(Reading time: 28 - 55 minutes)

16. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

திருமண மண்டபம்..

மணமகள் அறைக்குள் புயல் போல நுழைந்தாள்  சங்கமித்ரா.. சிகப்பு மற்றும் மாம்பழ நிற புடவையில் மனமகளுக்கே உரிய நாணத்திலும் மகிழ்ச்சியிலும் ஜொலித்த வைஷ்ணவியை கண்டதும், நூலறுந்த பட்டம்போல உணர்ந்தாள்  மித்ரா .. தன் அக்காவின் முகத்தை பார்த்தாள் ..மகிழ்ச்சி மட்டுமே குடிகொண்டிருந்த அந்த வதனத்தில் கண்ணீரை வரவழைக்க வேண்டுமா ? வேண்டம்வே வேண்டாம் ...

" அக்கா " என்று அவள் அழைத்தவுடனே அவளை அணைத்துகொண்டாள்  வைஷ்ணவி..

Ithanai naalai engirunthai

" சாரி மித்ரா ..நடந்த எல்லாத்துக்கும் நானும் ஒரு விதத்தில் காரணம் ஆகிட்டேன் .. நீ பத்திரமா இருக்குறதை பார்த்ததும் தான் எனக்கு மனசுக்கு நிம்மதியா இருக்கு " என்றவள் மௌனமாய் தங்கையின் முதுகை சூடான கண்ணீரால் நனைத்தாள் ..

"அடடே இப்போ தான் நீ ரொம்ப அழகா இருக்கன்னு நினைச்சேன் ..அதுக்குள்ள அழுமூஞ்சி ஆகிட்டியே அக்கா " என்று  அக்காவை சிரிக்க வைக்க முயற்சித்தாள்  சங்கமித்ரா ..

" ம்ம்ம்ம் குட் இப்போதுதான் என் அக்கா கொள்ளை அழகு " என்று திர்ஷ்ட்டி கழித்தவள், தாயாரின் குரல் கேட்டு திரும்பினாள் ...

" அம்மா " என்று ஓடி வந்து அவரை அணைத்து நின்றாள் ...

" என்மேல கோபம் இல்லையே அம்மா " என்றாள் ...

" உன்மேல நான் ஏன் குட்டிமா கோபப்பட போறேன் .. உன் ப்ரண்ட்க்கு உதவி செய்ய தானே போன நீ ?" என்றார் சித்ரா ..

" ப்ரண்டா  ? " என்றவள் திருதிருவென விழிக்கவும், வைஷ்ணவிதான்

" ஆமா நானும் கேட்க மறந்துட்டேன் ..அப்பா சொன்னாரு உன் ப்ரண்ட்  தாராவின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லைன்னு .. இப்போ எப்படி இருக்காங்க டா ?" என்றாள் .. நொடி பொழுதில் அதை புரிந்துகொண்ட நம்ம லாயரம்மா

" ஓ  இப்போ அவங்க நல்ல இருக்காங்க அக்கா " என்றாள் ..

" சரி சீக்கிரமா குளிச்சிட்டு இந்த புடவையை கட்டிட்டு வா " என்றார் சித்ரா ..

" என்னம்மா , இந்த நேரத்துல ? நான் இப்படியே மேடைக்கு வரேனே " என்றாள்  மித்ரா ..

" வளவளன்னு பேசாதே மித்ராம்மா .. நல்ல நேரத்துக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு, அதுக்குள்ள  நீ தயாராகு " என்றார் அவர் ... அக்காவின் திருமணத்திற்கு தங்கையும் அழகா இருக்கணும்னு அம்மா நினைக்கிறாங்க போல , என்று நினைத்தவள் கையில் இருந்த புடவையை பார்த்தாள் ..

" ஷக்திக்கு  பிடிச்ச பச்சை நிறம் " என்று சேலையை வருடியவளுக்கு தெரியாது அதை அவளுக்காக அவன்தான் பார்த்துப் பார்த்து வாங்கினான் என்று .. இனிமே வருத்தப்பட்டு ஒண்ணுமில்ல மித்ரா .. சந்தோசம் என்ற அத்தியாயம் உன் வாழ்க்கையில் முடிந்துபோன ஒன்று ... நீ கண்ணீர் விட்டு உன் அக்காவின் வாழ்க்கையை கெடுத்திடாதே.. அவளுக்காவது நல்ல வாழ்க்கை அமையட்டும் என்று வேண்டிக்கொள் என கட்டளையிட்டது  மித்ராவின் மனம் .. அதீத வலிகளை  கண்ட மனமானது, ஒன்று விரக்தியில் ரணமாகும் அல்லது உணர்வுகளை மறைத்து பண்பட்டுவிடும்.. இங்கு மித்ராவும் இராண்டாம் நிலையில் தான் .. ஏதேதோ எண்ணங்களுடன் வந்தவள், அங்கு மகிழ்ச்சியின் மொத்த உருவமாய் வந்த தமக்கையை பார்த்ததும், " இனி என்ன நடந்துவிட போகிறதென " அமைதியாகிவிட்டாள் .. அதனாலோ என்னவோ, தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கவனிக்கும் எண்ணம் கூட இல்லாமல் தயாராகி கொண்டிருந்தாள்.. அந்த பச்சை நிற முகுர்த்த பட்டில் அப்சரஸ் போல மிளிர்ந்தாள் மித்ரா ... ஷக்தியின்  தேர்வை மனதிற்குள் மெச்சினர் சித்ராவும் வைஷ்ணவியும் ..

