(Reading time: 9 - 18 minutes)

02. காதல் உறவே - தேவி

ந்தோஷ் இடையிட்டு “சாப்பிடவில்லையா?”

“இல்லை. இதற்கு மேல் லேட்டானால் ஆட்டோ கிடைக்காது”

ராம் “நான் டிராப் செய்கிறேன். சாப்பிட்டுவிட்டுப் போகலாம்” என்றான்.

Kathal urave

அவள் “இல்லை ராம். சாப்பிட உட்கார்ந்தால் அரை மணி நேரம் ஆகிவிடும். நீங்கள் சாப்பிடப் போங்கள். நான் உள்ளே சென்று பார்த்துவிட்டு 10 நிமடத்தில் கிளம்புகிறேன்” என்றபடி உள்ளே சென்றாள்.

ராம் வேகமாக உள்ளே சென்று சாப்பிட்டு விட்டு, சந்சோஷிடம் மட்டும் சொல்லிவிட்டு வேகமாக வாசலில் காரோடு தயாராக நின்றான். வெளியே வந்த மைதிலியை தன் பேச்சுத்திறமையால் தன்னோடு காரில் ஏற்றிக்கொண்டான்.

“மைதிலி, உன் வீடு எங்கே இருக்கிறது?”

“நான் ஹாஸ்டலில் இருக்கிறேன் ராம்.” என்று விடுதி முகவரியைக் கூறினாள்.

“அப்பா, அம்மா ஊரில் இருக்கிறார்களா? ஏன் தனியாக இருக்கிறாய்?”

“அப்பா ஜனார்த்தனன் என்னுடைய சிறு வயதிலேயே தவறி விட்டார். அம்மா கௌரி இறந்து இரண்டு வருடங்களாகிறது.” பெருமூச்சுடன் கூறினாள்.

“சாரி. மற்ற உறவினர் யாரும் இல்லையா?”

“இல்லை ராம். அப்பா இறந்த பின் அவரின் உறவுகள் தொடர்பு கொள்ளவில்லை. அம்மா ஒரே பெண். அதனால் யாரும் கிடையாது.”

“இரவு என்ன சாப்பிடுவாய்? விடுதியில் உணவு இருக்குமா?”

“தெரியலை. மணி 9.30. அநேகமாக உணவு முடித்து இருப்பார்கள். நான் அறையில் பிஸ்கட், பிரெட் வைத்திருக்கிறேன்.”

“அது எப்படி போதும்.” என்றபடி அங்கே இருந்த ஹோட்டலில் இட்டிலியும் தோசையும் வாங்கி அவள் கையில் கொடுத்தான்.

பிறகு “நீ நாளைக்கு விசேஷத்திற்கு வருகிறாயா?

“இல்லை எனக்கு இன்று மட்டும் தான் இங்கே வேலை. வேறு ஒருவர் நாளைக்கு வருவார்.”

“ஏன் அப்படி? நீதானே முழு பொறுப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டும்

“இல்லை. பொதுவாக நாங்கள் பெண்கள் அலுவலகத்தில்தான் வேலை செய்வோம். இன்றைக்கு அதிகமான நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பேற்றுள்ளதால் ஆள் பற்றாக்குறை. நாளை வந்து விடுவார்கள்” என்றாள்.

“ம்ம்” அதற்குள் விடுதி வரவே, இறங்கி ராமுக்கு நன்றி கூறினாள்.

“ராம். மண்டபத்திற்கு போய்ச சேர்ந்து ஒரு மெசேஜ். அனுப்புங்க” என்றாள். அவன் அவளையே பார்க்கவும், என்னவென்று கண்ணால் வினவினாள். சிறு புன்சிரிப்புடன் “உன் செல் நம்பர் சொல்லவில்லையே” அவள் சொல்லிவிட்டு தலையாட்டியபடி உள்ளே சென்று விட்டாள்.

ராம் சற்று நேரம் நின்று விட்டு வண்டியை கிளப்பினான். மண்டபத்தில் சந்தோஷ் ஏதோ சமாளித்து எல்லோரையும் படுக்க அனுப்பிவிட்டு ராமிற்காக காத்திருந்தான். மெலிதாக விசிலத்தபடி வந்து கொண்டிருந்த ராம் சந்தோஷிடம் “என்னடா?”

“ராம். என்னடா நடக்குது? பொண்ணுங்களைப் பார்த்தாலே நூறு அடி ஓடிடுவ. நின்னு பேசுவதோடு போன் நம்பர் வேற கொடுத்திருக்க” எனவும் வேகமாக மைதிலிக்கு “யுசசiஎநன ளயகநடல. புழழன niபாவ” என்று மெசெஜ் அனுப்பிவிட்டு, சந்தோஷைப் பார்த்தான்.

“சந்தோஷ், மைதிலி நிறுவனத்தின் எம்.டி யிடம் பேசி நாளைக்கும் அவளையே வரச்சொல்லணும்டா.” என்றான்.

“ராம், என்ன விஷயம்.?”

“என்னைப் பற்றி தெரியுமல்லவா. இப்போது சொல்ல முடியாது. நீ போய்த் தூங்கு. நான் வருகிறேன்.” என்று கூறினான்.

அப்போது செல்போன் மெசெஜ் டோன் கொடுக்க எடுத்துப் பார்த்தவன் , சிரித்துக் கொண்டான்.

