(Reading time: 7 - 13 minutes)

தொடர்கதை - என் காதல் பொன்னூஞ்சல் நீ - 01 - ப்ரியா

ந்தி மாலை நேரம்...

வீடு சேர்ந்த சிறிது நேரத்தில்

அவன் வருகைக்கான அறிகுறி..!!!

En kathal ponnunjal neeமாலை தென்றல் பட்டு

உடல் குளிர்ந்து வந்திருந்தான் போலும்

அவன் அருகாமைக்காக காத்திருந்த என்னை

அதட்டி கூப்பிட்டான்

ஒரு கணம் பயந்து பின் ஓடினேன் அவனிடம்...

பளிச்சென்ற சிரிப்பை உதிர்த்து

கண் சிமிட்டி அருகில் அழைத்தான்...

அருகில் சென்றால் முழுவதும் ஆள்வான்

என்று வெட்கி பின்னடைந்தேன்

கை நீட்டி என் கரங்கள் வருடினான்

மெல்ல மேனி சிலிர்த்து

அவனிடம் தஞ்சம் புகுந்தேன்!!

மேனியில் ஒரு இடம் மிச்சமில்லாமல்

காதலில் நனைத்து விட்டு மறைந்திருந்தான்...

இடி மின்னலுடன் வந்த

'மழை காதலன்'...!!!!!.

மாலை காபியை சுவைத்த வண்ணம் பெய்து கொண்டிருந்த மழையின் அழகில் லயித்து இந்த கவிதையை அவளின் அழகிய உதடுகள் முனுமுனுத்து கொண்டிருந்தன!!

மாலை நேரம் என்றாலே அவளுக்கு ஒரு மயக்கம் தான், இயற்கையின் அழகை ரசிப்பவர் எவரானாலும்  பொன்னிற கதிர்களின் அழகில் ஒளிரும் ஆகாயமும் கூடு சேரும் பறவைகளும் இதமான தென்றலும் காலை முதல் இருந்த பரபரப்பு நீங்கி ஒரு அமைதியும் ஒன்றாக சேர்ந்த மாலை பொழுதின் மேல் மயக்கம் கொள்வர்.

அதிலும் இவள்!! கோடை காலத்தின் மதிய வேளையில் மொட்டை மாடியில் நின்று சிட்டு குருவிகளுடன் 'செல்பி' எடுப்பவள் ஆயிற்றே.

மாலை நேரத்தின் மலையை ரசிக்காமல் அதை ரசிக்கும் உள்ளம் மூளையை உசுப்பாமல் அந்த மூளை தமிழ் வார்த்தைகள் கோர்த்து கவிதை அமைக்காமல் அதை உதடுகள் முணுமுணுக்காமல் இருந்தாள் தான் ஆச்சர்யம்...!!!

மழை நின்ற பின்பும் வானத்தை பார்த்து கொண்டிருந்தவள் மெதுவாக எழுந்து சென்று அவள் டைரியில் அந்த கவிதையை எழுதி அதை ஒரு முறை வருடி பார்த்து மென்மையாக சிரித்து விட்டு  அதை மூடி வைத்தாள்.

தமிழ்..!!! அவளின் அன்னை மொழி மட்டும் அல்ல. அன்னைக்கும் மேல் என்று கூட சொல்லலாம்.தமிழினில் கவிதை என்ற பெயரில் அவள் மன உணர்சிகளை பதிவு செய்து பத்திரபடுத்தி வைப்பது என்றுமே பிடித்தமான ஒன்று.

ன் அறையை விட்டு ஹாலிற்கு வந்து டிவியை ஆன் செய்தவள் பாடல்களை ஒலிக்க விட்டு தன் இனிய குரலில் மெல்ல பாடியபடி சமையலை துவங்க சென்றாள். காய்கறிகளை நறுக்கியவாறே தொலைக்காட்சியுடன் சேர்ந்து டூயட் பாடி கொண்டிருந்தவள் அவ்வபோது சிறு நடன அசைவுகளையும் நளினத்துடன் செய்ய தவறவில்லை!!

இசை..!! அவளின் மற்றொரு தோழி.மனதை குளிர்விக்க இசை அனைவருக்கும் தேவை தான். ஆனால் மகிழ்ச்சி,துக்கம்,கோபம்,தனிமை,வெறுப்பு, பயம் என அவள் மனது எந்த நிலையில் இருந்தாலும் அதை பகிர்ந்து கொள்ள இல்லை அவளுடன் துணை இருக்க அவள் நாடுவது இசையை தான் எனலாம்.