" சீக்கிரம் வா ..இங்க உட்காரு " என்று தங்கையை அமர வைத்த வைஷ்ணவி தங்கை கரங்களில் தங்கவளையல்களை அணிவிக்க, அதை தடுத்தாள்  மித்ரா ..

" என்ன நடக்குது இங்க ???"

"மீரூ இந்த ஜூஸ் குடி "

" கண்ணா இதெல்லாம் அநியாயம் ..இதோடு 4 க்ளாஸ் ஜூஸ் குடிச்சிட்டேன் .. யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க ?"

" ம்ம்ம்ம் என் கண்ணம்மா இப்படி பளபளன்னு அழகா இருப்பதின் ரகசியம் சாத்துக்குடி ஜூஸ் தான்னு நினைப்பாங்க .. "

" மொக்கை தாங்கல .. வர்றவங்களை வாங்கன்னு சொல்றது கூட எனக்கு சிரமமா இல்லை ..ஆனா உங்களை உள்ள போங்கன்னு அனுப்பி வைக்கிறதுக்குள்ள எனக்கே செம்ம டயர்ட் ஆகுது கண்ணா " என்றாள்  அவள் ..

" ஹா ஹா ஏன்னா, என் கண்ணம்மாவுக்கு என்னை பார்த்து எப்பவுமே போன்னு  சொல்லவே முடியாது " என்றவன் அவள் கன்னத்தை கிள்ள,

" யோவ் , நான் தாறுமாறாய் திட்டுரதுகுள்ள போயிடு " என்று ஒருமையில் மிரட்டினாள்  மீரா..

மதியழகனின் கைகளை விடுவித்த அர்ஜுனன் ஸ்டைலாய் சிரித்த நேரம், அவனது செல்போன் சிணுங்கியது !

" டேய் மச்சான் "

" சொல்லுடா ரகு .."

" உன்னை இந்த சுபி பிசாசு கூட, அனுப்பி வெச்சபோதே நினைச்சேன் , நீ பாட்டுக்கு எங்கயாச்சும் டூயட் பாட ஓடிருவன்னு .. எங்கடா போன நீ ? இந்த ஷக்தி வேற மதி அண்ணா எங்க , மதி அண்ணா எங்கன்னு ஆயிரம் தடவை கேட்டுட்டான் "

" ஹா ஹா ஹா "

" இவன் பண்ணுற அலும்பளுக்கு தாலியை மித்ராவுக்கு பதிலா மதியழகனுக்கு கட்டிடுவான் போல " என்று கண்களை உருட்டினான் ரகுராம் ..

" டேய் ரகு, நான் மதி கூடத்தான் வந்துகிட்டு இருக்கேன் ..நீதான் இப்படி போனில் சோக வயலின் வாசிச்சு நேரத்தை கடத்துற ... போனை வெச்சிட்டு ஜானுவோடு நீ டுயட் பாடு .. நான் இன்னும் அஞ்சு நிமிஷத்தில் அங்க இருப்பேன் " என்றான் அர்ஜுன் .. போனை வைத்த ரகுவிடம்

" அண்ணா வந்தாச்சா ? " என்று மீண்டும் கேட்டு வைத்தான் ஷக்தி .. ரகுவின் கோபப்பார்வையில் இருந்து தப்பித்த ஷக்தியின்  கண்களில் அடுத்து சிக்கினான் கார்த்திக் ..

" டேய் கார்த்திக் இங்க வா "

" மச்சி நீ கல்யாண மாப்பிளை ... அடக்க ஒடுக்கமா இருப்பன்னு பார்த்தா, காலேஜ் சீனியர் மாதிரி கண்ணில் பட்ட எல்லாரையும் ராகிங் பண்ணிட்டு இருக்க ?" என்றான் கார்த்திக் பாவமாய்.,.

" இவ்வளவு நேரம் நித்யாவை பார்த்து தானே  ஜொள்ளு விட்ட நீ ? உன்கிட்ட மிது போட்டோ கேட்டு எவ்வளவு நேரம் ஆச்சு "

" டேய் இப்போதான் டா, வைஷ்ணவி எனக்கு வாட்ஸ்அப் பண்றேன்னு சொல்லி இருக்காங்க .. வந்ததுமே உனக்கு காட்டுறேன் சரியா ? ஓவரா குதிக்காதே ?\! இன்னும் அரை மணி நேரத்தில் அவ உன் பக்கத்தில் தானே உட்கார போறா ??" என்று சளித்தவன், ஷக்தி வாயை திறக்கவும் " ஹான் கூப்பிட்டிங்களா மாமா ? " என்று இல்லாத ஒருத்தரை தனது மாமாவாக தத்தெடுத்து கொண்டு எஸ்கேப் ஆகினான் ..

சொன்னபடி சிறுது நேரத்தில் மித்ராவின் புகைப்படம் ஷக்தியிடம்  வந்து சேர " மிது மை லவ் " என்று முணுமுணுத்தான் ..அவன் அழைத்ததை உணர்ந்தது போல ஏனென்றே தெரியாமல் மித்ராவின் மனதிலும் இனம்புரியா அமைதி  வந்தது ..  இங்கு ரகு ஷக்தியை  கொலைவெறியுடன் பார்த்திருந்ததை போலவே  , அங்கு நிலா மதியை கொலைவெறியுடன் பார்த்தாள்..

ஆம், தோழிகளை துரத்தி கொண்டு ஓடிய மீனா, தற்செயலாய் மதி மீது மோதிவிட, அவள் விழாமல் இருக்க அவன் கை கொடுத்து அவள்  நிற்க உதவ , அவனை பார்வையாலேயே எரித்தாள்  நிலா ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.