(Reading time: 26 - 52 minutes)

09. பிரியாத வரம் வேண்டும் - மீரா ராம்

சேர்த்து வைக்கிறேன் சேர்த்து வைக்கிறேன்னு சொல்லிட்டே இருக்குற மாதிரி தான் தெரியுது… ஆனா, ஒன்னும் செஞ்சமாதிரி தெரியலையே….” என மைவிழியனை சந்தேகக்கண்ணோடு பார்த்தாள் மஞ்சரி…

“ஆமா தாயே… இதை மட்டும் தான் சொல்லலை நீ… இதையும் சொல்லிடு…. ரொம்ப விளங்கிடும்…” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டவன், வெளியே அதை சொல்லாது மறைத்தான்…

“என்ன எதுவோ, நினைக்குற மாதிரி இருக்கு???...” என அவள் கேட்டதும்,

Piriyatha varam vendum

“இதெல்லாம் மட்டும் உனக்கு தெரிஞ்சிடுமே?... மனுஷன் படுற கஷ்டம், கவலை எதாவது உனக்கு தெரிஞ்சு தொலைஞ்சா நானும் நிம்மதியா இருப்பேனே… ஹ்ம்ம்… எங்கே…???” என இயலாமையோடு அவளை அவன் பார்க்க, அவள் விழிகளில் கோபம் தெறித்தது…

“நான் இங்கே என்ன கதையா சொல்லிட்டிருக்கேன் புரியாத பாஷையிலே… இப்படி முழிக்கிறீங்க?...” என அவள் சற்றே குரல் உயர்த்தி கேட்க…

“இப்போ நான் என்ன செய்யலைன்னு சொல்ல வர்ற நீ?...” என்றான் அவனும் நிதானமாக…

“என்ன செய்யலை?... எதுவுமே செய்யலைன்னு தான் நானும் சொல்லுறேன்… அன்னைக்கு ஒருநாள் அவளை வ்ருதுணன் சார்கிட்ட ஃபைலைக் காரணம் காட்டி பேச வைச்சோம்… அதுக்கு அப்புறம் ஒன்னும் நீங்க யோசிச்ச மாதிரி எனக்கு தெரியலையே கொஞ்சம் கூட…” என்றாள் அவனை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டே…

“யோசித்ததெல்லாம் அப்ளை பண்ணி பார்க்க முடியாது… சில ப்ளான் தான் வொர்க் அவுட் ஆகும்… அது உனக்கு நான் சொல்லித் தெரிய வேண்டாம்னு நினைக்கிறேன்…”

அவன் பதில் அவளுக்கும் சரியென்று பட, “ஹ்ம்ம்… ஆனா, அந்த வொர்க் அவுட் ஆகுற பிளான் என்னன்னு கொஞ்சமாச்சும் சொன்னாதான எனக்கும் தெரியும்…” என அவள் கோடிட்டு காட்ட…

“சரி… சொல்லுறேன்… இது நார்மலா எல்லாரும் செய்யுறது தான்… ஆனா, நிஜமாவே இதுக்கு கிடைக்குற அவுட்புட் கண்டிப்பா சக்ஸஸ் தான்… அது மட்டும் ஷ்யூர்…” என்றவன் அவளிடத்தில் தனது திட்டத்தை விவரிக்க துவங்கினான்…

அவளும் கேட்டுவிட்டு, “கண்டிப்பா இது வொர்க் அவுட் ஆகும்னு தான் நினைக்கிறேன்… ஆனா…” என்று அவள் இழுக்க,

அவனுக்கு புரிந்து போனது… “நான் பார்த்துக்கறேன்… இரு… வரேன்…” என்றபடி போனை எடுத்துக்கொண்டு சென்றவன் சற்று நேரத்தில் திரும்பி வந்து,

“ரெடியா இரு… சரியா இன்னும் இரண்டு மணி நேரத்துல நம்ம திட்டத்தை அமல்படுத்துறோம்… ஒகே…” என்று சொல்ல… அவளும் சரி என்றாள்…

னது கணிணியின் முன் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த பாலாவிடம் சென்ற மஞ்சு, “இருக்குற ஆளுக்கெல்லாம் உன்னால தலைவலி வருது… இப்போ உனக்கே வருதா வலி?... வலிக்கட்டும்… அப்போதான் நீயெல்லாம் திருந்துவ?.. இன்னும் கொஞ்ச நேரத்துல பாருடி… உன் தலைவலி பறந்து வேற வலி வருதா இல்லையான்னு?... எத்தனை நாள் கண்டுக்காம ஆடின?... இன்னைக்கு இருக்குடி ராசாத்தி உனக்கு…“ என மனதிற்குள் சரமாரியாக திட்டிக்கொண்டு அவளிடம் இயல்பாக பேச்சு கொடுத்தாள்…

“என்ன பாலா… என்னாச்சு?... காலையிலேயே எல்லாம் போன மாதிரி தலையில கை வச்சு உட்கார்ந்திருக்க?... என்னடி விஷயம்?...” என்று மஞ்சு கேட்ட மாத்திரத்தில் பாலா அவளை கொலைவெறியோடு பார்த்தாள்..

