(Reading time: 15 - 30 minutes)

02. நனைகின்றது நதியின் கரை - அன்னா ஸ்வீட்டி

மே ஐ கமின் சார்?” கதவை தட்டிவிட்டு உள்ளே பார்த்தாள் சங்கல்யா.

“வாம்மா வா….உனக்காகத்தான் வெய்டிங்…” சற்றே வழுக்கை தலையுடன் இருந்த சீஃப் வல்லராஜன் முகத்தில் புன்னகை.

எதோ ஒரு பெரிய பட்ச்சி சிக்கிட்டுப் போலநினைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.

Nanaikindrathu nathiyin karai“குட் மார்னிங் சார்..”

“வெரி வெரி குட் மார்னிங் ”

அப்டின்னா?

“சொல்லுங்க சார்…”

“சங்கல்யா….இது மாதிரி ப்ராக்ஜட்டை நான் சின்னபிள்ளைங்கட்டல்லாம் கொடுக்கிறதில்லை…இருந்தாலும் இத உன்ட்ட தாரேன்னா….அதுக்கு அர்த்தம் இது சின்ன விஷயம் இல்லை…..ஆனா இந்த ப்ராஜக்டுக்கு எனக்கு புது முகம் வேணும்….அதுவும் போல்ட் அண்ட் ஷார்ப்…..உன்ன மாதிரி…”

“தேங்க்ஸ் சார் சொல்லுங்க…”

“அந்த ஸ்டார் கப்புள் அரண் அண்ட் சுகவிதா பத்தி மெயின் ஸ்லாட்ல ஒரு ப்ராஜக்ட் ரிலீஸ் செய்யலாம்னு ப்ளான்….ரெண்டு பேருக்கும் இருக்கிற பாப்புலாரிட்டிக்கு பெரிய பெரிய ஸ்பான்ஸர்ஸ் கிடைப்பாங்க ….உனக்கும் பேக்கேஜ் நல்லா செய்து தருவேன்….”

“ம்”

“அவங்களுக்குள்ள எதோ கசமுசா நடக்குது…..ஆனா என்ன விஷயம்னு யாரும் வாய திறக்க மாட்டேன்றாங்க….நீ அவங்க வீட்டுக்குள்ளயே போய் ஒரு ஹால்ஃப் அன் அவர் டெலிகாஸ்ட் செய்ற மாதிரி என்ன நடந்துகிட்டு இருக்குதுன்னு ஒரு ப்ரோக்ராம் ரெடி செய்து தர்ற….உனக்கு தேவையான ஹெல்ப் நம்ம டீம் செய்யும்… “

“வீட்டுக்குள்ளயேவா…?”

“ஆமா அதான் நியூ ஃபேஸ் கேட்டேன்….அவங்களுக்கு எந்த சந்தேகமும் வராம உள்ளே போய் தங்குற மாதிரி ஏற்பாடு செய்துகோ…. நீ கொண்டு வர ஸ்டோரிய பொறுத்து பேக்கேஜ் இருக்கும்..மினிமம் 2 கேரண்டி….…”

“டன் சார்..தேங்க்ஸ் ஃபார் திஸ் ஆப்பர்சுனிடி சார்…”

“ஆல் த பெஸ்ட் சங்கல்யா…”

சங்கல்யா இப்பொழுதுதான் ஜார்னலிசத்தில் முதல் டிகிரி வாங்கிவிட்டு, இந்த வல்லமை நியூஸ் சேனலில் வேலைக்கு சேர்ந்திருந்தாள். இதுவரை இது போன்ற மூன்று ப்ராஜக்டுகளுக்கு உதவியாளராக பணி செய்த அனுபவம் தவிர பெரிதாக அனுபவம் ஏதுமில்லை.

இருந்தாலும் வல்லராஜன் சொன்னது போல் அவளது தைரியமும் புத்திசாலித்தனமும் அவளுக்கு சேனல் நிர்வாகத்திடம் நல்லபெயர் வாங்கித் தந்திருந்தது.

இந்த துறை என்று இல்லை எதிலாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியும் நன்கு சம்பாதித்து, நல்ல நிலையில் செட்டிலாக வேண்டும் என்ற குறிக்கோளும் உள்ளவள் சங்கல்யா. சிறு வயதிலிருந்து வரவுக்கும் செலவுக்கும் இடையில் போராடும் நடுத்தர வர்க்க வாழ்க்கை முறையில் வளர்ந்தவளுக்கு தன் எல்லைகளை விரிவாக்க ஆசை.

