(Reading time: 16 - 32 minutes)

மூங்கில் குழலானதே – 02 - புவனேஸ்வரி

மொழி, மனிதனின் வளர்ச்சியை வரலாற்றில் எடுத்து காட்ட முக்கியமான ஓர் அங்கம் .. மொழி என்னும் தேருக்கு வார்த்தைகளே சாரதி ! மொழிகளுக்கோ , அல்லது வார்த்தைகளுக்கோ என்றுமே உலகில் பஞ்சம் வந்தது இல்லை .. எனினும் மனதில் இருப்பதை அப்படியே எடுத்து உரைக்க இன்னமும் தயங்கிக்கொண்டு தானே இருக்கிறோம் ? மனதில் வளர்த்துவரும் பரிசுத்தமான அன்பை கூட வார்த்தையால் சில நேரங்களில் கூற முடிவதில்லை . இதற்கு காரணம் என்ன ?

" நான் உன்னை நேசிக்கிறேன் " என்று நேரடியாய் முகம் பார்த்து உரைப்பது அவ்வளது கஷ்டமா ? நேசத்தை உரைப்பதில் கூட ஆண்பால் , பெண்பால் என இருபாலருக்கும் வெவ்வேறு சட்டங்கள் இருக்கிறதா ? நிஜ வாழ்க்கை என்றாலும் சரி சினிமா என்றாலும் சரி, காதல் என்றால் அதை ஆண் மட்டும்தான் சொல்ல வேண்டுமா ? ஆண்களுக்கு மட்டும்தான் அந்த உரிமை கொடுக்கபட்டு இருக்கிறதா ? இதையே பெண் செய்தால் புருவம் உயர்த்துவதும் , சந்தேகப்படுவதும் , அவள் குணத்தில் குறை சொல்வதும் எவ்விதத்தில் நியாயம் .. எத்தனை அழகான காதல் கதைகள் பெண்கள் மனதிலேயே தொடங்கி, தொடங்கியதுமே அடங்கியதோ ? சிந்திக்கிறேன் சகிதீபன் !

ன் மனதில் இருப்பதை சொல்லி விட்டோம் என்ற திருப்தி கொஞ்சமும் இல்லாமல், பதட்டமாய் களையிழந்த முகத்தோடு நின்ற தோழியை பார்த்ததும் சகிதீபனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை . அதே நேரம் அவள் மனதின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து இதை கையாள  வேண்டும், என்று மனதில் குறித்து கொண்டான் .

Moongil kuzhalanathe

" எப்படியும் இன்னைக்கு க்ளாஸ்க்கு போயி எதுவும் மண்டையில் ஏற போறது இல்லை .. வெளில போகலாமா ?" என்று இயல்பாய் கேட்டான் அவன் ..சரியென அவளை பார்த்து தான்யா தலையசைக்கவும்

" ஹே மைதாமாவு நீ ஊமை இல்லன்னு எனக்கு தெரியும் .. அதுவும் இல்லாமல் நாம ரெண்டு பேரும்  மட்டும்தான் வெளில போறோம் .. நீயும் அமைதியா வந்தா எனக்கு எப்படி பொழுது போகும் " என்று சிரிக்க , அவள் முகத்திலும் லேசாய் புன்னகை கீற்று தோன்றியது .

காபியை குடித்து கொண்டே தோழியின் முகத்தை ஆராய்ந்தான் சகிதீபன் .

" சோ , நீ எப்போ இருந்து என்னை லவ் பண்ணுற தன்யா "என்றபடி அவள் வலது கரத்தை மெல்ல வருடினான் சகிதீபன் . அதிர்ச்சியாய்  கைகளை விளக்கி கொண்டவள்

" ல ..... லவ்வா " என்று குரலே தந்தியடிக்க கேட்டாள் . சகிதீபனோ

" எஸ் டார்லிங் "என குழைந்தான் . சில நொடிகளே என்றாலும் அவன் இப்படி தன்னை பார்ப்பது அவளுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

" ஹே லூசு , ஒழுங்கா பேசுடா " என்று ஒரு அதட்டல் போடவும் , அவன் கே கே பி கே என்று சிரித்தான் ..

" இப்போ எதுக்கு இப்படி இளிக்கிற ?" என்று சிடுசிடுத்தாள். அவனோ, பதில் சொல்லாமல் மேலும் சிரித்தான் .

" என்னடா ?"

