(Reading time: 30 - 59 minutes)

07. பிரியாத வரம் வேண்டும் - மீரா ராம்

யுவி… இந்த மையன் இருக்கான்ல… அவன் தொல்லை தாங்கலடா…”

“என்னடா சொல்லுற துணா?... எனக்கு புரியலையே…”

“அது வந்துடா… என்ன நடந்துச்சுன்னா…” என்று துணா ஆரம்பிக்கும்போது

Piriyatha varam vendum

“யுவி… அவன் சொல்லுறதை கேட்காத யுவி…” என்று சொல்லிக்கொண்டே ஓடி வந்தான் மைவிழியன்…

“டேய்… நீ எங்கிட்ட அடிவாங்காத… ஓடிடு… நான் சொல்லியே தீருவேன் இப்போ…” என்று துணா சொல்லுகையில்

“ஓஹோ… நீ சொல்லிடுவியா?... அதையும் பார்த்துடலாம்… சொல்லுடா.. பார்ப்போம்…” என்று சண்டைக்கு அடிகோலிட்டான் மையன்…

“சொல்லிட்டா என்னடா பண்ணிடுவ குரங்கு??...” என்று துணாவும் எகிற,

“நீ சொல்லிப்பாரு அப்ப தெரியும்…” என்றான் மையனும் கோபமாக…

இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டிருக்கையில், யுவியோ சரி… இவங்க பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் என்றெண்ணி அமர்ந்திருந்த போது அங்கு வந்து கொண்டிருந்த துர்காதேவியை பார்த்து முகம் மலர்ந்தான்…

“இங்கே வா…” என அவர் கண்கள் சொல்ல, அவன் கால்கள் வேகம் பிடித்து அவர் அருகே சென்று நின்றது…

“தேவிம்ம்மா….” என்றபடி அவன் அவரைக் கட்டிக்கொள்ள, அவரும் அவன் முகம் பற்றி நெற்றியில் முத்தமிட்டார்…

பின் அவர் சென்று சோபாவில் அமர, அவனும் அவர் பின்னே சென்று அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டான்…

“எவ்வளவு நாள் ஆச்சு தேவிம்மா… உன் மடியில இப்படி படுத்து… ஹ்ம்ம்…” என்றவன் மௌனமாக கண்களை மூட…

சண்டைப் போட்டுக்கொண்டிருந்தவர்களின் அருகே வந்த அம்பிகா, “ஏண்டா நீங்க திருந்தவே மாட்டீங்களா?...” என்று கேட்க…

“இப்போ நாங்க என்ன தப்பு பண்ணினோம்னு எங்களை திருந்த சொல்லுறீங்க துணாம்மா?...” என மையன் கேட்ட மாத்திரத்தில்,

அவனை அடித்த துணா, “டேய்… என்னடா என் அம்மாவை எதிர்த்து கேள்வி கேட்குற?... கொன்னுடுவேன் ஜாக்கிரதை…” என்றபடி மையனை மிரட்டிவிட்டு,

“இனி இவன் கூட நான் சேரமாட்டேன்மா… நீ வா…” என்றபடி அவரை இழுத்துக்கொண்டு சென்றவன், அவரை துர்காதேவி அமர்ந்திருந்த சோபாவிற்கு எதிர் சோபாவில் அமர வைத்தான்…

பின், “அவன் இனி உன்னை எதாவது சொன்னா நீ எங்கிட்ட சொல்லும்மா… நான் பார்த்துக்கறேன்..” என்றபடி துணா சொல்ல, அம்பிகாவோ சிரித்தார்…

“என் செல்ல அம்மா… சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்குறம்மா…” என்றபடி அவரின் மடியில் தலை வைத்து துணா படுத்துக்கொள்ள…

மையனோ பாவமாக நின்றபடி இருபுறமும் பார்த்தான்…

“அம்மா…” என்ற சிணுங்கலுடன் துர்காவிடம் சென்றவன், அவரைப் பார்க்க…

துர்காவோ “வா…” என்றழைத்தார்… உடனே சிரிப்புடன் தாயின் தோளில் தலை சாய்த்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தான் மையன்…

துர்காவின் மடியில் படுத்திருந்த யுவி, அவரின் விரல்களோடு விரல் சேர்த்து விளையாட ஆரம்பித்தான்…

“என்ன வேலா…” என்று அவர் கேட்க…

“உன்னை ரொம்ப தேடினேன் தேவிம்மா… மிஸ் யூ சோ மச் தேவிம்மா…” என்ற யுவியின் விழிகள் லேசாக கலங்க…

மகன் கலங்க பொறுக்காத தாயோ, “அம்மா மட்டும் உன்னை தேடலையா?... நான் இங்கே இருந்தாலும் என் மனசெல்லாம் உன்னை சுத்தி தான் இருந்துச்சு வேலா…” என சொல்ல…