அவளைப் பொறுத்த வரை இந்த ப்ராஜக்ட் நல்ல வாய்ப்பு.

தீவிரமாக அந்த அரண் மற்றும் சுகவிதா பற்றி தகவல்களை திரட்டிப் படித்தாள்.

அரண் ஆதித்யா…

1.மிக சிறு வயதில் வேர்ல்டு கப் ஜெயித்த கிரிகெட் வீரர்,

2.இப்போதைய கேப்டன், பிறந்து வளர்ந்தது சென்னை….வயது 26

3.படித்தது ஸ்கூல்…செய்ன்ட் பால்’ஸ்,  10 த் 12 இரண்டிலும் ஸ்டேட் ஃபர்ஸ்ட்…. கலேஜ் அண்ணா யுனிவர்சிட்டி

(வாவ்…ஸ்டடிஸ்…ஸ்போர்ட்ஸ் ரெண்டிலும் கலக்கிருக்கார் சார்……ப்ரெய்னி பாய்…கவனமா ஹேண்டில் செய்யனும்…)

4. ஒன்லி சன்…கூடப்பிறந்தவங்க யாரும் இல்லை….அப்பா பிஸினஸ் மேக்னட் திரியேகன். சி இ ஓ அரண் க்ரூப்ஸ்…( ஓ அரண் க்ரூப்ஸின் ஏக வாரிசா நம்ம ஹீரோ…? பரவாயில்லையே இவ்ளவு பணம் இருக்றப்பவும் ஒழுங்கா படிச்சு…ஒழுங்கா விளையாடி….எங்கயோ உதைக்குதே….இதெல்லாம் நேரான வழியில வந்த புகழா? இல்ல காசு குடுத்து கடையில வாங்கின விஷயமா…..? ஆனா 10 த் 12 மார்க்கை கூடவா காசு கொடுத்து வாங்கி இருப்பாங்க…? அதுக்கு அவசியம் இல்லையே ….பார்ப்போம்…)

5.ஃப்ரெண்ட்ஸ்…ப்ராபாத் ஜோனதன்..( ம்…வைஸ் கேப்டன்தான்  ஃப்ரெண்டா…அதுவும் ரெண்டு பேரும்  காலேஜ் மேட்ஸ்…அப்ப இவனும் ப்ரய்னி பாயா இருப்பான்….கேர்ஃபுல் சங்கு…இல்லனா உனக்கு சங்கோ சங்கு…)

6.எக்‌ஸ் கேர்ள்ஃப்ரெண்ட்ஸ்… நில்….(அட யாருமே இல்லையா…24இயர்ஸ்ல கல்யாணமா..? ம்….அப்டி என்ன அவசரம்?)

7. இப்போ முக்கியமான விஷயம் மேரேஜ்…..ஒரே மேரேஜ்….ஃஸ்பவ்ஸ் நேம் சுகவிதா…… சுகவிதாவுக்கு ஒரு ஃபெலிக்ஸ் கூட வீட்ல ‌மேரேஜ் அரேஞ்ச் செய்திருக்காங்க….கல்யாணத்துக்கு போற வழியில பொண்ணை கடத்திட்டதா சுகவிதா அப்பா கேஸ் ஃபைல் செய்துருக்காங்க….

தொடர்ந்து அவனைப் பற்றி வாசித்து முடித்தாள்.

ஒரு ஆங்கிள்ள பார்த்தா கல்யாணத்துக்கு போற வழியில கல்யாண பொண்ணை கிட்நாப் செய்து கொண்டு போய்ட்டு….அவ கன்சீவ் ஆனதும் கொண்டு வந்து வீட்ல விட்டுட்டு போய்ட்ட பொறுக்கின்னு கூட சொல்லிகிடலாம் ….பட் இந்த சுகவிதா அப்பா ஏன் இதை பெருசாக்கலை..? அந்த மிஸ்டர் அனவரதனைப் பற்றிப் படித்தாள்.

