(Reading time: 18 - 36 minutes)

06. பிரியாத வரம் வேண்டும் - மீரா ராம்

வர் பேரு வ்ருதுணன்… பெரிய ஐயா பையன்… என்று தரகர் சொன்னதும், அனைவரின் பார்வையும் அந்த சபையில் இருந்தோர்களின் மேல் பதிந்தது…

எங்களுக்கு பொண்ணைப் பிடிச்சிருக்கு… கல்யாணம் பண்ணிக்கப் போகிறவனும் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா, இப்பவே உறுதி பண்ணிடலாம்… என்றவர் தான் பெரிய ஐயா என்று தரகரால் அழைக்கப்பட்ட விஸ்வ மூர்த்தி…

அண்ணன் சொல்லுறதும் சரிதான்… பையனையே கேட்டுடலாம் என்றார் வில்வ மூர்த்தி தன் உடன்பிறந்தோரின் வார்த்தையை ஆமோதிப்பது போல்….

Piriyatha varam vendum

தேவி… நீ கேளு உன் பையங்கிட்ட… என்று வில்வ மூர்த்தி சொன்னதும், சரிங்க… கேட்குறேன்… என்றார் அவரும் கணவரின் பேச்சை தட்டாமல்…

தேவி… வ்ருதுணனைப் பார்த்து துணா என்றழைக்க,

அவனோ, இதற்கு மேல் தாங்காது என்பதுபோல், யுவிம்மா… என்னை விட்ருங்க… நான் வரலை இந்த விளையாட்டிற்கு… என்று சொல்லிவிட்டு, வெளியே சென்றுவிட,

வர வர, இவன் சேட்டை தாங்க முடியலை… வந்த இடத்துல ஒழுங்கா இருக்காம வெளியே போயிட்டான் பாரு… என அம்பிகா குறைபட,

விடுக்கா… இவன் மட்டுமா போனான்?... என தேவி சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

அப்படி சொல்லுங்க யுவிம்மா… இந்த குரங்கும் தானே வெளியே போனான்… என ஒருவனை அழைத்து வந்திருந்தான் துணா…

டேய்… ஒரு இடத்துல ஒழுங்கா இருக்க மாட்டியா நீ?... மாப்பிள்ளையா லட்சணமா இருக்கப் பாரு… அப்போதான் பொண்ணு தருவாங்க… பொண்ணு உன்னைப் பார்த்து பிடிச்சிருக்குன்னு சொல்ல வேண்டாமா?... நீயும் பொண்ணைப் பார்த்து பிடிச்சிருக்கான்னு சொல்லு… என தேவி சொல்ல…

உனக்குப் பிடிச்சிருந்தா எனக்கும் ஓகே தேவி…. என்றான் தாயிடம் அந்த மாப்பிள்ளை அவர்களுக்கு மட்டும் கேட்கும்படி…

நீதான் தேவி இவனுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்துட்ட… பாரு வந்த இடத்திலேயும் உன்னை பேர் சொல்லி கூப்பிடுறான்… என வில்வ மூர்த்தி சற்றே கோபத்துடன் கூற,

நான் மட்டும் தான் செல்லம் கொடுத்தேனா?... விடுங்க… பேர் சொல்லத்தான் பிள்ளை… என்ற தேவி மகனை பாசத்துடன் பார்க்க…

இவன் எங்க வீட்டு கடைக்குட்டி… பேரு மைவிழியன்… அம்மா மேல ரொம்ப பாசம்… அதான் தேவியை பேர் சொல்லி கூப்பிடுவான்… நீங்க எதும் தப்பா நினைக்காதீங்க… என்று விஸ்வ மூர்த்தி நீலகண்டனிடமும், விஜயாவிடமும் சொல்ல…

அதனால என்னங்க.. மஞ்சரி கூட என்னை சில சமயம் பேர் சொல்லிதான் கூப்பிடுவா… இதெல்லாம் பசங்க நம்ம மேல வச்சிருக்குற பாசம்தானே… என்று விஜயா அமைதியாக கூற, மூர்த்தியின் குடும்பமும் அதை ஆமோதித்தனர்…