“இப்போ நான் என்ன கேட்டுட்டன்னு நீ இந்த பார்வை பார்க்குற?... அப்படி என்னத்த நீ வாழ்க்கையில இழந்துட்ட?... இப்படி முறைக்கவேற செய்யுற?...” என்று மஞ்சு தூண்டிவிட, பாலா அவளை பக்கத்திலிருந்த ஃபைலைக்கொண்டு அடித்தாள்…

“எருமைமாடே… உன் வாயில நல்ல வார்த்தையே வராதா?... பிசாசே… காலையிலேயே அபசகுணமா பேசுற?... குரங்கே… உன்னை எவடி இப்போ இங்க வர சொன்னது?... வந்தாலும் பேசாம உன் வேலையைப் பார்க்க வேண்டியதுதான?.. எங்கிட்ட எதுக்குடி இப்போ அறிவுக்கெட்டவளாட்டம் உளறி வைக்குற?...” என படபடவென்று பொரிய ஆரம்பித்த பாலாவை மஞ்சு வெளியில் அமைதியாகவும், உள்ளுக்குள் சந்தோஷத்துடனும் ஏறிட்டாள்..

“ஆமா, பேசி முடிச்சிட்டியா?... அதென்ன கேட்குறதுக்கு ஆள் இல்லைன்னா உன் இஷ்டத்துக்கு நீ என்னை திட்டுவியா?..” என மஞ்சு சற்றே குரல் உயர்த்தி கேட்க…

பாலாவிற்கு மஞ்சுவை அடித்தது மட்டும் இல்லாமல் திட்ட வேறு செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி மேலோங்கியது…

“இருந்தாலும் மஞ்சு எப்படி அப்படி சொல்லலாம்???... இழப்பு எவ்வளவு பெரிய வார்த்தை!!!... அது என் வாழ்வில் நான் காணாததா?... மீண்டும் நான் இழக்க வேண்டிய நிலை வந்துவிட்டதா?... எனில் அது யாரை?...” என தன மனதினுள் கேட்டுக்கொண்டவளுக்கு கிடைத்த பதிலில் தூக்கி போட்டவாறு நின்றிருந்தாள் பாலா…

அவளின் நிலையைப் பார்த்த மஞ்சுவிற்கு இன்று இவளை பேச வைத்து விடலாம் என்றே தோன்றிவிட,

“சரி நின்னு வருகிறவங்களுக்கு மரியாதை தந்தது போதும்… எல்லாரும் வந்தாச்சு… வ்ருதுணன் சார் மட்டும் தான் பாக்கி… அவரும் லேட்டா தான் வருவார் போல… உன் அண்ணன் போன் பண்ணிக் கேட்டதுக்கு லேட்டா வருவேன்னு மட்டும் தான் சொன்னாராம்…  அதனால அவர் வர்றப்போ நான் உன்னை எழுப்பி விடுறேன்… நீ அப்போ எந்திச்சு இதே மாதிரி மரியாதை கொடு… அதுவரை அடங்கி இப்படி உட்கார்…” என அவளின் தோளினைப் பிடித்து அமர வைத்துவிட்டு மஞ்சுவும் தனது வேலையில் மூழ்கினாள்…

பாலாவுக்கோ வேலை முற்றிலும் ஓடவில்லை… வ்ருதுணன் வரவில்லையா?... எங்கே போனார்???... இங்கே வருவதற்கு தாமதம் ஏன்???... எதற்காக?... என்று யோசித்துக்கொண்டிருந்தவளின் மனதில் வ்ருதுணன் பற்றிய நினைவுகள் தவிர வேறெதுவும் துளியும் இல்லை மருந்துக்கும் கூட…

ஹாய் தங்கச்சி… என்ன சாப்பிட்ட???...” என்றபடி அங்கே வந்தான் மைவிழியன்…

“குத்துக்கல்லு மாதிரி இங்கே நான் ஒருத்தி இருக்கேன்… என்னை விட்டுட்டு தங்கச்சி கிட்ட அக்கறையை காட்டுறீங்களா?... பார்த்துக்குறேன் உங்களை…” என்றபடி மஞ்சு பல்லைக்கடித்துக்கொண்டு பேசாமல் இருந்தாள்…

