(Reading time: 10 - 20 minutes)

20. நினைத்தாலே  இனிக்கும்... - புவனேஸ்வரி

ம்ம வேட்டையாடு விளையாடு ஏ  சி பி ராகவனின் பாணியில் நடந்ததை அனைத்தும் சொல்லி முடித்தான் அருண் .. வாய் வலிக்க  பேசியவனுக்கு ஒரு வாய் தண்ணீர் கொடுக்க யாரும் தயாராய் இல்லை என்பது அவர்களின் முகத்திலேயே தெரிந்தது ..

" மச்சி , மனச தளர விடாதே.. தாகத்துல இருக்குற நமக்கு நம்ம ப்ரண்ட்  தண்ணி கொடுக்கலன்னா நாமளும் அமைதியா இருக்கணும்னு அவசியம் இல்லை .. அவங்க பெர்மிஷன் இல்லாமலே அவங்க வாட்டர் பாட்டிலை கலவாடிலாம் " என்று மனதிற்குள் ராஜா ராணி சத்யராஜ் போல பேசியவன் அனுவின்  பாட்டிலில் இருந்த நீரை குடித்தான் ... அத்தனை குழப்பத்திலும் அவன் தனது நீரை குடித்ததை மனதிற்குள் குறித்து கொண்டவள்

" மவனே என் பெர்மிஷன் இல்லாமலா பாட்டிலை தொடுற ? உனக்கொரு பனிஷ்மெண்ட் கொடுத்தாதான் நீ சரியா வருவ.. அதுவும் வெகு சீக்கிரமே " என்று மனதிற்குள் சவால் விட்டால் .. அதென்ன மாயமோ மந்திரமோ தெரியல.. நம்ம அருணின்  வாழ்க்கை அனுவின்  கோபத்திலே சீரழியுது .. ! சரி வாங்க இப்போ சீரியஸ் மோட் க்கு போவோம் .. அனு , ஆரு , அருண் , நந்து அனைவரும் ஜெனியையே பார்த்து கொண்டு இருந்தனர் ..

ninaithale Inikkum

வழக்கம் போல அழ போகிறாளா ? என் தலையெழுத்து இவ்வளவுதான்னு சொல்ல போகிறாளா ? என்று கேள்விகள்  அவர்களது மனதில் .. இது அனைத்திற்கும் எதிர்மாறாய் தனது நோட் புக்கை திறந்து ஒரு காகிதத்தை கிழித்தாள்  ஜெனி ..

" என்ன ஜெனி பண்ணுற ?" என்றாள்  நந்து ..அவளுக்கு பதில் சொல்லாமல் காகிதத்தில் ஏதோ எழுதினாள்  அவள் .. அதற்குள் அருண் , " அது ஒண்ணுமில்ல நந்து , நாளைபின்னே ஜெனியின் அப்பா அவகிட்ட , காலேஜ் போயி நீ என்னத்தை கிழிச்சன்னு  கேள்வி கேட்டா அவ இந்த பேப்பரை காட்டலாம் பாரேன் " என்று உலகமகா மொக்கை ஒன்றை சொல்லி வைத்தான் .. அவன் குடித்து மிச்சம் வைத்திருந்த நீரை அவன் தலையிலேயே ஊற்றி அபிஷேகம் செய்தாள்  அனு ..

" நானும் உன்னை அப்பறமா கவனிச்சுக்கலாம்ன்னு பார்த்தா , ஏன் டா வாயை திறந்து எனக்கு பீபியை ஏத்துற  ?" என்றாள் ..

அருணோ அவளை சட்டை செய்யாமல் " ஆரு  சோப் இருந்தா கொடு நான் குளிச்சிக்கிறேன் " என்றான் ..

" சோப்பு இல்லை அருண் , உனக்கு ஆப்புதான் ரெடி ஆகிட்டு இருக்கு " என்று எச்சரித்தாள் நந்து ..

