(Reading time: 22 - 43 minutes)

19. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

" ப்பாடா இந்த குரங்குக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்குள்ள எத்தனை டிராமா ." என பெருமூச்சுவிட்டு கடந்தகால நினைவுகளுக்கு தற்பொழுது முற்றுபுள்ளி வைத்தாள்  தேன்நிலா .. எத்தனை முயன்றும் தூக்கம் மட்டும் அவளை ஆட்கொள்ளவே இல்லை .. மதியழகனுக்கு அழைக்கலாம் என்றால், அவன் தற்பொழுது சிவகங்கைக்கு சென்று கொண்டிருப்பானே ! என்று யோசித்தவள் சங்கமித்ராவை அழைத்தாள் ..

" ஹேய் தேனு, நேத்து நைட் தானே மீட் பண்ணினோம் அதுக்குள்ள என்னை மிஸ் பண்ணிட்டியா ?" உற்சாகாமாய் கேட்டாள்  சங்கமித்ரா ..

" அடியே அது நைட் இல்ல மிட் நைட் .. "

Ithanai naalai engirunthai

" இட்ஸ் ஓகே டார்லிங் ..அதுலயும் நைட் வருதுல்ல "

" உன் மொக்கைய ஷக்தி எப்டிதான் தாங்குராரோ !"

" ஹ்ம்ம் இதெல்லாம் மதி அண்ணாவை நினைச்சு நான் சொல்லணும் செல்லம் "

" சரி சரி பால் குடிச்சியா ?"

" ம்ம் ஷக்தி தந்தான் "

" ஏதும் சாப்டியா ?"

" ஷக்தி தோசை சுட்டு தந்தான் "

" உனக்கு பெயின் எப்போ வேணும்னாலும் வந்திடும், ரெடி தானே நீ ?"

" அதெல்லாம் ஷக்தி பக்காவா ஏற்பாடு பண்ணிட்டான் "

" குழந்தையை எப்படி , நீ பெற்றுக்க  போறியா ? இல்ல அதுவும் ஷக்திதானா ?" என்று கிண்டலடித்தாள்  தேன்நிலா ..

" அடிப்பாவி , என் மாமாவையே கலாய்க்கிறியா  நீ " என்று மித்ரா வாயை பிளக்கவும் அவளது போன் சக்தியின் கைக்கு இடமாறியது ..

" ஏன் கலாய்ச்சா என்ன தப்பு ? உனக்குத்தான் அவர் மாமா , எனக்கு சும்மாதான் " என்றாள்  நிலா கெத்தாய் .!

" ஆஹான்  "என்று சிரித்தான் ஷக்தி ..

" ஐயோ ஷக்தி , நீங்களா ? இந்த சங்கு பிசாசு போனை ஸ்பீக்கரில்  போட்டுட்டாளா ?"

" ச்ச்ச ச்ச்ச மிது அப்படி பண்ணுவாளா ? நான்தான் போனை வாங்கிகிட்டேன் " என்று சிரித்தான் அவன் ..

" அது எப்படிங்க, மிதுவுக்குதான் நான் மாமா உங்களுக்கு சும்மாவா ? எப்படியும் மதி அண்ணா உங்களை கல்யாணம் பண்ணிக்க நான் எஸ் சொல்லணும் அது  மைண்ட்ல வைச்சிகிங்க !" என்று மிரட்டினான் ஷக்தி.

" புள்ளபூச்சி எல்லாம் என்னை மிரட்டுது .. எல்லாம் இந்த மதுவை சொல்லணும் "

" ஹெலோ யாரு புள்ளபூச்சி ?"

" நீங்கதான் ஷக்தி .. "

" வாய் நீளுது அண்ணி உங்களுக்கு "

" ஐயோ இந்த அண்ணியை விட்ருங்கன்னு எத்தனை முறை சொல்லிட்டேன் ஷக்தி " என்றவள் முகம் சுளித்தாள் ... அது ஏனோ, அவன் நட்போடு உரிமையுடன் நிலா மேடம் என்று அழைப்பதுதான் அவளுக்கு பிடித்திருந்தது ..அது தெரிந்திருந்தாலும் கூட, அடிக்கடி இப்படி அவளை அழைத்து வைப்பான் ஷக்தி ..

" ஹா ஹா, சரி உங்களுக்கு தூக்கம் வரலையா ? ஏன் மிது செல்லத்தை டிஸ்டர்ப் பண்ணுறிங்க  ?"

