(Reading time: 10 - 20 minutes)

08. இரு கண்ணிலும் உன் ஞாபகம் - வத்ஸலா

பூஜையறையில் கண்கள் மூடி அமர்ந்தார் தாத்தா. இரண்டு நிமிடங்ளில் சுவாசம் சீராகி  அவரது இதய தரையை தொட்டு மேலெழுந்தது.

துடிக்கும் இதயம் அவர் கட்டுப்பாட்டுக்குள் வர ,சிந்தனை ஓட்டங்கள் ஒரு சிறு புள்ளியாக மாறி நடு நெற்றியில் துடிக்க துவங்கி இரண்டு புருவங்களுக்கு இடையே நிலைக்கொண்டது.

வீடே பதற்றத்தின் எல்லையில் இருக்க செய்வதறியாது நின்றிருந்தாள் மாதங்கி. நேரம் இரவு பத்தரையை தாண்டி  கொண்டிருந்தது. எங்கே போனான் என்னவன்?  அவள் மனம் சுழன்றது . கடைசியாக எப்போது பார்த்தேன் அவனை?

iru kannilum un nyabagam

சட்டென நினைவுக்கு வந்தது. அவளுக்கு.

சாப்பிட்டு முடித்து கை கழுவிக்கொண்டிருந்த நேரத்தில் அருகில் யாரும் இல்லாத அந்த நொடியில் அவன் இதழ்கள் அவள் காது மடல்களை உரச உரச சொன்னான் அவன் ‘லவ் யூ டார்லிங்’

உடல் குலுங்க திரும்பி, தடுமாறி அவள் அவன் மீது விழப்போக அவன் தாங்கிக்கொள்ள அவன் காதுக்குள்ளே இன்னமும் ஏதேதோ கிசுகிசுக்க அவளுக்குள்ளே பல நூறு பூக்கள் பூக்க அங்கே அரங்கேறியது ஒரு அழகான வெட்க நாடகம்.

‘அதன் பின்னர் சொன்னான் அவன் என் friends ஊருக்கு கிளம்பறாங்கடா. அவங்களை ஸ்டேஷன்லே டிராப் பண்ணிட்டு நான் வீட்டுக்கு வந்திடறேன்’. நீ வீட்டுக்கு போயிடு  சொல்லிவிட்டு சென்றான் அவன்.

ஒரு வேளை அவன் ரயில் நிலையத்தில் இருப்பானோ? யோசித்தபடியே அதை அவனது அண்ணனிடம் சொல்ல தனது வண்டியை எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்தை நோக்கி பறந்தான் அவனது அண்ணன்.

அதன் பின்பும் மாதங்கியின் மனம் ஒரு நிலைக்கு வரவில்லை. அவன் ரயில் நிலையத்தில் இருப்பான் என்று தோன்றவில்லை அவளுக்கு. மனம் பதறிக்கொண்டே இருந்தது.

நேரம் ஆக ஆக பயம் அவளை கவ்வி அழுத்தியது.’ சில நாட்களாக அவளை துரத்திக்கொண்டிருக்கும் அந்த புகை வடிவத்தினால் அவனுக்கு எதுவும் ஆபத்து வருமோ.????  அதுதான் அவனை கொண்டு சென்று இருக்குமோ?

‘என் முகுந்தனுக்கு எதுவும் ஆகியிருக்க கூடாது. அதற்கு தேவை என் உயிரென்றால் அதை எடுத்துக்கொள்ளட்டும் அது.!!!!.

யோசித்தபடியே மெல்ல நகர்ந்து பூஜை அறை வாசலில் வந்து நின்றாள் அவள். தாத்தாவின் தேகம் இறுகிப்போனதைபோல சிற்பமாக அமர்ந்திருந்தார் அவர்.

அவரது ஆழ்மனம் நேர்கோட்டில் ஒரே புள்ளியை நோக்கி நகர அவர் செவிகளில் கேட்டது அந்த சத்தம்.

முதலில் ஒரு அகங்கார சிரிப்பொலியாக துவங்கியது அது. அதை தொடர்ந்தது ஒரு கோபம் கலந்த உறுமல். எதையோ பெற்றே தீரவேண்டும் என்ற உறுதி அந்த குரலில்.

அசைவில்லை அவரிடத்தில். சில நிமிடங்களில் அவர் உதடுகள் உச்சரிக்க துவங்கின அந்த மந்திரத்தை.

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கி ப்ரசோதயாத்

அக்ஷர சுத்தியுடன் ஒலித்தது அந்த துர்கை காயத்ரி மந்திரம். முதலில் மெலிதான குரலில் ஒலிக்க துவங்கிய அந்த மந்திரம், அவர் குரலொலி ஏற ஏற  வீடு முழுவதும் எதிரொலித்தது.

வீட்டிலிருந்தவர்கள் அங்கங்கே சிலையாக சமைந்திருந்தனர்.

இரண்டு மணி நேரங்கள் கடந்திருக்க திரும்பி வந்தான் முகுந்தனின் அண்ணன். ரயில் நிலையத்திலும் இல்லை முகுந்தன்.!!!!! ‘

முகமெங்கும் கவலை ரேகைகள் ஓடிக்கொண்டிருக்க அதை மறைத்துக்கொண்டபடி ‘கொஞ்சம் நேரம் பார்க்கலாம். வந்திடுவான் எங்கே போயிடப்போறான்;???? என்றவன் தாத்தா எதுக்கு இப்போ பூஜையை ஆரம்பிச்சார் என்றான்.

