(Reading time: 9 - 17 minutes)

03. ஊனமறு நல்லழகே - ப்ரியா

வன் பெயரை முதன் முதலாய் உச்சரிக்கிறாள்..!! சொல்ல முடியாத ஏதோ ஒரு உணர்வு. பின்னாளில் சொல்ல முடியாமல் போகும் என்று அவளுக்கு என்ன தெரியும்!!

அவளை மாடியில் இட பக்கம் இருந்த அறைக்குள் அழைத்து சென்றார் மதுமதி. முன் நாற்பதுகளில் இருந்தார். எளிமையான தோற்றம். கனகம்பாளின் முக ஜாடை கொஞ்சம் இருந்தது. கண்களில் மனதின் மென்மை பிரதிபலித்தது.

பெரிய அறை, அறையின் வலப்புறம் இன்னொரு அறைக்கான கதவு உடை மாற்றும் அறை போலும் அதை ஒட்டி பாத்ரூம். பெரிய அலமாரி சுவருடன் பதிக்க பட்டது போல. அறையின் நடுவே பெரிய கட்டில். அருகில் ஒரு சிற அலமாரி அதன் மேல் விளக்கு. அறைக்குள் நுழைந்ததும் அமரும் வண்ணம் சோபா.

oonamaru-nalazhage

சரளா கொண்டு வந்த பழச்சாறை வாங்கி கொண்டு அவளை அனுப்பி வைத்து விட்டு, அவளை அந்த அறையை ஒட்டியிருந்த அறைக்குள் அழைத்து சென்றார். அது உடை மாற்றும் அறை தான் அதனுள்ளும் அலமாரிகள். அதன் முடிவில் அந்த அறையில் இருந்து பின்புற தோட்டத்தை பார்க்கும் படி அமைக்கப்பட்ட பால்கனி. அதில் பூச்செடிகள் அருகே இரு நாற்காலி ஒரு டீபாய்.

"உட்காரும்மா" முகத்தை விடவும் குரலில் மென்மை. தாயின் பரிவுடன் மனம் தழுவி செல்லும் குரல்!!

தயக்கத்துடன் அமர்ந்தாள் ஸ்ரவந்தி. அவள் கைகளில் க்ளாசை கொடுத்து விட்டு அருகில் அமர்ந்து அவளையே பார்த்து கொண்டிருந்தவர் சட்டென தோட்டத்தின் பக்கம் திரும்பி கொண்டார்.

கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தவளாக சற்றே சாய்ந்து அமர்ந்து ஜூசை பருகினாள். அவள் தயக்கம் விலக அவளை கவனியாதது போல திரும்பி ஒர கண்ணில் அவளை பார்த்தவர் முகத்தில் மென்முறுவல்.

"உன் பேரு என்னம்மா?"

"ச..ஸ்ரவந்தி"

"நல்ல பேரு.. ஏன் என்கிட்ட பயப்படுற. நான் உன்ன என்னம்மா பண்ணிட போறேன்"

"....."

"ரொம்ப பயந்து தெரியறியே?"

"......"

"ஒ. என் பையன் பண்ண வேலைக்கு பயந்து போய் இருக்கியா?, பயப்படாத சரோம்மா அவன் நல்லவன்"

ஸ்ரவந்தி நிமிர்ந்து கேள்வியை பார்த்தாள்.

"நிஜம் தான் மா, அவன் நல்லவன்.. என்ன நீ நம்பலாம் அவன் இதை பண்ணிருக்கன்னா ஏதோ கரணம் இருக்கும்மா"

இன்னும் அவள் கேள்வியை நோக்க, அவளை அன்புடன் பார்த்து புருவம் உயர்த்தினார் மதுமதி.

"இல்ல நீங்க சரோன்னு யாரையோ..."

அவள் சிறு பிள்ளையின் தோரணையில் குழப்பமாய் சொல்ல அதில் வாய்விட்டு சிரித்தவர்,

"உன்ன தான் அப்படி கூப்பிட்டேன் ஸ்ரவந்திய எப்படி சுருக்கி கூபிட்ரதுன்னு தெரியல அதான் சரோம்மா நு கூப்பிட்டேன் உனக்கு பிடிக்கலன்னா நான் முழு பேரையே கூப்பிடுறேன்"

"ஐயையோ அதெல்லாம் இல்ல, நீங்க அப்படியே கூபிடுங்க அம்... அத்தை"

"பரவாயில்லை அம்மா நு கூப்பிடு டா"

"வேண்டாம் அத்தை இருக்கட்டும்"

"ஏன் என்னை எல்லாம் அப்படி கூப்பிட மாட்டியோ?"

"அப்படி இல்லை அத்தம்மா"

"அடடா கில்லாடி தான், சண்டை போட விடாம ரெண்டையும் சேர்த்து கூப்பிடுடியே"

"ம்ம்"

"சரி நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு ம்மா, எது வேணும்னாலும் என்னை கேளு, ஒரு நிமிஷம் இரு வரேன்"

அவளிடம் சொல்லி விட்டு அவர் செல்ல, பயம் குழப்பம் சற்றே அகன்ற நிலையில் அவள் முகத்தில் மெல்லிய புன்னகை.