அவளுக்கு இசையுடன் கூடிய நடனம்... குழந்தைக்கு விடுமுறையுடன் கூடிய சுற்றுலா போன்றது... எப்பொழுதும் அவள் வியக்கும் ஒன்று..

சமையல்..!!! சமைப்பதற்கு எனக்கு தெரியாது என பந்தாவாக சொல்லும் சமையல் என்றாலே எனக்கு அலர்ஜி என்று எரிச்சலுரும் இந்த கால யுவதிகள் மத்தியில், ஒரு நாளில் எத்தனை முறை சமைத்தாலும் அப்போதும் அலுக்காமல் இசையின் துணையுடன் சுவையாக சமைத்து சூடாக பறிமாறுபவள்!!

சமைத்தவற்றை டைனிங் டேபிளில் வைத்தவள், மணியை பார்த்தாள் ஏழரை ஆகியிருந்தது... சரியான நேரத்தில் முடித்து விட்டாள்..!! 

ஹாலிற்கு வந்து டிவியை அணைக்கவும் அவள் தோழி ஆதிரா வீட்டிற்குள் வரவும் சரியாக இருந்தது. பிரிட்ஜில் இருந்த கோல்ட் காப்பியை எடுத்து அவளிடம் தந்தவாறே சோபாவில் அமர்ந்தாள்.

"ரொம்ப தேங்க்ஸ் டி" என்று அதை வாங்கிய ஆதிரா ஹாண்ட்பேக்கை நீட்டவும் அதை வாங்கி சென்று அறையில் வைத்தவள். குளிக்க சென்று விட்டாள்.

இது தினமும் நடக்கும் ஒரு விஷயம் தான் ஆதிரா தன் காதலனுடன் போனில் மூழ்கி விட்டாள்.

குளித்து விட்டு வந்தவள் தன் அறையில் படுக்கைக்கு வலப்புறம் இருந்த அலமாரியின் கதவில் இருக்கும் மணிகள் ஒலி எழுப்ப அதை திறந்தாள்.

பெரிய படத்திற்குள் ராஜ அலங்காரத்தில் முருகன் சிரித்து கொண்டிருக்க அருகே வலப்பக்கம் சாந்தமே உருவாய் சாயி நாதர் காவி உடையில் அமர்ந்திருந்தார். அவரிடம் பார்வையை ஒட்டி விட்டு,கண்களில் குறும்புடன் சற்றே இடப்பக்கம் திருப்ப ராதையின் கண்களுக்குள் அதே குறும்புடன் காதலும் கலந்த தேடலில் இருந்த கிருஷ்ணனும் ராதையும், இவர்களுக்கு மத்தியில் சிறியதாய் கிரீடம் ஏந்திய ராஜ கணபதி!!!

நேற்றைய தினம் வைத்த பூக்களை நீக்கியவள், ஏற்கனவே பறித்து பிரிட்ஜில் வைத்திருந்த பூக்களை எடுத்து வந்து பூஜை செய்ய தொடங்கினாள். அறை முழுவதும் ஊதுபத்தி நறுமணம் சூழ்ந்திருக்க கண் மூடி ஆழ்ந்த தியானத்தில் இருந்தவள் கண் திறக்கையில் மணி 8.30!!

அமைதியாக வெளி வந்து ஆதிராவுடன் சாப்பிட அமர்ந்தவள் அவள் பேசியதை எல்லாம் புன்னகையுடன் கேட்டு கொண்டே சாப்பிட்டு முடித்தாள்.

"சரிடீ நீ போய் ஆபீஸ்க்கு ரெடி ஆகு" , ஆதிரா.

"ம்ம்ம்"

றைக்குள் சென்றவள் பூ ஒன்றை கொண்டு விளக்கை அணைத்து விட்டு பூஜை அலமாரியின் கதவுகளை சாத்தி விட்டு சிடி ப்ளேயரை ஆன் செய்தாள்.

I’m like a princess
Always gotta keep my head up
You can’t see my head down
Nope I call it bad luck
I don’t care about others
I’m ma very own idol
And my lines they holy like the
Scriptures in the bible
I’m a classy lil girl loui V’s
My daddy Donatella ma mommy
Gotta pet named guchi
I’m the kinda girl m from the bottom reach out
To the mass quit trashing
Now I gotta my own class,

 I love ma talking, ma looks ma walk and
Superstarswag you know will be rocking…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.