" ஆஹா , சாந்த சொரூபினி நந்துவே எச்சரிக்கை கொடுக்கிறான்னா  இனி நான் அமைதியா இருக்க வேண்டியதுதான்  " என்று அமைதியானான் ..

சட்டென மூண்ட எரிச்சலில் அந்த காகிதத்தை வைத்துவிட்டு எழுந்தாள்  ஜெனி ..அதுக்காகவே காத்திருந்தவன், அந்த காலியான காகிதத்தை பார்த்து முறைத்தான் .. அதற்குள் அவளது கை பிடித்து தடுத்தாள்  நந்து ..

" ஹே என்ன ஆச்சு ஜெனி ? எங்க போகுற ?"

" கையை விடு .. எனக்கு இங்கிருந்து போகணும் " என்றவளின் குரலில் மொத்தமும் எரிச்சலில் .. அவர்களுக்கு தெரிந்த ஜெனி மிக இயல்பானவள் அமைதியானவள் .. ஜெனி அமைதியானவளா  ? அப்போ நந்து யாராம் ? அப்படின்னு நீங்க கேட்குறது புரியுது .. நம்ம அனுவின்  முன்னாடி, டி ஆர் சாரே அமைதியின் சிகரம் தான்னு நமக்கு தோணும்போது , ஜெனியும் நந்துவும் எம்மாத்திரம் ? அதுவும் நம்ம சந்துருவை லவ் பண்ண ஆரம்பிச்ச பிறகும் நம்ம நந்து அப்பாவிதான்னு சொன்னா , அதை நந்துவே நம்ப மாட்டாளே ..!

" ஹே உட்காரு ஜெனி .. இருக்குற குழப்பத்துல நீ ஒருத்தி ! முதலில் நாமே என்ன நடக்குதுன்னு கண்டுபிடிச்சு  இந்த  கவின் குரங்குக்கு வேப்பிலை அடிக்கணும் " என்றாள்  அனு .. அதற்கு மேலும் பொறுக்க  மாட்டாமல் பொங்கி எழுந்தாள்  ஜெனி ..

" நீங்க எல்லாம் உண்மையிலேயே ப்ரன்ட்ஸா  ? ப்ரண்ட்ஷிப் க்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு ? இப்படி எக்கு தப்பா யோசிக்கிற  புத்தி இருந்தா நம்மளை பிரிக்க தீப்தி வேணாம் .. நாமலே போதும் " என்றாள்  அவள் அனல் பறக்க

" இப்போ நீ ஏன், விசு படம் க்ளைமாக்ஸ்ல வர்ற மாதிரி டென்ஷன் ஆகுற ?" என்ற அருணை அடக்கினாள்  அனு . மேலும் அவனை தொடர்ந்த ஜெனியின் கோபமான பார்வையை சந்தித்தவள், " நீ ஸ்டார்ட் பண்ணு டீ " என்று உத்தரவு கொடுத்தாள் .. அவள் முக பாவனையில் சிரிப்பாதா ? அல்லது கோபத்தில் கொதிப்பதா ? என்று குழம்பி தான் போனாள்  ஜெனி .. இருப்பினும் இப்போது அவள் பேசுவது கவினுக்காக என்றதும், தரையிறக்கி வந்த விமானம் மீண்டும்  பறக்க தொடங்கியது போல அதே குரலில் பேசினாள்  ஜெனி ..

