(Reading time: 19 - 37 minutes)

18. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

திரவன், வானோடு சங்கமித்து வெண்ணிலவை பெற்றெடுத்த, இரவுவேளை .. ஷக்தியின்  அறையில் அமர்ந்தபடி ஜன்னல் வழியாக வெண்ணிலவை ரசித்து கொண்டிருந்தாள் சங்கமித்ரா .. அதீத மகிழ்ச்சி அவள் மனதில் கவிதைகளை பொழிந்து கொண்டிருந்தது.

நிலவாய் நீ

மேகமாய் நான்

Ithanai naalai engirunthai

எத்தனை இரவுகள் உன்னை தீண்டி தழுவி இன்புற்றேன்

காற்று வந்து நம்மை களைத்த போதெல்லாம்

மழையாய் மாறி கண்ணீர் வடித்தேன்

என் துயர் கண்டு நீயும் சில நாள் தேய்பிறையாகிறாய் 

என் வாடிய முகம்கண்டு அமாவாசை ஆகினாய்

இன்றோ உணர்த்திவிட்டாய் ஒரே இரவில்

நீ நிலவானால் நான் வானம் என்று

என்றென்றும் உன்னை சுமந்தபடி நான் !

அரக்கு வண்ண புடவை அணிந்து, மல்லிகை மலர் சூடி, அவன் அணிவித்த மாங்கல்யத்துடன் தேவதையாய்  மிளிர்ந்தவளை  மனதிற்குள் ரசித்தபடியே அறைக்குள் வந்தான் ஷக்தி ..

" எஸ்கியுஸ்  மீ , உள்ளே வரலாமா ?" என்றான் குறும்புடன் .. அதுவரை அவனை மனதிற்குள் ரசித்தவளின் முன்னே நின்று " இப்போ நேரடியாகவே ரசிக்கலாம் " என்று அனுமதி தந்தது போல வசீகரமாய் எதிரில் நின்றான் ஷக்தி .. இமைக்கவும் மறந்து அவனையே மேலிருந்து கீழென பார்த்து வைத்தாள்  மித்ரா ..

" ஹெலோ மேடம் , இந்த சைட் அடிக்கிறதெல்லாம் ஆம்பளைங்க வேலை, தெரியுமா " என்றான் அவன் கண் சிமிட்டி, புன்னகையுடன் ஓடி வந்து அவன் மார்பில் தஞ்சம் அடைந்தாள் மித்ரா .. புது மனைவியின் திடீர் தாக்குதலை மனதிற்குள் ரசித்தபடி அவளை அணைத்து  நின்றான் ஷக்தி .  எத்தனையோ நாட்கள் பகல் கனவாய்  கண்ட காட்சி இன்று நிறைவேறிய ஆனந்தத்தில் அசைவில்லாமல் அவனோடு இணைந்து நின்றாள்  அவள் ..

" காலம் என்றே தேரே  ஆடிடாமல் நில்லு

இக்கனத்தை போலே இன்பம் எது சொல்லு "  என்றோ கேட்ட பாடல் வரிகள் செவிகளுக்குள் ரீங்காரமிட , அப்படியே நின்றிருந்தாள்  சங்கமித்ரா ..

" ஹே , என்னடீ நின்னுகிட்டே தூங்கறியா ?" என்று கிசுகிசுத்தான் ஷக்தி.. முகமெங்கும் வெட்கம் பரவ சட்டென அவள் விலகி நிற்க ,

" ஐயோ பாருடா, கல்யாண மேடையில் வெட்கப்பட தெரியாதுன்னு சொல்லிட்டு இப்போ மட்டும் " என்று அவளை வம்புக்கு இழுத்தான் அவன் .. இதற்குமேல் அமைதியாய் இருந்தா நல்லதுக்கு இல்லை மித்ரா என்று தனக்குள்ளேயே சொன்னவள் , செல்லமாய் அவன் தலையில் தட்டினாள் ..

" டேய் யாரு வெட்கபட்டா ? அதெல்லாம் ஒன்னும் கிடையாது "

" என்னடி அடிக்கிற ?"

" என்ன தெரியாதது போல கேட்குற ? கல்யாணம் ஆனாலே பொண்டாட்டி கையாள அடி வாங்கணும் என்பதுதான்  புருஷ லட்சணம் " என்று சொல்லு அவன் கன்னத்தை கிள்ளினாள்  சங்கமித்ரா .. அவள் கைகளை சிறைபிடித்தவன்,

" ஹே அத்தை பொண்ணு, உன்கிட்ட நிறைய பேசணும் " என்றான் .

" இருடா , நான் வெளில போயி மழை வருதான்னு பார்த்துட்டு வரேன் "

" ஏன் ?"

" இல்லை நீ , நிறைய பேசணும்னு சொல்லுறியே அதான் " என்றாள்  சங்கமித்ரா குறும்புடன் ..

" திமிரு டீ உனக்கு " என்றான் அவன் ரசனையாய்

" பின்ன , மிசர்ஸ் ஷக்தின்னா  சும்மாவா " என்று இல்லாத கொலரை தூக்கி விட்டு கொண்டாள்  சங்கமித்ரா .. சட்டென ஏதோ ஞாபகம் வர , அனிச்சையாய் அவள் முகம் வாடியது ..

" ஹே என்னடி ?" என்றான் அவன் .. அவனுக்கு பதில் சொல்லாமல் அதே அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்  அவள் .. புருவமுடிச்சுடன் அவள்  எதிரில் அமர்ந்தான் ஷக்தி ..