“ஹேய்… பாலா… என்ன எதுவும் பேசமாட்டிக்குற?... என்னாச்சுடா?...” என விழியன் அழுத்தம் கூட்ட,

“ஏண்டி… குரங்கே... அதான் உன் பாசமலர் அண்ணன் கேட்குறார்ல… பேசினா என்ன குறைஞ்சு போயிடுவியா நீ?...” என மஞ்சுவும் பாலாவை திட்ட…

“இப்போ நீ எதுக்கு என் தங்கச்சியைத் திட்டுற?... உனக்கு அவளைத் திட்டுறதுக்கு ஒரு சாக்கு வேணும்… அதுக்குத்தான இப்படி நடந்துக்குற?...” என மையன் மஞ்சுவைப் பார்த்துக் கேட்க…

“ஓஹோ… கதை அப்படி போகுதா?... போகட்டும்… ஆனா, இந்த லூசுத்தனமான கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுறதுக்கு நான் ஒன்னும் உங்க இரண்டு பேர் மாதிரி லூசு இல்லை… புரிஞ்சதா?...” என்றாள் அவளும் வெடுக்கென்று…

அந்நேரம் மையனின் போன் அடிக்க அவன் சென்று பேசிவிட்டு ஓடி வந்தான் மூச்சிறைக்க…

“இப்போ எதுக்கு இப்படி ஓடி வர்றீங்க?.... என்னாச்சு?...” என்ற மஞ்சுவின் கேள்விக்கு பதில் எப்படி சொல்லுவது என்று யோசித்துக்கொண்டிருந்தான் மையன்…

“கேட்குறேன்ல… ஒன்னு சொல்லுங்க… இல்ல பேசாம போங்க அப்படியே… அதை விட்டுட்டு இப்படி பார்த்துட்டிருந்தா என்ன அர்த்தம்?...”

“மை…னா…. வந்து….” என்று அவன் இழுத்த தொனியே அவளுக்கு அவர்கள் திட்டத்தை எடுத்துக் கொடுக்க, “ஹ்ம்ம்… ஆக்டிங்க் மன்னன் தான்… என்ன நடிப்பு.. என்ன நடிப்பு… ஹ்ம்ம்…” என மனதினுள் அவனுக்கு புகழாரம் சூட்டியவள், வெளியே அவனிடம் பயந்தபடி பேசினாள்..

“துணா… வரும்போது… துணா….….” என்று மையன் பயந்தபடி சொல்ல…

துணா என்ற வார்த்தை பாலாவின் கவனத்தினை கலைத்து, அவருக்கு என்ன என்று அவள் உடம்பில் ஒவ்வொரு அணுவும் துடித்தது…

“சொல்லுங்க… என்னாச்சு… துணா சாருக்கு என்ன?... லேட்டா வருவேன்னு தான சொன்னார்… ஏன் இன்னைக்கு வரமாட்டாராமா?...” என மஞ்சு கேட்க…

“ஆமா வரமாட்டான்… அவனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சு மைனா…” என்ற மையனின் குரலே அவன் கதி கலங்கி போயிருக்கிறான் என உரைத்தது…

“சும்மா நடிக்க சொன்னா, இதென்ன இவர் இப்படி நடிக்கிறார் உணர்ச்சி பூர்வமா…” என தனக்குள் சொல்லிக்கொண்டவள், வெளியே அவனிடம் எந்த ஹாஸ்பிட்டல், என்று கேட்க மையனும் சொன்னான்… அவன் சொன்ன தகவலைக் கேட்டுவிட்டு திரும்பியபோது பாலா அங்கு இல்லை….

அவள் அங்கே இல்லை என்று உறுதிப்படுத்திய பின்பு, மையனிடம் மஞ்சு, “அய்யோ, கடவுளே… செம நடிப்பு… ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம்… உங்களுக்கு….” என சிரித்துக்கொண்டே சொல்ல, மையன் கலங்கிய விழிகளுடன் அவளை ஏறிட்டான்…

அவனின் இந்த நிலையைக் கண்டவளுக்கும் உள்ளே எதுவோ செய்ய, “விழியன்…. என்னாச்சு?...” என கேட்க, அவன் அவளின் கையைப்பிடித்துக்கொண்டு, “உண்மையிலேயே துணாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிட்டு மைனா…” என்றான்…

அவன் சொன்ன பதிலில் அதிர்ச்சியடைந்தவள், அவனையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.