" இது பாருங்க, கவீன்  அந்த  சிப்பான்ஷி (அதான் தீப்தி )​ விஷயத்தில் ஏதோ முடிவெடுத்து இருக்குறதுன்னால தான் நம்மகிட்ட கூட சொல்லாமல்  தைரியமாய் எதையோ பண்ணிட்டு இருக்கான் .. அவன் ப்ளான்  என்னன்னு எனக்கும் தெரியாது தான் .. ஆனா நான் அவனை நம்புறேன் .. அவனுக்கு நாம எவ்வளவு பிடிக்கும், நமக்காக அவன் என்னென்ன செஞ்சு இருக்கான்னு நாமலே தான் நினைச்சு பார்க்கணும் .. இன்னைக்கு ஒரு சூழ்நிலை அவனை தப்பாக காட்டலாம் ..அதுக்காக அவனை சந்தேகப்படுவிங்களா  ? நாளைக்கு அவன் நாடகம் முடிஞ்சு அவன் பக்கம் தப்பில்லைன்னு தெரிஞ்சதும் , நீங்க என்ன செய்றதா முடிவு பண்ணி இருக்கீங்க ? ஒரு விஷயம் தெரியலைன்னா , தெரிஞ்சுக்கணும்னு நினைகிரதுல தப்பில்லை .. ஆனா அதில் கொஞ்சம் பொறுமை அவசியம் .. அதை கண்டு பிடிக்கிறேன் , இதை கண்டுபிடிக்கிறேன்னு யாராச்சும் கவீனை பத்தி தப்பா பேச நினைச்சிங்க , அப்பறம் ஜெனியின் கோபத்துக்கு நீங்கதான் பதில் சொல்லணும் " என்று பேசி முடித்து பெருமூச்சு விட்டாள் .. சட்டென தோன்றிய எண்ணத்தில் ஆருவை  பார்த்து கண்ணடித்த அனு , கைகளை தட்டி பாராட்டும் தொனியில் எழுந்து நின்றாள் ..

" இந்த பிசாசு ஏன் என்னை பார்த்து கண்ணடிக்கிறா ?" என்று குழம்பிய ஆருவும் எதுக்கோ இருக்கட்டுமே என்று சேர்ந்து கை தட்டினாள் .. பெஞ்சில் இருந்து ஓடி வந்த அனு  ஜெனியை கட்டிக்கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் .. என்ன நடக்கிறது ? என்று விழி அகல பார்த்தது ஜெனி மட்டுமல்ல அருண் மற்றும் நந்து தான் .. அதை கவனித்த அனுவும்,

" போதும்டா உன் வாயில் தங்க சுரங்கமும் இல்லை பூலோகமும் இல்லை .. கொஞ்சம் ஷட்டரை மூடு " என்றாள் ..

" என்ன நடக்குது அனு  ?"

" ஒண்ணுமில்ல ஜெனி .. இந்த டிஸ்கஷன் எல்லாம் சும்மா லுளுலாய்க்கு .. எல்லாம் உன் டெஸ்ட் பண்ணுறதுக்கு ?"

" எனகென்ன டெஸ்ட் ? "

" எல்லாம் இந்த நந்துவினாலத்தான் " என்று நந்துவை இழுத்துவிட்டாள் ..

" ஐயோ நான் என்னடி பண்ணேன் ?" என்ற பாணியில் விழித்தாள்  நந்து ..

" அவ என்ன பண்ணினா ?"  என்றாள்  ஜெனி ஆராயும் பார்வையை ..

" அது ஒண்ணுமில்ல டா ..என்னதான் நீ தெளிவா இருந்தாலும் அப்பபோ லேடி 'இதயம் முரளி ' மாதிரி நீ சோகமா இருக்கியாம் .. அதான் கவீனை பத்தி நீ மைண்ட்ல என்ன நினைச்சிட்டு இருக்கன்னு தெரிஞ்சுக்க நாங்க போட்டு வாங்கினோம் " என்று அருண் ஆரம்பத்தில் சுட்ட தோசையை அப்படியே திருப்பி போட்டாள்  அனு ..

அப்போதும் ஜெனியின் முகம் தெளியவில்லை..

" என்னடி இப்படி பார்க்கிற ?"

" உன்னை நம்ப முடியலையே அனு .. இதோ இந்த குரங்கின் மூஞ்சியே எல்லாத்தையும் காட்டி கொடுக்குதே !"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.