சற்று நேரத்தில் திரும்பி வந்தவர் கையில் அழகிய புடவையும் ஒரு செட் காட்டன் சுடிதாரும்.

"நீ வர்றனு போன் வந்துசும்மா அதான் நீ டிரஸ் எல்லாம் எடுத்துட்டு வரியோ இல்லையோன்னு ருத்ர கிட்ட கேட்டு இதை வாங்கி வெச்சேன்"

"நான் டிரஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துருக்கேன்"

"பரவாயில்லம்மா இதை போட்டுக்கோ இந்த, இந்த சுடிதார் சாப்ட் காட்டன் தான் தூங்கும் பொது போட்டுக்க நல்லா தான் இருக்கும்"

சிறு புன்னகையுடன் அதை வாங்கி கொண்டு அவள் நிற்க மதுமதி அங்கிருந்து சென்று விட்டார். அந்த அறையை நோட்டம் விட்டபடி சற்று நேரம் கழித்தவள் உடை மாற்றி அங்கிருந்த சோபாவில் படுத்து உறங்கி விட்டாள்.

"என்னடா பண்ணிட்டு வந்திருக்க?"

"எத்தன தடவை இதே கேள்வியை கேட்பிங்க அப்பா, அது தான் பதில்  சொல்லிட்டனே"

"துருவா என்ன பேச்சு இது அப்பா கிட்ட" சற்றே குரல் உயர்த்தி அதட்டினார் மதுமதி.

கையசைத்து அவரை அமைதியாக இருக்க சொன்னார் மதியழகன்.

"உங்க அண்ணா கல்யாணத்துல போய் இந்த பொண்ணு கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம தாலி கட்டி கூட்டிட்டு வந்துருகியே பாவம் டா"

"யாரு அவனா? அவனா அண்ணன் எல்லாம் என்னால எதுக்க முடியாதுப்பா. இந்த பொண்ணு கிட்ட தான் எப்படி சொல்லுவேன்னு புரியல அதா நான் பாத்துகிறேன் விடுங்க" ,கோவமாக வெளி வந்திருக்க வேண்டிய வசனம் இது ஆனால் தெளிவாக அமைதியாக வந்தது. அது தான் மிதுர்வன்.

அதிர்ந்து பேசியோ கதியோ காரியம் சாதிக்க நினைக்க மாட்டான்.

"அதுக்கில்லை டா அந்த பொண்ண பாத்த பாவமா இருக்கு குழந்தை மாதிரி இருக்க டா" , மதுமதி.

"எனக்கும் புரிஞ்சுதும்மா, பார்க்கலாம் இப்போ நான் போய் தூங்கறேன்"

"சாப்பிட்டு போடா"

"எதுவும் வேண்டாம் பால் மட்டும் கொடுங்க அம்மா, அவ சாபிட்டாளா?"

"இல்லை டா ரெஸ்ட் எடுக்க சொன்னேன்"

"ஒ.. அப்போ அவளுக்கு மேலேயே சாப்பாடு அனுப்பிடுங்க, எனக்கு பால் கொடுங்க வாங்க" என கூறிய படி எழ போனவனிடம்,

"மிதுர்வா உட்காரு இன்னும் உங்கிட்ட பேசணும்" என்றார் மதியழகன்.

"என்னப்பா?"

"நாளைக்கு சாயங்காலம் ரிசப்சன் வெச்சுக்கலாம், நீ தாலி கட்டுன உடனே எனக்கு போன் வந்திருச்சு முக்கியமான உறவுகள் எல்லாம் நம்ம ஊருல கல்யாணத்துக்கு வந்துடு அங்க தான் இருகாங்க எல்லாரையும் அப்படியே நாளைக்கு இங்க வர சொல்லிட்டேன், என் நண்பர்களுக்கும் உன் சரக்கில்ல கூட கொஞ்ச பேருக்கு சொல்லிட்டேன் உனக்கு யாரா கூபிடனுமோ கூப்பிட்டுக்கோ அப்படியே அந்த பொண்ணு கிட்டயும் கேட்டிரு"

"இப்போ இதெல்லாம்..."

"கண்டிப்பா நடக்கணும், நம்ம சர்வேஸ்வர ஹால் புக் பண்ணிட்டேன் சாப்பாடு டெக்கரேசன் எல்லாம் சொல்லியாச்சு, காலைல நீயும் அந்த பொன்னும் போய் நம்ம கடைல டிரஸ் மட்டும் பார்த்து எடுத்துருங்க மதியத்துக்கு அதுவும் ரெடி ஆகிடும்"

"சரிப்பா" ஒரு நிமிடம் மனதிற்குள் தந்தையை நினைத்து மகிழ்ந்து வியந்தான்.

சராசரி தந்தையை போல் கத்தி கூச்சல் போடாமல் மகன் எந்த முடிவு எடுத்தாலும் பொறுமையாக சிந்தித்து அவனுக்கு தோல் கொடுக்கும் தந்தை. அவர் வளர்ப்பின் மேல் இருந்த நம்பிக்கையின் வெளிப்பாடு.

"மதி, காலைல நகை கடையில் இருந்து வர சொல்லியிருக்கேன் உனக்கும் அந்த அபோன்னுகும் வேணும்ங்கிற நகையை எடுத்துகோங்க"

"சரிங்க"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.