"ஹ்ம்ம் அந்த பயம் இருக்கறவன் வாயை  விட கூடாது. நானே ரிது  எப்போ என் வீட்டுக்கு வருவான்னு இருக்கேன். நீ வேற நேரம் காலம் தெரியாம கிண்டல் பண்ணிட்டு இருக்கற"

"ஹ்ம்ம் நீ நடத்து ராசா"

அதன் பின் இருவரும் தங்களுக்குள் நடந்த உரையாடலை நிறுத்தி விட்டு பெரியவர்களின் பேச்சை கவனிக்க தொடங்கினர்.

"இதுல என்ன சம்பந்தி தப்பா நெனைக்க இருக்கு. ரிதுக்கு எக்ஸாம் முடிஞ்சதும் வெச்சிக்கலாம். நீங்களே  ஒரு நல்ல நாளா பார்த்து சொல்லுங்க" -பூமிநாதன்.

"ஹ்ம்ம் சரிங்க . ரொம்ப சந்தோசம். அப்போ நாங்க கெளம்பறோம்." மீனாஷி.

"மாம்ஸ். நான் ரிது கிட்ட தனியா பேசணும். ஜஸ்ட் ஒரு 5 நிமிஷம் தான்."

அவன் சொன்னதை கேட்டு தலை குனிந்து அமர்திருந்த ரிது நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

“அதுகென்ன தம்பி . தராளமா பேசுங்க.ரிது உன்னோட ரூம்க்கு போய் பேசிட்டு  வாங்க" என்று மரகதம் கூறவும் அவரின் சொல்லை மீற முடியாமல் அவனை அழைத்து கொண்டு சென்றாள்.

அவர்கள் இருவரும் அறையை அடைந்ததும் சிறிது நேரம் அமைதி நிலவியது. அவள் எதாவது தன்னிடம் பேசுவாள் என்று ஆதி அமைதியாக அவள் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான்.

ரிதுவோ அவன்தானே பேசுவதாக கூறி அழைத்தான் முதலில் அவனே ஆரம்பிக்கட்டும் என்று அமைதியாக வெளியே பார்த்து கொண்டு இருந்தாள்.

அவளின் செய்கையை உதட்டில் உறைந்த புன்னகையுடன் சிறிது நேரம் ரசித்தவன்

“இங்க ஒருத்தன் கல்லு மாதிரி நின்னுட்டு இருக்கேன் இந்த லூசு நம்மள பார்க்காம வெளிய பார்த்துட்டு இருக்குது. டேய் ஆதி உன்னோட நிலைமை ரொம்ப கஷ்டம் தான் போல" என்று தன் மனத்திற்குள் புலம்பியவன் இனி அமைதியா இருந்தா சரி வராது என்று அறிந்து பேச ஆரம்பித்தான்.

"ரிது" என்று மென்மையாக அழைத்தான்.

அவன் அழைத்தது காதில் விழாமல் வெளி புறம் தெரிந்த காட்சியை பார்த்து கொண்டு இருந்தாள்.

அவளின் செய்கையை கண்டு சிரித்த ஆதி அவளின் வலது கையை அசைத்து ரிது என்று மறுபடியும் அழைத்தான்.

அவனின் தொடுகையில் நினைவுக்கு வந்தவள் அவனின் கையை உதறி விட்டு "என்ன" என்று கேட்டாள்.

அவளின் பதிலை ஓரளவு எதிர்பார்த்தவன் போல "உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும். அதுக்கு தான் உன்னை கூப்பிட்டேன். உனக்கு நான் கூப்பிட்டது கேட்கல போல. சாரி"

"ஹ்ம்ம் சொல்லுங்க" என்பது போல பார்வையை பார்த்தவள்  தலை ஆட்டினாள்.

"வாய தொறந்து பேச மாட்டளே." என்று மனதினுள் அவளை அர்ச்சித்தவன்

"இப்போவே இவ்ளோ கோவா பட்டா ரொம்ப கஷ்டம் தான் போல. கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்ச ஸ்டாக் வெச்சிக்கோ.இப்போ உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா" என்று கேள்வியோடு அவளை பார்த்தான். உள்ளுக்குள் இருந்த படபடப்பை அடக்கியவன் அவளின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தான்.

ரிது அவனின் முகத்தை சில நிமிடங்கள் உற்று பார்த்தவள் " சம்மதம் இல்லேன்னா கல்யாணத்த நிறுத்த போறிங்களா" என்று கேட்கவும் ஆதியின் முகம் பல்வேறு உணர்ச்சிகளை வெளிபடுத்தியது.

"கண்டிப்பா நிறுத்த மாட்டேன். அது உனக்கே நல்லா தெரியும். அப்புறம் எதுக்கு கேட்கற. உன்கிட்ட போய் கேட்க வந்தேன் பாரு. என்னை சொல்லணும்."

"நல்ல பொண்ண கல்யாணத்துக்கு ரெடி ஆகு. மறுபடியும் அன்னிக்கு பார்க்கலாம். பாய்" யென்று அந்த அறையை விட்டு வெளியேறினான்.

அவன் சென்ற திசையை பார்த்த ரிது" ஆமா பண்றது எல்லாம் பண்ணிட்டு பெரிய இவன் மாதிரி சம்மதம் கேட்க வந்துட்டான். போடா" என்று  புலம்பியவள் தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

வெளியே வந்த ஆதியை கண்ட சொக்கநாதன் "என்னடா பேசிட்டியா. இப்போ நம்ம கிளம்பலாமா" என்று கேட்கவும்

"ஹ்ம்ம் பேசிட்டேன். போகலாம்"  என்று புன்னகையுடன் கூறினான்.

"அப்போ நாங்க கிளம்பறோம். ரெண்டு மூணு நாள்ல நாங்க போன் பண்ணி டேட் சொல்றோம். உங்களுக்கு எது சரியா வரும்ன்னு பார்த்து சொல்லுங்க" என்று கூறி கிளம்பினார்கள்.

“அவர்கள் கிளம்பும் சமயம் மதுவின் மொபைல் ஒலி எழுப்பியது. தனக்கு வந்த குறுந்தகவலை திறந்து பார்த்தவள் அதில் இருக்கும் செய்தியை புரியாமல் பார்த்தாள்."

"je t aime" என்று ரஞ்சன் அனுப்பி இருந்தான்.அதனை பார்த்தவள் புரியாமல் மீண்டும் அவனை நோக்கினாள். அவன் உதடுகள் மீண்டும் "je t aime" "என்று அசைவதை பார்த்தாள்.இவன் இம்சை தாங்க முடில சாமி." என்று அவனை முறைத்தவள் அவனுக்கு பதில் அனுப்பினாள்.

அவள் அனுப்பிய மெசேஜ் திறந்து பார்த்தவன் இருக்கும் இடம் கூட நினைவில்லாமல் வாய் விட்டு சிரித்தான்.

பெரியவர்கள் அனைவரும் வெளியே சென்றிருக்க மதனும் ரேவதியும் அவனை கேள்வியாக பார்த்தனர்.

அப்போது தான் தனது அசட்டு தனத்தை அறிந்தவன் இவனையே பார்த்து கொண்டு இருந்த இருவரையும் பார்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.