மைதிலியும் அப்போது சிரித்துக் கொண்டே, ஒருமாதிரி உற்சாகமாக இருந்தாள் அவள் ராம் பாடியதை நினைத்துக் கொண்டே தூங்க ஆரம்பித்தாள்.

றுநாள் அதிகாலை 6.00 மணிக்கு போன் அடிக்கவே எடுத்துப் பார்த்தாள். அவள் சேர்மன் அழைக்கவும் அவசரமாக,

“ குட்மார்னிங் சார்” என்றாள்.

“குட்மார்னிங் மா. சாரி தூக்கத்தில் எழுப்பி விட்டேனா? “

“அதெல்லாமில்லை சார். என்ன விஷயம் சார்?”

“அது அந்த சதாபிஷேக விசேஷத்திற்கு மேற்பார்வை பார்க்க இன்றும் நீயே போக வேண்டும். ஏனெனில் அந்த இன்சார்ஜ்க்கு வேறு ஒரு வேலை கொடுத்து விட்டேன். உன்னால் முடியுமா? இன்று ஞாயிறு விடுமுறைதான். இருந்தாலும்” என்பதற்குள்

“சரி சார் . எனக்கு இன்று வேறு வேலை எதுவும் இல்லை.”

“சாரிம்மா. நீ போய் வா. அங்கே வேலை முடிந்ததும் எனக்கு மெசேஜ் மட்டும் கொடுத்து விடு.” என்றார்.

“சாரி எல்லாம் எதற்கு சார்.? இது என்னுடைய வேலை சார். “

“சரிம்மா நான் வைக்கிறேன்” என்றார்

மைதிலியும் உள்@ர ஒரு ரகசிய சிரிப்புடன் வைத்தாள். அப்போது ராமிடம் காலை வணக்கம் மெசெஜ் வந்தது. அவனுக்கு சொல்லலாமா என்று யோசித்தவள், இல்லை வேண்டாம் சஸ்பென்சாக போகலாம் என்று முடிவு செய்து பதில் மெசெஜ் மட்டும் அனுப்பிவிட்டு குளிக்கச் சென்றாள். ராமைப் பார்க்கப் போகும் ஆனந்தத்தில் என்ன உடை உடுத்துவது என்று திணறினாள். பிறகு பச்சை நிற சில்க் காட்டன் புடவையை உடுத்தி உரிய நகைகளை அணிந்தாள். பொதுவாக அவள் லூஸ் ஹேர் விடுவதில்லை என்றாலும் இன்று அவள் நீள தலைமுடியை அழகாக தளர பின்னிவிட்டாள். தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

மணி 6.45தான். அவள் ஸ்கூட்டியோ அலுவலகத்தில் இருந்தது. எனவே அருகில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஏறி மண்டப முகவரியை சொன்னாள். 20 நிமிடத்தில் சென்றவள், ஒரு விதமான படபடப்புடன் உள்ளே சென்றாள்.

மைதிலி நேராக கிச்சன் பக்கம் போகத்தான் நினைத்தாள். ஆனால் பட்டு வேஷ்டி சட்டையுடன் ராம் கம்பீரமாக எதிரே வரவே நின்றவள், அவன் பார்வையில் முகம் சிவந்தாள். ராமால் அவளை விட்டு கண்ணை எடுக்க முடியவில்லை. புடவையில் அவளின் அழகு அவனை தடுமாறச் செய்தது.

“:hய் “ என்றாள். ராம் அவளையே பார்த்தபடி தலையசைத்தவன் எதிரே யாரோ வரவும், பெருமூச்சுடன் அந்த இடத்தை விட்டு அகன்றான். மைதிலியும் உள்ளே சென்று வேலைகளை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு அரை மணிநேரம் கழித்து அனைவரும் டைனிங் ஹால் வரவும், அவர்களோடு ராமும் இருப்பதைப் பார்த்து, மெல்ல அங்கிருந்து சென்றாள்.

ராம் அவளைத் தேடுவதை உணர்ந்து சந்தோஷ் நக்கலாக சிரித்தான். ராம் அவன் தலையில் தட்டியபடி, சாப்பிட்டான். பின்னர் எல்லோரும் மண்டபத்திற்குச் செல்ல ராம மற்றும் சந்தோஷ் நைசாக நழுவி மைதிலியிடம் சென்றனர்.

“மைதிலி சாப்பிட்டாயா?” ராம்.

“இல்லை. ஹாஸ்டலில் சாப்பிட்டேன்”.

“பொய் சொல்லாதே. நீ ஏழு மணிக்கு வந்து விட்டாய். விடுதியில் சாப்பிட்டிருக்க மாட்டாய். போ.” சந்தோஷ{ம் சொல்லவே சாப்பிட போனாள். அவள் சாப்பிடும் போது அருகில் வந்து, “சூபர்வைசர் மேடம் மேலே வந்து உட்காருங்க. எதுவும் தேவை எனில் உங்கள் பணியாட்கள் வந்து உங்களைக் கேட்பார்கள்.” என்று கூறினான்.

“வேண்டாம் ராம். எனக்கு யாரையும் தெரியாது.”

“நான் உன் பிரெண்டென்றால் நீ வா. நான் உனக்கு எல்லோரையும் அறிமுகப்படுத்துகிறேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.