" ஏன் கையை இப்போ எடுத்த நீ ? நான் உன் கையை பிடிச்சதே இல்லையா ?" என்று வினவினான் ..

" அய்யே , போடா .. அது குட் டச் .. இது பேட்  டச் " என்றாள்  தான்யா. தனது தோழி வளர்ந்தும் ஒரு குழந்தைதான் என உணர்ந்தான் அவன் .. அவன் அவளையே ஆச்சர்யமாகவும் வாஞ்சயுடனும் பார்க்க தான்யா தான் மௌனத்தை கலைத்தாள் ..

" என் முகத்துல என்ன , ரஜினி முருகன் படம் ஓடுதா ?"

" ஹா ஹா , பலே பலே தமிழை தான் கற்று வெச்சு இருக்கன்னு பார்த்தா , தமிழ் சினிமாவையும் நீ விட்டு வைக்கலையா ?"

" சும்மா பேச்சை மாற்றாமல் பதில் சொல்லு டா"

" கொஞ்ச நேரம் முன்னாடி என்கிட்ட திக்கி திணறி பேசின அந்த திடீர் சாம்பிராணி , ச்ச்ச்சி  தன்க்  ஸ்லிப் ஆகிடுச்சு .. அந்த திடீர் சமத்து யாருமா ? நீதானே ? " என்று கண் சிமிட்டினான் சகி .. அவனுக்கு பதில் சொல்லாமல் அவள் பொறுமையிழந்து எழவும் , உட்காரு பேபி என அவள் கையை பற்றினான் சகி .. ஆனால் இந்த முறை  அவன் பற்றுதலில் நண்பன் என்ற உரிமை மட்டுமே இருந்தது .. ஆக, ஸ்பரிசத்திற்குள்  மறைந்திருக்கும் மொழியை கூட இவளால் புரிந்து கொள்ள முடிகிறது,அதனால் அவள்  மனதை அவளுக்கே புரியவைப்பதில் கடினமில்லை என்று முடிவுக்கு வந்தவனாய்  தெளிவாய் பேச தொடங்கினான் சகி ...

" நீ என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்னபோதே எனக்கே செம்ம கோபம் வந்தது என்னவோ ரைட்தான் .. ஆனா அதை சொல்லிட்டு நீ கொடுத்தியே ஒரு ரியக்ஷன் .. அப்போவே உன் மனசில் என் மேல லவ் எல்லாம் ஒன்னும் கிடையாதுன்னு தெரிஞ்சிடுச்சு "

" உன்னை லவ் பண்ணேன்னு நான் சொன்னேனா ?"

" இதெல்லாம் தெளிவா கேள்வி கேளுடி .. ஆனா மத்த விஷயத்தில் கிட்டினிய யூஸ்  பண்ண மாட்டியா ? சரி என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு உனக்கு ஏன் உலகமகா சூப்பர்  ஐடியா தோணிச்சு ?"

" ரொம்ப சிம்பல், நீ என் நல்ல ப்ரண்ட் .. எனக்கு உன்னை நல்லா தெரியும் ,.. உனக்கும் என்னை நல்லா தெரியும் .. நாம ஒருத்தரை பற்றி இன்னொருத்தர்  நிறைய தெரிஞ்சு வைச்சிருக்கோம் . நாம கல்யாணம் பண்ணிகிட்டா நல்லா இருக்கும்னு தோணிச்சு  "

" அட என் மக்கு மைதா மாவே ! இந்த மாதிரி அண்டர்ஷ்ட்டேன்டிங் எல்லாம் யாருக்கும் யாரு மேல வேணும்னாலும் இருக்கலாம் ...அதுக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா ? நீ சொல்லுறது எல்லாமே நல்ல லாஜிக் தான் ..அதுவும் இப்போ உள்ள இரட்டைமுக உலகத்தில் தெரிஞ்சவங்களோடு  நம்ம வாழ்க்கையை அமைச்சுகிறது நல்ல விஷயம் தான் ... ஆனா இதெல்லாம் ரொம்ப இயல்பா நடக்கணும் தான்யா .. லைப் ஐ எல்லாநேரத்துலயும் செதுக்கி வெச்சு வாழ முடியாது ... சில நேரங்களில் வாழ்க்கையை அதன் போக்கில் விடனும் . "

" அப்படியெல்லாம் விட்டா அது தப்பாதான் போகும் .. எது பண்ணினாலும் ப்ளான்  போட்டுதான் பண்ணனும் "

" அப்படியெல்லாம் கல்யாணத்துக்கு முடியாது தனு .."