" எதுவாக இருந்தாலும் சொல்லு.. "

" ஏன் இந்த டிராமா எல்லாம் ஷக்தி ? எப்படி நொந்து போயிட்டேன் தெரியுமா .. கல்யாண மேடையில் கல்யாணத்தை நிறுத்த கூடாதுன்னு  தான் நான் அமைதியா இருந்தேன் .. மத்தபடி மனசுக்குள்ள , சாகுறதுக்கு வழியை யோசிச்சிட்டு இருந்தேன் தெரியுமா ?" என்று கண்கலங்கியவளை  பார்த்து பதறினாலும் அதை முகத்தில் காட்டி கொள்ளாமல் இருந்தான் ஷக்தி ..

" நீ பண்ணது மட்டும் சரியா ?" என்றான் அவன் துளைக்கும் பார்வையுடன் .. அவள் எதிர்த்து பேச போகிறாள் என்று  எதிர்பார்த்து அமர்ந்தவன் அவளது பதிலில் கரைந்தே விட்டான் ..

" சரியில்லை தான் டா .. சரியே இல்லை .. நீ எவ்வளவு மனசு கஷ்டபட்டு இருப்ப ? உன்னை நான் உதாசினபடுத்தின மாதிரி ஆச்சு .. உன்மேல எனக்கு நம்பிக்கை இல்லாத மாதிரி வீட்டை விட்டு போனேனே ..செத்துட்டேன் ஷக்தி .. உன்னை கஷ்டப்படுத்திட்டோம்ன்னு எனக்கு தோணின நினைப்பே என்னை கொன்னுடுச்சு .. உனக்கு எந்த விதத்திலும் நான் நான் தகுதியானவள் இல்லைன்னு நினைச்சுதான் , நான் சென்னை போனதுமே இனி திரும்பி வரவே கூடாதுன்னு நினைச்சேன் .. நான் உனக்கு எந்த விதத்திலும் சரியான  மனைவி இல்லைன்னு எனக்கு அப்போதான் தோணிச்சு .. ஆனா , அதே நேரம் என்னால நீ இல்லாமளுன் வாழ முடிலடா .. உனக்கு கல்யாணம்னு தெரிஞ்சதும் எப்படி உடைஞ்சு போயிட்டேன் தெரியுமா " என்றவள் கண்களின் வெள்ளபெருக்கு .. அவள் அருகில் அமர்ந்து அவளை தோளில்  சாய்த்து கொண்டான் அவன் ..

" ஹே அழு மூஞ்சி , ஏதோ உன் மேல தப்புன்னு சொன்னா , நீயும் ரோஷமாய் சண்டை போடுவான்னு பார்த்தா  இப்படி அழற ?" என்று இயல்பாய் பேசி அவளை மாற்ற முயன்றான் ஷக்தி..

" சும்மா என்னை சமாதானம் பண்ணனும்னு இப்படி பேசாத ஷக்தி .. எனக்கு தெரியும் நீ எவ்வளவு கஷ்டபட்டு இருப்பன்னு " என்றாள்  அவள் கண்ணீரை அடக்கி கொண்டே

" சோ வாட்  ? இனிமே என்னை கண் கலங்காம பார்த்துக்கோ " என்றான் ஷக்தி ..

" என்னை மன்னிப்பு கேட்க விடு " என்று கெஞ்சியவளை பார்த்து சிரிப்புதான் வந்தது அவனுக்கு ..

" சரி சொல்லு "

" நானும் வைஷுவும் எப்பவுமே சண்டை போட்டுகிட்டாலும் அவளுக்கு என்மேல பாசம் அதிகம்னு எனக்கு தெரியும் .. எனக்காக அவ மனசுல இருக்குற எண்ணங்களை மறைக்க கூடாதுன்னு நினைச்சேன் .. அதுவும் இல்லாமல் நீ துபாய்ல இருந்து வந்ததும் , அவ ரொம்ப சந்தோஷமாய் இருந்தது , நமக்கு நிச்சயம் பண்ண முடிவு பண்ணினப்போ வீட்டில் இல்லாமல் போனது இது எல்லாமே எனக்கு அக்காவின் மனசை கஷ்டபடுத்தி சந்தோசம் ஆகுற மாதிரி தோணிச்சு .. நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன் டா .. நாம ஒன்னு சேருறது யாரு மனசையும் கஷ்டபடுத்தி நடந்ததா இருக்க வேணாம்னு தோணிச்சு .. வைஷு  மனசுல என்ன இருக்குதுன்னு தெரிஞ்சுக்கணும்னு தோணிச்சு .. நானே அக்காகிட்ட கேட்டிருக்கலாம் தான் .. அவளும் சொல்லி இருப்பாதான் ... ஆனா நானும் சாதாரண மனுஷி தானே டா . எனக்கும் மனசு மாறலாம் , நாளைக்கு ஏதாவது ஒரு சூழ்நிலையில் எனக்கு, இதே மாதிரி தோணிட கூடாது .. அக்காவுக்கு உன்மேல காதல்ன்னு நான் எப்பவும் நினைச்சிட கூடாது .. எந்த பிரச்சனையுமே ஆரம்பத்திலேயே சரி பண்ணுறது தான் சரின்னு தோனினுச்சு .. ஆனா  உன்னை விட்டு நான் போன அந்த ஒரு வாரத்தை நான் நிச்சயம் நியாயபடுத்த மாட்டேன் ஷக்தி .. பட் அதே நேரம், இங்க நீ எப்படி இருந்தியோ அதே அளவு வேதனையில் தான் நானும் இருந்தேண்டா " என்றாள்  சங்கமித்ரா ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.