" செல்லமா ? ஹெலோ இதெல்லாம் ஓவர் ..அவ என்னடான்னா, அர்த்த ராத்திரி சண்டை போட்டுட்டு ஹாஸ்பிட்டல் வர்றா , நீங்க என்னன்னா இப்போ அவளை கொஞ்சுரிங்க ?"

" சண்டையா ? இது எப்போ ?" என்றவன் மிதுவை பார்த்து

" ஹே அத்தை பொண்ணு , சண்டை போடறதுன்னா என்கிட்ட முன்கூட்டி சொல்ல மாட்டியா ? மாமா ரெடி ஆகா வேணாம் " என்று கேட்டு வைத்து நிலாவை கடுப்படித்தான் ...

" எங்க அம்மு பாட்டி அப்போவே சொன்னாங்க , உங்கள  மாதிரி சின்ன பசங்க கூடலாம் பிரண்ட்ஷிப் வெச்சுக்க கூடாதுன்னு ... நான் தான் கேட்கல "

" ஹப்பாடி இப்போவாச்சும் ஒத்துகிட்டிங்களே  ! " - ஷக்தி ..

" என்ன ஒத்துகிட்டேன் ?"

" நாங்க சின்ன பசங்க , நீங்க பல்லு விழுந்த பாட்டின்னு " என்று சொல்லி மீண்டும் ஷக்தி சிரித்து வைக்க, பற்களை கடித்துக்கொண்டே தன்னை பல்லு விழுந்த பாட்டி போல கற்பனை செய்து கொண்டாள்  நிலா ..

" கற்பனை எல்லாம் பண்ணாதிங்க அண்ணி , ரொம்ப மோசமா இருக்கும் " என்று மீண்டும் ஷக்தி வார,

" தெய்வமே உங்க போனை காலா நினைச்சு கும்பிட்டு கேட்கிறேன் ..ஆளை விடுங்க " என்று சிரித்து கொண்டு போனையே வைத்து விட்டாள்  தேன்நிலா .. கணவனும் தோழியும் பேசிக்கொண்டு இருக்கும் அழகை விழி இமைக்காமல் ரசித்தாள்  மித்ரா ..

" என்னடி லுக்கு ?"

" சான்ஸ் ஏ  இல்ல .. அழகுடா நீ "

" உனக்கு இது தவிர வேறொன்னும் தெரியாதா " என்று சலித்து கொண்டான் மனதில் அவள் காதல் மழையில் நனைந்து கொண்டே !

" இன்னொன்னு தெரியும் "

" என்ன ?"

" ஐ லவ் யூ மாமா " என்று சிரித்தாள் சங்கமித்ரா ..

" அடிங்க , நானும் எவ்வளவு நேரம் தான் நல்லவனாகவே இருக்குறது " என்றவன் கண் இமைக்கும் நேரத்தில் அவளை உரசி கொண்டு அருகில் அமர்ந்தான் .. அவன் அருகாமையில் திணறி விழிகள் பட்டாம்பூச்சி போல படபடக்க  அவனையே பார்த்தாள்  மித்ரா ..

" என்ன கண்ணு டீ உனக்கு ! பார்த்தே  ஆளை மயக்கிடுவ "

" ஹ்ம்ம் எனக்காச்சும் உன்னை மயக்குறதுக்கு  ஒரு பார்வை தேவைபடுது .. ஆனா நீ , தூங்கிகிட்டு இருக்கும்போது கூட என்னை எப்படி மயக்குவ தெரியுமா ?"

" அதெல்லாம் தெரியுமே "

" தெரியுமா "

" ம்ம்ம்"

" எப்படி "

" அதான் நான் தூங்கிட்டதா நினைச்சு எனக்கு தினமும் நெற்றி கன்னம்ன்னு முத் ....." என்று அவன் முடிக்குமுன்னே , அவன் இதழ்களை கைகளால் பொத்தினாள்  மித்ரா .. அவன் மூச்சுகாற்று அவள் அவள் மெல்லிய விரல்களை தீண்ட, லேசாய் முகம் சிவந்து போனாள்  மித்ரா ..

" ஏன் ?"

" நீ ஒன்னும் சொல்ல வேணாம் "

" நான் சொல்லுவேன் "

" நான் கேட்கமாட்டேன்  "

" நீ கேட்குற மாதிரி சொல்லுவேன் " என்றவன் அவள் செவிமடல்களில் இதழ் பதித்தான் ..

" ஷக்....தீ !"

" ம்ம்ம்ம் "

" டேய் மாமா  "

" என்னடி ?"

" கடைக்கு போகலையா ?"

" ம்ம்ம்ம்ம்ஹ்ம்ம்ம்ம் இல்லை "

" ஏன் "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.