" ஏன் "

" ஏன்னா , அது வேற இது வேற .. "

" நட்பு எவ்வளவு க்ளோஸ் ஆ இருந்தாலும் திருமண பந்தமும் அதுவும் ஒன்னாகிட முடியாது ...ஒவ்வொரு உறவுக்கும் ஒவ்வொரு ரோல் இருக்கு .. உதாரணத்துக்கு சொல்லுறேன் . நீ ஒரு முக்கியாமான விஷயத்துல முடிவு எடுக்கனும்னு வெச்சுக்க, ஒரு நண்பனாய் இருந்தா நான் கடைசி வரை உன் பக்கத்தில் இருந்து ஆலோசனைதான் தருவேன் .அது விட்டுட்டு என் பேச்சை நீ கேட்டே ஆகணும்னு நான் சொல்லமாட்டேன் .. ஏன்னா , இது உன்னுடைய வாழ்க்கை .. உன் வாழ்க்கையில் எடுக்குற ஒவ்வொரு முடிவும் நீ உன் மனதார எடுக்கணும் .ஒருவேளை நீ தவறான முடிவெடுத்தா கூட நான் அதற்கும் உன்னோடு துணை நின்னு , அதை சரி பண்ணுறதுக்கு நான் உதவுவேன் .. ஆனா இதுவே என் மனைவியா இருந்தா , அவ மனசு கஷ்டம் பட்டாலும் பரவாயில்லைன்னு ' இப்படி செய்யாதே ' ன்னு ஒரு அதட்டல் போட்டுடுவேன் .. அதன் பிறகு தாஜா பண்ணுறது எல்லாம் அய்யாவுக்கு கைவந்த கலை " என்று அவன் கண்ணடிக்கவும்  அவள் முகம் சுளித்தாள் ..

" அடிப்பாவி , காலில் விழுந்துருவேன்னு சொல்ல வந்தேன் " என்றான் சக கொஞ்சமும் வெட்கபடாமல் .. !

" இதெல்லாம் ஒரு பொலப்பா ?" என்பது போல பார்த்து வைத்தாள்  தான்யா ..

" ஈசி தான்யா .. என்னடா சகி இப்படி பேசுறான்னு நினைக்காமல் நீயே யோசிச்சு பாரு .. கொஞ்ச நேரம் முன்னாடி அய்யா  ஒரு ரொமாண்டிக் லுக் ஒன்னு கொடுத்து உன் கை பிடிச்சதுக்கு நீ எப்படி கோபபட்ட .. ஏதோ தீ பட்ட  மாதிரி உனக்கு எரிஞ்சதுல .. ஏன் ? அதுதான் நம்ம ரியல் மனசு .. நம்ம மனசு எல்லாருக்கும் நட்பாகிடலாம் .. ஆனா ஒருத்தர் மேல மட்டும்தான் காதல் வயப்படும் .. என்னை இவ்வளவு நல்லா தெரிஞ்சும்கூட நான் ஆசையாய் கை பிடிக்க வந்தா உனக்கு கஷ்டமா இருக்கு .. ஆனா ட்ரஸ்ட்  மீ .. நாளைக்கு யாருன்னே தெரியாமல் ஒரு ஹீரோ  உன் லைப் ல வருவான் .. அன்னைக்கு உலகமே ஜெயிச்ச பீல்ல நீயே அவனோடு கை கோர்த்துப்ப .. அன்னைக்கு நான் சொல்ல வர்றதின்  அர்த்தம் உனக்கு நன்றாக புரியும் .. இந்த மேஜிக் எப்போ நடக்கும்ன்னு எனக்கு தெரியாது .. ஆனா கண்டிப்பா எல்லாரு லைப்லயும் இது நடக்கும் .. ஆறு  பருவகாலங்களில் வசந்தகாலம் மாதிரி , மனிதன் வாழ்க்கையில் அந்த மேஜிக் தான் வசந்த காலம் .. உன் வசந்தகாலம் நிச்சயமா நான் இல்லை .. அப்படி இருக்கும்போது நிச்சயமா என்னால் உனக்கு நிறைவான எதிர்காலத்தை தர முடியாது " என்று தெளிவாய் தீர்மானமாய் கூறினான் அவன் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.