வ்ருதுணன் இங்கே பெண் பார்க்கவா வந்தான்?.. என்ற கேள்வியுடன் பாலாவும், வள்ளியும் இருக்க… மஞ்சரியோ அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தாள்…

அப்போது தான் தேவி துணா என்றழைக்கவும் செய்தார்… அவன் எழுந்து சென்றதையோ, திரும்பி வரும்போது ஒருவனை அழைத்து வந்ததையோ, மாப்பிள்ளை வீட்டாரின் உரையாடல்களையோ, எதையுமே மூன்று பெண்களும் கவனிக்கவில்லை… அவர்கள் கருத்திலும் பதியவில்லை… அனைத்தும் மைவிழியன் என்ற பெயர் வரும்வரை தான்…

மைவிழியன்… என்ற பெயர் கேட்டதுமே, மூன்று பெண்களும் நிமிர்ந்து பார்த்தனர்… அங்கே மைவிழியன் வ்ருதுணனின் அருகே கள்ளச் சிரிப்புடன் அமர்ந்திருந்தான்…

மஞ்சரிக்கோ வெட்கத்தில் சட்டென்று முகம் சிவந்தாலும், மறுபக்கம் கோபமும் வந்தது…

வள்ளிக்கோ, அப்பாடா என்றிருந்தது… வ்ருதுணனின் மேல் அவளுக்கு இருந்த நம்பிக்கை மேலும் அதிகரிப்பதை புரிந்து கொண்டாள்…

பாலாவோ அமைதியாக நடப்பதை கவனிக்க ஆரம்பித்தாள்… மைவிழியனின் மேல் அவளுக்கு இருந்த கோபம் இப்போது இல்லாதது போல் உணர்ந்தாள்…

மைவிழியனுக்கும் மூத்தவன் வ்ருதுணன்… அவன் கல்யாணம்… என்று நிறுத்தி அம்பிகா வ்ருதுணனைப் பார்க்க… அவனோ வள்ளியைப் பார்த்தான்…

அவள் மௌனமாக தலைகுனிய… அதை கவனித்த நீலகண்டன்-விஜயா தம்பதியினர், வ்ருதுணன் தம்பிக்கும் சீக்கிரம் நல்லது நடக்கும்ங்க… என்றனர்…

ஹ்ம்ம்… மூத்த பையன் இருக்கான்… அவனுக்கும் முடிச்சிட்டு அப்புறம் நிச்சயதார்த்தம் வச்சிக்கலாம்… என விஸ்வ மூர்த்தி சொல்ல…

பெண் வீட்டாருக்கும் அது சரியென்று பட அவர்களும் சம்மதித்தனர்…

பின் பொதுவான பேச்சுவார்த்தைக்குப் பின்னர், மைவிழியனுக்கு மஞ்சரி தான் என பேசி முடித்துவிட்டு கிளம்பி சென்று விட்டனர் மாப்பிள்ளை வீட்டார்…

மறுநாள் அலுவலகத்தில்….

ஹேய்… இப்போ கூட நம்ப முடியலைடி… நேத்து நீ அழுததென்ன… இன்னைக்கு இப்படி முகமெல்லாம் பூரிப்பா இருக்குறதென்ன… எல்லாமே கனவு மாதிரி இருக்கு மஞ்சு… என பாலா தன் தோழியிடம் சொல்ல…

ஹ்ம்ம்… எனக்கும் அப்படித்தான் இருக்கு பாலா… அவர் அப்படி பேசிட்டு போனதும் எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சேன்… ஆனா, அவர் தான் என் வீட்டுல எனக்குப் பார்த்துருக்குற மாப்பிள்ளைன்னு தெரிய வந்தப்போ நிஜமா ரொம்ப சந்தோஷம்…

ஹ்ம்ம்.. அப்போ விடிய விடிய தூங்கிருக்க மாட்டியே…

ஏன் தூங்காம இருக்கணும்?...

