(Reading time: 13 - 26 minutes)

07. வானவில் - அமுதவள்ளி

"யற்கை" ஆண்டவன் படைப்பில் எனக்கு பிடித்தது. சூரிய உதயம், காலை பனி, சூரியன் மறையும் போது இருக்கும் ஆரஞ்சுநிற வண்ணம், பால் நிலா, நட்சத்திரம், கடல், மலை, சிறு தூறல், மழையில் நனைவது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். (முதல் இரண்டை பார்த்து ரொம்ப நாள் ஆகிடுச்சு. என்ன செய்ய என் பாஷையில் அது நள்ளிரவு.) வேலையில் நான் இவற்றை மறந்தாலும்  துன்பதிலோ குழப்பதிலோ இருக்கும் போது இவை என்னை அமைதிபடுத்தும்.

(நீங்க இதை உணர்த்து இருக்கீங்களா?? ஏன் சம்பந்தமே இல்லாமல் இதை சொல்றேன்னு கேட்காதிங்க. எனக்கே தெரியலை. )

நம்ம நிஷாவும் அஞ்சனாவும் ஹாஸ்டல் பார்க்ல இருக்காங்க. (எங்க மத்த ரெண்டும்? காதல் வானில் சிறகடிக்கராங்களோ?)

Vanavil

"அஞ். என்னடா. சந்தோஷை பார்த்துட்டு வந்ததிலிருந்து நீ சரியில்லை. இந்த சின்ன மண்டைக்குள்ள என்ன ஓடுது"

"நிஷ். ஐ பீல் சோ பேட். ஹாசினியும் சாதனாவும் யோசிக்கறேன்னு சொன்னாங்க. பட் இன்னிக்கு அங்க நடந்ததே வேற. நாமளும் அவங்களை கிண்டல் செய்தது சரியா?"

"அஞ். டோன்ட் வொர்ரி. நமக்கு அந்த பீல் வரலை. சோ அது எப்படி இருக்கும்னு தெரியாது. நாமளும் தடுமாறும்போது இப்படி இருக்க சான்ஸ் இருக்கு. தென் கிண்டல். நாம இதுக்கு முன்னாடி அவங்களை கிண்டல் செய்யலியா? ஏன் உன்னையும் கமலையும் கிண்டல் செய்யலியா.  மே பி அவங்க பீல் செய்யறது நம்ம கிண்டல் செய்யறதால் அதிகமாகளாம்"

"ஹ்ம்ம், நீ சொல்றது சரிதான்"

"சியர் அப். இன்னிக்கு அதிசயமா கிளைமேட் நல்லா இருக்கு. கொஞ்சம் ரசிப்போம்"

"வாவ். சன்செட் ஆகறது  சூப்பரா இருக்கு. மழை வராமாதிரி வேற இருக்கு."

"மண் வாசனை நல்லா இருக்கு" என்று சொல்லிக்கொண்டே மூச்சை இழுத்தாள் நிஷ்.

"அந்த ரெண்டு குரங்கையும் எழுப்பலாம். கிளைமேட்டை ரசிக்காம தூங்குதுங்க"

"வா. தண்ணியை ஊத்தலாம்"

தண்ணி அவர்கள் மேல் கொட்ட பதறி எழுந்தனர் இருவரும்.

"பிசாசே. உன்னை" என்று பாய்ந்தாள் சாது.

"ஏண்டி இப்படி பண்ணீங்க" என்றாள் ஹாசி.

"வெளியில் வந்து பாருங்க. நம்ம சென்னை இப்படி இருக்கறதே உலக அதிசயம். அதை பார்க்காமல் தூங்கறீங்க" என்றாள் நிஷ்.

அவள் சொல்லி முடிக்கவும் மழை வரவும் சரியாக இருந்தது. நால்வரும் தங்கள் குழப்பதை ஒதுக்கி மழையில்  விளையாடினர்.

நால்வரும் அவர்களின் மனநிலையைக்கு தகுந்த வேற வேற பாட்டை பாடிகொண்டிருந்தனர்.

(உங்களுக்கு தெரிஞ்சு இருக்குமே. நான் பாட்டை சொல்றேன், நீங்க கெஸ் பண்ணுங்க)

**** மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே

மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா?

பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே

பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ?

****சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ

சக்கரவாகமோ மழையை அருந்துமா - நான்

சக்கரவாகப் பறவை ஆவேனோ

****துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் இதயத்தை

இதயத்தை நனைத்து விட்டாய்

பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை

நிகழ்திவிட்டாய்

****ஒஹோ மேகம் வந்ததோ ஏதோ தாகம் தந்தடோ

எல்லாம் பூவைக்காகத்தான் பாடும் பாவைக்காகத்தான்

பூக்கள் மேல் நீர்த்துளிகள் வெண் பாக்கள் பாடாதோ

தூறல் போடும் நேரம் பூஞ்சாரல் வீசாதோ

(கண்டுபிடிசீங்களா? நீங்க நினைக்கறது சரியே. முதல் மற்றும் மூன்றாவது பாடல் நம்ம ஹாசினி யும் சாதனாயும் பாடியது. மற்ற இரெண்டும் நிஷாவும் அஞ்சனவும் பாடியது.

அந்த வாரம் எந்த மாற்றமும் இன்றி சென்றது. காதலின் முதல் நிலையில் இருந்த இருவரும் அவர்களின் துணையை சந்திக்கவில்லை. ஆனால் மற்ற இருவரும் அவர்களின் ஜோடியை பார்த்தனர். (பார்த்து என்ன செய்யறது. லவ் வரலையே. இன்னும் எத்தனை எபிசோட் எழுதனமோ தெரியலை).

நிஷாவும் நவீனும் ஒரு ஹலோவுடன் தங்களின் ஒரே சந்திப்பை முடித்துகொள்ள  அஞ்சனாவும் அத்வைதும் தினமும் பார்த்தாலும் தினமும் அது சண்டையில் முடிந்தது.

அந்த வார இறுதியில் நால்வரும் ஊருக்கு கிளம்பினர்.

டின்னெர் பார்சல் வாங்கிகொண்டு  சாதனாவை பஸ் ஏற்ற சென்றனர்.

"ஹே பஸ் வருது" என்றாள் சாது.

"ஆமாம் வருது. அதுக்கு இப்ப என்ன பண்ணனும்" என்றாள் நிஷ்.

"நிஷ். அதில் போனால் சீக்கரம் கடலூர் ரீச் ஆகலாம்." என்றாள் சாது.

"தேவையேயில்லை. நீ சீக்கரம்  ரீச் ஆகி என்ன செய்யபோகிறாய்" என்றாள் அஞ்.

"ஹாசி நீயாவது சொல்லு" என்றாள் சாது.

"கடலூர் பஸ் இருக்கும். வாங்க போகலாம்" என்றாள் ஹாசி.

யாரும் சாதுவை கண்டுக்கவேயில்லை.

"ஹே நான் என்ன சொல்லிட்டு   இருக்கேன். நான் இந்த பஸ்ல போறேன்" என்றாள் சாது.

"நீ தூங்கிடுவே வேண்டாம்" என்றாள் ஹாசி.

"என்னமோ நான் மட்டும் தான் தூங்கறாமாதிரி பேசாதே. நீயும் தூங்குமூஞ்சுதான்" என்றாள் சாது.

"சாது பெயரை  மாத்தகூடாது. அவ சாப்பாட்டுராமி" என்றாள் அஞ்.

"அடிங்க." என்றாள் ஹாசி.

"உண்மையை தானே சொன்னாள்" என்றாள் சாது.

 "போடி. உதை படுவே" என்றாள் ஹாசி

"ஹே எதுக்கு அவளை கிண்டல் செய்றீங்க. நீ அழுவாதே ஹாசி செல்லம். உனக்கு பிடிச்ச கிட்கேட், சிப்ஸ், பிஸ்கட் எல்லாம் வாங்கி  தருகிறேன்" என்றாள் நிஷ்.

"கொன்னுடுவேன் உன்னை. சப்போர்ட் பண்றமாதிரி என்னை கிண்டல் செய்ற " என்றாள் ஹாசி.

இங்க இவங்க கதையடிக்க இவர்களை யாரோ பார்க்கின்றனர். (யாரது? வேற யார் இதை செய்வாங்க?)

 நம்ம ஹீரோயின்ஸ் பேசறதை நம்ம ஹீரோஸ் கேட்டு சிரிச்சிட்டு இருக்காங்க.

நிஷா நவீனை பார்த்துவிட இவர்கள் அருகில் வந்தனர் ஹீரோ நால்வரும்.

"கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே

எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே "

இப்போ எதுக்கு இந்த பாட்டுன்னு கேட்கறீங்களா? அங்க நாலுபேர் அதைத்தான் செய்யறாங்க.

"ஹாய். என்ன எல்லோரும் ஊருக்கு கிளம்பியாச்சா?" என்றான் அத்வைத்.

"ஆமாம். நீங்க?" என்றாள் நிஷ்.

இவர்களால் கண்ணில் பேசிகொண்டிருந்த நால்வரும் கலைந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.