(Reading time: 21 - 41 minutes)

09. என் உயிர்சக்தி! - நீலா

கையில் குழந்தையுடன் அதிர்ச்சியில் நின்றிருந்த அந்த தம்பதியினரையும் குழலீயையும் பார்த்தான் பிரபு!

பிரபு... நான் புறப்படுறேன்! நீங்க வீட்டுல வந்து உங்க பேக் வாங்கிக்கோங்க' என்றுவிட்டு நடந்தாள்.

ஹே பூ... நில்லு! நில்லுனு சொல்லறேன்ல..' என்றவாறே இரண்டேட்டில் அவள் கையைப்பற்றி நிறுத்தி தன் அருகே இழுத்தான்.

En Uyirsakthi

பிரபு கையை விடுங்க... இது கோவில்!

பிரபுபா என்ற கூக்குரலோடு பின்னிருந்து யாரோ அவன் கால்களை கட்டிக்கொண்டார்கள். உற்சாகமானான் பிரபு! ஆனாலும் இவள் கையை விடவில்லை.

ஹேய் வாலு!' என்று மற்றொரு கையால் பின்னிருந்து அந்த ஆறு வயது சிறுமியை தன் முன் இழுத்து தூக்கிக்கொண்டான். லாவகமாய் அமர்ந்த அந்த சிறுமி அவனது கன்னத்து குழியில் முத்தம் வைத்தாள்.

போ பா... நான் உன்கிட்ட டூ.. பேச மாட்டே போ! நீ என பாக்க வரவேயில்ல! பேசாதே போ.. என்றுவிட்டு மறு கன்னத்திலும் முத்தம் வைத்தாள்.

டேய் சக்தி... நீ என் மேல கோபமா இருக்கியா? இல்லையா? திட்டுற... ஆனா முத்தம் கொடுக்கற? ம்ம்??

கொஞ்சம் கோபம் தான். பர்வாலே! பிரபுபா பாவம்ல... அதனால பழம்.. சரியா!??

சரிடா கண்ணம்மா! என்று அவள் கொடுத்ததை அவளுக்கு திருப்பித்தந்தான்.

அம்மா, அப்பா. தம்பி எல்லாரும் இங்க இருக்காங்க... நீ எங்க போன?

அதுவா.. அது வந்து... என் கொலுசு ஸ்லிப்பர்ல மாட்டிச்சு' என்று அருகில் இருந்த குழலீயை பார்த்தாள், தன் பெற்றோரை பார்த்தாள். 

பிரபு அவர்களை அறிமுகப்படுத்த முற்படும் போது, அவனிடமிருந்து இறங்கியவள் குழலீயின் புடவையை இழுத்து.. 'நீங்க குழலீ சித்தி தானே?' என்றவள் திரும்பி தந்தையை பார்த்தாள்.

ஆமாம் டா செல்லம்!' என்று அவளை வாரி அணைத்துக்கொண்டாள் குழலீ.

டேய் சக்தி.. உனக்கு எப்படி தெரியும் இது சித்தினு?' என்றான் பிரபு ஆச்சர்யமாக!

டாடீ சொன்னாரே!

ஆங்...

ம்ம்...உன் பெயர் என்னடா?'- குழலீ

போ சித்தி! என் பெயர்கூட உனக்கு தெரியல போ!

சாரி டா.. உன் அம்மா அப்பா சொல்லவேயில்லையே! நீயே சொல்லேன்.. நான் தெரிஞ்சுக்குறேன்!

என் பெயரா? ம்ம்... திரும்பி அம்மாவை பார்த்தாள்.

நீயே சொல்லேன்? என்றாள் குழலீ.

உன் பெயரும் இருக்கே என் பெயர்ல!

ம்ம்..அப்படியா?!

ஆமா அம்மா அப்பாவுக்கு உன்னை ரொம்ப பிடிக்குமா... அதனால உன் பெயரையே எனக்கு வெச்சிட்டாங்க..

ஓ!

என் பெயர்...சக்தி சுரபி!

ம்ஹும்.. அப்படியா! ஸ்வீட் நேம் ஃபார் ஸ்வீட் கர்ள்... ஆனா என் பெயரில்லையே இதுல!' என்று முத்தம் வைத்தாள் குழலீ.

உன் பெயர் சக்தினு தான் டாடீ சொன்னார். அம்மா தான் உன் பெயர் குழலீனு சொன்னாங்க! டாடீயும் மம்மாவும் நீ ரொம்ப ஸ்வீட்னு சொல்லுவாங்க! உன்னை போல நானும் ஸ்வீட்டா? தேங்கஸ் சித்தி' என்று கட்டிக்கொண்டாள்.