“எனக்கு தெரியும்மா… அதான் உன்னை இதுக்கு மேலயும் தேட விடக்கூடாதுன்னு நான் உங்கிட்ட வந்துட்டேன்… இனி உங்கூட தான் இருப்பேன்…”

“அம்மாவும் உங்கூட தான் இருப்பேன் வேலா…” என்றவர் சிரிக்க…

மடியில் படுத்திருந்தவன், கண்களை உயர்த்தி தாயின் முகம் பார்த்து புன்னகை பூத்தான்… அது இவ்வளவு நாள் உதிர்த்த கீற்றுப் புன்னகை அல்ல… சற்றே உதடு விரிந்த புன்னகை.. அதுவும் அவன் தாயைக் கண்டால் மட்டுமே…

ந்நேரம்,

“அண்ணா… அந்த கான்டிராக்ட் பத்தி தான் யோசிக்கணும் அண்ணா…, அது நல்ல படியா முடிஞ்சிட்டா ரொம்ப சந்தோஷம்…”

“ஆமா வில்வா.. அது மட்டும் முடிஞ்சா நல்லா தான் இருக்கும்…” என தம்பியிடம் சொன்ன விஸ்வ மூர்த்தி,

“சரி வில்வா.. நம்ம பசங்களை எங்க காணோம்???…” என கேட்க…

“வீட்டுக்குள்தான் இருப்பாங்க… வாங்க போய் பார்க்கலாம்…” என்று வில்வமூர்த்தி சொன்னதைக் கேட்டு வீட்டிற்குள் நுழைந்த இரு சகோதர்களும் தாங்கள் கண்ட காட்சியில் புன்னகை மாறாமல் நின்றனர்…

“இவனுங்க இன்னும் மாறவே இல்லண்ணா…”

“ஆமா வில்வா.. சின்ன வயசில எப்படி இருந்தானுங்களோ அப்படியே தான் இன்னும் இருக்குறாங்க…” என்ற விஸ்வம்,

“யுவியும் சரி… மற்றவர்களும் சரி… இன்னும் இந்த பழக்கத்தை மாத்திக்கவே இல்லல்ல வில்வா…” என தம்பியிடம் சொல்ல…

“ஹ்ம்ம் உண்மைதான் அண்ணா…”  என்று வில்வமும் அதை ஆமோதிக்க…

“யுவி வந்து மூணு நாளாச்சு… இன்னமும் தேவி கூடவே இருக்குறான் பாரு… பாவம் அவ… அவளை தொந்தரவு பண்ணிட்டே இருக்குறான்… நீயாச்சும் இதை கேட்க கூடாதாடா வில்வா??..”

“யுவி வந்தப் பின்னாடி தான் அண்ணா நான் தேவி முகத்துல சிரிப்பையே பார்க்குறேன்..”

“அதுவும் சரிதான் வில்வா… தேவி இப்போதான் சந்தோஷமா இருக்குறா…”

“பாவம் அண்ணா பிள்ளை… எத்தனை மாசம் தேவி இல்லாம இருந்துருக்கான்… அவன் தூங்கட்டும்… நாம தொந்தரவு பண்ண வேணாம்…”

வில்வ மூர்த்தி சொன்னதைக் கேட்டு சிரித்த விஸ்வ மூர்த்தி, “சரி வில்வா நாம போகலாம்…” என்றார்…

பின் இருவரும் அங்கிருந்து நகர முயலும்போது,

“அப்பா…” என்ற குரல் கேட்டு இருவரும் நின்றனர்…

“அந்த கான்டிராக்ட் ப்ரொசீஜர் எல்லாம் முடிஞ்சது அப்பா… நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் ஒருதடவை பார்த்து ஓகே சொன்னீங்கன்னா முடிச்சிடலாம் அப்பா…”

“என்ன சொல்லுற யுவி?... நீ சொல்லுறது???...” என ஆச்சரியம் கலந்த கேள்வியுடன் விஸ்வ மூர்த்தி யுவியைப் பார்க்க…

“அதே தான் அப்பா… எல்லாம் முடிஞ்சது… நம்ம யுவி பேசி எல்லாத்தையும் முடிச்சிட்டான்… அந்த கான்டிராக்ட் நமக்கு தான் அப்பா…” என்றான் துணா…

“ரொம்ப சந்தோஷம் துணா… அதை எப்படி முடிக்கிறதுன்னு தெரியாம நானும் அண்ணனும் ரொம்ப குழம்பி போனோம்… இப்போ யுவி முடிச்சிட்டான்னு நினைக்குறப்போ நிஜமாவே திருப்தி தான்… என்ன அண்ணா சரிதானே நான் சொல்லுறது?..”

“கண்டிப்பாடா…” என்றார் விஸ்வ மூர்த்தியும்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.