(Reading time: 8 - 16 minutes)

01. சதி என்று சரணடைந்தேன் - சகி

சில விஷயங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகி போகின்றன.அதனால்,இன்பமோ!துன்பமோ!எது வேண்டுமானாலும் விளையலாம்.கண்களை திறந்து அழகு கொஞ்சும் இந்த சிருஷ்டியை காணுங்கள்.சற்று இரசனை கொண்டு காணுங்கள்.அழகிற்கு இலக்கணம் எழுதியுள்ளது.அழகிற்காக மனிதர் பல காரியங்களை புரிகின்றனர்.ஆனால்,மனிதனின் வஸ்துக்கள் எதுவும் இறைவனின் படைப்பின் கால் தூசிக்கும் இணையாகாது அல்லவா???

எவ்வளவு ரசனை!!!!!

எப்பேர்ப்பபட்ட கவிஞனும் இந்த அழகை உவமையாக்கி தான் கவிதை புனைவான்.அப்படி என்றால் இது உவமையில்லா கவி அல்லவா???

Sathi endru saranadainthenமனிதனின் அங்க உறுப்புகளில் கண் மட்டும் யாரிடமும் கூறாமல் ஆயிரம் வருடம் ஈசனை நோக்கி தவம் புரிந்திருக்கும் என்று யூகிக்கிறேன்.ஏனெனில்,கண்ணால் மட்டும் தான் அழகிய காட்சிகளை தனதாக்க முடிகிறது.

மனம் இக்காட்சிகளை காண துள்ளுகிறது.

வாழ்வின் தத்துவங்களை இயற்கை எனக்கு உபதேசிக்கிறது.அப்படியென்றால்,அர்ச்சுனனுக்கு நான் சளைத்தவன் இல்லை.நான் இந்த இயற்கை மீது காதல் கொண்டு விட்டேன்.

மனம் உருகி கொண்டிருக்கிறேன்.நான் படும் வேதனையை இந்த இயற்கை புரிந்து கொள்ள மறுக்கிறது.

ஏன் என்று விளங்கவில்லை.

அது என்னை விலகுகிறது.நான் படும் அவஸ்தை தன்னை அது காண மறுக்கிறது.

அது சரி நான் ஏன் இவற்றை இங்கு கூறுகிறேன்???காரணம்,உஙகளுக்கே விரைவில் புரியும்.அந்த இயற்கை என்னை விலகுவதிலே கவனமாய் இறுகிறது.அது என்னை பிரிகிறது.

அன்று அதிகாலை ஆதவனானவன் தன் கிரணங்கள் கொண்டு அழகாக அகிலத்திற்கு உயிர் வழங்குகிறான்!!!

அப்போது தான் பனி விலகிய அழகிய காலை பொழுது அது!!!

நிலவின் மடியில் தவழும் பனித்துளிகள் சூரிய தேவரை கண்டதும் அச்சத்தில் புல்வெளிகளை விரைந்து பிரிந்து ஓடுகின்றன.ஒருவேளை தன் தந்தையானவர் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விடுவாரோ என்று பயந்து போய் இருக்கலாம்!!!! புல்லாங்குழல் இசைப்பதில் மன்னன் என் கண்ணன்....அவரின் குழல் இசையோடு தங்களின் குரல் இசையை போட்டி போட வைத்தன குயில்கள்.உங்ளுக்கோ தபால்காரர் மூலமாகவோ!!!கைப்பேசி மூலமாகவோ!!!மின்னஞ்சல் மூலமோ!!!செய்தி வந்திருக்கலாம்.எனக்கு செய்திகளை இதமான தென்றல் கொண்டு வந்துள்ளது.சரி நீ எனக்கு என்ன செய்தி கொண்டு வந்துள்ளாய்???(நான் அதனோடு பேசிக் கொண்டு இருக்கிறேன்)பாருங்கள் ....காலதேவர் எனது வாழ்நாளை நீட்டித்து புதிய தினத்தை அருளியுள்ளாராம்!!!எனில்,நான் உயிரோடு இருக்கிறேன்.மிக்க நன்றி!!!!

அதோ எனது தோட்டத்தில் எனக்கு பிடித்த ரோஜா தன் இதழை விரித்து என்னை கேட்கிறது...

நீ என்னை மறந்துவிட்டாயா???என்று!!!

இல்லை...நான் உன்னை மறக்கவில்லை.சற்று கவனிக்க தவறினேன்.அவ்வளவு தான்!!!மன்னித்து விடு!!!!

அடுத்ததாக பாருங்கள்...