ஏதோ கெட்ட சக்தி இவங்க ரெண்டு பேரையும் துரத்துதுன்னு நினைக்கிறார் தாத்தா. அதுக்குதாண்டா பாட்டி சொல்ல....

வேற வேலை இல்லை இவருக்கு. எதையாவது தேவை இல்லாம கற்பனை பண்ணிக்கிட்டு..... என்றான் அவன்.

‘இல்லை. தாத்தா சொல்றது உண்மைதான்னு எனக்கும் தோணுது’ மெலிதான குரலில் சொன்னாள் மாதங்கி. நான் அந்த பேயை பார்த்திருக்கேன்.!!!!!!!!!!

;அது சரி ‘என்றான் அவன். தாத்தா ஒருத்தரையே சமாளிக்க முடியலை. இனிமே உன்னையும் சேர்த்து சமாளிக்கணுமா????

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கி ப்ரசோதயாத்

இரண்டு மணி நேரமாக விடாமல் ஒலித்துக்கொண்டிருந்தது மந்திரம். அந்த எதிர்மறை சக்தி தெய்வ சக்தியிடம் கொஞ்சம் கொஞ்சமாக தோற்றுக்கொண்டிருப்பதை உணர முடிந்தது. அவரால்.

முதலில் எழுந்த அகங்கார சிரிப்பொலி இப்போது இல்லை!!! பொங்கி எழும் உறுமல் இல்லை.!!!!  ஆனால் இப்போது அவர் காதில் கேட்ட சத்தம் அவரை கொஞ்சம் உலுக்கியது.

அது ஒரு பெண்ணின் அழுகுரல். பல நாள் ஏக்கங்களில் ஊறிப்போய் ஒலித்த அழுகுரல்!!!.

அந்த நேரத்தில் அவரது மனக்கண்ணில் விரிந்தன சில காட்சிகள்!!!!!!

அந்த குரலுக்குரிய பெண்ணின் வலி அதற்கான காரணங்கள் அவருக்கு முழுவதுமாக புரிந்தது.

தாத்தாவின் மனம் கொஞ்சம் இளகியபோதிலும், நிற்கவில்லை அவரது மந்திர உச்சரிப்பு.

அதே நேரத்தில் தான் இருந்த இடத்தில் சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள் ராஜி. அவளது சக்தி மொத்தமும் கரைந்து போனது போன்ற ஒரு உணர்வில் அங்கிருந்து எழுந்து கால் போன போக்கில் நடந்தாள். அவள் கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது.

மாதும்மா.... அவளே அறியாமல் உச்சரித்தன அவளது உதடுகள். ‘நான் உன்னை விட்டு போக மாட்டேன் மாது...ம்மா. என்னை போக சொல்லாதே மாதும்மா..... சொல்லிக்கொண்டே கால் தடுமாற நடந்தாள் அவள்.

உனக்கு என்னை யாருன்னு தெரியலையா மாதும்மா...... மாதும்மா......

அங்கே தாத்தவின் குரல் ஒலிக்க ஒலிக்க அவள் கால்கள் தன்னாலே நடந்தன முகுந்தனின் வீட்டை நோக்கி.

நேரம் இரவு ஒன்றை நெருங்கி இருக்க இன்னமும் வந்து சேரவில்லை முகுந்தன். எங்கே சென்றிருந்தாலும் இத்தனை நேரத்துக்கு தொடர்பாவாவது கொண்டிருப்பானே அவன்.!!!!! எல்லார் மனமும் குழப்பத்தின் உச்சியில் இருந்தது.

காலையிலே போலீசுக்கு போகலாமா? என்றாள் அண்ணி. அவள் சொன்னதை அமோதித்தான் முகுந்தனின் அண்ணன்.

மாதங்கியின் உள்ளம் முழுவதும் முகுந்தனே நிரம்பியிருந்தான். என்னை மனதார நேசித்ததை தவிர என்ன தவறு செய்துவிட்டான் முகுந்தன். நான் இருக்கேன்டா. உன்கிட்டே எது வந்தாலும் என்னை தாண்டித்தான் வரணும் சொன்னானே அவன். என்னவாயிற்று அவனுக்கு? அவளால் கண்ணீரை கட்டுபடுத்திக்கொள்ளவே முடியவில்லை.

எல்லாவற்றுக்கும் காரணம் அந்த புகை வடிவமாகத்தான் இருக்க வேண்டும். அந்த பேயாகத்தான் இருக்க வேண்டும். கலவரத்தின் எல்லையில் இருந்த மாதங்கியின் மனம் ஒரு முடிவுக்கு வந்திருந்தது.

‘நான் தேடிப்போகிறேன் அவனை. நான் இந்த வீட்டை விட்டு இறங்கினால், அது எப்படியும் என்னை தேடி வரும்.. அதன் தேவை நான் தானே!!!! என்னை எடுத்துக்கொள்ளட்டும். நான் கிடைத்துவிட்டால் முகுந்தனை விடுவித்து விடும் அது.’ எழுந்தாள் மாதங்கி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.