ஆக இவருக்கு ட்ரெடிஷனல் மைன்ட்செட் …..அவ்ளவு ஈசியா குடும்ப விஷயத்தை வெளிலவிட மாட்டார்….சோ இந்த வேலைக்கு இவர் தான் சரி. மனதிற்குள் குறித்துக் கொண்டாள்.

அடுத்து சுகவிதா பற்றி ஆராய்ந்தாள்.

  1. வெகு பிரபலமான டென்னிஸ் ப்ளேயர்…..யங்கஸ்ட் க்ராண்ட் ஸ்லாம் வின்னர்…..15 வயசுலதான் நான் 12க்கு அப்புறம் என்ன செய்யப் போறேன்னு யோசிக்கவே ஆரம்பிச்சேன்பா…..மேடம் அந்த வயசுல ஃப்ரென்ச் ஓபன், விம்பிள்டன்னு வேர்டு லெவல்ல 2 ட்ரோபி வின் செய்துருக்காங்க…..
  2. 2012, 2013 ரெண்டு வருஷமும் உலகத்திலேயே அதிகமா சம்பாதிச்ச ஸ்போர்ட்ஸ் பெர்சனாலிடியாமே மேடம்….அப்போ ஏன் நம்ம ஹீரோ கிட்நாப் செய்ய மாட்டார்? ஆனால் அப்போ ஏன் திரும்ப விட்டுட்டு போய்டார்….?
  3. ஒன்லி டாட்டர்….ஹீரோ மாதிரியே
  4. படித்தது ஸ்கூலிங் செயின்ட். பால்’ஸ்…10த் 12த் ஸ்டேட் ஃபர்ஸ்ட்……ஹீரோ மாதிரியே

காலேஜ் அண்ணா யுனிவர்சிடி….அரண் மாதிரியே…..

சங்கல்யாவுக்கு எதோ புரிந்த மாதிரி இருந்தது. உனக்கு ஆப்படிக்கிறது தப்பே இல்லை அரண்….இரு வர்றேன்….

ஹாஸ்பிட்டலில் கண்விழித்த நொடியில் இருந்துதான் இதுவரை சுகவிதாவிற்கு ஞாபகம் இருக்கிறது. இவள் கண்விழித்தவுடன் இவள் யார் என்றே ஞாபகம் இல்லாத நிலை. ஆராயும் அறிவும் ஐக்யூவும் குமரி நிலையில் இருக்க உலகம் பற்றிய அறிவு பிறந்த குழந்தையின் நிலையில். மெல்ல விஷயத்தை ஒன்றன் பின் ஒன்றாக சொல்லிக் கொள்ளலாம் என்றாலும் தாய்பாலில் ஜீவிக்கும் குழந்தையை தாய்க்கு அறிமுகப் படுத்துவது அவசியமாயிற்றே….செய்தனர் பெற்றவர், மருத்துவர்.

எத்தனை தான் முயன்று பார்த்தாலும் அழுது காய்ந்த முகத்துடன் அரைகுறையாய் புட்டிப்பாலால் நிரம்பிய  வயிற்றுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அவளது என ஞாபகம் வரவே இல்லை அவளுக்கு.

ஆனால் அறிவு அதற்குத் தெரியுமே…..இத்தனை பேர் சொல்கிறார்கள், புகைப் படங்கள் பார்க்கிறாள்…..தாயாய் குழந்தையை அவள் ஏற்றுக் கொண்டாலும் மனதளவில் அவள் வளர்ப்புத் தாய் போலதான்.

குணமாகாமல் தவித்துக் கொண்டிருந்த மூளை இந்த புரியா உணர்வையும் தெரிவிக்கப்பட்ட விஷயங்களின் ஆதாரங்களையும் அதீதமாக எண்ணி எண்ணி குழம்ப அவள் உடல் மற்றும் மனநிலையில் கடும் பின்னடைவு.

இப்படி செயற்கையாக நினைவை கொண்டு வர செய்யப்படும் அவசர காரியங்கள் அவளை மீளா மன அழுத்தத்திற்குள் இழுத்துச் செல்வதையும், எதையும் செயற்கையாக ஞாபகபடுத்தாமல் இயற்கையாகவே அவள் அதை திரும்பப் பெறுவதுதான் பாதுகாப்பான வழிமுறை என்றும் மருத்துவக்குழு அறிந்து உரைத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.