குழலீ... உனக்கு இவங்களை தெரியுமா?!' என்றான் பிரபு.

பதில் இல்லை குழலீயிடம்!

அண்ணி நீங்களாவது சொல்லுங்களேன்!

குழலீ..! என்றவாறு அருகில் வந்தாள் அந்த பெண். குழலீ நிமிர்ந்து பார்த்த பார்வையில் கண் கலங்கிவிட்டாள்.

கண்களை இரு நிமிடம் இறுக்க மூடி திறந்த குழலீயின் பார்வை இப்போது கனிந்திருந்தது! குழல் என்றழைத்தவாறு அருகில் வந்து கைப்பற்றியவளை கண்கலங்க தோள் சேர்த்து அணைத்துக்கொண்டாள் குழலீ!

ஹேய் மலர்! அழாதே! இங்க பாரு.. மலர்...பொன்மலர்!' என்று அவளை நிமிர்த்தி கண்களை துடைத்துவிட்டாள்.

நடந்தது அப்படியே இருக்கட்டும்.. நாம் எல்லாத்தையும் மறந்திடுவோம் சரியா?? ஓகே?' என்றாள் குழலீ.

குழலீ.. அது இரண்டாவது குழந்தை.. என்று கணவனிடம் இருந்து வாங்கி கொடுத்தாள் பொன்மலர்.

என் தம்பி மோகனசுந்தரம்! ' என்றாள் சக்தி சுரபி.

பெயரை கேட்டதும் சிறிது நெகிழ்ந்தேவிட்டாள். தாத்தா பெயர்?! என்று ஆச்சர்யமாய் மலரை பார்த்தாள். 

ஆமாம் என்று புன்னகைத்தாள்.

எப்படியிருக்க குழலீ?' என்று வந்தான் மலரின் கணவன்.

அவனை கண்டுக்கொள்ளாது மலரிடம், 'நீ நல்லா இருக்கனு தெரிஞ்சுதுல.. அது ஒன்னு போதும் மலர்! நான் புறப்படுறேன்' என்றுவிட்டு முன்னே நடந்தாள்.

ஹேய் குழல் நில்லு!' என்ன செந்தில் அண்ணா இது? என்றபடி அவளை பின் தொடர்ந்தான் பிரபு.

இப்போது அவன் கூறிய செந்திலும் சேர்ந்து அழைக்க நின்றவள், திரும்பி மலரிடம்..'மலர் உன் ஹஸ்பன்டை பேச வேண்டாம்னு சொல்லு! இது கோவில்... நான் அனாவசியமா பேச வேண்டாம்னு பார்க்கறேன். பிரபு நான் கிளம்பறேன்' என்றுவிட்டு முன்னே நடந்தாள். 

விடு பிரபு.. அவ போகட்டும்.. அவளை சமாதானப்படுத்றது எல்லாம் முடியாத காரியம்!' என்றான் செந்தில்.

அண்ணா! எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இவ்வளவு நேரம் உட்கார வெச்சேன் தெரியுமா? வந்து அஞ்சு நிமிஷம் தான் ஆச்சு. அதுக்குள்ள கிளப்பிவிட்டீங்க! நான் எங்க போய் இதை சொல்லறது? 

என்னடா நடக்குது இங்க??- செந்தில்.

எப்படியாவது எல்லாத்தையும் பேசிடலானு பார்த்தா.. முடிஞ்சு போச்சு! நீங்க வேற ஏதோ பிரச்சனை செய்திருக்கீங்க போல? சரி பண்ணிடலாம்! மேடம் வண்டி சாவி என்கிட்ட தான் இருக்கு... ஒன்னு செய்யலாம். நீங்க சாமி தரிசனம் முடிச்சிட்டு பெஸ்ஸி பீச் வந்திடுங்க... இன்னைக்கு ஒரு முடிவு செய்யறேன்!

டேய் தவறு செய்தது நாங்க.. அதனால அவளை கூல் செய்யறது ரொம்ப கஷ்டம் டா!

நடந்தவாறே...'என்னால முடியும் செந்தில் சார்! வந்து சேருங்க! பை!' என்று வேகமாய் நடைப்போட்டான்.

அவன் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தான் செந்தில். 

என்னங்க.. வாங்க உள்ளே போகலாம்..பிரபு வேற வர சொன்னாரே!

இல்ல நாம போகனுமா?

பின்னே! நீங்க செய்த குளறுபடிக்கு இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும்!

என்ன நீ? நான் மட்டும் தானா? நீ இல்லையா?

அவ என்னை எதுவும் சொல்லவேயில்லையே! அதனால நீங்க மட்டும் தான். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.