(Reading time: 7 - 14 minutes)

மூங்கில் குழலானதே – 01 - புவனேஸ்வரி

பிரபஞ்சத்தில் நிகழும் அதிசயங்கள் பல ! பிரபஞ்சமே ஒரு அதிசயம் தானா ? இந்த உலகத்தை படைத்தவன் யார் ? கடவுளா ? விஞ்ஞானமா ? இன்னும் மனிதன் கண்டறியாத பதில் இது. சொல்லப்போனால் மனிதன் ஒன்றுபட்ட கருத்தில் இணையாத சிந்தனை இது . எனினும் உலகின் ஒவ்வொரு படைப்பிலும் அதிசயம் இருப்பது உண்மைதானே ?

அப்படி அதிசயமான படைப்புகளில் ஒன்றுதான் மனிதன் ! மனிதனின்  ஒவ்வொரு புலனிற்கும், ஒரு செயல் உண்டு ! அதுவே காரணமாய் அமைகிறது! உதாரணத்திற்கு பற்களை எடுத்து கொள்வோம் ! பெரிய விலங்குகளுக்கு  இருக்கும் பற்கள் மனிதனுக்கில்லை ! மனிதனுக்கு இருக்கும் பற்கள் சிறு பிராணிகளுக்கு இல்லை .. ஆனால் அவரவர் உணவு முறைக்கு தோதான பற்கள்தான் கிடைக்க பெற்றுக்கிறது ! பற்களுக்கே  இப்படி காரணங்கள் இருக்கும் என்றால் இதயத்திற்கு ???

இதயம் , ஏன் மனிதனின் உடலில் கண்காணாத இடத்தில் மறைந்திருக்கிறது? மறைந்திருக்கும்  இதயத்தில் கிளரும் உணர்வுகளை வெளிக்கொணர தெரிந்தவன் மனிதன் , என்று உணர்த்துவதற்கா ? அல்லது கண்களுக்கு தெரியாமல் இதயம் அமைந்திருப்பதுபோல, இதயத்தில் கிளரும் உணர்வுகளும் மறைக்கப்பட வேண்டும் என்பதா ?

Moongil kuzhalanatheஇதயம் காட்டும் அன்பிற்கு பல முகங்கள்  உண்டு இன்றாலும் . இன்றைய சமுதாயத்தில் நான் காணும் அன்பு இரண்டு வகைகளே ! ஒன்று 10 சதவிகித அன்பை மனதில் சுமந்து அதை 100 மடங்காக செயலில் காட்டும் அன்பு ! இரண்டாவது 100 சதவிகித அன்பை மனதில் வைத்து அதில் 10 சதவிகிதத்தை கூட செயலில் காட்ட தெரியாத அன்பு !

செயலில் இல்லை என்பதற்காக அன்பில்லை என்பதா ? அதேநேரம் செயலில் காட்டாமல் இருப்பதுதான் உத்தமம் என்பதா ?  ? சிந்திக்கிறேன்  சகிதீபன் !

University of Houston 

யூ எஸ் நாட்டின் அழகை எடுத்துக்காட்டும் அழகிய டெக்ஸஸ் நகரத்தை மேலும் கம்பீரமாய் காட்டியது அந்த பல்கலைக்கழகம்..!வண்ண வண்ண ஆடைகளுடன் பூக்களாக பூத்திருக்கும் கண்கவர் பெண்கள், அந்த பூக்களை மொய்க்கும் வண்டுகளாய் ஆண்கள் கூட்டம். மாணவர்களுக்கே உரிய சிரிப்பு, கலாட்டா!  ஆண்கள் சிலர் கும்பலாய் நின்றிருந்த இடத்தில், வந்து சேர்ந்தாள் நம் வட இந்திய பச்சைக்கிளி தான்யா!

"Hey guys!  Where is my buddy Sagi?  "என்று அந்நாட்டிற்கே உரிய ஆங்கில பாணியில் வினவினாள் அவள்.