வானத்து தேவர்கள் என் மேல் பன்னீர் தூவுகின்றனர்.உனக்கென்ன வேண்டும்???

அது கூறுகிறது...

நான் உனக்கு புத்துணர்வை கொண்டு வந்துள்ளேன்.என்று!!!

ஏன் என்று நான் கேட்க,

இறைவன் உன் மேல் அதீத அன்பு கொண்டுள்ளார் என்று பதில் கூறுகிறது!!!

அப்படி என்றால் அந்த நானாகிய நான் யார்???கண்டுப்பிடித்தீர்களா???

கூறுகிறேன்...நான் தான் வாழ்க்கை!!!!

ஒவ்வொரு மனிதனின் பிரதி நான்!!!

இப்போது தெரிகிறதா???நான் யார் என்று!!!!

மெத்தையில் நன்றாக உறங்கி கொண்டிருந்தவள் கண்விழித்தாள்.

சுற்றி பார்த்தவள் சிரித்து கொண்டாள்.

"எல்லாம் கனவா?"என்றது மனம்.

(அப்படியென்றால் இவ்வளவையும் நீ தான் கனவு கண்டாயா!!!!நான் அவளை முறைக்கிறேன்!நீங்களும் முறையுங்கள்)ஆமாம்...யார் இவள்????இவள் என்னால் உருவாக்கப்பட்டவள்.இவளுக்கு தீக்ஷா என்ற பெயர் சூட்டியுள்ளேன்.

இப்போது இவள் ஒரு பத்திரிக்கையாளராய் பணியாற்றுகிறாள்.தீக்ஷாவை அழகோவியமாக வரைந்தேன்.பெயருக்கேற்ற ஞானம் வழங்கினேன்.(இப்போது தெரிகிறதா ஒவ்வொரு எழுத்தாளரும் பிரம்ம அவதாரம் என்று!!!!)சற்று சிந்தித்து பார்த்தால்,கீதாவின் முகம் இவளில் தோன்றும்!ஆம்...!இவளுக்கு கீதாவின் முகம்.

இனி அவள் பேசுவாள்....

மெல்ல மெத்தையை விட்டு எழுந்து தரையில் பாதம் பதித்தாள்.ஜன்னல் அருகே சென்று திரைச்சீலையை விலக்கினாள்.

மார்கழி மாத காற்று மனதை வருட வந்து திருடியது.அதை ஸ்பரிசித்தாள்.

கண் இமைக்காமல் எதிரே விரிந்த  உலகை இரசித்தாள்.

நீண்ட நேரம் மனதை தொலைத்தது கன்னியின் மனம்!!!!

பின் ஏதோ நினைவு வந்தவள்,கடிகாரத்தை காண மணி ஐந்து என்றது.

குளியலறைக்குள் சென்று தன்னை புதுப்பித்து கொண்டு தன் தந்தையின் அறைக்குள் சென்றாள்.அங்கே அவர் நன்றாக உறங்கி கொண்டிருந்தார்.

"ரவி!ரவி!எழுந்திரி ரவி!"குரல் கொடுத்தார்.

"செல்லம்...கொஞ்ச நேரம்டா!"அவர் போர்த்திக் கொண்டு தூங்கினார். 

"ரவி!உன் பக்கத்துல கரப்பான்பூச்சி!"அவள் கத்த,

"கரப்பான்பூச்சியா?"என்று பதறியப்படி எழுந்தார் ரவிக்குமார்.(சென்னை மாநகர கமிஷ்னர்)

தீக்ஷா அழகாய் சிரித்தாள்.

"நான் உனக்கு என்ன கெடுதல் பண்ணேன்??எதுக்கு நீ என் வீக் பாயிண்டோட விளையாடுற?"

"பார்க்க தான் அயன் பண்ணா மாதிரி கம்பீரம்.கரப்பாம்பூச்சி பேரை கேட்டாலே அலறுகிற?"

"பயமா எனக்கா...அது...கரப்பாம்பூச்சி நசுங்கிட போகுதுன்னு பார்த்தேன்."

"சமாளிப்பு???"

"ச்சே!ச்சே!"

"சரி வா போகலாம்!"

"எங்கே?"

"வாக்கிங்!"

"ஐயோ!டார்லிங்...ஒருநாள் லீவ் கொடேன்!"

"நீ ஒருநாள் முழுசும் என் கூட பேசாம இருப்பியா?"

"அதெப்படி முடியும்?"

"முடியாதுல...அதே மாதிரி தான் இதுவும்!"

"எனக்கு வயசாயிடுச்சுடா!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.