என்னடி இப்படி சொல்லிட்ட?... இனி ராத்திரி பகல் பார்க்காம போன்ல பேசிட்டு இருக்குறது தான வேலை… என பாலா கிண்டல் செய்து சிரிக்க…

மஞ்சுவோ மௌனமாக இருந்தாள்…

என்ன மஞ்சு ஏன் சைலண்ட் ஆயிட்ட?... என வள்ளி கேட்க

இல்லடி… பாலா சொல்லுற மாதிரி நான் அவர்கிட்ட இன்னும் பேசலை… வந்தவங்க எல்லாரும் கிளம்பி போன பிறகு, எனக்கு அவர் 9 மணி போல போன் பண்ணினார்… நான் தான் எடுக்கலை…

எடுக்கலையா?... அடிப்பாவி… ஏண்டி?.... என பாலா சத்தமாக கேட்க…

வள்ளியோ… ஏன் மஞ்சு.. என்னாச்சு… ஏன் பேசலை நீ?.. என கேட்டாள்…

எப்படி எடுக்கத்தோணும் பாலா… அவர் நேத்து பேசினது, நடந்துகிட்டது எல்லாம் சரியா?... பின்னே எப்படி அவர் போன் பண்ணதும் நான் எடுப்பேன்… என்று பாலாவிடம் சொன்னவள், நான் பண்ணது தப்பா வள்ளி என வள்ளியிடம் கேட்க வேறு செய்தாள்…

தப்பு என்று எப்படி சொல்ல முடியும்???... அவன் செய்தது தவறு தானே… ஆயிரம் தான் அவனே மாப்பிள்ளையாக வந்து பெண் கேட்டாலும், அவன் நேத்து அப்படி பேசியிருக்கக்கூடாது தான் என்று மனம் சொல்லியது வள்ளிக்கு….

ஆனாலும் அவன் அவள் பட்ட காயத்திற்கு மருந்திட்டு விட்டான் தான்… எனினும் பெண் மனதில் காயத்தை உண்டாக்கியவனே மருந்தும் இடும் போது அவள் அதை ஏற்றுக்கொண்ட பின்னும் அவனிடத்தில் பேசாமல் இருப்பது என்ன விதமான முடிவென்று வள்ளியால் புரிந்து கொள்ள முடியவில்லை…

ஆனாலும், மஞ்சரியை, மைவிழியனிடத்தில் சேர்த்து வைக்க வேண்டுமென்று எண்ணினாள்…

நீ பேசினால் தானே மஞ்சு தெரியும்… அவர் ஏன் அப்படி நடந்துகிட்டாரென்று… என வள்ளி மஞ்சுவிடம் சொன்ன போது, மஞ்சுவும் பேசி பார்த்தால் தெரியுமோ என்றெண்ணினாள்…

ஆமா, இப்படி பேசாம இருக்குறவ, எதுக்கு ஓகே சொன்ன… எனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்கலைன்னு சொல்ல வேண்டியது தானே… நீ ஏன் அதை செய்யலை… என பாலா கேட்க

மஞ்சரியிடத்தில் பதில் இல்லை…

கோப தாபங்கள் கோடி இருந்தாலும், அவள் விரும்பியவன் அவன் தானே… அவள் எப்படி மறுப்பாள்???... ஏதோ அவன் நேற்று அப்படி பேசிவிட்டான்… அதுக்காக அவனை வெறுத்திட முடியுமா அவளால்… சில நாள் பேசாமல் இருந்து சண்டை போட்டுவிட்டு பின் பேசலாம் என்ற முடிவெடுத்து இருந்தவளை பாலாவின் கேள்வி உலுக்கியதென்னவோ உண்மைதான்…

இதற்கு பெயர் தான் காதலா???....” என்ற கேள்வியும் அவளுள் எழாமல் இல்லை…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.