"  Right here baby " என்று குரல் கேட்கவும் உற்சாகமாய் திரும்பினாள் அவள். அதிநவீனரக ஹெட்போனை கழுத்தில் மாட்டிக்கொண்டு கையில் ஐபேட்டுடன் அந்த மரபெஞ்சில் அமர்ந்திருந்தான் சகீ என்றழைக்கப்பட்ட சகிதீபன்.அனைவரைப்போல நடுத்தர உயரம்,அடர்ந்த கேசம் அழுத்தமான பார்வை, மாயக்கண்ணனின் வசீகர கருமை நிறத்தான் அதை இன்னும் அழகாய் எடுத்துக்காட்டும் பளீர் சிரிப்பு.  அந்த புகழ்பெற்ற கல்லூரியில் பிரபலமான உளவியல் மாணவன் அவன்.

"ஹாய்டா கருப்பு பேரழகா!! " என்று எப்போதும் போல அழைத்தாள் தான்யா.
"ஹேய் மைதாமாவு காலையிலேயே ஆரம்பிச்சுட்டியா?  ஆமா யாரைக் கேட்டு தமிழ் கத்துகுற நீ? நீ வேணும்ன்னா Language & culture ஸ்டூடன்ட்டா இருக்கலாம்!  அதுக்காக, பெங்காலி,மராட்டி,தமிழ்,மலையாளம்,தெலுங்கு,இங்கிலிஷ் இப்படி பெரிய லிஸ்ட் போடக்கூடாது." என்று பெருமூச்சு விட்டான் சகி ..

"பொறாமை மேன் உனக்கு!  நீ மட்டும் என்னவாம்?  நம்ம காலேஜ் இந்திய ஸ்டுடன்டஸுக்கு அர்ஜித் சிங் அண்ட் ஹரிஹரன் நீதான். Psychology டிபார்ட்மன்ட்ல வான்டட் ஐகான் நீ, இதுல நீயே சொந்தமா Observation on behavior ன்னு தனியா ஆராய்ச்சி செய்யுற, இதுல உனக்கு தனியா பெண் ரசிகைகள் வேற!  கலக்குற மேன் "

"போதும் காதில் இரத்தம் வருது மைதாமாவு.. என் குடும்பம் நான் இங்க நல்லா இருக்குறதா நினைச்சிட்டு இருக்காங்க " என்றான் பாவமாய்.

"ஆமா எல்லாரும் எப்படி இருக்காங்க?  " என்று அவள் வினவவும் வீட்டு ஞாபகத்திலும் புன்னகைத்தான் சகி.

சொந்த நாட்டை விட்டுவிட்டு இங்கு வெளிநாட்டு பறவையாய் மாறிவிட்ட அவனுக்கு தனது தாய் நாட்டை பற்றியும் குடும்பத்தை பற்றியும் பேச கசக்குமா என்ன ? அதுவும் தான்யா, அவனது நல்ல தோழி . ஒரே நாட்டில் இருந்து வந்தவர்கள், என்ற அடிப்படையில் இருவரும் நண்பர்களாய் இருந்தாலும்கூட, ஒரே போன்ற சிந்தனை , கல்மிஷம் இல்லாத அணுகுமுறை என அவர்களது நட்பை வலுவாக்க பல காரணங்கள் இருந்தன . சகிதீபன், இந்த உலகை அதிகம் நேசிப்பவன். நடப்பவை அனைத்துமே நன்மைக்கு மட்டும்தான் என்று நம்புபவன்! அவன் அன்பை பங்குபோடும் உறவுகளில் நிச்சயம் தான்யாவும் ஒருத்தி . அவளுகென்று இதயத்தில் தனி அன்பும் நட்பும் எப்போதுமே வைத்திருந்தான் அவன் ..

" டேய் , உன்கிட்ட நான் என்ன கேட்டேன் ? நீ என்ன பண்ணிட்டு இருக்க ?"

" ஹா ஹா , சாரி டீ .. ஏதோ யோசனை .. சரி  வழக்கம் போல, ஒவ்வொருத்தரா கேளு நான் சொல்றேன் " என்றபடி அவளுடன்  சேர்ந்து நடந்தான் சகி !

" அப்படியா ? அப்போ முதலில் என் பாய் ப்ரண்ட்  அருணாச்சலம் எப்படி இருக்கார்ன்னு சொல்லு " என்றாள்  தான்யா உற்சாகமாய் .. அவளுடன்  இணைந்தபடி ஸ்டைலாய் நடந்தவன் , சட்டென நின்று அவளைப் பார்த்து முறைத்தான் ..

" அடியே , என் தாத்தா உனக்கு பாய் ப்ரண்டா  ? பாட்டி மட்டும் உயிரோடு இருந்திருக்கணும் , மகளே நீ இட்லிக்கு சட்னிதான் " என்றான் இலகுவாய் ..

" உனக்கு பொறாமை டா ..!  சரி சொல்லு அவர் எப்படி இருக்கார் ?"

" அவருக்கென்ன , ஏற்கனவே டான்சிங், யோகன்னு யூத் ஆ இருக்குறது பத்தாதுன்னு, போன சனிக்கிழமை ஷாப்பிங் போகுறேன்னு சொல்லி ஜீன்ஸ் டி ஷர்ட் வாங்கி போட்டு , போட்டோ அனுப்பிருக்கார் ! அவர் காஸ்டியுமை கூட நான் பொறுப்பேன் , ஆனா ஒரு கூலிங் கிளாஸ் போட்டிருந்தார் பாரு , செம்ம டென்ஷன் ஆகிட்டேன் !"

" ஏன்டா  ?"

" அது நான் ஆசை ஆசையா வாங்கின கூலிங் கிளாஸ்" என்றான் முகத்தை பாவமாய் வைத்து கொண்டு .

"  அச்சோ பாவம் என் நண்பன் ..  சரி வேணுகோபாலன் அங்கிள், சாரதா ஆன்டி எப்படி இருக்காங்க ?"

" அப்பாவும் நல்லா இருக்கார்.. அவருக்கு சைக்யாட்ரிஸ்ட்ஆ இருந்து போரடிச்சு போச்சாம். ரியட்டாயர் ஆகிடலாம்ன்னு பார்கிறார் "

" தாத்தா விட மாட்டாரே !" 

" சரியா தெரிஞ்சு வைச்சிருக்க, எங்கம்மா சாரதாவின் சமையலை சாப்பிட எங்க, அப்பா போட்டியாகிடுவரோன்னு தாத்தாவுக்கு ஒரே கவலையாம் .. ஒழுங்கா  வேலைக்கு போடான்னு கையில பிரம்பு வெச்சு மிரட்டுராராம் "

" ஹா ஹா ..சோ கியூட் தாத்தா .. சாரதா ஆன்டி எப்டி இருக்காங்கன்னு சொல்லவே இல்லையே "

" எங்கம்மா, நந்திதா அண்ணி வந்ததும் அம்மா ரொம்ப ஜாலியா இருக்காங்க பேபி ! "

" அபிநந்தன் அண்ணா , அண்ட் நந்திதா அண்ணி நலமா ?"

" ஹ்ம்ம் அண்ணாதான் வழக்கம் போல வேலை வேலைன்னே இருக்கான் .. அண்ணிக்கிட்ட பேசினேன் . ஆரம்பத்தில் இருந்த கலகலப்பு இப்போ இல்லை .. அனேகமா ஏதாச்சும் பூகம்பம் வரும்னு நினைக்கிறேன் !"

" சான்ஸ் ஏ  இல்ல .. இன்னும் மூணு மாசத்தில் நம்ம படிப்பு முடியுது .. நீ வீட்டுக்கு போயிருவ .. நீ இருக்குற இடத்தில் பிரச்சனை எப்படி இருக்கும் ?"

" எப்படி இல்லாமல் போகும் ? அதான் என் தங்கச்சி விஷ்வாநிகா  இருக்காளே !"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.